இப்படி இருந்த நாம் …….

இப்படி இருந்த நாம் …….

இன்றைய இளைஞர்களிடையே
நம் நாட்டைப் பற்றி பெருமிதமும்,
தன்னம்பிக்கையையும், உண்டு பண்ணும்
நோக்கில்  சின்மயா மிஷன் பல தகவல்களை
திரட்டி ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறது.

அவற்றில்  பல தகவல்கள்
நம் முன்னோர்களைப் பற்றி மிகுந்த
பெருமை அளிப்பதாக இருக்கிறது.
சில தகவல்கள் நமக்கு ஏற்கெனவே தெரிந்து
இருந்தாலும் – பல புதியவை.

படிக்கும்போது – இப்படி எல்லாம்
இருந்த  நாம்  இன்று  எப்படி இருக்கிறோம்  
என்று ஒரு ஏக்கம் ஏற்படுவதை
தவிர்க்க முடியவில்லை.

1) பூஜ்ஜியத்தை (ஜீரோ) கண்டு பிடித்து
உலகுக்கு அளித்தது இந்தியா (ஆர்யபட்டா)
தான்.

2) பூமியின் அளவு, விட்டம், சுற்றும் வேகம்
அனைத்தையும்  கணக்கிட்டு கி.பி.499 லேயே
சொன்னவர் இந்தியரான ஆர்யபட்டா.

3) ஐசக் நியூட்டனுக்கு 400 ஆண்டுகளுக்கு
முன்பே இந்தியரான  பாஸ்கராச்சார்யா-2
புவி ஈர்ப்பு தத்துவத்தைப் பற்றி கண்டு பிடித்து
எழுதி இருக்கிறார்.

4) கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே கி.மு.
ஏழாம் நூற்றாண்டிலேயே உலகிலேயே முதல்
முதலாக ஒரு பல்கலைக்கழகம் தட்சசீலத்தில்
(இன்றைய பீகார் ) துவங்கப்பட்டது.
60 க்கும் மேற்பட்ட பிரிவுகளில்
உலகம் முழுவதும் இருந்து வந்த சுமார்
10,000 மாணவர்கள்  அதில் படித்தனர்.

5) கிறிஸ்துவிற்கு முன்னரே கி.மு.
நான்காம் நூற்றாண்டிலேயே  நாளந்தா
பல்கலைக்கழகமும் துவங்கப்பட்டது.

6) ஆயுர்வேதம் தான் உலகிற்கு அறிவியல்
பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் மருத்துவ
முறை.இந்தியாவின் சரகர் என்பவர் தான்
இதை கண்டு பிடித்து முறைப்படுத்தினார்.

7) கப்பல் மற்றும் படகு கட்டும்/செலுத்தும்
முறையை 6000 ஆண்டுகளுக்கு முன்னரே
நிகழ்த்திக் காட்டியவர்கள் இந்தியர்கள்.
“நவ்காத்” என்னும் சம்ஸ்கிருத சொல்லே
ஆங்கிலத்தில் “நேவிகேஷன்” என்கிற
சொல்லாகவும், “நூவ்”என்கிற கடற்படையை
குறிக்கும் சொல்லே “நேவி” யாகவும்
உருவெடுத்தது.

8) சூரியனை பூமி சுற்றிவர எடுத்துக்கொள்ளும்
நாட்கள் எவ்வளவு என்பதை ஐரோப்பிய
வான ஆராய்ச்சியாளர் ஸ்மார்ட் கண்டுபிடித்து
கூறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே-
கி.பி.ஐந்தாம் நூற்றாண்டிலேயே இந்தியாவின்
பட்டாச்சாரியர் 365.258756484 நாட்கள்
ஆகிறது என்று துல்லியமாகக் கணக்கிட்டு
சொல்லி விட்டார்.

9) கணிதத்தில் அல்ஜிப்ரா, ட்ரிக்னாமெட்ரி,
கால்குலஸ் ஆகியவை இந்தியாவிலேயே
ஸ்ரீதராச்சார்யா என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது.
டெசிமல் முறையை அறிமுகப்படுத்தியதும் இவரே.

10)செஸ் விளையாட்டை உலகிற்கு அளித்தவர்
இந்தியர்கள் தான். சந்திரஞ்சா, அஷ்டபாதா
என்கிற பெயர்களில் அழைக்கப்பட்டது.

11) சிசேரியன், கேடராக்ட், செயற்கை கால்,
எலும்பு முறிவு, மூளை மற்றும் பிளாஸ்டிக்
அறுவை சிகித்சைகளை 2600 வருடங்களுக்கு
முன்னரே செய்திருக்கிறார் சுஷ்ருதன் என்கிற
இந்தியர். அறுவைக்கு முன் கொடுக்கப்படும்
மயக்க மருந்து சிகித்சையையும் செய்திருக்கிறார்.
சுமார் 125 கருவிகளை இவர் அந்த
காலத்திலேயே  பயன்படுத்தி இருக்கிறார்.

