கடலே நீ தொலைந்து போ !
சில மாதங்களுக்கு முன்னர் இமாச்சல பிரதேசம் சென்றிருந்தேன்.
பரந்து விரிந்த இமயமலையின் பசுமையான இயற்கைப் பரவல்.
தர்மஸ்தலா என்பது அங்கே உள்ள ஒரு உலகப்புகழ் வாய்ந்த
இடம். பதான்கோட்டிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தில்,
தரைமட்டத்திலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில்
உள்ள ஊர்.
இமயமலையின் காங்க்ரா பள்ளத்தாக்கில் அமைந்து
உள்ள இந்த இடம் உலகப்பிரசித்தி பெற்றதற்கு காரணம்,
திபேத்தின் புத்த மதத்தலைவரான தலாய்லாமா இங்கு தங்கி
இருக்கிறார் என்பதே.
இந்தியாவின் ஒரு மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் உள்ள
தர்மஸ்தலாவில் தான் அமைந்திருக்கிறது – திபேத்தின் நாடு கடந்த
அரசு. (govt. of tibet in exile). தலாய் லாமா தங்கி இருக்கும்
இடம் மெக்லியோடு கஞ் என்று அழைக்கப்படுகிறது.
1959 -ல் கம்யூனிஸ்ட் சீன அரசு திபேத்தையும்,
தலாய்லாமாவையும் தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர
முயன்ற போது,
திபேத்தின் சுதந்திரத்தை வலியுறுத்தி வந்த தலாய் லாமா
இரவோடு இரவாக தன் ஆதரவாளர்களுடன்( கிட்டத்தட்ட
ஒரு லட்சம் பேர் ) கால் நடையாகவே
எல்லையைக் கடந்து வந்து இந்தியாவில் அடைக்கலம் கோரினார்.
நேரு பிரதமராக இருந்த அந்நேரத்தில் இந்திய அரசு அவருக்கு
அடைக்கலம் அளித்ததுடன், அவருடன் வந்த ஒரு லட்சம்
திபேத்திய அகதிகளுக்கும் தஞ்சம் கொடுத்தது. அப்படி வந்த
திபேத்திய அகதிகளுக்காக இந்திய அரசு ஒதுக்கிய இடம் தான்
மெக்லியோடு கஞ் /தர்மஸ்தலா. முதலில், கீழே உள்ள இடம்
இந்திய மக்கள் வாழும் தர்மஸ்தலா. இதில் சுமார் 20,000
இந்தியர்கள் வசிக்கிறார்கள். இமாச்சல பிரதேசத்தின் கோடைக்கால
தலைநகரம் இது தான். இதற்கு சுமார் 1500 அடி உயரத்தில்
உள்ள இடம் மெக்லியோடு கஞ் என்று அழைக்கப்படுகிறது.
1960-ல் தலாய் லாமா இங்கு தனது
நாடு கடந்த திபேத்திய அரசை இந்திய அரசின் ஒத்துழைப்புடன்
நிறுவினார். அன்று முதல் இன்று வரை நாடு கடந்த திபேத்திய
அரசு இங்கிருந்து செயல்பட்டு வருகிறது.
நான் சென்றிருந்தது, அக்டோபர் மாதத்தில்,
ஒரு மாலை நேரத்தில். நடுங்கும் குளிர்.
ஊர் பூராவும் திபேத்தியர்கள் தான். டீ கடையிலிருந்து,
ஓட்டல்கள், மளிகைக்கடைகள், மருந்து கடைகள்,
டாக்சி ஓட்டுனர்கள், பழ வியாபாரிகள் – எங்கு பார்த்தாலும்
அனைவருமே திபேத்தியர்கள் தான். அங்கு போகும் சுற்றுலா
பயணிகளைத்தவிர, மருந்துக்கு கூட இந்தியர் யாரும் கண்ணுக்கு
தென்படவில்லை.
தலாய் லாமா தங்கி இருக்கும் இடத்தில் ஒரு அருமையான
புத்த விகாரை. மிகப்பெரிய அளவிலான புத்தர் சிலை ஒன்று.
மிக அழகாகவும், புனிதத்தன்மையோடும் விளங்குகிறது
அந்த இடம். புத்தமதத் தலைவர் தலாய் லாமா அவர்களையும்
சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. புன்னகை தவழும் முகத்துடன்
அனைவரையும் மகிழ்வோடு சந்திக்கிறார் தலாய் லாமா அவர்கள்.
