கலைஞர் – கலைஞர் தான் !

கலைஞர் – கலைஞர் தான் !

தமிழக சட்ட மன்ற  தேர்தலில் படுதோல்வி.
எதிர்க்கட்சி  அந்தஸ்து கூட கிடைக்காத நிலை.

கடந்த ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல்கள்
வரிசையாக, ஒவ்வொன்றாக
வெளிச்சத்திற்கு வரும் நிலை.

காங்கிரஸ் தலைமை  பாராமுகம்.
சோனியா காந்தி இவருக்கு பிறந்த நாள்
வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை !
வேண்டாவெறுப்பாக உறவு நீடிக்கும் நிலை.

வரிசையாக   ராசா,  கனிமொழி கைதை
அடுத்து எந்நேரமும் தயாநிதி மாறனின் மீது
நடவடிக்கை வரக்கூடும் என்கிற நிலை.

குடும்பத்தில் பெரும் குழப்பம் – வருத்தம்.
மகள் சிறை சென்ற துயரில் துணைவியார்
விடுக்கும் சாடல்கள்.

மனதில் ஒரு இரக்க உணர்வோடு,
நான் கூட நினைத்தேன் – அய்யோ பாவம்
கலைஞர் உடல் நிலை பாதிக்கப்படுமோ என்று.

ஆனால் -இவை எதுவுமே அவரை
பாதிக்கவில்லை ! கவலைப்பட்ட  நான் தான்
மடையனானேன் !

அகம்பாவமும், ஆணவமும்,
கேட்பவர்கள் அத்தனை பேரும் வாத்து
மடையர்கள் – தான் என்ன
சொன்னாலும் கேட்டுக் கொள்வார்கள் என்கிற
இறுமாப்பும் கலைஞரை எப்படி எல்லாம்
பேச வைக்கிறது பாருங்கள் –

அண்மையில் கொடுத்த நிருபர்கள் பேட்டியிலும்,
இன்று கலந்து கொண்ட ஒரு திருமண
நிகழ்ச்சியிலும் கலைஞரின் பேச்சு –

முதலில் பேட்டி –

கேள்வி: “கூடா நட்பு” என்று சொன்னீர்களே,
அது யாரைப் பற்றி?

பதில்: உங்களில் ஒருசிலரோடு இருக்கின்ற
நட்பாகக் கூட இருக்கலாம் அல்லவா?

கேள்வி:  இன்று நீங்கள் நிறைவேற்றிய
தீர்மானத்தில் சி.பி.ஐ. பற்றி ஒரு தீர்மானம்
நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மத்திய அரசு,
சி.பி.ஐ. நிறுவனத்தை ஒரு அரசியல்
ஆயுதமாகப் பயன்படுத்துவதாக
நினைக்கிறீர்களா?

பதில்:  ஆயுதமாக இருக்கலாம்,
அரசியல் ஆயுதமாக இருக்க முடியாது.

கேள்வி:  எக்காரணம் கொண்டும் காங்கிரசுடன்
உங்கள் கூட்டணியில் சிக்கல் இல்லை,
பிரச்சினை இல்லை என்று கூறுவீர்களா?

பதில்: நிச்சயமாகச் சொல்வேன்.
காங்கிரஸ் கட்சியுடன் எப்படியாவது
விரோதத்தை உண்டாக்க வேண்டும்,
பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு
திட்டமிட்டு ஒரு சிலர் முடிவு செய்து
அதை இங்கே வந்து கேள்வியாகக்
கேட்கிறீர்கள் !

கேள்வி:  காங்கிரஸ் கட்சியின் அதிகார
பூர்வமான பத்திரிகை ஒன்றில் 2 ஜி
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தான் தேர்தல்
தோல்விக்குக் காரணம் என்று எழுதி
இருக்கிறார்களே?

பதில்:  ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை
பூதாகரமாக சில சுயநலவாதிகள்,
சில பொறாமைக்காரர்கள் ஊதிவிட்ட
காரணத்தால், அதை எடுத்து
வைத்துக்கொண்டு அந்தப் பத்திரிகையிலே
எழுதியிருப்பார்கள்.

கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சினை இந்தத்
தோல்விக்குக் காரணமா இல்லையா?

பதில்:  இல்லை. தி.மு.க. தோல்விக்கு
முக்கியமான காரணம் ஒரு சில
“பார்ப்பனர்களின்” முயற்சிதான்.

கேள்வி:  அடுத்து வரவிருக்கும் சி.பி.ஐ.
மூன்றாவது குற்றப் பத்திரிகையிலே
தயாநிதிமாறன் பெயர் இடம் பெறப்போவதாகச்
செய்தி வந்திருக்கிறதே?

பதில்:  நீங்கள் முயற்சி செய்தால் -அது
நடக்கலாம்.

கேள்வி: ஈழத் தமிழர்கள் பிரச்சினையில்
கடந்த காலத்தில் நீங்கள் சரியாகச்
செயல்படவில்லை என்று விஜயகாந்த்
சொல்லியிருக்கிறாரே?

