அயோக்கியர்களின் கூடாரம் !

அயோக்கியர்களின் கூடாரம் !

லஞ்ச ஊழலுக்கு எதிராக கடுமையான ஜன் லோக் பால் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்த அன்னா ஹஜாரே இயக்கத்தை சிதைக்க –

அவர் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்து, உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தது காங்கிரஸ் தலைமை/ மத்திய அரசு.

அவர் கோரிக்கையை பரிசீலித்து வரைவு மசோதா தயாரிக்க கமிட்டியை வெளிப்படையாக அறிவித்த மத்திய அரசு திரை மறைவில் – அதில் உருப்படியாக எதுவும் முடிவு எடுக்கப்படாமல் பார்த்துக்கொள்ள திக் விஜய் சிங்கை ஏவியது.

துவக்கத்தில், சிவில் சொசைடி உறுப்பினர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் அவதூறு பேச ஆரம்பித்தார் திக் விஜய் சிங். பின்னர் அவர்களுக்குள் பிளவை ஏற்படுத்த முயற்சி செய்தார். அவமானப்படுத்தினார். கபில் சிங்கும் அவர் பங்குக்கு இயன்றதை எல்லாம் செய்தார். இருந்தாலும் அவர்கள் எதிர்பார்த்த விளைவு ஏற்படவில்லை.

எனவே வெளிப்ப்படையான எதிர் முயற்சிகளை ஆரம்பித்து விட்டார்கள். பிரதம மந்திரியை, நீதிபதிகளை இதில் சேர்ப்பது பற்றி மாநில முதல் அமைச்சர்களின் கருத்தைக் கேட்போம் என்று ஆரம்பித்திருக்கிறார்கள். போகப் போக இந்த கமிட்டி உருப்படாமல் போக ஆனவை அனைத்தும் காங்கிரஸ் கட்சி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

இதற்குள் ஜூன் 4 முதல் கருப்புப் பணத்தை எதிர்த்து டில்லி ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக பாபா ராம்தேவ் அறிவித்தார்.

பாபா அரசியல்வாதி அல்ல. இருந்தாலும் யோகா குரு என்கிற முறையில் வட இந்தியாவில் அவருக்கு நிறைய சீடர்கள் இருக்கிறார்கள். அவரால் நிறைய கூட்டம் சேர்க்க முடியும்.

அன்னா ஹஜாரே விஷயத்தில் ஏமாந்தது போல் இதில் ஏமாந்து விடக்கூடாது என்று ஆரம்பத்திலேயே அவரை ஆகாயத்தில் தூக்கி வைத்து தாஜா செய்ய முயன்றார்கள். மத்திய பிரதேச நகரமான உஜ்ஜயினிலிருந்து 400 கிமீ தூரத்தில் உள்ள டில்லி வந்த அவரை விமான நிலையத்தில் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றார்கள் 4 மத்திய மந்திரிகள்.

ஏதோ அயல் நாட்டின் பிரதம மந்திரியோ, ஜனாதிபதியோ வருவது போல் அவசியமே இல்லாமல் தடபுடல் பண்ணி அவரை அதிக உயரத்திற்கு தூக்கினார்கள்.

அவர் வழிக்கு வராவிட்டால் – அடுத்தபடி அவரை அதல பாதாளத்தில் வீழ்த்த இன்னொரு பக்கம் வழக்கம் போல் திக் விஜய் சிங் தயாராக இருந்தார். பாபா ராம்தேவ் மசிய மாட்டார் என்று தெரிந்ததும் உடனே திக் விஜய் தன் வேலையை ஆரம்பித்து விட்டார்.

பாபா ராம்தேவ் ஒரு சந்நியாசியே இல்லை. அவர் ஒரு யோகா வியாபாரி. ஆயுர்வேத மருந்து விற்று பணம் பண்ணுபவர். 1000 கோடி ரூபாய் பணம் வைத்திருக்கிறார். எதில் எவ்வளவு பணம் நேர்மையான வழியில் வந்தது என்றெல்லாம் தாக்க ஆரம்பித்து விட்டார்.

ஒரு பக்கம் அளவிற்கு மீறி உபசாரம் செய்து ஆளை வீழ்த்தப் பார்ப்பது – மசியவில்லை என்றால் அசிங்கமாக தரம் தாழ்ந்து ஏசுவது !

உருப்படியாக கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதை தவிர – வேறு எதை வேண்டுமானாலும் செய்ய காங்கிரஸ் கட்சித் தலைமையும், மத்திய அரசும் தயாராக இருக்கிறது .

பாபா ராம்தேவின் முக்கிய கோரிக்கைகள் என்ன ?

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவின் தேசீய சொத்தாக அறிவித்து, அதை மீட்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

லஞ்ச ஊழல், கறுப்புப்பணம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விரைவு நீதி மன்றங்களை அமைத்து விரைவாக விசாரித்து தண்டனை கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.

இவற்றை செய்வதில் என்ன கஷ்டம் இருக்க முடியும்? ஏன் காங்கிரஸ் அரசு மெத்தனம் காட்டுகிறது ? இதை செய்தால் பாதிக்கப்படப்போகிறவர்கள் அவர்கள் தரப்பிலேயே இருப்பதால் தான் !

காங்கிரஸ் தலைமையும், மத்திய அரசும் அயோக்கியர்களின் கூடாரமாக இருக்கும் வரையில் அன்னா ஹஜாரேயாக இருந்தாலும் சரி, பாபா ராம்தேவாக இருந்தாலும் சரி,

மக்கள் பொங்கி எழுந்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினால் தவிர, இது விஷயத்தில் எதையும் உருப்படியாக செய்ய முடியும் என்று தோன்றவில்லை.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to அயோக்கியர்களின் கூடாரம் !

  1. RAJASEKHAR.P சொல்கிறார்:

    மக்கள்-
    பொங்கி எழுந்து…
    கோபத்தை வெளிப்படுத்துவதை தவிர;
    வேறு வழிஇல்லை…..
    நாட்டை சுரண்டும்
    நயவஞ்சகர்களை நசுக்க
    மக்கள்- முன்வரவேண்டும் …!!!!!!

    thanks & blessings all of u
    rajasekhar.p

  2. Ganpat சொல்கிறார்:

    நம்மை நிரந்தரமாக பிடித்துள்ள சனிதான் காங்கிரஸ்!
    1947 முதல் நேரு காங்கிரஸ்
    1967 முதல் இந்திரா காங்கிரஸ்
    1984 முதல் ராஜீவ் காங்கிரஸ்
    1991 முதல் சோனியா காங்கிரஸ்
    ? முதல் ராகுல் காங்கிரஸ்!
    ஆங்கிலத்தில் PRO என்பதற்கு எதிர்ப்பதம் CON
    எனவே முன்னேற்றம் என்பதை PROgress என சொன்னால்
    பின்னடைவு தேக்கம் என்பதை குறிக்கும் சொல் CONgress
    இந்த கட்சியில் மானமுள்ள ஒரு நபரும் கிடையாது
    நேரு குடும்பத்தை உறுவி உறுவியே பிழைப்பு நடத்தும் ஈனப்பிறவிகள்.காசுக்காக நட்டைக்கூட விற்பார்கள்.
    இதில் பிரதமராக உள்ள சிங் ,நம் ஓ.பனனீசெல்வத்தை லீ.க்வான் .யூ. ஆக்கும் அளவிற்கு திறமை படைத்தவர்.
    இந்த கூட்டம் உள்ள வரை நம் நாட்டிற்கு விடிவு என்பதே கிடையாது

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.