பத்மனாப சுவாமி கோவில் சொத்து …
வீரமணி சொல்வது சரிதான் ..ஆனால்
செய்தி –
மானமிகு வீரமணி அறிவுருத்தல் –
புட்டபர்த்தி சாயிபாபா சொத்தையும்,
திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயில்
சொத்தையும் –அரசாங்கம் எடுத்து
மக்கள் நலப்பணிகளுக்காக செலவழிக்க
வேண்டும்.
இதில் சந்தேகமே இல்லை –
மிகவும் நல்ல கருத்து.
ஆனால் வேறொரு சின்ன சந்தேகம் …
இதைச் சொல்ல திருவாளர் வீரமணி
அவர்களுக்கு எந்த விதத்திலாவது
தகுதி உண்டா ?
தந்தை பெரியார் அரும்பாடுபட்டு,
அணா, பைசாவாகச் சேர்த்த பணத்தையும்,
சொத்தையும் தன் பெயரிலும், தன் மகன்
பெயரிலும் பட்டா போட்டுக்கொண்ட
வீரமணிக்கு இதைச் சொல்ல தகுதி உண்டா ?
முதலில் அவர் கீழ்க்கண்ட விஷயங்களை
மட்டும் விளக்கி விட்டால் – தகுதி அவருக்கு
தானாகவே வந்து விடும் –
– தந்தை பெரியார் விட்டுச் சென்றபோது
இருந்த மொத்த அசையும் மற்றும் அசையா
சொத்துக்களின் விவரங்கள் என்ன ?
– திருச்சி, தஞ்சை, ஈரோடு, சென்னை
போன்ற இடங்களில் உள்ள தந்தை பெரியார்
சேர்த்த சொத்துக்க ளை கையாளும் உரிமை
இன்று யாரிடத்தில் உள்ளது ?
– வீரமணியின் மகனுக்கும் தந்தை பெரியார்
சேர்த்த சொத்துக்களுக்கும் என்ன சம்பந்தம் ?
– பெரியார் எழுத்துக்கள் நாட்டுடைமை
ஆக்கப்பட்டு அனைவரையும் எளிதில்
சென்றடைய வழி செய்ய வேண்டும் என்கிற
தமிழக மக்களின் கோரிக்கைக்கு வீரமணி
குறுக்கே நிற்பது யார் நலன் கருதி ?
– பெரியார் – தான் கழகத்திற்காக சேர்க்கும்
பணமும், சொத்தும் – தமிழக மக்களுக்கு
பயன்பட வேண்டும் என்று விரும்பினாரா
அல்லது –
திருவாளர் வீரமணி அவர்களின்
மக்களுக்கு போய்ச்சேர வேண்டும் என்று
விரும்பினாரா ?
இன்றைய தினம் வீரமணி பெயரிலும்,
அவரது மகன் பெயரிலும் உள்ள அசையும்
மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த
விவரங்களை அவர் வெளியிடுவாரா ?
இந்த சொத்துக்கள் அனைத்தையும்
வீரமணி அவர்கள் என்ன தொழில் செய்து
எப்போது, எப்படி, சம்பாதித்தார் என்பதையும்
விளக்குவாரா ?
ஊருக்கு தான்
ஒபதேசம் ……………
அவருக்கில்லை !
ஊரை –
அடித்து ஓலையில போடுறவன்
ஒக்கியனா பேசுறான் ….
என்னபன்றது
மக்கள் விழித்தெழ வேண்டும்…..
இந்தமாதிரி
அரசியல் வாதிகள்
இனம் கண்டு
தூக்கி எறியப்படவேண்டும் !!!
thanks & blessings all of u
rajasekhar.p
யார் செய்த புண்ணியமோ, திருப்பதியும் ,திருவனந்தபுரமும்
புட்டபர்த்தியும்,கழகங்கள் கையில் சிக்காமல் தப்பின!(அதாவது, தமிழக எல்லையில் இருந்தும் வேறு மாநிலங்களுக்கு உரிமையாகிவிட்டன)
தமிழ் ஓவியா என்ற பெயரில் வீரமணிக்கு ஜால்ரா அடிக்கு சொறிநாய்க்கு இந்த பக்கத்தை அனுப்புங்கள்.
