இன்றைய விசேஷ செய்தி – பகுத்தறிவுச் சிங்கம் – கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு சமர்ப்பணம் !

இன்றைய  விசேஷ செய்தி –
பகுத்தறிவுச் சிங்கம் – கலைஞர்
கருணாநிதி  அவர்களுக்கு சமர்ப்பணம் !
——————————————————————-

திருப்பதி, காளஹஸ்தி கோயில்களில்
கருணாநிதி குடும்பத்தினர் தரிசனம்,
விசேஷ பூஜைகள் !

ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற
காளஹஸ்தி கோயிலில் திமுக தலைவர்
கருணாநிதியின் மகள் செல்வி தரிசனம்
செய்தார்.

முன்னதாக, செல்வி மற்றும் அவரது
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருப்பதி
கோயிலில் முக்கிய பிரமுகர்கள் வரிசையில்
சென்று தரிசனம் செய்தனர். பின்னர்
அங்கிருந்து புறப்பட்டு காளஹஸ்தி
கோயிலுக்கு வந்தனர்.

தகவல் அறிந்த பத்திரிகையாளர்கள்
கோயில் அருகே திரண்டனர். ஆனால்,
புகைப்படம் எடுப்பதற்கு செல்வியுடன்
வந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அவர்களை
விரட்டி துரத்தினர்.இதனால் அங்கு சற்று
நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

காளஹஸ்தி கோயிலில் ராகு, கேது மற்றும்
சர்ப்ப தோஷ நிவாரண பூஜைகளை
செல்வி குடும்பத்தினர் செய்ததாக
தகவல்கள் கூறுகின்றன.குறிப்பாக கனிமொழி
பெயரில் இந்த பூஜைகள் மேற்கொள்ளப்பட்டதாக
கூறப்படுகிறது.

————-
என்ன இருந்தாலும் சரி –
தலைவர் கடைசீ வரையிலும்
பகுத்தறிவுவாதி தான் !

அவர் இன்னும்
கோயிலுக்குப் போகவில்லையே !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காத்தோடு போயாச்சு, சுயமரியாதை இயக்கம், தமிழ், திமுக, தேர்தல், புரட்சி, பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to இன்றைய விசேஷ செய்தி – பகுத்தறிவுச் சிங்கம் – கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு சமர்ப்பணம் !

 1. yatrigan சொல்கிறார்:

  இதோ இன்னும் கொஞ்சம் செய்தி
  பிடியுங்கள் …
  (இட்லி வடையிலிருந்து – நன்றியுடன் )

  கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி
  ஆகியோர் பெயர்களில் ராகு-கேது சர்ப்ப தோஷ
  நிவாரண பூஜை நடத்தினர்.

  (அழகிரிக்கு கிடையாதா ?
  அய்யகோ – அப்படியானால் அழகிரியின்
  தோஷம் என்ன ஆவது ? )

  இந்த தோஷ நிவாரண பூஜை முடிந்ததும்
  அவர்கள் கோவிலுக்குள் சென்று கருவறையில்
  உள்ள வாயுலிங்கேஸ்வரர், ஞான பிரசுனாம்பிகா
  தாயாருக்கு கருணாநிதி, மு.க.ஸ்டாலின்,
  கனிமொழி பெயர்களில் சிறப்பு பூஜை,
  அர்ச்சனை செய்து பயபக்தியுடன் சாமி
  கும்பிட்டனர். அதன்பிறகு அவர்கள்
  மிருத்யுஞ்ஜெயலியங்கம் அருகே சென்று
  வேத பண்டிதர்களிடம் சிறப்பு ஆசி பெற்றனர்.

  (அய்யோ – பார்ப்பனர்களிடமா… ஆசி ?
  ஆட்சி போனதே அவர்களால் தான் என்று
  கலைஞர் சொன்னாரே … ?)

  காளகஸ்தி கோவிலில் கருணாநிதி
  குடும்பத்தினர் ராகு-கேது சர்ப்ப தோஷ
  நிவாரண பூஜை நடத்துவதை அறிந்ததும்
  பத்திரிகை புகைப்பட நிபுணர்கள் மற்றும்
  தனியார் டி.வி. வீடியோகிராபர்கள் அங்கு
  மின்னல் வேகத்தில் வந்தனர்.
  தோஷ நிவாரண பூஜை நடத்திய செல்வி
  மற்றும் உறவினர்களை பத்திரிகை புகைப்பட
  நிபுணர்கள் படம் பிடித்தனர்.

