இவர்கள் எல்லாம் இருந்து என்ன பயன் ?
ஐக்கிய நாடுகள் சபையின் பொது
செயலாளராக இன்னும் ஒரு தவணை
பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார் தற்போதைய
பொது செயலாளர் பான் கீ மூன்.
உலக அளவில் –
இன்னொரு மன்மோகன் சிங் இவர்.
இவர்கள் எல்லாம் எதற்காக பதவிக்கு
வருகிறார்கள் என்றே புரியவில்லை.
உருப்படியாக செயலாற்ற தங்களுக்கு
வக்கு இல்லை என்பது தெரிந்தும்
பதவிக்கு ஆசைப்படுபவர்களில் இவரும்
ஒருவர்.
அப்படி என்ன திறன் இவரிடம் இருக்கிறது
என்று கருதி பதவி நீட்டிப்பு
கொடுக்கிறார்கள் ?
மன்மோகன் சிங்கிடம் இருக்கும் அதே
திறன் தான். தங்கள் எஜமானருக்கு
விசுவாசமாக இருப்பது.
செயலாற்றக்கூடிய வேறு எவராவது
அந்த பதவிக்கு வந்து விடக்கூடாதே என்கிற
எச்சரிக்கை உணர்வு காரணமாகவே
எஜமானர்களால் இவருக்கு
இந்த பதவி நீட்டிப்பு கொடுக்கப்
பட்டிருக்கலாம்
என்று தோன்றுகிறது !
ஈழத்தில் உலகம் இது வரை கண்டிராத
அவலங்கள் அனைத்தும் அரங்கேறின.
கொலைகார ராஜபட்சேயின் இலங்கை
அரசு நிகழ்த்திய கொடுமைகள் அனைத்திற்கும்
வாய்மூடி சாட்சியாக இருந்ததை தவிர
வேறு எதை சாதித்தார் இவர் ?
ஐக்கிய நாடுகள் சபையின் கௌரவத்தை
காலில் போட்டு மிதித்தது இலங்கை அரசு.
ஐ.நா. அதிகாரிகளையும்,
அலுவலர்களையும்
இலங்கையை விட்டு வெளியேறச் சொல்லி
மிரட்டியது. செஞ்சிலுவை சங்கத்து
ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மறுத்தது.
செஞ்சிலுவை சங்க மருத்துவ மனைகளின்
மீதே குண்டுகளை வீசியது.
லட்சக்கணக்கான பெண்களும்,
குழந்தைகளும், முதியவர்களும்
சிதைக்கப்பட்ட பிறகு,
காட்டுமிராண்டித்தனமாக வதைக்கப்பட்ட பிறகு,
எல்லாம் முடிந்த பிறகு,
விசாரணை செய்ய மூவர் குழுவை
அனுப்பினார் இந்த பான் கீ மூன்.
ஐ.நா.சபை அனுப்பிய
அந்த மூவர் குழுவை கூட
இலங்கைக்குள்ளேயே நுழைய விட மறுத்தது
ராஜபக்சே அரசு. வெட்கம் கெட்டுப்போய்
அதையும் சகித்துக் கொண்டார் இந்த மூன்.
இறுதி அழிவிற்கு பான் கீ மூனின் துணைவர்
விஜய் நம்பியாரே துணை போனது
அதைவிடக் கொடுமை.
இந்த இழி செயல்கள் அனைத்தும்
ஐ.நாவின் சரித்திரத்தில்
அழிக்க முடியாத பக்கங்களாக இடம்
பெறுவது நிச்சயம்.
இனியும் காலம் கடத்தாமல் –
ராஜபக்சே கும்பலை அனைத்துலக
நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதன் மூலமே
பான் கீ மூன் தான் செய்த பாவத்திற்கு
நிவாரணம் தேட முடியும்.
அதையாவது செய்வாரா ?
இவர்கள்/இவைகள் எல்லாம் இருந்து என்ன பயன் ?
பிரதீபா பட்டீல்
மன்மோகன்
பர்னாலா
ஜெயாவின் அமைச்சர்கள்
அம்பிகாசோனி
G.k.வாசன்
ஐ.நா சபை (மொத்தம்)
SEBI
IT DEPT
இன்னும் எத்தனையோ!!!