12) முகலாயர்கள் வரிசை கட்டி அடித்த
கொள்ளைகளுக்கு பிறகும் கூட,
17ஆம் நூற்றாண்டில்,
ராபர்ட் க்ளைவ் வரும் வரை
உலகிலேயே இந்தியா தான்  செல்வம்
கொழிக்கும் நாடாக இருந்திருக்கிறது.

13) யோகாவை கண்டு பிடித்ததும்,
காமசூத்திரத்தை படைத்ததும்
இந்தியர் தான்.

இன்னும் நிறைய இருக்கிறது –
கூறிக்கொண்டே போக.
இவை  மாதிரிக்கு தான் !
பிறிதொரு சமயம் பார்ப்போமே !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், இணைய தளம், இந்தியன், உலக நாயகன், சரித்திர நிகழ்வுகள், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தவை, மருத்துவர்கள், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to இப்படி இருந்த நாம் …….

  1. GIRI சொல்கிறார்:

    FYI

    இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்.
    இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் பார்ப்பனர்களும், மலையாளிகளும் கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஈழத்தில் தமிழின அழிப்புக்கான திட்டங்களைத் தீட்டி, சோனியாவின் தலைமையின் கீழ், ரகசியமாக அமுல்படுத்தியது, மலையாள அதிகாரிகள் குழுதான். பார்ப்பனர்களைப் போலவே மலையாளிகளும் எப்போதும் தமிழினத்தைப் பகையாகக் கருதுவோரே! எனவேதான் சோனியா, மலையாளிகளிடம் இந்தப் படுகொலைத் திட்டத்தை ஒப்படைத்தார்.

    மத்திய அரசினை சூழ்ந்து நிற்கும் மலையாள அதிகாரவர்க்கத்தின் ஆதிக்கம் அதிர்ச்சி தருவதாக உள்ளது.

    இதோ, இந்தப் பட்டியலைப் பாருங்கள்:

    என். பெர்னான்டஸ் (ஜனாதிபதியின் செயலாளர்)

    வி.கே. தாஸ் (ஜனாதிபதியின் தனிச் செயலாளர்)

    டி.கே.ஏ. நாயர் (பிரதமரின் முதன்மைச் செயலாளர்)

    என்.நாராயணன் (பிரதமரின் பிரதான ஆலோசகர்)

    பி. ஸ்ரீதரன் (நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர்)

    கே.எம். சந்திரசேகர் (அமைச்சரவைச் செயலாளர்)

    ருத்ர கங்காதரன் (விவசாயத்துறைச் செயலாளர்)

    மாதவன் நம்பியார் (விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்)

    நிருபமா மேனன் ராவ் (வெளியுறவுத்துறைச் செயலாளர்)

    சத்திய நாராயணன் தாஸ் (கனரகத் தொழில்துறை செயலாளர்)

    ஜி.கே. பிள்ளை (உள்துறைச் செயலாளர்)

    சுந்தரேசன் (பெட்ரோலியத் துறைச் செயலாளர்)

    கே. மோகன்தாஸ் (கப்பல் துறைச் செயலாளர்)

    பி.ஜே. தாமஸ் (மத்திய கண் காணிப்பு ஆணையத்தின் தலைவர்)

    சிவசங்கர மேனன் (தேசிய பாதுகாப்பு ஆலோசகர்)

    சுதா பிள்ளை (திட்டக் கமிஷன் செயலாளர்)

    வி.கே. சங்கம்மா (வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்)

    ஆர். கோபாலன் (நிதிப் பணிகள் துறை இயக்குநர்)

    கே.பி.வி. நாயகர் (செலவீனங்கள் துறைச் செயலாளர்)

    கே. ஜோஸ் சிரியாக் (வருவாய்த் துறைச் செயலாளர்)

    ஆர். தாமஸ் (வருமான வரித்துறைச் செயலாளர்)

    வி. ஸ்ரீதர் (சுங்கத் துறைச் செயலாளர்)

    பி.கே.தாஸ் (அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்)

    ஏ.சி. ஜோஸ் (கதர் வாரியம்)

    சி.வி. வேணுகோபால் (பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்)

    ஸ்ரீகுமார் (இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்)

    கோபாலகிருஷ்ணன். (பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தபடியாக செயல்படும் மூத்த அதிகாரி இவரும் கேரளாவை சேர்ந்தவர்)

    கே.எம். சந்திரசேகர் (அமைச்சரவை செயலாளர்)

    சி.கே. பிள்ளை (உள்துறைச் செயலாளர்)

    நந்தகுமார் (கூட்டுறவுத் துறைச் செயலாளர்)

    பி.கே.தாமஸ் (தகவல் தொழில் நுட்பத் துறைச் செயலர்)

    ரகுமேனன் (செய்தி ஒலிபரப்புத் துறை செயலர்)

    ராமச்சந்திரன் (நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர்)

    ரீட்டா மேனன் (ஜவுளித் துறைச் செயலாளர்)

    கங்காதரன் (கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர்)

    சாந்தா ஷீலா நாயர் (குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர்)

    விசுவநாதன் (சட்டத் துறை செயலாளர்)

    மாதவன் நாயகர் (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்).

    நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 பேரில் 20 பேர்தான் கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 15 பேர்தான். ஆனால் இவர்களில் அமைச்சர்களாக இருப்பவர்கள் ஐந்து பேர்.

    ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி

    வெளிவிவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி

    விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி.தாமஸ்

    உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்

    ரயில்வே துறை இணையமைச்சர் அகமது.

    வெளிவிவகாரத்துறை இணையமைச்சராக இருந்த சசிதரூரையும் (பதவி விலகியவர்) சேர்த்தால் ஆறு பேர்.

    சோனியா வீட்டிலும் ஆட்டிப் படைப்பவர்கள் மலையாளிகள்தான்.

    சோனியாவின் ஓட்டுனர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கணங்குட்டி, தோட்டக்காரர் தாமஸ், சந்தைக்குப் போய் வருபவர்கள், சமையல் உதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பு உதவியாளர்கள் என்று எல்லோருமே மலையாளிகள்தான். அதேபோல, சோனியா காந்தி வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக தில்லிக் காவல்துறையினர் அறுபது பேர் இருக்கிறார்கள்.

    அவர்களில் ஐம்பது பேர் கேரளாக்காரர்கள். இப்படி நாட்டின் கேந்திரமான நிர்வாகப் பகுதிகளை கேரளக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள். நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச் சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில் 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள்.

    இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தில் பணியாற்றி, பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டவர்கள். இதர சிலர் வேறு மாநிலங்களில் பணியாற்றி மத்திய அரசு பணிக்கு வந்தவர்கள்.

    இத்தகைய நிலையில் இன்றைக்கு இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது எந்த மாநிலம்? என்ற சந்தேகமே தேவையில்லை. இந்த அசாதாரணமான நிலைமையினால்தான் இன்றைக்கு கேரளாவுக்கு சாதகமாக காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களின் நலன் புறக்கணிக்கப்படுகிறது!

    விடுதலை இராசேந்திரன்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் கிரி,

      மத்திய அரசில் மலையாளிகள்
      ஆதிக்கம் சம்பந்தமாக
      நீங்கள் கூறுவதை நூற்றுக்கு நூறு
      ஏற்றுக்கொள்கிறேன்.

      ஆனால் இன்றைய கால கட்டத்தில்
      பார்ப்பனர்களை குறைகூறுவதை
      நான் ஏற்க மாட்டேன். அதெல்லாம்
      கடந்த காலம் -முடிந்து போன விஷயம்.
      சமுதாயம் மாறியாகி விட்டது.

      இன்றைய தினத்தில் பார்ப்பனர்களால்
      எந்த வித தீங்கையும் என்னால் காண
      முடியவில்லை.

      இன்று சுரண்டல்காரர்களும்,
      துரோகிகளும்,
      காட்டிக்கொடுப்பவர்களும்,
      ஜாதி வித்தியாசம் பார்ப்பவர்களும்,
      தமிழர்களிடையேயே இருக்கிறார்கள்.

      தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்கள் யார் ?
      கொள்ளை அடித்தவர்கள் யார் ?
      “அன்னை” நிகழ்த்திய கொடூர நாடகத்திற்கு
      துணை போனது யார் ?

      மு.க. பார்ப்பனரா ?
      ஆ.ராசா பார்ப்பனரா ?
      EVKS இளங்கோவன் பார்ப்பனரா ?
      தங்கபாலு பார்ப்பனரா ?
      ப.சி. பார்ப்பனரா ?
      மன்மோகன் சிங் பார்ப்பனரா ?
      “அன்னை” சோனியா காந்தி பார்ப்பனரா ?

      நமக்கு நடந்த கேடுகள் அனைத்திற்கும்
      முக்கிய காரணம் இவர்கள் தானே ?

      எதற்கு எடுத்தாலும்,
      எல்லாவற்றிற்கும்,
      பார்ப்பனர்களை குறைகூறுவது மு.க.விற்கும்
      அவரது ஜால்ராக்களுக்கும்
      மட்டுமே பொருந்தும்.

      நாம் பகுத்தறிவாளர்கள்.
      உண்மையை ஆராய்ந்து உணர வேண்டும்.
      நல்லது கெட்டது,
      நல்லவர் கெட்டவர் யாரென்று
      உணரக்கூடிய பக்குவத்தை பெறவேண்டும்.

      யோசித்துப் பாருங்கள்.
      நீங்களும் உணர்வீர்கள்.

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  2. Ganpat சொல்கிறார்:

    ஏன்,நம்ம தமிழர்கள் காவலர்,முத்தமிழ் வித்தகர்,வாழும் வள்ளுவர் ஐந்து ஆண்டுகளாக என்னத்தை …….
    மத்திய அரசிற்கு ஆதரவை வாபஸ் வாங்கிருக்க வேண்டியதுதானே!!
    அத விட்டுட்டு பார்ப்பான்,மலையாளி,எத்தியோப்பியன்,ரஷியன்
    என்று யார் மேல் பழி போடலாம் எனஅலயவேண்டியது!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.