மோசடி அரசு – இதை தாங்கிக் கொள்ள நமக்கென்ன தலையெழுத்தா ?

மோசடி  அரசு – இதை தாங்கிக் கொள்ள
நமக்கென்ன  தலையெழுத்தா ?

சனிக்கிழமை   நள்ளிரவில் டெல்லி ராம்லீலா
மைதானத்தில் குடும்பம் குடும்பமாக குழுமியிருந்த
மக்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு,
பலப் பிரயோகம்.

யாருக்கும் காயம் இல்லை என்று  
கபில் சிபல் கூறினார். 69 பேர்  காயம் காணமாக
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்  என்று
பிடிஐ செய்தி கூறுகிறது.

மற்றவர்கள்  சிகிச்சை பெற்று திரும்பினாலும்,
இன்றைய நிலையில் – 51 வயது நிரம்பிய
ராஜ்பாலா என்கிற பீகாரைச் சேர்ந்த
குடும்பப் பெண்மணி முதுகு தண்டு வடம்
முறிந்த நிலையில் கோமாவில் கிடைக்கிறார்.


அவருக்கு  நிரந்தரமாகவே  படுக்கையை விட்டு
எழ முடியாத நிலை ஏற்படக்கூடும் என்று
டாக்டர்கள் கூறுகின்றனர்.

பலப் பிரயோகம் செய்யப்படவில்லை என்று
அமைச்சர் கூறுகிறார்.  ஆனால், போலீசார்
என்ன செய்தனர் என்பது வீடியோ  பதிவுகளில்,
தொலைக்காட்சியில் –
தெளிவாகத் தெரிகிறது.  
மைதானத்தில் பாதி பேர் குடும்பத்துடன்,
சிறார்களுடன்,
முதியவர்களுடன்,உறங்கிக்கொண்டிருக்கின்றனர்.
மீதி பேர் ஆன்மிக  நிகழ்ச்சியில் கலந்து
கொண்டிருக்கின்றனர்.

அவர்களைப் பார்த்தால் தேசத்துரோகிகள் போலவா
தெரிகிறது ? அந்த பெண்களையும்,
முதியவர்களையும்  பார்த்தால் -அரசாங்கத்தைக்
கவிழ்க்க சதி செய்ய கூடியவர்களைப் போலவா
தெரிகிறது ?
கைகளில் துப்பாக்கிகளோ, வெடிகுண்டுகளோ,
பயங்கர ஆயுதங்களோ  வைத்திருக்கிறார்களா ?

நள்ளிரவில், இரவு ஒரு மணி அளவில்,
இவர்களை அடித்து விரட்ட வேண்டிய அவசியம்
என்ன வந்தது ?

குலாம் நபி ஆசாத் கூறுகிறார் –
பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தை வாபஸ்
பெற்றுக்கொள்வதாக முதலில் கூறினார். ஆனால்,
அவர் பின்னர் உண்ணாவிரதத்தை தொடருவதாக
அறிவித்து விட்டார். அவர் ஏற்கனவே அளித்த
வாக்குறுதியை மீறி விட்டார். இது அவரது
மிகப்பெரிய நம்பிக்கை மோசடி’’.
(வாபஸ் வாங்குகிறேன் என்று கூறி விட்டு
தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பது
அவ்வளவு பெரிய மோசடியா ?)

சரி  அப்படியே  இருக்கட்டும்.  
பாபா ராம்தேவ் மீது அரசாங்கம்
நடவடிக்கை எடுக்கட்டும்.

இந்த அப்பாவி மக்கள் என்ன பாவம் செய்தனர் –
அப்படி அடிபடுவதற்கு – வதை படுவதற்கு.
நள்ளிரவில், அவர்கள், குடும்பம் குடும்பமாக
பெட்டி, துணிமணிகளை  கையில் எடுத்துக்கொண்டு,
பந்தலை  திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டே
பரிதாபமாக வெளியேறுகின்றார்களே –
இந்த மக்களின் மீது கை வைக்க அரசாங்கத்துக்கு
என்ன உரிமை இருக்கிறது.

இங்கு உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பாபா
ஒரு மாதம் முன்பே அறிவித்து விட்டார். அதை
சட்ட விரோதம் என்று அரசாங்கமோ, போலீசோ
ஏன் முன்கூட்டியே  அறிவிக்கவில்லை ?  

அப்படி செய்திருந்தால்,
இப்படி மக்கள் குடும்பம்
குடும்பமாக வந்திருக்க மாட்டார்களே !
முன் அறிவிப்பு செய்யாமல் நடு இரவில்
இந்த மக்களை
இப்படி துரத்தி துரத்தி அடிக்க இவர்களுக்கு
எந்த சட்டம் இடம் கொடுக்கிறது ?

இப்படி குடும்பத்தினர் கூடுவது சட்ட விரோதம்
என்றால், ஒரு மாதம் முன்பாக உத்திர பிரதேசத்தில்
தடை உத்திரவு அமுலில் இருந்த
பட்டா பர்சால் கிராமத்திற்கு  ராகுல் காந்தி
அதிகாலை 4 மணிக்கு,
மோட்டார் சைக்கிளில் பின்புறம் உட்கார்ந்து
திருட்டுத்தனமாக சென்று மறியல் செய்தது
சட்ட சம்மதமானதா ?

