உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் தவறான அணுகுமுறை !

உள்துறை  அமைச்சர்  சிதம்பரத்தின்
தவறான  அணுகுமுறை !

இன்றைய  தினமணி செய்தியில்  மானாமதுரையில்,
மத்திய உள்துறை அமைச்சர்
ப.சிதம்பரம்  பேசியதாக வந்துள்ள செய்தி –

“சிதம்பரம் மேலும் பேசியதாவது: தமிழ்நாடு,  கேரளம், அசாம்,
புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில்  சட்டப் பேரவைத்
தேர்தல்கள் நடந்துள்ளன. ஆனால், தமிழகத்தில்  மட்டும்தான் தேர்தல் ஆணையம் அதிக கெடுபிடி காட்டியுள்ளது.

இதற்கான காரணம் குறித்து, தேர்தல் முடிவுகள் வெளியானபின்,
தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்கப்படும்.”

மெத்தப்படித்த மேதாவி,  சட்டநிபுணர், இப்படிப் பேசி இருப்பது
ஆச்சரியத்தை அளிக்கிறது.

ப.சி. பேசி இருப்பது  அறியாமையால் அல்ல !
அகம்பாவம்.
ஆளும் கட்சியின் அதிகாரம்
கையில் இருக்கிறது என்கிற நினைப்பில் பேசுகிறார்.

எதிரில் இருப்பவர்கள் – ஜால்ரா  போடும் கட்சிக்காரர்கள் தானே –

அவர்களுக்கு  சட்ட விதிகள் என்ன தெரியப்போகிறது –
என்கிற நினைப்பில் தேர்தலைப்பற்றி  குறை சொன்ன
அவர்களை  திருப்தி
செய்ய பேசி இருப்பதாகவே  தெரிகிறது.

தேர்தல் கமிஷனின்  அதிகாரங்கள் மத்திய அரசு
போட்ட பிச்சை அல்ல.
அது  அரசியல்  சட்டத்தின் மூலமாக
தன் அதிகாரங்களைப் பெற்றுள்ளது.

அதைக் கேள்வி கேட்கும் அதிகாரம் ப.சி.க்கோ,
அவரது “அன்னை”க்கோ,
மத்திய அரசுக்கோ கிடையாது.

தேர்தல் கமிஷன் அதன் அதிகார வரம்புகளை மீறி  இருப்பதாக
யாராவது எண்ணினால் –
அவர்கள்  அணுக வேண்டிய இடம் நீதிமன்றம் தான்.

நீதிமன்றத்தில்  புகார் கொடுத்த கலைஞருக்கு
என்ன பதில் கிடைத்தது என்பது இவருக்கு
தெரியாதா ?

முடிவுகள்  வரும் முன்னரே  இப்படி என்றால் ………….. ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, சிதம்பரம், சுதந்திரம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் தவறான அணுகுமுறை !

  1. Ezhil சொல்கிறார்:

    Sir, firstly thanks for your thought provoking blog and I’m a regular reader of the same. To be honest I still and always will have doubts on the electronic voting. Its for that simple reason advanced countries like America, UK, Japan have never gone to it. Latest U turn on survey by Headlines today, and this Chidambaram’s speech are fueling my fears on how the election results will be. If you think back, when Qureshi was appointed as EC there were allegations from opposition that he is a Congress sympathizer. Do you think what I am thinking?

  2. sethuraman சொல்கிறார்:

    It is very correct and this should reach every one.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.