இந்தியாவின் நம்பர் ஒன் பொய்யர் – புரட்டர் !!

இந்தியாவின் நம்பர் ஒன்  பொய்யர் – புரட்டர் !!

முதலில் செய்தி –

இன்றைய செய்தி –
புதன்கிழமை, 25, மே 2011

கறுப்பு பண பிரச்சினைக்கு தீர்வு: பிரணாப்

“திருத்தப்பட்ட புதிய ஒப்பந்தம் மூலம், வெளிநாடுகளில்
உள்ள கறுப்பு பண பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்
என்று, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி
நம்பிக்கை தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்து இருக்கும்
பல லட்சம் கோடி கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி
வருகின்றன. இந்த பிரச்சினையில் மெத்தனமாக
செயல்பட்டு வருவதாக சுப்ரீம் கோர்ட்டும் மத்திய அரசை
குற்றம் சாட்டி வருகிறது.

அதைத் தொடர்ந்து, கறுப்பு பணத்தை மீட்டு இந்தியா
கொண்டு வருவதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கை
எடுத்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில்
நடைபெற்ற வருமான வரி தொடர்பான மாநாடு ஒன்றில்
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,
கறுப்பு பணத்தை வெளிக் கொண்டு வரும்
நடவடிக்கைகளில் வருமான வரித்துறை ஈடுபட்டு
வருவதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது –

பல்வேறு நாடுகளுடன் உள்ள இரட்டை வரிவிதிப்பு
தவிர்ப்பு ஒப்பந்தத்தில், வங்கி கணக்கு விவரம் மற்றும்
வருமான வரி தொடர்பான தகவல்களை பகிர்ந்து
கொள்ள வகை செய்யும் சட்டப்பிரிவு ஒன்றை
இணைத்து திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த நடவடிக்கையினால், வெளிநாடுகளில்
பதுக்கி வைத்துள்ள கறுப்பு பண பிரச்சினைக்கு
வருமான வரித்துறை மூலம் தீர்வு காண முடியும்.

வங்கிகளிடம் இருந்து கறுப்பு பணம் பற்றிய தகவல் \
பரிமாற்றத்துக்கு இதில்  வகை செய்யப்பட்டு உள்ளது.”

—————————————————————————————————-

40 ஆண்டுகளாக  காங்கிரஸ் கட்சியின் மூலம் எதாவது
ஒரு பதவியில் ஒட்டிக்கொண்டே இருக்கும் இந்த ஆள்
இவ்வளவு நாட்களாக  வெளி நாடுகளில்  கருப்பு பணத்தை
பதுக்கி வைத்திருப்பவர்களின் மீது ஏன் நடவடிக்கை
எடுக்கவில்லை என்று கேட்டபோது  எல்லாம் –
இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தத்தின் கீழ் பெற்றுள்ள
தகவல்களை  வரி விதிப்பது தவிர வேறு எந்த
நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த முடியாது என்று கூறி
வந்தார்.

சுப்ரீம் கோர்ட் சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களை
வெளியிட வற்புறுத்தியபோது கூட – அது அந்நிய நாடுகளுடன்  செய்து கொண்ட உடன்படிக்கையை
மீறுவதாக ஆகும் என்றார்.

இத்தனை ஆண்டுகளாக எதாவது சாக்கு சொல்லிக்கொண்டே
காலம் கழித்தவர் – இப்போது முதன் முறையாக,
ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதன் மூலம் விவரங்களை
பெற வழி செய்திருப்பதாக கூறுகிறார்.

முதலாவதாக  –  ஒப்பந்தம் போடும்போதே இத்தகைய
ஷரத்துக்களை ஏன்  சேர்க்கவில்லை ?  வேண்டும் என்றே
தானே  உதவாக்கரை ஒப்பந்தங்களை போட்டார்கள் ?

இப்போது செய்யும் திருத்தங்களிலும் தகிடுதித்தங்கள்
செய்யப்படுகின்றன.
அவற்றை வெளியில் கூறவில்லை !
புதிய விதிகளின்படி – எதிர்காலத்தில் வெளிநாடுகளில் வங்கிக்கணக்குகள்  வைத்திருப்போரைப்பற்றிய
தகவல்களை மட்டும் தான்  பெற தான் வழி செய்கிறார்கள்.  

கடந்த காலங்களில் கணக்கு வைத்திருந்தோர் பற்றிய
எந்த விவரங்களையும் இதன்படி பெற முடியாது.

சம்பந்தப்பட்ட அனைவரும் தங்கள் கணக்குகளை மூடி
கொள்ளை அடித்த பணத்தை எல்லாம் பத்திரமாக
வெளியேற்றிய  பிறகு ( மாற்று ஏற்பாடுகளை  செய்த பிறகு )- இப்போது நிதானமாக சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

15 ஆண்டுகளாக டாக்டர் சுப்ரமணியன்சுவாமி  “காந்தி”
பரம்பரையினரின்  ஸ்விஸ் வங்கிக் கணக்குகளைப் பற்றி
சொல்லி வந்த போதெல்லாம் சும்மா இருந்த “அன்னை”
திடீரென்று  சமீபத்தில் எல்.கே.அத்வானிக்கு மட்டும்
மறுப்பு தெரிவித்தபோதே – மாற்று ஏற்பாடு பண்ணி
விட்டார்கள் என்பது தெரிய   வந்தது.
இப்போது உறுதியாகி விட்டது.

பழைய விவரங்களை  பெற முடியாது என்கிற
பட்சத்தில்,
இந்த திருத்தங்கள்  யாரை ஏமாற்ற ?  
இது தெரிந்த பிறகு
எதிர்காலத்தில் கணக்கு வைக்க எந்த மடையர்
முன்வருவர்?

தலைமைக்கு இவர் காட்டும் விசுவாசத்திற்கு
பரிசு தானோ –

25 ஆண்டுகளாக மத்திய அரசு நிறுவனம் ஒன்றில்
அதிகாரியாக பணிபுரிந்து வந்த இவர் மகனை
அண்மையில் நிகழ்ந்த மேற்கு வங்க தேர்தலை முன்னிட்டு
இரண்டு மாதங்களுக்கு முன்
ராஜினாமா செய்ய வைத்து, எம் எல் ஏ சீட்  கொடுக்கப்பட்டு,
மம்தா பானர்ஜி தயவில் வெற்றியும்  பெற்று – இப்போது
கூட்டணி அமைச்சரவையில்  மந்திரி பதவி !

35 ஆண்டுக்காலமாக  காத்திருந்த பல மேற்கு வங்க
காங்கிரஸ் தலைவர்கள் இப்போது –
பார்த்திருந்த தலைவர்களாகி
விட்டார்கள் !

நம்  கண்ணுக்கு தெரிந்து – இவருக்கு –
தலைமையிலிருந்து
கிடைத்த பரிசு இது !
இன்னும் வெளியில் தெரியாத பரிசுகள் என்னென்னவோ !

“இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே – நம் நாட்டிலே ?”
–  கவிஞர்  நாமக்கல்  ராமலிங்கம் பிள்ளை 1950 ல்
பாடியது !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், சுவிஸ் வங்கி, சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.