நீங்கள் எழுதுவதைப்பார்க்கும்போது என்ன தெளிவாகிறதென்றால் –
உங்கள் பிரச்சினை சொல்லும் வீரமணியின் மேலேதானேயொழிய
அவர் சொல்லும் கருத்தில் இல்லை.
ஒருவேளை வீரமணி சொல்லும் கருத்தை இன்னொருவர் சொன்னால்
ஏற்றுக்கொள்வீர்களா ?
கேரளாவில் பல இயக்கங்கள் வீரமணி சொன்னதைப்போல பத்மநாபசுவாமிகோவிலில்
கண்டெடுக்கப்பட்ட சொத்துக்கள் மக்கள் நலப்பணிக்குச் செலவிட வேண்டும்
என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
உங்கள் கருத்தென்ன ? வீரமணி சொல்லவில்லை. கேரளா மக்கள் சொல்கிறார்கள்.
என்ன ? ஏற்கிறீர்களா ? இல்லை எதிர்க்கிறீர்களா ?
யார் செய்த புண்ணியமோ, திருப்பதியும் ,திருவனந்தபுரமும்
புட்டபர்த்தியும்,கழகங்கள் கையில் சிக்காமல் தப்பின!(அதாவது, தமிழக எல்லையில் இருந்தும் வேறு மாநிலங்களுக்கு உரிமையாகிவிட்டன)
Ganpat
திருப்பதியும் திருவனந்தபுரமும் திருக்கோயில்கள். வைணவக்கோயில்கள். புட்டபர்த்தி ஒரு மடம். தனிமனிதன் ஒருவன் தன்னைக் கடவுளில் அவதாரம் எனச்சொல்லி கட்டிச்சேர்த்த சொத்துக்கள்.
திருப்பதி கடவுளும், திருவனந்தபுரக் கடவுளும் இந்த தனி மனிதனும் ஒன்றா ?
நிற்க.
தமிழகத்தில் தனிமனிதர்கள் மடங்கள் நிறுவி ஒகோவென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் திராவிக்கட்சிகளுக்கு முன்னும் பின்னும் ! சங்கரமடம், ஆதினங்கள் ‘முன்னும்’; பங்காரு ‘பின்னும்’ இவர்களை தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் தடுத்து சொத்தை அபகரித்துக்கொண்டதா ?
நிறக மீண்டும்.
தமிழகத்தில் பல திவ்ய தேசங்கள் உள. அவற்றுள் திருப்பதிக்கு ஈடானவை உள. எ.கா: சிரிங்கம். ஆங்கு போய் திராவிடக்கட்சிகள் சொத்தை அபகரித்தனவா?
கேரளாவுக்குப் போய் பாருங்கள் திவ்ய தேசங்களின் நிலையை. முதன் முதலாக அவை திவ்ய தேசங்களா என்று அம்மக்களுக்குத் தெரியாது ! அவை ஆழ்வார்களால் பாடப்பட்டனவா என்றும் தெரியாது !! திருவனந்தபுரத்துத் தெய்வத்தைப்பற்றி (பத்மநாபசுவாமி) நம்மாழ்வார் பத்துப்பாசுரங்கள் ‘அருளிச்செய்திருக்கிறார்’. ஆனால் அப்படி அவர் செய்திருக்கிறார் என்று அக்கோயில் பூஜாரிகளுக்குக் கூட தெரியாது. நம்மாழ்வாரைப்பற்றி ஒரு சிறு குறிப்புக்கூட ஆங்கு கிடையாது.
அதே வேளையில் ஒரு 30 மைல்கள் தள்ளி தமிழ்நாட்டுக்கு வந்தால் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலைப்பற்றி நம்மாழ்வார் ஒரே ஒரு பாசுரந்தான் ‘அருளிச்செயல்’ ஆனால் அது சுவற்றில் எழுதப்பட்ட பக்தர்களுக்கு “இஃது ஒரு திவ்ய தேசம்” எனச்சொல்லப்படுகிறது. தமிழகக்கோயில்கள் (திவ்ய தேசங்கள்) அனைத்திலும் ஆழ்வார்கள் ‘அருளிச்செயல்கள்” எழுதப்பட்டு பக்தர்களுக்குச் சொல்லப்படுகின்றன. ஆனால் கேரளாவில் (மலைநாட்டுத் திவ்ய தேசங்கள் மொத்தம் 10) அப்படி உண்டா ?