ஆண்களும், பெண்களும், சிறுவர், சிறுமிகளுமாக கிட்டத்தட்ட
ஒரு லட்சம் திபேத்தியர்கள் வசிக்கும் அந்த இடம் “லிட்டில் லாசா”
என்றே அழைக்கப்படுகிறது (லாசா என்பது திபேத்தின் தலைநகரம்).
அவர்களுக்கான பள்ளிகள், வருமானத்திற்கான
சிறு சிறு தொழில்கள் –
சகலவிதமான வசதிகளுடன், முழு சுதந்திரத்துடன், தங்கள்
கலாச்சாரத்தைப் பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்அவர்கள் !
இந்தியாவிலேயே ஒரு வெளிநாட்டைப் பார்த்த அனுபவத்துடன்
பயணத்தைத் தொடர்ந்தேன் நான்.
இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் உள்ள உறவு ஒரு
விசித்திரமான உறவு. இரண்டும் முற்றிலும் சுதந்திரமான
இரண்டு தனித்தனி நாடுகள் – ஆனால்
இரண்டுக்கும் இடையே மக்கள் போய் வர
எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. பாஸ்போர்ட், விசா போன்ற
சமாச்சாரங்கள் எதுவுமின்றி ஒரு அந்நிய நாட்டுக்கு போய் வருவது
உலகில் வேறு எங்காவது நடக்குமா ?
நேபாளிகள் (கூர்க்காக்கள்) –
இந்தியாவின் எல்லா நகரங்களிலும் வியாபித்திருக்கிறார்கள்.
காவல் பணி – அவர்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட ஒரு துறை.
லேடஸ்ட் – சென்னை சரவண பவன் கிளைகள் அனைத்திலும்
நேபாள சிறுவர்கள்/வாலிபர்கள் வேலை செய்வதை பார்க்கலாம்.
இதே போல் – பங்களாதேஷ்.
இரண்டு நாட்டிற்கும் இடையே பெயரளவில் தான் தடுப்பு.
அஸ்ஸாம் முழுவதும், அருணாசல் பிரதேசம் முழு வதும்,
மேற்கு வங்காளத்தில் பல பகுதிகள்
பங்களா தேஷ் குடிமக்கள் இந்தியருக்கு உண்டான எல்லா
உரிமைகளுடனும் வாழ்கிறார்கள்.
இதை எல்லாம் எதற்காக சொல்கிறேன் ?
நம்முடன் ரத்த சம்பந்தமோ, கலாச்சார மற்றும்
மொழி தொடர்பான பங்கீடோ
இல்லாத வேற்று நாட்டவர் அனைவருக்கும் முழு மனதுடன்
இடம் கொடுத்திருக்கும் – பரந்து விரிந்த இந்த பாரத நாட்டில்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக –
நம்முடன் –
மொழி, இன, கலாச்சாரத் தொடர்புடைய இலங்கைத்தமிழர்களுக்கு
மட்டும் இடம் இல்லாமல் போய் விட்டது எப்படி ?
எங்கேயோ இருந்தவர்களுக்கு எல்லாம் இடம் கொடுத்தபோது
இங்கே 20 மைல் தொலைவில் இருக்கும் நம் தொப்புள்கொடி
உறவுகளுக்கு இடம் இல்லாமல் போனது எப்படி ?
இந்திய ராணுவத்தில் ஒரு முக்கிய பிரிவான
“மெட்ராஸ் ரெஜிமெண்ட்”டில் பணிபுரிந்தவர்கள் –
நிறைய பேருடன் நான் பணி புரிந்திருக்கிறேன். எனக்கு
மெட்ராஸ் ரெஜிமெண்ட்டைச்சேர்ந்த நண்பர்கள் நிறைய பேர்
உண்டு. அவர்களுடன் பேசும்போது கதை கதையாய்
நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கிறார்கள்.
1971-ல் கிழக்கு பாகிஸ்தான் பங்களா தேஷாக உருவாகும்
சூழ்நிலை. பாகிஸ்தான் அவர்கள் மீது போர் தொடுத்தபோது
இந்த மெட்ராஸ் ரெஜிமெண்டை சேர்ந்த நிறைய பேர்
ராணுவ சீருடையை கழட்டி விட்டு, கைலியும் பனியனுமாக
பங்களா தேஷ் உள்ளே புகுந்து பங்களா தேஷ் மக்களின்
சுதந்திரத்திற்காக, அவர்களுக்கு ஆதரவாக,
பாகிஸ்தான் ராணுவத்தோடு போரில் ஈடுபட்டார்கள்.
அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் வகுத்த யுக்தி அது.
தங்களுக்காக, தங்கள் சார்பாக – போரிட்டு சுதந்திரம் பெற்றுத் தந்த
மெட்ராஸ் ரெஜிமெண்டை இன்றும் பங்களா தேஷ் மக்கள்
நன்றியுடன் நினைவு கூறுகிறார்கள்.
கடைசியாக கடந்த சில வருடங்களில் –
ஈழத்தமிழர்களுக்கு எதிரான
உச்சகட்ட கொடுமைகள் ராஜபக்சே அரசால்
இழைக்கப்பட்டபோது
நாம் – தமிழர்கள் – கையாலாகாதவர்களாக மாநில அரசையும்
மத்திய அரசையும் கெஞ்சிக்கொண்டிருந்தோமே !
திபேத்தியர்களுக்கும், நேபாளிகளுக்கும்,
பங்களாதேஷிகளுக்கும் காட்டப்பட்ட கருணை –
இலங்கைத் தமிழர்களுக்கு காட்டப்படாதபோது,
நாம் தனிப்பட்ட முறையில், அரசாங்கத்தின் தயவு இல்லாமல்
களத்தில் இறங்கி செயல்பட முடியாமல் இருந்ததற்கு
காரணமென்ன ?
குறுக்கே கடல் மட்டும் இல்லாமல் இருந்தால்
நாம் இலங்கை செல்வதை யாரால் தடுத்திருக்க முடியும் ?
நம் சகோதரர்கள், தமிழ்ப் பெண்கள், குழந்தைகள் –
இன்னலுற்று இருக்கும்போது –
நம்மால் உதவிக்கு போக முடியாமல்
இருந்ததற்கு தடங்கலாக இருந்தது –
இந்த வங்காள விரிகுடா கடல் தானே ?
திபேத்தை போல, நேபாளத்தை போல,
பங்களாதேஷை போல,
இலங்கையும் இந்தியாவும் தரைவழியே இணைக்கப்பட்டிருந்தால்,
ஈழத்தமிழர்கள் இங்கே வருவதையோ, நாம் அவர்கள் உதவிக்கு
போவதையோ – உலகில் எந்த சக்தி தடுத்திருக்க முடியும் ?
குறுக்கே வந்த கடலே – நீ இல்லாமல் இருந்திருக்கக் கூடாதா?
காவிரி மைந்தன்,
உங்கள் முழு அறிவும் மனித நேயமும் விஸ்வரூபம் எடுத்திருப்பதை இந்தப்பதிவின் வாயிலாக பார்க்கிறேன்.
நான் படித்த சிறந்த எண்ண வெளிப்பாடுகளில் இந்த பதிவும் ஒன்று.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பி.கு:அதே சமயம் கடல் இருப்பது நமக்கு ஒரு சாக்குதான்.
நிலம் இருந்திருந்தால் மட்டும் என்ன கிழித்திருக்கவாப்போகிறோம்?நம்மை போன்ற சுயநல வாதிகளை உலகில் எங்கும் காண முடியாது.ஆனால் வாய் மட்டும் காது வரை !!பேசியே பிரச்சினையை தீர்ப்பதில் நமக்கு நிகர் நாமே!என்ன இருந்தாலும் ஒரு வசனகர்த்தா பல வருடங்களாக ஆட்சி புரியும் மாநிலம் அல்லவா!
எக்குதப்பா மாட்டிகிட்டா இருக்கவே இருக்கு, பாப்பான்- பறையன் என்ற கோஷம்!!
THANKS KAVIRIMAINTHAN
VERY GOOD GANPATH
thanks
Rajasekhar.p
// பாஸ்போர்ட், விசா போன்ற
சமாச்சாரங்கள் எதுவுமின்றி ஒரு அந்நிய நாட்டுக்கு போய் வருவது
உலகில் வேறு எங்காவது நடக்குமா ?//
நடக்கும். அமெரிக்கா விலுருந்து கனடாக்கோ இல்லை கனடாவிலுருந்து அமெரிக்காவுக்கோ இப்படி தான் இருந்தது. சமீப காலமாக எல்லாம் மாறிருச்சு. நல்ல வேலை போய் தொலஞ்சான் பாவி.
