ராஜாவின் பெருந்தன்மையும் – ஜனாதிபதி குடும்பத்தின் சுரண்டலும் !

ராஜாவின் பெருந்தன்மையும் –
ஜனாதிபதி குடும்பத்தின் சுரண்டலும் !

இந்தியாவில் மட்டும் அல்லாமல் –
உலக அளவில் பரபரப்பைக் கிளப்பி விட்டது
திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயில்
பாதாள அறை சொத்துக்கள் விவகாரம்.

இன்று நம் நாட்டின் கௌரவத்தை
உலக அளவில் உயர்த்தும் வண்ணம்
நடந்து கொண்டுள்ளார்
திருவாங்கூர் மகாராஜா உத்திராடம் திருநாள்

மார்த்தாண்ட வர்மா.

இன்று(வெள்ளிக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில்
தமது வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால்
மூலமாக –

“இந்த கோயில் சொத்துக்களின் மீது
எனக்கோ, எங்கள் ராஜ குடும்பத்துக்கோ
எந்தவித உரிமையும், பாத்தியதையும்
கிடையாது.
இந்த செல்வம் அனைத்தையும்
தாராளமாக பொது மக்களுக்கு
பயன்படும் வகையில் மருத்துவ மனைகளும்,
பள்ளிக்கூடங்களும் கட்டுவதற்கு
பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று
அறிவித்திருக்கிறார்.

எந்தவித சபலத்திற்கும்,
சஞ்சலத்திற்கும் ஆட்படாமல்,

சொந்தம் கொண்டாடா விட்டாலும்,
நிர்வகிக்கிற உரிமையை கூட கேட்காமல்-

மன்னர் அறிவித்திருப்பது மக்கள் மனதில்
அவரை மிக உயர்ந்த இடத்திற்கு
இட்டுச் செல்கிறது.
நோய் நொடி இல்லாமல்
நூறு ஆண்டுகள் தாண்டி நீடூழி வாழட்டும்
மன்னர் மார்த்தாண்ட வர்மா !

இதே நேரத்தில் –
இயன்ற விதங்களில் எல்லாம்
நாட்டைச் சுரண்டும் நம்
அரசியல்வாதிகளையும்
சொல்ல வேண்டி இருக்கிறது.

செய்தியைப் படித்திருப்பீர்கள் –

நேற்றைய தினம் (வியாழக்கிழமை) திருப்பதி
-(திருமலையில்) வெங்கடாசலபதி கோவில்
தேவஸ்தானம் கட்டியுள்ள
மிகப்பெரிய உணவருந்தும் இடத்தை ஜனாதிபதி
பிரதிபா பாட்டீல் அவர்கள் திறந்து வைத்தார்கள்
என்கிற செய்தியை !

செய்திக்குப் பின் இருக்கும் சில
கேவலமான உண்மைகள் –

தனக்கும்- தன் கணவருக்கும் திருமணமாகி
46 ஆண்டுகள் நிறைவடைவதை
கொண்டாடுவதற்காகவே அவர் திருப்பதிக்கு
வந்திருக்கிறார். இந்த திறப்பு விழா
அதற்கான ஒரு சாக்கு.

அத்துடன் போனாலாவது பரவாயில்லையே –
46வது ஆண்டு திருமண நிறைவு விழாவில்
கலந்து கொள்ள – அவருடன், அவரது
குடும்பத்தைச்சேர்ந்த
சுமார் 70 நெருங்கிய (?) உறவினர்களும்,
வந்திருக்கிறார்கள்.

அதைத் தவிர ஜனாதிபதியின் முக்கிய
அதிகாரிகள், அவர்களின் உதவியாளர்கள்,
பாதுகாப்பு அதிகாரிகள் –

இத்தனை பேரும்
டெல்லியிலிருந்து ஹைதராபாத்,
ஹைதராபாதிலிருந்து  திருப்பதி,
திருப்பதியிலிருந்து  மும்பை, பின்னர்
மீண்டும்  டெல்லி – அத்தனையும்
விசேஷ  விமானங்களில்  பயணம்.

