எது நடந்ததோ ……….

எது  நடந்ததோ ……….

நடந்து முடிந்த தேர்தலும் அதன்  விளைவுகளும் …..

நீண்ட  காத்திருத்தலுக்குப் பிறகு ஒருவாறு வெளியான
முடிவுகள் பெரும்பாலானோருக்கு மகிழ்ச்சியை
அளித்திருக்கிறது.

என்  பார்வைக்கு  தெரிவது –

அதிமுக  ஆட்சிக்கு வருவது பற்றி பெரிய அளவில்
மகிழ்ச்சியோ, எதிர்பார்ப்போ இல்லை என்றாலும்  –
பூதாகாரமாக
தலைவிரித்து ஆடிய ஒரு  ஊழல் பெருங் குடும்பத்தின்
ஆட்சி அடியோடு  ஒழிக்கப்பட்டது குறித்து –

ஒரு  நிம்மதி நிச்சயம் ஏற்பட்டிருக்கிறது.

அதைவிடப்  பெரிய  சந்தோஷம் காங்கிரஸ் கட்சிக்கு
தமிழ் மக்கள்  கொடுத்த  மரண  அடி.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி நடந்து கொண்ட
விதம், மகா கேவலமாக,  ஆபாசமாக,
அருவருப்பாக  இருந்தது.  
மத்தியில் ஆளும் கட்சி  என்கிற திமிர் ஒரு புறமும்,

2ஜி ஊழல் புகாரில்  திமுக வின்
குடுமி தன் கையில் சிக்கியது என்கிற சூழ்நிலையை
அதிக பட்சம் பயன்படுத்திக் கொண்ட  தந்திரம் ஒரு புறமும்,

ராகுல் காந்தியின்  காலில்  விழ தமிழ் நாடே
காத்திருக்கிறது என்கிற ரீதியில் இளைஞர்  காங்கிரஸ்
பிரிவை  சேர்ந்த சில பக்குவமில்லாத
வாலிபர்கள்  ஆடிய ஆட்டம் ஒரு புறமும்,

உச்சபட்ச சுயநலவாதி, பச்சோந்தி தங்கபாலு ஒரு புறமும்,

சூடு சொரணை இன்றி  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
பேச்சு பேசிய  EVKS  இளங்கோவன் ஒரு புறமும் –

சகிக்க முடியாத  எரிச்சலைக் கொடுத்தன.

ஈழத்தமிழர்கள்  விஷயத்தில் அவர்கள் நடந்து கொண்ட
முறைக்காக – காங்கிரசுக்கு கடந்த நாடாளுமன்ற
தேர்தலிலேயே  கிடைத்திருக்க வேண்டிய   அடி –
ஏதோ – தாமதமாக  இப்போதாவது  தமிழ் மக்கள்
உரிய விதத்தில் கொடுத்து விட்டார்கள் என்பதில்  
ஒரு திருப்தி.
63 இடங்களில் போட்டியிட்டு
5 இடங்களைப் பெற்றதை விட அவமானம் அவர்களுக்கு
வேறு எதாவது இருக்க முடியுமா ?

முழுக்க முழுக்க சுயநலமான  அரசியல் நடத்தி வந்த
திருமாவளவனுக்கு   ஒரு  இடம் கூட  கிடைக்காததும்,  

அவருக்கு  பெரியண்ணனாக விளங்கிய டாக்டர் ராமதாசுக்கு
30 இடங்களில் போட்டியிட்டு மூன்று இடங்கள் கிடைத்ததும்
மகிழ்வு தரும் விஷயங்களே.

இதில்  மிக மிக முக்கியமான விஷயம் –
தமிழக தேர்தல் அதிகாரி மிக மிக
நேர்மையாகவும், திறம்படவும்,
துணிச்சலோடும் செயல்பட்டது !  அவரை  மடக்க திமுக
எவ்வளவோ விதங்களில் முயன்றது.  கடைசி வரை துணிந்து
நின்று நேர்மையுடன்  தேர்தலை நடத்திக் காட்டினார்.
அவர் இணங்கி இருந்தால் கோடிகளைக் கொட்ட திமுக
தயாராகவே இருந்தது.