  அப்போது செல்வி புடவையால் முகத்தை
  மூடிக் கொண்டார். அவருடன் வந்தவர்கள்
  புகைப்பட நிபுணர்கள் போட்டோ-
  வீடியோ எடுக்ககூடாது என்று எச்சரித்தனர்.

 2. unmai சொல்கிறார்:

  //தலைவர் கடைசீ வரையிலும்
  பகுத்தறிவுவாதி தான் !
  அவர் இன்னும்
  கோயிலுக்குப் போகவில்லையே !//

  சில ஆண்டுகளுக்கு முன், வேலூர் தங்க கோவில்லுக்கு சென்றதாக செய்தி வந்ததே !

  • RAJASEKHAR.P சொல்கிறார்:

   /////சில ஆண்டுகளுக்கு முன்,
   வேலூர் தங்க கோவில்லுக்கு சென்றதாக செய்தி வந்ததே !/////

   தங்கம்
   விற்கும் விலையை பார்த்தால்
   இப்படிகூட
   உங்களுக்கு கேட்க தோன்றுமா???

 3. ins சொல்கிறார்:

  தமக்கு ஒரு நியாம் ஊருக்கு ஒரு நியாம் …..

 4. ramanans சொல்கிறார்:

  //தலைவர் கடைசீ வரையிலும்
  பகுத்தறிவுவாதி தான் ! அவர் இன்னும்
  கோயிலுக்குப் போகவில்லையே !//

  ஐயோ.. நீங்களுமா இதை நம்புகிறீர்கள்? திருவாரூரில் தங்கள் குல தெய்வக் கோவிலுக்குச் சென்ற கதை தெரியாதா?

  திருவேற்காடு மாரியம்மன் கோயிலுக்குச் சென்று தாலி, மாலை மாற்றிக் கொண்ட கதை ஊரறிந்த ஒன்றாயிற்றே…

  அப்புறம் கோபாலபுரம் கிருஷ்ணன் கோயிலுக்கு…..

  சரி விடுங்கள்…. நாம் ஏன் சிலரது நம்பிக்கையைக் குலைப்பானேன். அவர் பகுத்தறிவுவாதியாகவே இருந்து விட்டுப் போகட்டும்.ஆனால் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள், இந்தக் கோயில் சமாசாரம் எல்லாம் அவருக்குத் தெரிந்து, அவருடைய அனுமதியின் (உத்தரவு) பேரில் நடப்பவை தான்.

  கருணாநிதி என்ற பெயரில் அர்ச்சனை, அபிஷேகம் , ஆராதனை செய்தால் தானே கண்டுபிடிக்க முடியும். தக்ஷிணாமூர்த்தி என்ற சொந்தப் பெயரில் செய்தால்? மஞ்சள் துண்டின் மர்மமும் தக்ஷிணாமூர்த்தி தானே!

  குரு க்ருபையால் தானே அவரால் இந்த அளவு ஜொலிக்க முடிந்தது. அதனால் தான் தனது குருநாதர்களை அவர் ஒருபோதும் பழித்துப் பேசுவதில்லை.

  ஓம் ஸ்ரீ க்ருப்யோ நமஹ!

  ஓம் தத் ஸத்

 5. RAJASEKHAR.P சொல்கிறார்:

  கோயிலுக்கு போகவில்லை
  என் பதற்காக……….
  அவர்-
  சாமி கும்பிடமட்டார்
  என்று அர்த்தமில்லை….
  கோபாலபுரம் கிருஷ்ணன் கோவிலில்
  அவர் யாரை கும்பிடுகிறார் …………
  சாமி கும்பிடட்டும்….
  வேண்டாம் என்பதற்கில்லை
  சாமி கும்பிட்டு கொண்டே
  இல்லை என்பது தான் ஏன்???????

 6. ins சொல்கிறார்:

  இந்த இனையதளத்தில் கருத்துகணிப்பு அல்லது ஓட்டுயெடுப்பை சேர்க்கவும்

 7. periyaar சொல்கிறார்:

  அவ்வளவு கடவுளுக்குப் பயப்படுபவர் ஏன்டா சாமியை இல்லை என்று சொல்லவேண்டும்? போங்கடா முட்டாப் பசங்களா!

 8. periyaar சொல்கிறார்:

  கலைஞரைத் திட்டுபவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் அவனது அசிங்கமான சாதிய முகம்தான் தெரிகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.