ராம் ஜெத்மலானியும் …… கசாப்பு கடைக்காரரும் ……

ராம் ஜெத்மலானியும் ……
கசாப்பு கடைக்காரரும் ……

கொஞ்சம்  இருங்கள். முதலில்  சில
புகழ்பெற்ற வார்த்தைகளை  ஞாபகப்படுத்திக் கொள்கிறேன் –

1)  சட்டம் ஒரு இருட்டறை –
அதில் வக்கீல்களின்  வாதம் ஒரு விளக்கு.

-அறிஞர் அண்ணா இன்று இருந்தால் இப்படிச் சொல்லி
இருப்பாரோ ?

சட்டம் ஒரு இருட்டறை-
அதில் வக்கீல்களின் வாதம் ஒரு கொள்ளிக்கட்டை !
அதை வைத்துக்கொண்டு சட்டத்தை விளக்கவும் செய்யலாம்,
அல்லது அந்த சட்டத்தையே கொளுத்தவும் செய்யலாம்,

2) நாய்  விற்ற  காசு – குலைக்கவா செய்யும் ?
(குலைத்தால் தானே அது  நாய் விற்ற காசு
என்பது அந்த காசை வாங்கியவருக்கு தெரியும்?)

ராம் ஜெத்மலானி – இந்தியாவின் தலைசிறந்த
வழககுரைஞர்களில்  ஒருவர்.   
முன்னாள் மத்திய  சட்ட அமைச்சர்.
பாஜக  வின்  பாராளுமன்ற உறுப்பினர்.
பாட்டியாலா ஹவுஸ்  சிபி ஐ வழக்கு மன்றம் என்பது
ஒரு சாதாரண செஷன்ஸ் நீதிமன்றம்.

இத்தகைய  புகழ் பெற்ற சட்ட நிபுணர்,
சுப்ரீக் கோர்ட்டின் மூத்த வழக்குரைஞர் –
ஒரு செஷன்ஸ் கோர்ட்டில்  ஆஜராகி வாதாடுவது என்றால்-
அதுவும் வெறும்  முன் ஜாமீன்  வழக்கில்  ?  

ஒன்று அந்த வழக்கில் அவருக்கு ஒரு
விசேஷ ஈடுபாடு இருக்க வேண்டும்  அல்லது
மிகப்பெரிய இடத்தில் இருந்து  அழுத்தம் வந்திருக்க
வேண்டும்.
(அவரது  ஒரு நாள்  ஊதியம்  2 லட்சங்களுக்கு மேல் !)

எதுவாக  இருந்தாலும்  சரி –
சாதாரண, சராசரி  மனிதனாகிய  எனக்கு சில கேள்விகள்
தோன்றுகின்றன.  ஜெத்மலானியை   போய் கேட்க
முடியுமா? சம்பந்தப்பட்டவர்களையும் நெருங்க முடியாது.

இருக்கவே  இருக்கிறது.  நம் வலைமனை !
நம்மைப்போல் இன்னும் 4 மனிதர்களாவது
இருப்பார்களே – நமக்குள்  விவாதிப்பதை யார் தடுக்க முடியும்?
எனவே  இந்த வலைமனைக்குள்ளேயே  கேட்கிறேன் !

1) மத்திய அரசுக்கு எதிராக  சுப்ரீம் கோர்ட்டில்
போடப்பட்டிருக்கும் பொதுநல வழக்கான –
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப்பணத்தை
வெளிக்கொண்டு வர வேண்டும் என்கிற பொதுநல  வழக்கில் –

கருப்புப் பணத்திற்கும்,
அதன் சொந்தக்காரர்களுக்கும் எதிராக  வீராவேசமாக
வாதாடும் ஜெத்மலானி 2ஜி ஸ்பெக்ற்றம்  ஊழலில் கூட்டு
சதியாளர்  என்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு  ஆதரவாக
சிபி ஐ கோர்ட்டில்
இப்போது வாதாடுவது  சரியா ?

இது கசாப்புக் கடைக்காரர் – அகிம்சைக்கு  ஆதரவாக,
கொல்லாமைக்கு ஆதரவாக –
பேசுவது போல் இல்லையா ?
கசாப்புக்கடைக்காரர் அகிம்சை பேசினால் மட்டும்
சிரிக்கிறார்களே !  இவரை என்ன செய்யலாம்?

வழக்குரைஞர்  ஆயிறே ! கொள்கை வேறு  –
தொழில் வேறு  என்று சொல்வீர்கள் இல்லையா ?

சரி வேறொரு கோணத்தில் பார்த்தால் –
2 ஜி  ஸ்பெக்ற்றம் ஊழல் சம்பந்தமாக வெகு  தீவிரமாக
போராடி வரும்  பாரதீய ஜனதா கட்சியின்  எம்.பியான
ஜெத்மலானி – 2ஜி  ஊழலில்  குற்றம்  சாட்டப்பட்டவர்களுக்கு
ஆதரவாகப் பேசலாமா ?

அதற்கும்  இதே
பதில் தான் வரும்  இல்லையா ?