காசுக்கு ஓட்டுப் போடுபவர்கள்  தமிழர்கள்  என்று  
அகில இந்திய அளவில் – ஏன் உலகத் தமிழர் அரங்கிலேயே    

திருமங்கலம் தேர்தலின் மூலம்  
திமுக ஏற்படுத்தி தந்திருந்த  –
அவப்பெயரையும், அவமானத்தையும்
போக்க முடிந்தது  இந்த தேர்தல்  அதிகாரியின்
திறமையால் தான்.  

தமிழர்களிடையே  திமுக  ஏற்படுத்திய பெரிய, புதிய வகை
குணக்கேட்டிலிருந்து நம்மை மீட்டதற்காக  அவருக்கு
தமிழர்கள்  பெரிய அளவில்  நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள்
என்றே சொல்லலாம்.

இத்தனையையும் மீறியும் சில இடங்களில் பட்டுவாடாக்கள்
நிகழவே செய்தன.  அவற்றிலிருந்து மீண்டு சரியான
ஜனநாயக  பாதைக்கு தமிழ்நாட்டை  திரும்ப கொண்டு
வந்த வகையில் தமிழ்நாட்டின் வாக்காளர்கள் பாராட்டுக்கு
உரியவர்கள்.

தொலைக்காட்சிகளைப் பொருத்த வரையில் அனேகமாக
பெரும்பாலானவை எதாவது ஒரு அரசியல் கட்சியைச்
சார்ந்தே இருந்தன. அவ்வாறு இல்லாதவை, நமக்கேன்
வம்பு என்று பயந்து ஒதுங்கி இருந்தன.  தமிழ் தொலைக்
காட்சிகள் -ஆங்க்கில சேனல்களைப் போல் -இனியாவது
இன்னும்  துணிந்து,  நடு நிலைமையுடன்
செயல்பட வேண்டியது அவசியம்.

வரக்கூடிய ஆட்சி –

ஜெயலலிதா குறைகளும்  நிறைகளும்  நிறைந்தவர்.
அவரது  இரண்டாவது ஆட்சிக்காலத்தில் பெரிய அளவில்
ஊழல் புகார்கள் எதுவும் எழுந்ததில்லை என்பது நினைவு
கூறத்தக்கது.
ஆனால் யாரையும் மதிக்க மாட்டார்;  யார் சொல்வதையும்
கேட்க மாட்டார். தன் போக்குக்கு தான் நடப்பார் என்பவை
முக்கியமான குறைகள்.

மிகத் திறமையான, துணிச்சலான   நிர்வாகி
என்பது அவரது மிகப்பெரிய  நிறை.  
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு  நிலை உடனடியாக  சீர்படும் என்று  உறுதியாக  நம்பலாம்.

அதே போல்,  அரசு நிர்வாக இயந்திரமும் உருப்படியாக
செயல்பட ஆரம்பிக்கும் என்று நம்பலாம்.

ஈழத்தமிழர்கள்  விஷயத்தில் அவர்  கொஞ்சம்  மாறி
இருப்பதாகத் தோன்றுகிறது.   வெற்றி பெற்றவுடன்
கொடுத்த முதல் பேட்டியில் இவ்வாறு கூறி இருந்தார் –

“இந்திய அரசு 2 வகையான நடவடிக்கைகளை
மேற்கொள்ளலாம். ஒன்று, இனப்படுகொலைக்காக,
போர் குற்றங்களுக்காக, இலங்கை அதிபரை
சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்த இந்திய அரசு முயற்சி
மேற்கொள்ள வேண்டும்.
அடுத்தபடியாக இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு
ஒரு கவுரவமான வாழ்க்கையை, கண்ணியமான வாழ்க்கையை
அளிக்க இலங்கை அரசை வற்புறுத்துவதற்காக.
இலங்கை அரசு பணியவில்லை என்றால்,
இலங்கைக்கு எதிரான பொருளாதார தடைகள்
கொண்டுவர இந்தியா மற்ற நாடுகளுடன் நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும். இதை செய்தால் நிச்சயமாக
இலங்கை அதிபர் பணிந்தாக வேண்டும்”

ஆனால் இந்த விஷயத்தில் அவர்  தீவிரமாக இருப்பார்
என்று தோன்றவில்லை.  
அவர் இது விஷயத்தில் தீவிரமாக செயல்படாவிட்டால்
கூடப்  பரவாயில்லை.  மற்றவர்கள்  செயல்படத் தடையாக
இல்லாமல்  இருந்தால் – அதுவே  பெரிய விஷயம்.

