நல்ல ஜோக் -2

நல்ல ஜோக் -2

நண்பர் கண்பத் சொன்னது போல், நானும் 10-15
நாட்களுக்கு  அரசியல்  இடுகைகள்  எழுத வேண்டாமே
என்று தான் நினைதேன். ஆனால்,  நல்ல ஜோக்குகளைப்
பார்த்ததும்,  நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்ள வேண்டும்
என்று தோன்றியது.  அரசியல்  என்பதற்காக – இவற்றை
ஒதுக்கி விட்டால்  பிறகு இந்த ப்ளாக்  பிறவி எடுத்ததன்
பயனே  போய் விடுமே !   எனவே  இதோ அந்த ஜோக்குகள் –

ஜோக் நம்பர் -1

“தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லையென்று சினிமா வட்டாரங்களில் விமர்சிக்கிறார்கள்.என்ன செய்வது? படம் எடுப்பதற்கு ஆள் இல்லாமல், ஸ்டுடியோக்களையும், திரையரங்குகளையும் மூடிவிட்டு அந்த  இடங்களை திருமண மண்டபங்களாகவும், ஓட்டல்களாகவும்,  கிடங்குகளாகவும் மாற்றிடும் நிலைமை ஏற்பட்டது ஒரு காலம்.

இப்போது படங்களை வெளியிட தியேட்டர் கிடைக்கவில்லை என்றுஅலைகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

நான் எழுதி வெளிவந்துள்ள “பொன்னர் சங்கர்’ திரைப்படத்துக்கும்எங்கும் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அலையாய் அலைந்துதான் தியேட்டர்களைப் பிடிக்க முடிந்தது என்று அதன் தயாரிப்பாளர்கள் கண்ணீர்விட்ட நிகழ்ச்சிகள் எனக்குத் தெரியும்.”
-இது   கலைஞர்  நேற்று விட்ட அறிக்கை !

(உண்மையில்  கலைஞர்  படத்துக்கு தியேட்டர்
கிடைக்காததற்கு  – தியேட்டர் பற்றாக்குறையா காரணம் ?
அவரது சிஷ்யர்  ராமநாராயணின்  தமிங்கிலீஷ் “டப்பிங்”படங்களுக்கு எல்லாம் சர்வ சகஜமாக டஜன்
கணக்கில் தியேட்டர்கள்  கிடைக்கின்றனவே!
ஏன் -தமிழ் நாட்டின் பாதி தியேட்டர்கள்
அவரது  பேரன் கள்  வசம் தானே  இருக்கின்றன !என்ன செய்வது -கலைஞர் படங்களின் வசூல் ரிசல்ட்டை பார்த்து
தான் எல்லாரும் கதி கலங்குகிறார்கள் !

காலத்துக்கு ஏற்றாற்போல், இந்தக் கால ரசனைக்கு ஏற்றாற்போல்கலைஞரால்  எழுத முடியவில்லை.

ஆனாலும் எழுதியே தீருவேன்

என்று அடம் பிடிக்கிறார்.  இவர்
எழுதுவதை எடுக்க வேண்டிய கட்டாயம்  லாட்டரி
மார்டினுக்கும்.  சாராயத்தொழிற்சாலை  பெர்மிட் பெற்ற
உளியின் ஓசை  தயாரிப்பாளருக்கும் இருக்கலாம் !
ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் தியேட்டர்காரர்கள் யாரும் இல்லைபோலிருக்கிறது !)

” கடலூரில் ஒரு தியேட்டரில் “பொன்னர் சங்கர்’ திரைப்படம்திரையிடப்பட்டு அரங்கம் நிறைந்த காட்சிகளாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. இரண்டாம் நாளே அந்தத் திரைப்படத்தை கட்டாயப்படுத்தி எடுத்து விட்டார்கள்”

(யார் கட்டாயப்படுத்தினார்கள் ? எப்படி எடுக்க ஒத்துக்
கொண்டார்கள் என்கிற  விவரங்களை  கலைஞர்  தெரிந்து
கொள்ளாமல் விட்டிருக்க மாட்டாரே – சொன்னால்
நமக்கு இன்னொரு ஜோக் கிடைத்திருக்கும் அல்லவா ?)