பதில்: நான் அவருக்கெல்லாம் பதில்
சொல்ல மாட்டேன்.

——————-
இன்று ஒரு திருமணத்தில் –

“இங்கே பேசிய போது தேர்தலிலே நாம்
வெற்றியடையவில்லை என்றும்
நாம் இப்போது ஆட்சியிலே இல்லை என்றும்
சிலர் இங்கே பேசும்போது குறிப்பிட்டார்கள்.

புராணத்தில், ராமாயணத்தில் கூடத்தான்
14 ஆண்டு காலம் ராமன் ஆட்சியிலே இல்லை –
ஆட்சியிலே இல்லாத காலத்தில் தான் அவன்
தாடகைக்கு புத்தி கற்பித்தான் !
(புத்தி எப்படி போகிறது பாருங்கள் –
மக்கள் இவருக்குத்  தான்  புத்தி
கற்பித்துள்ளனர் என்பதை எவ்வளவு
சகஜமாக, சாமர்த்தியமாக ஒதுக்கி விட்டார்
பாருங்கள் !)”

இவரை மாற்ற  யாராலாவது முடியுமா ?
இனிமேல் பிறந்து வந்தால் தான் உண்டு !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இரக்கம், கனிமொழி, கருணாநிதி, குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to கலைஞர் – கலைஞர் தான் !

 1. pirabuwin சொல்கிறார்:

  நாய் வாலை படைத்த கடவுளாலும் நிமிர்த்த முடியாது.

 2. RAJASEKHAR.P சொல்கிறார்:

  நக்கீரனில் வந்த பேட்டி …..வெள்ளிக்கிழமை, 25, பிப்ரவரி 2011 (11:29 IST)

  தமிழ் இன உணர்வு வளர்ந்தால், திராவிட உணர்வு செழிக்கும். இந்த இரண்டு உணர்வுகளுக்கும் தமிழ்நாட்டில் இடம் இல்லாமல் செய்ய வேண்டுமென்று ஒருசாரார் முயன்று வருகின்ற நேரத்தில் ஆத்திகத்திலே பற்று கொண்டவர்கள் கூட, நாத்திகராக தங்களைக் காட்டிக் கொள்ளாமல் இருப்பவர்கள் கூட,

  தமிழ் வாழவும், தமிழர்களுடைய கலை, கலாச்சாரம் இவைகள் வென்றிடவும், பாடுபட வேண்டிய சூழல் இன்றைக்கு உருவாக்கியிருக்கின்றது.

  நான் அத்தகைய அழைப்பை தமிழர்கள் என்று யார் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் இது போன்ற விழாக்களில் விடுக்க விரும்புகிறேன். தமிழ் வாழ்ந்தால்தான் தமிழர்களுடைய கலாச்சாரம் வாழும். தமிழர்களுடைய கலாச்சாரம் வாழ்ந்தால்தான் தமிழர்களுடைய தன்மானம் வாழும். தன்மானம் பாதுகாக்கப்படும்.

  வாழ்க தமிழ் வளர்க தமிழன் ……
  thanks & blessings
  rajasekhar.p

 3. சந்தானத் திருடன் சொல்கிறார்:

  //ராமாயணத்தில் கூடத்தான்
  14 ஆண்டு காலம் ராமன் ஆட்சியிலே இல்லை –
  ஆட்சியிலே இல்லாத காலத்தில் தான் அவன்
  தாடகைக்கு புத்தி கற்பித்தான் !//

  அப்படியானால் ஐயா தன்னை ராமர் என்கிறாரா? இல்லை ராமரோ தன்னை ஒப்பிட்டுக் கொள்கிறாரா? 13 ஆண்டு கால வனவாசத்தில் இவர் யாருக்கு என்ன கற்பித்தாரோ?

  அது சரி, ராமன் எந்தக்காலேஜில் படித்தான், எங்கே என்ஜியனிரிங் முடித்தான் என்றெல்லாம் புத்திசாலித் தனமாகப்பேசி விட்டு இப்போது சம்பந்தமில்லாமல் ஏன் ராமரை இழுக்க வேண்டும்? ஒப்பிட வேண்டும்? கடவுளே இல்லை என்பவர்கள் கடவுளாகக் கருதப்படும் ஒருவரைப்பற்றிப் பேசுவதே நகைமுரண். அதுவும் தங்களோடு ஒப்பிட்டுப் பேசிக் கொள்வது சரியான இழிமுரணும்கூட.

  வேண்டும் என்றால் ஒன்று; வேண்டாம் என்றால் ஒன்று. இதுவே இவரது வாடிக்கை.

  அது போகட்டும். ராமன் தாடகைக்கு மட்டும் தான் புத்தி சொன்னானா? வேறு யாருக்கும் “புத்தி” கற்பிக்கவில்லையா?நல்ல காமெடியாக இருக்கிறது.