சரி போகட்டும்.   சுப்ரீம் கோர்ட்  சீனியர் வழக்குரைஞர்
இவ்வாறு செஷன்ஸ்  கோர்ட்  வழக்கில் ஆஜர் ஆவது ஏன்
என்று கேட்டால் ?   எனக்கு உரிய ஊதியத்தை கொடுத்தால் –
எங்கு  வேண்டுமானலும் ஆஜராவேன்  என்று நிச்சயம்
ஜெத்மலானி கூற  முடியாது !  
ஏனென்றால் அவருக்கென்று ஒரு கௌரவம் – status –
இருக்கிறது.   எனவே –
வேறு  ஏதோ காரணம் இருக்கிறது –
யார் காரணம், எது காரணம்  ?

ஜெத்மலானி அவர்களே –
ஆமாம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக
வாதாடும்போது – திடீரென்று ஒரு போடு போட்டீர்களே –
2ஜி குற்ற வழக்கில்  சதி செய்தவர்  ராஜா தான் ;
இதில் என் கட்சிக்காரரை  எப்படி சேர்க்க முடியும் ?
என் கட்சிக்காரருக்கும் அவருக்கும் எந்த விதத்தில்
தொடர்பு ? என்று.
எதிரே அமர்ந்து விவாதத்தைப்  பார்த்துக் கொண்டிருந்த
ராஜாவுக்கு இதயமே  வெடித்திருக்குமே !

வாதத்தின் போது இன்னும் கொஞ்சம் மேலே  போய்
ராஜாவுடன் பேச்சு வார்த்தை நடத்தியவர் எல்லாம்
சரத்குமார் ரெட்டி  தான் என்று சரத்தையும்  சேர்த்து
மாட்டி விட்டீர்களே !
ஆமாம் – இதை வாதத்தை பற்றி  எல்லாம்  தலைவருடன்
கலந்து பேசி விட்டு தானே  நீதிமன்றத்தில் பேசினீர்கள் ?
(அவர் என்னவோ  “தகத்தகாய கதிரவன்” என்று சொன்னார் –
நீங்கள்  இப்படி கவிழ்த்து விட்டீர்களே!)

அப்புறம்  அது என்ன – “கலைஞர்  கருணாநிக்கு மகளாகப்
பிறந்தது  தான் என் கட்சிக்காரர் செய்த பாவம் “ என்று
சொல்லி விட்டீர்கள் ?
உங்களுக்கு யாரும் சரியாக  சொல்லிக் கொடுக்கவில்லையா?
அப்படிப்  பிறந்ததால் வந்தது தானே அத்தனையும் !
கட்சியில் முக்கிய இடம்,
பாராளுமன்ற உறுப்பினர் பதவி,
(அதிகாரபூர்வமாக) 26 கோடி ரூபாய் சொத்து,
கலைஞர்  தொலைக்காட்சியில் பங்கு,
ராஜாவுடன் நட்பு எல்லாமே !

கலைஞர் டிவிக்கு வந்த பணம்  2ஜி தொடர்புடையது
என்பது அவர்களுக்கு தெரியாது என்றீர்கள் –
நாய் விற்ற பணம் குரைக்காது  என்கிற மாதிரி !

2ஜி பணம் என்று வெளியே தெரியவா போகிறது என்று
நினைத்து வாங்கி இருக்கலாம்.  பணம், சிபி ஐ மூலம்  குரைக்க
ஆரம்பித்தவுடன் திரும்பக் கொடுத்திருக்கலாம் !

இன்னும் ஒரு வாதம் வைத்தீர்களே அது சூப்பர் –
கருணாநிதிக்கு எதிராக  செய்யப்பட்ட  சதியில்
அவர் மகளை சிக்க வைத்து
விட்டார்கள்  என்று.

ஆமாம்.  நாங்களும்  அதைத் தெரிந்து கொள்ளவே  ஆவலாக
இருக்கிறோம்.  யார் செய்த சதி அது ?
சிபி ஐ யா ?, ப.சியா,  காங்கிரஸ்  “அன்னை”யா ?  அதையும்

சொன்னால் எங்கள்  தவிப்பு குறையுமே !

தமிழ் நாட்டு மக்கள்  இதையும்  நம்புவார்கள் –
இன்னும் என்ன காரணம் சொன்னாலும்,
எத்தனை காரணம் சொன்னாலும் – நம்புவார்கள் –
ஆனால்  …………. ?  

பி.கு.  –
தெரிந்தோ -தெரியாமலோ வழக்கின் தீர்ப்பு
மே 14ந்தேதிக்கு (தேர்தல் ரிசல்டுக்கு அடுத்த நாள்)
ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அடுத்த வாரிசு, அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to ராம் ஜெத்மலானியும் …… கசாப்பு கடைக்காரரும் ……

 1. Ganpat சொல்கிறார்:

  தொட்டி ஓட்டையா இல்லையா என்று தெரிந்தவுடன் தண்ணி ரொப்புங்க சாமி..ஒரு ஆறு நாள் பொறுக்க முடியாதா.?

 2. Ganpat சொல்கிறார்:

  1) சட்டம் ஒரு இருட்டறை –
  அதில் வக்கீல்களின் வாதம் ஒரு விளக்கு.

