வ(உ?)தைக்க வேண்டும் செயல்படாதவர்களை !

வ(உ?)தைக்க வேண்டும்     
செயல்படாதவர்களை !

சென்னையிலிருந்து  வடக்கு நோக்கி 3  ரயில்
வழித்தடங்கள் –
சென்னை-மும்பை, சென்னை-டில்லி,
சென்னை-கொல்கத்தா  என்று.

தெற்கு நோக்கி ஒன்று திருச்சி, மதுரை, நெல்லை
வழியாக  கன்யாகுமரி வரை.

மேற்கே ஒன்று – கோவை வழியாக  திருவனந்தபுரம் வரை.
இதில் ஒரு பிரிவு  ஜோலார்பேட் வழியாக பங்களூர் வரை.

இதில்  எந்த திசையில்,  எந்த வண்டியில் ஏறினாலும்
கூட்டமான கூட்டம் தாங்க முடியாத அளவு கூட்டம்.  
முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளிலும் மக்கள் கூட்டம்.
பதிவு செய்யப்படாத (unreserved coach) பெட்டிகளிலோ –
பாத்ரூம் கூட போக முடியாதபடி –

வழியெல்லாம் பயணிகள்  நின்று
கொண்டே  பயணம் செய்கிறார்கள். பெண்களும்,
குழந்தைகளும், முதியவர்களும் – பாவம் –
பதிவு இருக்கையில் உட்கார்ந்திருக்கும் எனக்கு
பார்க்கவே மிகவும் வேதனையாக
இருக்கிறது என்றால் – அனுபவிக்கும் அவர்கள்
எவ்வளவு வேதனையோடு இருப்பார்கள் ?

கோடை  விடுமுறை ஒரு காரணம் என்றாலும் – இந்த
வழித்தடங்கள்  அனைத்திலும் எப்போதும் நிறைய  
பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டிய
கட்டாயத்தில் இருப்பதை அடிக்கடி  பார்த்துக்கொண்டு
தான்  இருக்கிறேன்.

இத்தனை பயணிகளும்,  முழு அளவு கட்டணத்தை
செலுத்தி தான் ரெயில் பயணம் செய்கிறார்கள்.
நின்று கொண்டே பயணம் செய்பவர்களிடம் பாதி கட்டணம்
வசூலிப்பதில்லையே.  கட்டணம் செலுத்தி பயணம்
செய்யும் பயணிகள்  ஏன் இப்படி வதைபட வேண்டும் ?

ரெயில்வே நிர்வாகம் முழுக்க முழுக்க மத்திய அரசின்
பொறுப்பில்  இருக்கிறது. அனைத்து வழித்தடங்களிலும்
ரயில்களின் பற்றாக்குறை இருப்பதும்,  காசு கொடுத்தும்
மக்கள்  அவதியுடன்  பயணம் செய்வதும் அரசுக்கு
மிக  நன்றாகவே  தெரியும்.

பல முறை  கேட்டாகி விட்டது –   இரண்டு காரணங்கள்
சொல்கிறார்கள்.

ஒன்று – ரெயில் பாதை தடங்கள்  போதவில்லை.  
இரண்டு –  இணைப்பு பெட்டிகள்  பற்றாக்குறை.
(தயாராகும் பெட்டிகளையும்  ஆப்பிரிக்காவுக்கும்,
இலங்கைக்கும் ஏற்றுமதி செய்து விடுகிறார்கள் ! )

120 கோடி மக்களைக்  கொண்ட மிகப்பெரிய நாடு இந்தியா.
வேலை  தேடி அலையும்  மக்கள்  ஏராளம்.  வேலை வாய்ப்பு
அலுவலகங்களில்  பதிவு செய்து காத்திருப்போரின் தொகையே
பல  லட்சம்.  தொழில் திறமைக்கும் பஞ்சமில்லை –
ITI  படித்தவர்களும், பொறி இயல் படித்தவர்களும்
லட்சக்கணக்கில்  இருக்கிறார்கள்.
குறைந்த வட்டியில் வேண்டிய அளவு  கடன் கொடுக்க  
உலக வங்கியும், முதலீடு செய்ய  வளர்ந்த நாடுகளும் தயாராக
இருக்கின்றன.

புதிய  ரெயில்வே  பெட்டி, எஞ்சின்கள்  தயாரிக்கும்  
தொழிற்சாலைகளை இந்தியா முழுவதும் –
மாநிலத்திற்கு  
ஒன்றாக  நிறுவினால் –

பெட்டிகளும், எஞ்சின்களும் தாராளமாக  கிடைக்கும்.
உள்நாட்டு தேவைக்கும் ஆயிற்று – ஏற்றுமதியும் செய்யலாம்.
புதிய வழித்தடங்களைப் போட்டால்  –அதிக  வேலை,
தொழில் வாய்ப்புகள்  தானாக  உருவாகும்.    
நாளாவட்டத்தில் –
மக்களுக்கு அதிக வசதிகளும்,
அதிக ரயில்களும் கிடைக்கும்.