ஜோக் நம்பர் -2

டெல்லியில்  சி பி ஐ  அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை
திறந்து வைத்த  வி ஐ பி  பேசியது –

“இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சியை
நிலை நிறுத்துவது  தான் நமது முதல்  கடமை.
யாராக  இருந்தாலும்  சரி,
எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் சரி,
எத்தகைய அரசியல்  பின்னணியும்,
செல்வாக்கும் படைத்தவராக இருந்தாலும் சரி,
நீங்கள்  எதற்கும்  தயங்கக் கூடாது.
யாருக்கும் அஞ்சக்கூடாது. பாரபட்சம் இல்லாமல்
பணியாற்ற வேண்டும்
இந்த நாடே  நம்மை நம்மை கூர்ந்து கவனித்துக்
கொண்டிருக்கிறது.  எனவே –
எந்தவித தயக்கமும்  இல்லாமல்,
எந்த வித தாமதமும்  இல்லாமல்,
குற்றவாளிகளை கூண்டில் ஏற்றும் பணியில் –
தண்டனை வாங்கிக் கொடுப்பதில் –
எந்தவித  சுணக்கமும் இன்றி பணியாற்ற வேண்டும்!”

அப்பப்பா – எவ்வளவு  கடமை உணர்வோடு பேசுகிறார்-
பேசியது யார்  என்று கேட்கிறீர்களா ?

யார் பேசினால் இது ஜோக்காக இருக்க முடியும் ?
–  நம்  மேன்மை தங்கிய பிரதமர் மன்மோகன் சிங்  தான் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, உலகத்தமிழ், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காமெடி, சரித்திரம், சினிமா, தமிழீழம், தமிழ், தியேட்டர்கள், திரைஅரங்குகள், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to நல்ல ஜோக் -2

 1. Ganpat சொல்கிறார்:

  நன்றி நண்பரே!

  சுதந்திர இந்தியாவில், குடிமக்கள் சிரித்துக்கொண்டே இருப்பார்கள் என்ற நம்பிக்கையில், தேசத்தலைவர்கள் நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்துவிட்டு மறைந்துவிட்டனர்.

  பிறகு நம்மை ஆளவந்த தேசத்தலைவலிகள், அந்த குறிக்கோளை இரண்டு பங்கு நிறைவேற்றி விட்டனர்.

  ஆம்!

  நாம் இப்போ சிரிப்பாய் சிரித்துக்கொண்டிருக்கிறோம்!!

  ஊழல் மட்டும் செய்யும் கிங்கிற்கும் ,அது கூட செய்யாத சிங்கிற்கும் என்ன வேற்றுமை?

  முதல்வர் செய்யவேண்டியவைகளை செய்யாமல்,
  செய்தேன் என்றும், செய்யக்கூடாதவைகளை செய்துவிட்டு, செய்யவில்லை என்றும் சொல்லுவார்!

  பிரதமர் செய்யவேண்டியவைகளை தான் செய்யாமல்,
  மற்றவர் செய்யவேண்டும் என்றும், செய்யக்கூடாதவைகளை மற்றவர்களை செய்யவிட்டுவிட்டு, தான் செய்யவில்லை என்றும் சொல்லுவார்!

 2. Ponraj Mathialagan சொல்கிறார்:

  “புர்…கர்…..புர்புர்புர்..கர்புர்கர்கர்…..புர்ர்ர்ர்…” ஒன்னும் இல்லீங்க , இந்த ஜோக்கை படிச்சா எனக்கு வாயால சிரிக்க தோணலை, வேற ஒன்னால சிரிச்சேன்… அதான்…!!!

 3. Jawahar சொல்கிறார்:

  //காலத்துக்கு ஏற்றாற்போல், இந்தக் கால ரசனைக்கு ஏற்றாற்போல்கலைஞரால் எழுத முடியவில்லை.//

  நிஜம். யார் அவருக்கு எடுத்துச் சொலவது?

  http://kgjawarlal.wordpress.com

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  வருக ஜவஹர்,

  கலைஞருக்கு தெரியாமலா இருக்கும் !
  இல்லா விட்டாலும் கூட அவரது பிள்ளைகளோ –
  பேரப்பிள்ளைகளோ உரிமையுடன்,
  கிண்டலாகவே கூட எடுத்துச்சொல்லி
  இருப்பார்களே ! நம் வீட்டில் எல்லாம்
  இது போல் சகஜமாக பேசுவது தானே !

  இருந்தாலும் ……… பிடிவாதம் !

  -வாழ்த்துக்களுடன்
  காவிரிமைந்தன்

 5. sethuraman சொல்கிறார்:

  What about in Kani’s case?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.