தமிழகத்தில் பழங்கோயில்கள் நன்றாகப் பாதுகாக்கப்படுகின்றன. கோடிகோடியாக நகைகளை பதுக்கி வைக்கும் கோடவுன்களாகப் பயன்படுத்தப்படவில்லை. மடத்தைத் திறந்தால் பணமழை கொட்டுகிறது. திருப்பதி கோயில் பலவிமர்சனத்துக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறது.
இவையெல்லாம் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. அப்படியானால் நீங்கள் “கோயிலென்றால் பணம்” என்று வாழம் ஆந்திராவுக்கோ கேரளாவுக்கோதான் போகவேண்டும்.
புதையல் எடுக்கப்பட்டவுடன், திருவனந்தபுரத்துக்கோயில், 16ம் நூற்றாண்டுக்கோயில் என பொய்யுரை வைக்கப்பட்டு ராஜாவுக்கே சொந்தம் என வாதிடப்படுகிறது. ராஜாவுக்கு என்றால், அப்புதையலும் அவருக்குப் போய்ச் சேரும்.
ஆனால், அஃது ஒரு 16ம் நூற்றாண்டுக்கோயிலா ? இல்லை. நம்மாழ்வார் காலம் 8ம் நூற்றாண்டு. நம்மாழ்வார் காலத்திலேயே அது ஒரு புகழ்பெற்ற பெருமாள் கோயில் நம்மாழ்வார் காலத்தில் திருவனந்தபுரம் தமிழ்கமே. அவர் சென்று ஆங்கு தங்கி அப்பெருமாளை மங்களாசாசனம் தமிழில் செய்தார்.
அப்படி 8ம் நூற்றாண்டுக்கு முன்பே சிறந்திருந்த கோயிலை 16ம் நூற்றாண்டில் திருவாங்கூர் மகாராஜா புதுப்பித்தார். எனவே அவருக்குச் சொந்தமாம.
தமிழகத்தில் இருந்திருந்தால் அக்கோயில் பக்தர்களுக்கே. பக்தர்களுக்காக ஒரு குழு அது நிர்வகிக்கும். எந்த வொரு தனிமனித குடும்பமும் உரிமை கொண்டாடாது.
மக்களாட்சிவந்து மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பின்னரும் திருவாங்கூர் ராஜாவுக்குத்தான் அக்கோயில் சொந்தம். அவர்கள் குடும்பம் வந்து வணங்க தனி நேரம். தனி ராஜ பாதை. அப்போது பொதுமக்கள் செல்லக்கூடாது.
தமிழகம் என்றால் இப்படி தனிமனித ராஜ்யம், மடத்தில் மட்டுமே. கோயிலில் அன்று.
விவாதம் சுவையாகத் தான் போய்க்
கொண்டிருக்கிறது. ஆனாலும் …
நான் எழுப்பிய வினாவையும்
யாராவது தொட்டால் தேவலை –
(1)இது குறித்து ஆலோசனை சொல்லும்
தகுதி திருவாளர் வீரமணி அவர்களுக்கு
உண்டா ?
(2)தந்தை பெரியார் சொத்து பற்றி
நாம் கேட்டுள்ள விவரங்களை
அவர் வெளியிடுவாரா ?
இங்கு பிறகு வரும் மறுமொழியாளர்கள் வீரமணிக்கு தகுதி இல்லை என்று ஒத்துக்கொண்டால் இந்த விவாதம் இங்கு முடியும்.
இல்லை இல்லை மற்றவர்கள் என்ன ஒழுங்கு என்று ஆரம்பித்தாலும் இந்த விவாதம் வீரமணிக்கு தகுதி இல்லை என்ற முடிவுடன் தான் முடியும். 🙂
antha sothukkalai kan
Jo.Amalan
“தமிழகம் என்றால் இப்படி தனிமனித ராஜ்யம், மடத்தில் மட்டுமே. ”
Yes in Dravida Kazhagam ennum மடத்தில், Dravida Munnettra Kazhagam ennum மடத்தில்.