இதை எல்லாம் செய்யாமல்  தடுப்பது யார் ?  எது ?

இது ஜனநாயக  நாடு. மக்களின் தேவையை கவனித்து
அவர்களுக்கு சேவை  செய்யத்தான் பாராளுமன்றத்திற்கும்,
சட்டமன்றத்திற்கும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு
அனுப்பப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்
மக்களின்  தேவைகளை  கவனிக்காமல்  
தங்களின்  சொந்த  தேவைகளையே  கவனித்துக்
கொண்டிருப்பதால்  வந்துள்ள பிரச்சினை இது.

மக்கள்  சாந்தமாக  இருக்கும் வரை  அவர்களும்
இப்படித்தான்  இருப்பார்கள்.
தவறு நம்முடையது தான் !
நாம் தான் நம் தேவையை  அவர்களுக்கு
சரியாகப்  புரியவைக்க தவறி விட்டோம் !

அவர்களுக்கு  புரிகின்ற  மொழியில் சொல்லப்பட
வேண்டும் !
மக்கள்   தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
பிரதிநிதிகளை  (கூட்டமாக  சென்று
கட்டாயப்படுத்தியாவது) அழைத்துச்சென்று

இந்த ரயில்களில்,
பதிவு செய்யப்படாத பெட்டிகளில்,
ஒரு 4  மணி நேரமாவது தங்களுடன் பயணம் செய்ய
வைக்க வேண்டும்.  அப்போதாவது  அவர்களுக்கு மக்களின்
துன்பமும், தேவையும்  புரிகிறதா  என்று பார்க்கலாம்.

அப்படியும் அவர்கள்
செயல்படவில்லை என்றால் ………..

பி.கு.

கல்லூரி மாணவர்களையும் துணைக்கு
சேர்த்துக் கொண்டால் இது சுலபமாகும்.


About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், குடியரசு, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to வ(உ?)தைக்க வேண்டும் செயல்படாதவர்களை !

 1. Ganpat சொல்கிறார்:

  இலையே போடாமல்,வெறும் மேஜையில்,பதார்த்தங்களை பரிமாறி விருந்து நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்..
  நீர் என்னடா என்றால், ஸ்வீட் பச்சடி எங்கே என்கிறீர்!!

 2. ravee சொல்கிறார்:

  நல்ல கேள்விகள்…பதில்கள்தான் இல்லை, நானும் பலமுறை இதை பற்றி யோசித்திருக்கிறேன்!! என்றைக்கு இந்த குமுறல்கள் வெடிக்குமோ தெரியவில்லை!!

 3. ramanans சொல்கிறார்:

  நண்பரே,

  இந்த அவஸ்தைகளை நானும் பலமுறை அனுபவித்திருக்கிறேன். யாருக்கும் அக்கறை இல்லை என்பதுதான் உண்மை. எல்லாத்துறைகளிலும் ஊழலும், பொறுப்பின்மையும் புரையோடிப் போயிருக்கிறது. முன்பெல்லாம் பஸ் முன்னாடி, பின்னாடி நிற்கும் ஓடிப் போய் ஏறுவார்கள். ஆனால் இப்போது ட்ரெய்ன்கள் அப்படி நிற்கின்றன. கேட்டால் 9 சார், 12 சார் என்கிறார்கள். குறிப்பாக செங்கல்பட்டு – தாம்பரம் – பீச் இடையே இது அன்றாடம் நடக்கும் விஷயம்.

  வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று எல்லோரும் படும் பாடு இருக்கிறதே மகா கொடுமை. ஓடி வந்து ஏறவும் முடியாது. அப்படியே முயற்சித்தாலும் அதற்குள் ட்ரெய்ன் கிளம்பி விடும்.

  மக்களிடமும் வரவர அதீத சகிப்புத்தன்மையும், சுயநலமும் அதிகமாகி விட்டது. தான் போய்ச் சேர்ந்தால் போதும். தனக்குக் கிடைதால் போதும் என்ற எண்ணம் அதிகமாய் விட்டிருக்கிறது.

  இதெல்லாம் இப்படியே தொடர்ந்தால் இந்தியாவும் சோமாலியா ஆகிவிடும். இல்லாவிட்டால் பணக்காரர்கள், பரதேசிகள் என்ற வர்க்கம்தான் மிஞ்சும். கொலையும், கொள்ளையும், தீவிரவாதமும்தான் அதிகரிக்கும்.