பிரதமர் மன்மோகன் சிங் கூறுகிறார் –
ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு
வேகமாக செயல்பட்டு வருகிறது.ஊழலை
உடனடியாக ஒழிக்க அரசிடம் மந்திரக்கோல்
எதுவும் இல்லை’’
(இவர் இன்னும் பிரதமராகத் தொடர்வது
இந்த நாட்டின் சாபக்கேடு. எத்தனை வருடமாக
இதையே  கூறி வருகிறார்கள் ?
இன்னும் எத்தனை நாள் இதையே கூறுவார்கள் ?)

“பாபா ராம்தேவை அகற்ற வேண்டிய நிலை
ஏற்பட்டது துரதிருஷ்டவசமானது.
ஆனால்  வேறு வழியில்லாததால்
அவ்வாறு செய்யப்பட்டது”
(இந்த அளவு பதற்றத்தை உண்டுபண்ணி திடீரென்று
நள்ளிரவில் அவரை அகற்ற அப்படி என்ன அவசியம்
ஏற்பட்டு விட்டது ?
அவர் என்ன தேச துரோகம் பண்ணி விட்டார் ?

பாராளுமன்றத்தின்  மீது தாக்குதலுக்கு படை திரட்டிக்
கொண்டிருந்தாரா ?
இல்லை – பொதுமக்களைத் தொடாமல் பாபாவை
அங்கிருந்து அகற்ற அரசாங்கத்துக்கு வேறு எந்த வித
உபாயமும் இல்லையா ?)

திக் விஜய் சிங் கூறுகிறார் – இது ஆர் எஸ் எஸ் சின்
சதித்திட்டம். எங்களுக்கு முன்னரே  தெரியும்.
(முன்னரே  தெரியும் என்றால் முதல் நாள் 4 மத்திய
மந்திரிகள் ஏன் விமான நிலையம் சென்று சிவப்பு
கம்பள வரவேற்பு கொடுத்தனர் ?

பின்னர் ஏன் பாபா ராம்தேவ் தங்கி இருந்த ஓட்டலுக்கு
சென்று 5 மணி நேரம் பேச்சு வார்த்தை
நடத்தினார்கள் ?)
ராம்தேவ்  ஆர் எஸ் எஸ்  ஆதரவாளர்  என்பது
சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சோனியா காந்தி
அம்மையார் சொன்ன பிறகு தான் டெல்லி
அரசுக்கு தெரியுமா?

ஆளாளுக்கு  பேசுகிறார்களே – இந்த நாடகத்தின்
சூத்திரதாரி, இவர்கள் இத்தனை பேரையும்
பேச வைக்கும் “அன்னை” – அவர் ஏன் இன்னும்
வாயைத் திறக்கவில்லை ?  

மக்கள்  கொதித்துப் போய் இருக்கிறார்கள்.
மக்கள்  எல்லா நாடகத்தையும் பார்த்துக்கொண்டு
தான் இருக்கிறார்கள்.

கறுப்புப் பணத்தை இனியும் தாமதம் செய்யாமல்
வெளியே கொண்டு வாருங்கள்  என்பதும்,
ஊழல்வாதிகளை  உடனடியாக தண்டிக்க வேண்டும்
என்பதும் – ஆர் எஸ் எஸ்  சதி என்று  கூறுபவர்கள்
மக்களை  கொச்சைப் படுத்துகிறார்கள்.

இது மக்களின்  ஒருமித்த கருத்து.
அரசியல்வாதிகளை  நம்பி இத்தனை வருடங்களாக
ஏமாந்து போன மக்களின் இறுதி எச்சரிக்கை.

இதை துவக்கி இருப்பது மக்கள் தான் –
எந்த கட்சியும் அல்ல. அரசுக்கு எதிரான எழுச்சி
என்பதால் – எதிர்க் கட்சிகள்  இதை ஆதரிக்கக்கூடும்.
ஆனால் எந்த ஒரு
கட்சியும்  இந்த மக்கள் எழுச்சிக்கு சொந்தம்
கொண்டாட  முடியாது  என்பதே உண்மை.

இனியும் மத்திய அரசும் –
காங்கிரஸ்  தலைமையும் –
இந்த நாடகத்தை தொடர்ந்தால் –
மக்களின்  கொந்தளிப்புக்கு முன்னர்
இவர்கள்  அனைவரும் இருக்கும் இடம்
தெரியாமல் காணாமல் போக  நேரிடும். 

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், குடியரசு, குடும்பம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to மோசடி அரசு – இதை தாங்கிக் கொள்ள நமக்கென்ன தலையெழுத்தா ?

 1. Ganpat சொல்கிறார்:

  10,9,8,7………..

  இந்த அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன !!!

 2. RAJASEKHAR.P சொல்கிறார்:

  கபடதாரிகள்….
  துரோகிகள்…….
  எத்தர்கள்…….
  இவர்களை எல்லாம்
  தூக்கி எறியும் ஆரம்பம்
  தமிழ்-
  நாட்டிலுருந்து துவக்க பட்டு விட்டது …..
  ஆம் –
  மக்கள் கிளர்ந்து எழுவார்கள்
  இவர்கள் தூக்கி எரியபடுவது உறுதி
  இன்னொரு சுதந்திர போராட்டம்
  ஆரம்பமாகிவிட்டது….

  thanks & blessings
  rajasekhar.p

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.