  அதை விட காமெடி…

  //தி.மு.க. தோல்விக்கு
  முக்கியமான காரணம் ஒரு சில
  “பார்ப்பனர்களின்” முயற்சிதான்.//

  என்ற பதில்.

  3% கூட இல்லாத சிலர் செய்த முயற்சியால் 57%பேர் மனம்மாறி இவருக்கு எதிராகி விட்டார்களா? இதெல்லாம் மடையன் கூட நம்ப மாட்டான்.

  இன்னும் கீறல் விழுந்த ரெகார்ட் மாதிரி இதையே பேசிக் கொண்டிருக்காமல், ஆக்க பூர்வமான பணிகளில் அவர் கவனம் செலுத்தினால் அவரது கட்சி எதிர்காலத்துக்கு அது நல்லது.

  அன்புடன்
  ரமணன்

 4. RAJASEKHAR.P சொல்கிறார்:

  வேண்டும் என்றால் ஒன்று;
  வேண்டாம் என்றால் ஒன்று.
  இதுவே இவரது வாடிக்கை.
  3% கூட இல்லாத சிலர் செய்த முயற்சியால்
  57%பேர் மனம்மாறி இவருக்கு எதிராகி விட்டார்களா?

  நன்றி ரமணன் …..

  இவர் கடைசியாக
  உலகையும்
  உலகதமிழர் களையும்
  ஏமாற்ற எடுக்கும்-
  கடைசி ஆயுதம்தான்
  நக்கீரனில் வந்த பேட்டி …..வெள்ளிக்கிழமை, 25, பிப்ரவரி 2011 (11:29 IST)

 5. Ganpat சொல்கிறார்:

  தன் வாழ் நாள் முழுவதும் கபடம்,அடுத்துகெடுத்தல்,நம்பிக்கை துரோகம்,
  பொய்,பித்தலாட்டம்,போன்ற தீய குணங்களையே அணிகலன்களாகக்கொண்டு இழிவாழ்க்கை நடத்திய ஒருவரை, கடவுள் தண்டிக்காமல்,90 வயது வரை அசாத்திய ஆரோக்கியத்துடன் வைத்திருந்து ,பிள்ளைகள் ,பெண்கள்,பேரன்கள்,பேத்திகள்,கொள்ளுப்பேரன்கள்,பேத்திகள் போன்ற வாரிசுகளை லட்டு லட்டாக,அறிவு,ஆரோக்கியம்,அழகு நிரம்ப கொடுத்து,ஒரு அரசனைப்போல வாழவாழவைத்தால்,அவர் இதுவும் சொல்லுவார்;இன்னமும் சொல்லுவார்..
  ஏன் இன்னமும் நீங்களே அவரை கலைஞர் என்றுதானே குறிப்பிடுகிறீர்கள்!!உண்மையான கலைஞர்களுக்கெல்லாம் அது எத்தகைய அவமானம் !
  இன்னமும் அவருக்கு 30 சதவிகித வாக்காளர்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என்பது வியப்பாக இல்லை? என்ன கண்டார்கள் அவரிடம்?வெளியிலே எல்லாம் போக ேண்டாம்..யுவகிருஷ்ணா,அமுதவன் போன்ற பதிவர்களே அவரை தெய்வம் போல வைத்துள்ளார்களே!
  Satan is as powerful as God

 6. Ezhil சொல்கிறார்:

  2006 ஆட்சிக்கு வரும் வரை கலைஞர். ஆட்சிக்கு வந்த பின் கொலைஞர்!

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் கண்பத்,

  அவருக்கு கிடைத்துள்ள
  வாழ்க்கை –

  பரிசா அல்லது
  தண்டனையா ?

  யோசித்துப் பாருங்கள் !

  எனக்கென்னவோ தண்டனையாகவே
  தோன்றுகிறது !

  – வாழ்த்துக்களுடன்
  காவிரிமைந்தன்

 8. Viswa சொல்கிறார்:

  இந்த ஆளுக்குத் தமிழ் ஒழுங்காகத் தெரியாது. கம்பராமயணத்தைப் பற்றி ஆபாசமாகப் பேச மட்டுமே தெரியும். ராமாயணம், மஹாபாரதம் பற்றிய இதிகாசங்களும் உருப்படியாகத் தெரியாது. தாடகையை எப்பொழுது ராமன் கொன்றார்? வனவாசத்தின் பொழுதா? அட ராமா!!! இந்த வக்கிரம் பிடித்த மனிதன் உளறுவதைக் கூட ஒழுங்காகச் செய்ய முடியவில்லையே. இந்த வயதிலும் திருந்தாத ஜென்மம் இருந்தென்ன லாபம்? இவருக்கு வைத்தியம் பார்த்த வைத்தியருக்குத்தான் உடல் நலம் கெட்டுப் போய் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இவர் குண்டுக்கல்லாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். சேர்த்த பாவம் எல்லாம் உடம்பில் வரைமாக உறைந்து போயிருக்கிறது.

  விஸ்வாமித்ரா

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.