உங்களின் ஆற்றாமையை நான் மதிக்கிறேன்,ஆனால் தமிழனின் தன்மானம் மழுங்கிப்போய் வெகு காலம் ஆகிறது.இந்தியாவும் ,இலங்கையும் நிலப்பரப்பால் இணைந்திருந்தால் ,தங்களுக்கு இடுகை எழுத ,வேறு எதேனும் காரணம் கிடைத்திருக்கும்.
//குறுக்கே வந்த கடலே – நீ இல்லாமல் இருந்திருக்கக் கூடாதா?//
அய்யா, மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. எல்லோரும் தோணி ஏறி போக முற்பட்டால், அரசாங்கம் என்ன செய்யும்?
Excellent post Sir, Although there is sea in between, its not the main problem. The bigger problem is we lack the conviction and determination to help Eelam Tamils.
இதெற்கெல்லாம் காரணம் உனக்கே தெரியும்…
நாதாரி பிரபாவின் சிற்றறிவே ….
இதற்கேன் வெற்று feeling நாடகம் இப்போ
பின்னூட்டக்காரர்கள் சொவது போல் கடல் ஒரு சாக்கு தான்.
அது போல் இங்கு நடக்காததற்கு சில காரணங்கள் :
# இலங்கை தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை; தனிதனி குழுக்கு (ஈழம், மலைத் தமிழர், வணிகம் செய்யும் கொழும்பு தமிழர்கள்) வெவ்வேறு பிரச்னைகள்; ஒன்று கூடி ஒரே வரிசை படுத்தவில்லை.
# ஈழத் தமிழர் தாம் இலங்கையில் வங்காளி-ஓடியாக்காரர்களுக்கு முன்பே வந்த அல்லது அங்கேயே ஆதி காலத்திலிருந்து வாழ்ந்து வரும் பூர்வ குடியினர் என்பதை நிலை நாட்டுவதும், தம் தனித்தன்மையை பாதுகாப்பதில் எடுத்துக்கொண்ட சிரமம், தற்போது சூழ்நிலையில் சிங்க ளவருடன் சேர்ந்தே இருந்துகொண்டு, தம் இனத்துக்கு நன்மை செய்வது எப்படி என்று சிந்திக்காதது. (ஒரு கோணத்தில் பார்த்தால் திராவிட நாடு என்று பேசுவதை விட்டு, தமிழ் நாடு இந்தியாவின் ஒரு பகுதி; மையத்திலும் நம் பங்கை பெறுவோம் என்று முடிவெடுத்தது போன்று).
# தமிழக தலைவர்கள் தொப்புள் கோடி உறவு என்று வசனம் பேசிக்கொண்டு, தம் கட்சிக்கு எது நன்மை என்று குறுகிய புத்தியுடன் செயல் பட்டது
# தமிழகத்தில் உள்ள அரசியல் சாராத தலைவர்கள், உ-ம: நெடுமாறன் தமிழரின் நலத்தை விட தமிழர் பெருமையையே அதிகம் கருதியது.
# தமிழ் நாட்டு பொது குடிமகன் இலங்கை பிரச்னையின் ஆழத்தை புரிந்து கொள்ள முயலாமல் எதாவது செய்ய வேண்டும் என்று உணர்வு பூர்வமாக நினைத்தது தவிர ஒன்றும் செய்யாதது.
# இந்திய அரசுக்கு இலங்கை பிரச்னையை சரிவர தெளிவு படுத்தாதது, அரசின் ஒரு பங்கு வகித்த தமிழர்கள், (எந்த கட்சியினர் ஆயினும்) தம் கடமை ஆற்றாதது. இது கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழர் செய்யத்தவறியது.
இவை இந்தியா திபெததவர்களுக்கு, வாங்க தேச வங்காளிகளுக்கு செய்தது போல் இலங்கை தமிழர்களுக்கு செயாதது என் என்று யோசித்தது.
இலங்கை தமிழர் குழுக்கள், ஈழ்ழத்தமிழர் செயல்முறை, தீவிரவாதிகள், விடுதல்லை போராட்டவாதிகள் என்ற உணர்வை ஏற்படுத்ததவறியது, etc தனி