இலங்கை பிரச்சினையில் கலைஞர் நிகழ்த்தியது நாடகமே – தயாநிதி மாறன் வாக்குமூலம் !

இலங்கை பிரச்சினையில் கலைஞர் நிகழ்த்தியது
நாடகமே  –  தயாநிதி மாறன் வாக்குமூலம் !

இலங்கை பிரச்சினையில் தமிழ் நாட்டை
சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை
ராஜினாமா  செய்ய வைப்பதாக கலைஞர்
நாடகம் ஆடினார் என்று  தயாநிதி மாறன்
கூறி  இருப்பது இப்போது வெளிவந்திருக்கிறது.

மின்வெட்டு போன்ற  பல பிரச்சினைகளில்
திமுக  மீது தமிழ் நாட்டு மக்கள் கொண்டிருந்த
கோபத்தை  மத்திய அரசின் மீது –  திசை
திருப்பவே,  இலங்கை பிரச்சினையில்
மத்திய அரசு செயல்படாத நிலையைக்
கண்டித்து  திமுக எம்பி  க்கள்  ராஜினாமா
செய்யப்போவதாக கலைஞர்  நாடகம்
ஆடினார் –

-என்று  தயாநிதி மாறன் அப்போது  கூறியது
இப்போது வெளியே வந்திருக்கிறது.

மேலும்,  கலைஞரின் ராஜினாமா நாடகத்தால்
சோனியா காந்தி கோபம் அடைந்திருப்பதாகவும்
அதன்  விளைவு எதிர்காலத்தில்  தெரியும்
என்றும் கூறி இருக்கிறார். (அது தான் தெரிந்து
விட்டதே !)

இது போதாதென்று –  பதவிக்கு வரும் வரை தான்
திமுகவில்  கொள்கை, லட்சியம்  எல்லாம் என்றும்
பதவியில் அமர்ந்த பிறகு எந்தெந்த வழிகளில்
எல்லாம் பணம் சம்பாதிப்பது என்பது குறித்து
தான் யோசனை, செயல் எல்லாமே என்றும்
கூறி இருக்கிறார்.

அழகிரிக்கும்  மாறன் சகோதரர்களுக்கும்
ஏற்பட்ட பிரச்சினைகளை அடுத்து தயாநிதி
மாறன்  2007ம் ஆண்டில்  திமுக விலிருந்து விலக்கி
வைக்கப்பட்டதும், மத்திய அமைச்சர்
பொறுப்பிலிருந்தும் ராஜினாமா செய்ய
வைக்கப்பட்டதும்  நினைவிருக்கலாம்.

அதையொட்டி,  அவர் திமுக தலைமை மீது கடும்
கோபத்தில் இருந்த போது – சென்னையில்
இருந்த அமெரிக்க தூதரக அதிகாரி
அவரை  சந்தித்துப் பேசி இருக்கிறார்.

விதி யாரை விட்டது ? பதவி போன கோபத்தில்
இருந்த தயாநிதி மாறன்  அவரிடம் திமுக வினர்
ஊழல்  செய்வது பற்றியும், கலைஞர் பற்றியும்
தனக்கு உள்ள கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அவர் கண்டாரா ?
தன் பேச்சு அனைத்தும்  அமெரிக்க அதிகாரியால்
பதிவு செய்யப்பட்டு  அவரது நாட்டுக்கு ஆவணமாக
அனுப்பப்படுகிறது என்று.

அன்று சொன்னது, 2008 நவம்பர் 3ந்தேதி
டி.சிம்கின் என்கிற  சென்னையில் உள்ள
அமெரிக்க தூதரக அதிகாரியால் பதிவு செய்யப்பட்டு
தன் அமெரிக்க அலுவலகத்திற்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தான் தயாநிதி
மாறனுடன் பேசிக்கொண்டிருந்தபோது
அவர் மேற்குறித்த கருத்துக்களை கூறியதாக
அந்த அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

இத்தனை சமாச்சாரமும் இப்போது விக்கிலீக்
மூலமாக வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் –   தயாநிதியும்  கலைஞரும்
சந்திக்கப் போகும் காட்சியை யாராவது
பதிவு செய்து வெளியிட்டால் எப்படி இருக்கும் ?

விதி  – யாரையும் விடாது !
அது ராஜபக்சேயானாலும் சரி,
கலைஞரானாலும் சரி,
கனிமொழியானாலும் சரி –
தொல். திருமாவளவன்  ஆனாலும் சரி !
“அன்னை” சோனியா காந்தி ஆனாலும் சரி !

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் –
ஊழ்வினை உறுத்து வந்து உருட்டும் –
உருட்டிக் கொண்டே இருக்கும்  !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, ராஜ பக்சே, ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to இலங்கை பிரச்சினையில் கலைஞர் நிகழ்த்தியது நாடகமே – தயாநிதி மாறன் வாக்குமூலம் !

 1. pirabuwin சொல்கிறார்:

  “அன்னை” சோனியா காந்தி”

  யார் அன்னை பட்டம் கொடுத்தது.கொடுத்தவருக்கு விசர் என்று நினைக்கிறன்.

 2. RAJASEKHAR.P சொல்கிறார்:

  இலங்கை பிரச்சினையில்
  கலைஞர்-
  நிகழ்த்தியது நாடகமே….
  THIS IS VERY
  TRUE ..!!!!!!!!

  rajasekhar.p

 3. Ezhil சொல்கிறார்:

  Mu Ka staged drama in Eezham struggle to satisfy congress. Now Mu Ka is out and no use. Therefore congress has gone to their friend Rajapakse for help and on Rajapakse’s command KP is staging a drama.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.