இத்தனை பேர் விமானத்தில் பயணிக்கவும்,
ஆங்காங்கே  தங்கவும்,
ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காகவும்
எத்தனை கோடி ரூபாய் செலவழிந்திருக்கும் ?

வருடத்திற்கு 3 முறை வெளி நாடுகளுக்கு
சுற்றுப் பயணம்( குடும்பத்தோடு தான் ).
அவ்வப்போது இவ்வாறு குடும்ப
கொண்டாட்டங்கள். அதைத் தவிர
ஊர் சுற்றும் உள்ளூர் பயணங்கள் வேறு !

இந்த மானங்கெட்ட ஜென்மங்களுக்கு
மனசாட்சி என்கிற ஒன்றே கிடையாதா ?

மக்கள் பணத்தில் இப்படி குடும்பத்தோடு
கூட்டம் கூட்டமாக ஊர் சுற்றுகிறோமே
என்று கொஞ்சம் கூட உள் மனம் உரைக்காதா ?

இத்தகைய  நபரை நாட்டின் மிக உயர்ந்த
பதவிக்கு தேர்ந்தெடுத்த “அந்த நபர்”
காரணம் இல்லாமலா செய்திருப்பார் ?

இதன் மூலம் அவர்  அடையத் திட்டமிட்ட
பலன்கள் என்னென்னவோ ?

அந்த “சுப்ரமண்ய சாமி”க்கே  வெளிச்சம் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடும்பம், சரித்திர நிகழ்வுகள், தமிழ், மனதைக் கவர்ந்தவை, raja, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to ராஜாவின் பெருந்தன்மையும் – ஜனாதிபதி குடும்பத்தின் சுரண்டலும் !

 1. ins சொல்கிறார்:

  மாறன் ராஜினாமா பற்றி கட்டுரை காணும்….???

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   வருக நண்பரே,

   தயாநிதி மாறன் விஷயம் நீண்ட நாட்களாக ஜவ்வு மாதிரி
   இழுத்தடித்து விட்டதால் விருவிருப்பே இல்லாமல்
   போய் விட்டது !

   அவர் சம்பந்தப்பட்டதே மீண்டும் வேறு வடிவத்தில் வரும்.
   அப்போது பார்க்கலாமே !

   -வாழ்த்துக்களுடன்
   காவிரிமைந்தன்

 2. Ganpat சொல்கிறார்:

  ஆனாலும் நீங்க microsoft கா.மை.
  எட்டுமாச கர்ப்பத்தை பூடகமா வேறு சொல்லணுமா என்ன?
  அவனவன் என்னலாமோ எழுதறான்!
  நீங்க சோனியா ன்னு சொல்லக்கூட தயங்கினா எப்படி?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக கண்பத்,

   தயக்கம் இல்லை –

   உங்களுக்கே தெரியுமே – சோனியா காந்தி பற்றி முன்பே
   மிகவும் வெளிப்படையாக எழுதி இருக்கிறேனே !

   சும்மா ஒரு “த்ரில்” தான்.

   சில சமயங்களில் பேரைச் சொல்லாமல் அடைமொழிகளில்
   குறிப்பிடுவதில் ஒரு வித “த்ரில்” கிடைக்கிறது தானே !
   அதான் விஷயம்.

   நீங்களே சொல்லுங்கள் “ராகுல் காந்தி” என்று சொல்வதை விட
   “பட்டத்து இளவரசர்” என்று சொன்னால் –
   வாரத்தைக்கு ஒரு weight கிடைக்கிறது இல்லையா ?

   -வாழ்த்துக்களுடன்
   காவிரிமைந்தன்

 3. Ganpat சொல்கிறார்:

  sorry Boss,
  நீங்க தயங்கறீங்க என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை.
  நீங்க ஒவ்வொருத்தரையும் கிழித்த கிழி எனக்கு தெரியாதா என்ன?ஆனாலும் இவங்கள என்ன திட்டினாலும் மனசு ஆற மாட்டேங்கிறது!இவங்களுக்கும் சாணிய கறச்சுக்கொட்டி வெளக்குமாத்தால அடிச்சா கூட சூடு சொரணை வர மாட்டேங்கிறது!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.