  புண் புரையோடிப் போயிருக்கிறது. தற்போது தேவை மருந்தா, சிகிச்சையா? நல்ல மருத்துவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

  ஆனால் அப்படி ஒருவர் இன்னும் வரவில்லையே என்பதுதான் மிகப் பெரிய குறையாக உள்ளது.

  வருவார். நம் எதிர்கால சந்ததிகளுக்காவது சாந்தியும், சமாதானமும், அன்பும், அமைதியும் கிடைக்கும் என்று நம்புவோம்.

  ஓம்.

 4. ramanans சொல்கிறார்:

  புண் புரையோடிப் போயிருக்கிறது. தற்போது தேவை மருந்தா, சிகிச்சையா? – இதை புண் புரையோடிப் போயிருக்கிறது. தற்போது தேவை மருந்தா, அறுவை சிகிச்சையா? என்று திருத்தி வாசிக்கவும்.

 5. pugal சொல்கிறார்:

  /*உதைக்க வேண்டும் செயல்படாதவர்களை.*/
  இரெயில் பயணிகளின் நெருக்கடி ஒருபுறம் இருக்க. இன்னொரு புறம் இரெயில்வே துறையில் தமிழை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்யபடுகிறது((இது இந்த வாதத்திற்கு புறம்பானதாக இருக்காலம் மன்னிகனும், இருந்தாலும் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்)).இரெயில் பயணச்சிட்டில், இந்திய இரெயில்வே இனையதளம், கடைசி நிமிடம் ஒட்டபடும் பயணிகளின் அட்டவணைகூட தமிழில் இருப்பதில்லை ஆங்கிலத்திலும் இந்திலும் மட்டுமே இருக்கின்றன இத்தனைக்கும் இரெயில் பயணிக்கவிருப்பது சென்னையில் இருந்து இதர தமிழ் மாவட்டங்களுக்கு(இதை நான் இரெயில்வே அதிகாரிடம் கேட்டேன் அதற்கு அவர் நடுவன அரசுப்பா அப்படிதான் இருக்கும் என்று பதில் வருகிறது, ஏன் தமிழன் இந்தியன் இல்லையா). எத்தனை தாய்மார்கள்/பெரியாவர்கள் படிக்க முடியாமல் தவிக்கிறார்கள், தம்பி இத படிச்சி சொல்லுப்பா அப்படினு சொல்லும் போது ஒரு பக்கம் அழுகை வருகிறது மறுபுறம் இந்த ஈன பய இந்திய அரசு மிது கோபம் தலைக்கு ஏறுகிறது

 6. Ganpat சொல்கிறார்:

  என்னுடைய பதில் பலரை சென்றடையவில்லை என நினைக்கிறேன்.

  *உதவாக்கரை பிரதமமந்திரி,ஜனாதிபதி

  **ஊழலுக்கு உலகப்பிரசித்தி பெற்ற ஆளும் கட்சி

  **கொள்ளையடிக்கும் மாநில முதல்வர்கள்;மக்கள் பிரதிநிதிகள்

  **செல்லரித்த, காலத்திற்கு ஒவ்வாத, சட்டங்கள்

  **பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு நாட்டின்
  கலாசாரத்தை அழித்துக்கொண்டிருக்கும் ஊடகங்கள்

  **வேகமாக பின்னோக்கி இழுத்துச்செல்லும் ஜாதி மத சண்டைகள்

  **அரசியல்,நீதி, கல்வி,மருத்துவம்,மற்றும் ஆன்மிகத், துறைகளில் பெருகிவரும் போலிகள்,கயவர்கள்

  **சோம்பல்,சுயநலம் மிகுந்து தேசப்பற்று அறவும் இல்லாத சிந்திக்க தெரியாத மக்கள்

  **பெருகும் மக்கட்தொகை;வேகமாக அதிகரிக்கும் ஏழை பணக்காரர்கள் இடைவெளி

  ** வற்றும் ஆறுகள்;சுருங்கும் விவசாயம்; பெருகும் நுகர்வோர் கலாசாரம்

  இவ்வளவு “பேற்றை”யும் பெற்ற நாம் ,Indian Railways சரியில்லை என விவாதிப்பது வியப்பாக உள்ளது!

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  சந்தோஷத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் –
  அது பெருகும்.
  துக்கத்தை, வருத்தத்தை – பகிர்ந்து கொண்டால் –
  அதன் தாக்கம் குறையும்.
  – இது வயிற்றெறிச்சலை வெளியே சொல்லி –
  பங்கு போட்டுக் கொள்ளும் முயற்சி –
  ஒரு ventilation – outlet – அவ்வளவு தான் !

  மற்றபடி நாம் எல்லாம் எழுதி இந்த நாட்டில்
  புரட்சி வந்து விடப்போகிறது என்கிற
  அசட்டு நம்பிக்கை எல்லாம்
  எனக்கு இல்லை நண்பரே !

  -வாழ்த்துக்களுடன்
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.