ஏனெனில் அவரது எதிர்கால நடவடிக்கைகள்,
மத்திய அரசை அனுசரித்துப் போவதாகவே  இருக்கும்.  
மத்திய ஆளும் கட்சியான  காங்கிரசுடன்  இணக்கமாக
நெருங்கி படிப்படியாக,  ஒரு சமயத்தில்  -அவர்களுக்கு  
திமுகவுடன்  உள்ள  உறவை  துண்டிக்கவே  விரும்புவார்.
இதனை சாதிக்கும் பொருட்டு  சோனியா காந்தியுடனும்  
நட்புறவை வளர்த்துக் கொள்ள தேவையான
முயற்சிகளில்  ஈடுபடுவார்.

எனவே  ஈழத்தமிழர்கள்  விஷயத்தில்
ஜெயலலிதாவிடமிருந்து  பெரிய அளவில் எதையும்
எதிர்பார்ப்பதில்  பயனில்லை !

அவரும் அறுபதைக் கடந்து விட்டார்.  
கடந்த முறைகளில் ஆட்சியில் இருந்த போதும்,
ஆட்சியை இழந்த நிலையிலும்  அவருக்கு நிறைய  
அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன.  

இவை அனைத்தும் அவரது மனப்போக்கில்,
செயல்முறையில் நிச்சயம்  தாக்கங்களை ஏற்படுத்தி
இருக்கும்.
இந்த அனுபவங்கள்  அவரை இன்னும்
மேம்படுத்தி இருக்கும்
என்கிற  எண்ணத்தில் –
குறைந்த பட்சம் –  தமிழ் நாட்டிற்கு  அவர்  ஒரு
நல்ல  நிர்வாகத்தை, நல்ல ஆட்சியை  ஏற்படுத்தித்
தருவார் என்று   நம்பி –

கொஞ்ச  நாள் காத்திருந்து
பார்ப்போம் என்று தோன்றுகிறது.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அதிமுக, அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to எது நடந்ததோ ……….

 1. Ponraj Mathialagan சொல்கிறார்:

  பொதுவாக எதிர்கட்சியாக இருக்கும் போது திமுக தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள சில வலுவான அரசியல் களங்களை தேர்ந்தெடுத்து ஊதி பெரிதாக்கும் (உதாரணம்: ஈழத் தமிழர் பிரச்சனை, கரும்புக்கு கூலி, தண்ணீர் பிச்சனை). எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இந்த முறை அவர்கள் எந்த களத்தில் இறங்கினாலும் அவர்கள் பின்பு அணி திரள எந்த ஒரு தன்மான தமிழனும் போக மாட்டான். அவர்கள் மட்டும் தனியாக கத்திகொண்டிருக்க வேண்டியது தான். திருக்குவளை தீய சக்தியினால், திமுகவிற்கு என்றோ முடிவுரை எழுதப் பட்டுவிட்டது. இப்போது எனக்கிருக்கும் ஒரே கோபம் “குளச்சல், வளவங்காடு, ஓசூர், அறந்தாங்கி, பட்டுகோட்டை” வேட்பாளர்கள் மீது தான். இங்குள்ள ஒட்டு போட்ட வாக்களர்களை பார்த்தால் ஒன்று தான் கேட்கத் தோன்றுகிறது. “நீங்கள் சோற்றில் உப்பு தான் போட்டு சாப்பிடுகிறீர்களா? எப்பேர்பட்ட வரலாற்று பிழையை நீங்கள் செய்துள்ளீர்கள் தெரியுமா?” என்று…!!!

 2. RAJASEKHAR.P சொல்கிறார்:

  63 இடங்களில் போட்டியிட்டு
  5 இடங்களைப் பெற்றதை விட அவமானம் அவர்களுக்கு
  வேறு எதாவது இருக்க முடியுமா ?

  THANKS
  RAJASEKHAR.P

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.