“ஜெ” டெல்லி விஜயம் – இரட்டிப்பு மகிழ்ச்சி !!

“ஜெ” டெல்லி விஜயம் –
இரட்டிப்பு மகிழ்ச்சி !!


அம்மாவின் டெல்லி விஜயம்  இரட்டிப்பு
மகிழ்வை  உண்டு பண்ணி இருக்கிறது.

எப்படி என்கிறீர்களா ?

இலங்கை அரசை – தமிழக
சட்டமன்றத்தில் கண்டன தீர்மானம்
நிறைவேற்றியதோடு விட்டு விடாமல் –

மத்திய அரசிடம் – பிரதமரிடம்,
எழுத்து பூர்வமாக – இலங்கை அரசுக்கு
எதிராக நடவடிக்கை எடுக்கவும்,

தமிழக சட்டமன்ற குழு ஒன்றை இலங்கைக்கு
அனுப்ப வேண்டும் என்றும் கடிதம் கொடுத்து
அழுத்தம் கொடுத்ததுடன் அல்லாமல் –

டெல்லி செய்தியாளர் கூட்டத்தில்  
இலங்கை தமிழர்கள் விஷயத்தையும்
கச்சத்தீவு பற்றியும் விவரமாக
பேசி அகில இந்திய அளவில் அதற்கு
ஒரு முக்கியத்துவம்  ஏற்படச் செய்த
வகையில் –முதல் மகிழ்ச்சி.

இன்னும் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டு
நீடிக்கிற நிலையில் சோனியா காந்தியை
சந்திப்பது தேவையற்றது என்றும்,

காங்கிரசுக்கு மத்தியில் அதிமுக உதவி
வேண்டும் என்றால் –
அவர்கள்  தான் தன்னை அணுக வேண்டும்
என்றும் – செய்தியாளர்கள் கூட்டத்தில்
பகிரங்கமாக பேசி காங்கிரஸ் கட்சியின்
ஈகோவை தூண்டி விட்ட விதத்திலும்,

ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில்
தேர்தல் மோசடி செய்து எம்.பி.
ஆனவர். எனவே அவர் அமைச்சர் பதவியை
ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி

ஜெ. என்றுமே நீதிமன்றத்தை மதிக்காதவர்
என்று  ப.சிதம்பரமும்,

ஜெயலலிதாவின் பேச்சு கட்டுப்பாடற்றது
என்றும் இதுபோன்ற கட்டுப்பாடற்ற பேச்சுக்கு
ஒரு கட்சி எப்படி பதிலளிக்க முடியும் என்று
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன்
திவேதியும் –

உடனடியாக பதில்
தெரிவித்துள்ளதன் மூலமும்  –

காங்கிரஸ் – அதிமுக  கூட்டணிக்கு
சிலர் செய்யும் முயற்சி இப்போதைக்கு
எடுபடாது  என்கிற  நிலை
உருவாகி  இருப்பதில்
இரண்டாவது  மகிழ்ச்சி.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அப்பாவி மீனவர்கள், அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், முதலமைச்சர், ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to “ஜெ” டெல்லி விஜயம் – இரட்டிப்பு மகிழ்ச்சி !!

  1. VG சொல்கிறார்:

    arumai arumai

  2. inshaf சொல்கிறார்:

    I expect ur vimarisanam daily …..in a new manner.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.