ஜோ அமலன்
இதே கோரிக்கையை சர்ச் நிர்வாகமும் ஒத்து கொள்ளுமா ? சர்ச்சுக்கு வரும் பணம், அதன் சொத்துக்கள் எல்லாவற்றையும் அரசாங்கம் எடுத்து கொள்ளலாமா ?
//தமிழகத்தில் தனிமனிதர்கள் மடங்கள் நிறுவி ஒகோவென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் //
அமாம், அறிவாலயம் என்ற மடம் நிறுவி, …ரியார் அறக்கடளை என்ற மடம் நிறுவி, வாரிசுகளை கொண்டு ஆட்சி / அதிகாரம் செய்து, மக்கள் சொத்தை கொள்ளை அடித்து, கேவலமான வாழ்க்கையை ஓகோவென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதை கேட்டால் வாய் கூசாமல் திசை திருப்பி ஏமாற்று பிழைப்பு நடத்துகிறார்கள்.
இந்த மடங்களை சோதனை செய்தால், இப்போழுது கிடைக்கும் பொக்கிஷங்களை விட பல மடங்கு கிடைக்கும்.
நிற்க
இவை தமிழனின் சொத்துக்கள், இவை தான் முதலில் கொள்ளை கும்பலால் கொள்ளை அடிக்க பட்டு, கொள்ளை பாதைகள் வேலி இடப்பட்டன. இதை எடுட்து விட்டு பிறகு, சிறுதாவுர், கொடநாட்டுக்கு வருவோம். 🙂
சர்க்காரியா கமிஷன் நாட்களில் இருந்து தொடங்குவோம் ஏன் என்றால் First in First out தான் சிறந்தது.
//உங்கள் பிரச்சினை சொல்லும் வீரமணியின் மேலேதானேயொழிய
அவர் சொல்லும் கருத்தில் இல்லை.//
கருத்து சொல்ல ஒரு தகுதி வேண்டும். என் கருத்து, உங்கள் கருத்துக்கு எவ்வளவு மதிப்பு இருக்குமோ அதைவிட மட்டமான தகுதி தான் வீரமணி போன்ற சந்தர்ப்பவாத / கேவலமான வாழ்க்கை வாழும் மனிதர்கள் சொல்லும் கருத்துக்கும் இருக்கும்.
கருத்து சொல்பவர் தான் சொல்வதை தனக்கு / தான் சார்ந்திருக்கும் கழகத்திற்க்கு பொருத்தி பார்த்தால் தேருவோமா என்பதை பார்த்து விட்டு பேசினால் இவ்வளவு அசிங்க பட வேண்டாம்.
மறுபடியும் ஒரு சொல்லாடலை நினைவுக்கு கொண்டு வர விழைகிறேன். ” It is better to keep quite and let people think you are a fool rather than opening it and clearing all doubts”
வீரமணி பலமுறை அசிங்க பட்டும் மீண்டும் மீண்டும் அசிங்க படுவதை என் மக்களுக்காக செய்கிறேன் என்று சொல்லி ஒரு கோமாளியை போல் நமக்கு சிரிப்பு மூட்டுகிறார். இந்த உலகில் இவரை போன்ற தொட்டுக்கொள்ளும் ஊருகாய்கள் இருக்கும் வரை, கருணாநிதி, ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம் தான்.
இன்றைய தேதியில் இவரால் பயணடைவது 24மணி நேர ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் தான்.
தனது சொத்துக்களை நாட்டுடைமை ஆக்கி விட்டு வந்து இந்த கருத்தை சொல்லட்டும், மக்கள் சிறிதலவேணும் மதிப்பு கொடுப்பார்கள்
இங்கு பிறகு வரும் மறுமொழியாளர்கள் வீரமணிக்கு தகுதி இல்லை என்று ஒத்துக்கொண்டால் இந்த விவாதம் இங்கு முடியும்.
இல்லை இல்லை மற்றவர்கள் என்ன ஒழுங்கு என்று ஆரம்பித்தாலும் இந்த விவாதம் வீரமணிக்கு தகுதி இல்லை என்ற முடிவுடன் தான் முடியும். 🙂