  -அறிஞர் அண்ணா இன்று இருந்தால் இப்படிச் சொல்லி
  இருப்பாரோ ?

  1) (இந்திய)சட்டம் மினுக் மினுகென்று ஒரே ஒரு மெழுகுவர்த்தி எரியும் ஒரு இருட்டறை –
  அதில் வக்கீல்களின் வாதம் ,ஒரு பலத்த காற்று!!

 3. ramanans சொல்கிறார்:

  //கருணாநிதிக்கு எதிராக செய்யப்பட்ட சதியில்
  அவர் மகளை சிக்க வைத்து விட்டார்கள் …. யார் செய்த சதி அது ?//

  இதுகூடவா தெரியவில்லை காவிரி மைந்தன். ஆரிய வந்தேறி, பார்ப்பனக் கூட்டமும், ஜெயலலிதாவும், அவரது கைக்கூலியான சுப்ரமண்ய சாமியும்தான். எத்தனை பிரச்சனைகளைப் பார்த்தவர் எங்கள் தலைவர்! ஸ்பெக்ட்ரம் எல்லாம் அவருக்கு சும்மா “வெங்காயம்” மாதிரி. அப்படியே உறிச்சு உறிச்சு கடைசியில ஒண்ணுமே இல்லைன்னு ஃப்ரூப் பண்ணிருவாரு.

  …ஸ்பெக்ட்ரம் என்பது ஒரு ஊழலே அல்ல. அது கழகம் மக்களுக்குச் செய்யும் நல்லதைப் பொறுக்க முடியாத ஊடகங்கள் பரப்பி விடும் சதி…

  – இப்படியெல்லாம் பேசினாக்கூடத்தான் மக்கள் நம்பிடுவாங்க.

  அடபோங்க சார் ஸ்பெக்ட்’ரம்’மாவது, மண்ணாவது எல்லாம் மாயை. எல்லாம் பிரமை. ஆனா ஒண்ணு இந்த ராம்ஜெட்மலானி (இவர் பிரேமானந்தாவுக்குக் கூட ஆஜரானாரோ?) உதவறதா நினைச்சு ஒரு பெரிய வெடிகுண்ட வீசிட்டுப் போயிட்டாரு. 14க்கு அப்புறம் பார்ப்போம் என்ன ஆகுதுன்னு.

 4. நித்தில் சொல்கிறார்:

  பாளயங்கோட்டை சிறையில் பாம்பு, பல்லியுடன் கொள்கைக்காக சிறைவாசம். அது அப்ப, இன்று தான் கைது என்று அறிந்ததும் மேக்கப் போட்டுகிட்டு சன் டீவி கேமரா வந்ததும் ஐயோ கொல கொலபன்றாங்கன்னு ஊளை.. தன் மகளை கைதிலிருந்து காப்பாத்த தகத்தாய கதிரவனுக்கும், அப்பாவி!! சரத்துக்கும் மஞ்ச தண்ணி தெளிச்சாச்சு…நாளை என்ன பன்னுமோ முத்தமிழ வித்தவர்.

 5. Ponraj Mathialagan சொல்கிறார்:

  200 கோடி = 3 வருட விசாரணை
  170000 கோடி = 56666 வருட விசாரணை.

  ஆக, இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு முடிய கிட்டத் தட்ட 56666 வருடங்கள் விசாரணை நடத்தப் பட வேண்டும். ஸ்ஸ்ஸ்…. இந்த புழுக்கத்துக்கு மின்வெட்டே பரவாயில்லை…!!!

 6. Ponraj Mathialagan சொல்கிறார்:

  இன்றைய தேதிக்கு தமிழ் இன உணர்வாளர்கள் எவரும் கருணாநிதியிடம் இல்லை. ஒரு பேச்சுக்கு போராட்டம் நடத்த வேண்டும் என்று சொன்னால் கூட காசு கொடுக்காமல் ஒரு தி.மு.க ஆளும் வரமாட்டான் (சுப வீ உட்பட). நிற்க. இலங்கையில் எம் உறவுகள் 170000 க்கு மேல் தமிழனை கருணாநிதி இந்த சோனியாவுக்கு எதிராக நின்று காப்பாற்றி விட்டிருந்தால், இன்று 170000 கோடி பிரச்னைக்கு இங்கிருக்கும் உணர்வுள்ள தமிழன் அத்தனை பேரும் சோனியாவுக்கு எதிராக கருணாநிதியை காப்பாற்றி இருப்பார்கள். ‘உள்ளது போச்சுடா நொள்ள கண்ணா’ என்பது போல பல லட்சம் உயிர்கள் இனப் படுகொலை செய்ததை வெறும் சகோதர யுத்தம் என்று தட்டி களித்த கருணாநிதியை இன்று எந்த சகோதரன் வந்து காப்பாற்றப் போகிறான் என்று நாம் வேடிக்கை பார்க்கத் தான் போகிறோம்.

 7. narasimhan சொல்கிறார்:

  Please let me know how to type comments in tamil.

 8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  welcome narasimhan,
  please use google tamil transliteration

  with best wishes,
  kavirimainthan

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.