நாம் ஜனநாயகத்திற்கு அருகதை உள்ளவர்களா ?

நாம்  ஜனநாயகத்திற்கு அருகதை  உள்ளவர்களா ?

ஜனநாயகம்   என்கிற  வார்த்தைக்கு விளக்கம் கொடுத்த
பெரியவர்கள் – அதை –
மக்களுக்காக,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட,
மக்களைக் கொண்ட –  அரசு
(for the people, by the people,  and of the people)
என்று  வரையரை  வகுத்தனர்.
அதாவது  தங்களுக்கு  நல்ல முறையில்  சேவை
செய்யக்கூடியவர்கள் என்று  நம்பி –
மக்கள் தேர்ந்தெடுத்த-
அவர்களுக்குள்ளேயே சில  நபர்களைக்
கொண்ட அரசாட்சி  – மக்களாட்சி.

அதாவது சில கட்டுதிட்டங்களுக்கு உட்பட்டு
தங்களை ஆளும் அதிகாரத்தை மக்களே மனமுவந்து
தங்களில் ஒரு சிலரிடம்  ஒப்படைப்பது தான் ஜனநாயகமும்
தேர்தலும்.

ஆனால்  நம் நாட்டில் நடைபெறுவது என்ன ?
நல்லவர்களால், யோக்கியர்களால்,
பணவசதி இல்லாதவர்களால் –
தேர்தலில் நிற்க முடிகிறதா ?
வெற்றி பெற முடிகிறதா ?

அல்லது  மக்களுக்கு தான் தேர்தலின் மூலம்
நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கும்
வாய்ப்பு நிஜமாகவே  கிடைக்கிறதா ?

அரசியல் கட்சிகள் பொறுக்கி எடுத்து அறிவிக்கும்
வேட்பாளர்களில் யாராவது ஒருவரைத் தானே
தேர்ந்தெடுத்தாக வேண்டி இருக்கிறது. (அதிக பட்சம்
இவர்களில் யாரையும் எனக்குப் பிடிக்கவில்லை என்று
சொல்ல  49-ஓ இருக்கிறது என்று வேண்டுமானால்
சொல்லிக்கொள்ளலாம் !)

அரசியல் கட்சிகள்  வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது
எப்படி ?  எந்த  அடிப்படையில் ?

– அந்தந்த தொகுதியில் நிலவும்
பெரும்பான்மை ஜாதிகளின்  அடிப்படையிலும்,
-இன, மத, மொழி அடிப்படையிலும்,
-கட்சி மட்டத்தில் அதிகாரமும், செல்வாக்கும்,
பணபலமும்  யாருக்கு அதிகம் இருக்கிறதோ –
அவர்களைத் தான் கட்சிகள்  வேட்பாளர்களாக
அறிவிக்கின்றன.

ஒரு  கட்சிக்குள்ளேயே  வேட்பாளராக
அறிவிக்கப்படுவதற்கு  ஒரு மனிதர் எவ்வளவு
தகிடுதத்தங்கள்  செய்ய வேண்டியிருக்கிறது ?
(தங்கபாலுவைப் போல )    

எனவே பொதுவாக தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளர்கள்  நல்லவர்களாக இல்லாமல் இருக்கக்கூடிய
சூழ்நிலையே நிலவுகின்றது.   
கிட்டத்தட்ட  எல்லா கட்சியும் இதே நிலையில் இருக்கின்றன
என்கிறபோது – மக்கள்  நல்ல வேட்பாளர்களைத்
தேர்ந்தெடுப்பது எப்படி ?

இருப்பதற்குள் குறைந்த  பட்சம் மோசமானவர்
யார் என்று தீர்மானித்து தேர்ந்தெடுக்கிற வாய்ப்பு மட்டுமே
மக்களுக்கு கிடைக்கிறதே   தவிர  நல்ல மனிதர்கள்
சட்டமன்றத்திற்கோ,  பாராளுமன்றத்திற்கோ
தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப் படுவதற்கான வாய்ப்பே
இப்போதைய சூழ்நிலையில்  ஏறக்குறைய  இல்லை என்றே சொல்ல
வேண்டும்.(மிகச்சில விதிவிலக்குகளைத் தவிர )

இது தான் ஜனநாயகமா ?  ஆம் என்றால்  இத்தகைய
ஒரு ஜனநாயகம்  நமக்குத் தேவையா ?

சர்வாதிகாரியாக  இருந்த – கொடுங்கோலனாக
கருதப்பட்ட –  ஹிட்லர் கூட  தன் நாட்டு மக்களுக்கு
எந்த வித துரோகமும் செய்யவில்லை ஜெர்மன் நாட்டின்
மீது  அதீத  பக்தியும் பெருமையும் கொண்டிருந்தான்.
ஜெர்மனியை உலக அரங்கில்  முன் நிறுத்த அவன் மேற்கொண்ட
முயற்சிகளைப் போல் உலகில் இது வரை
வேறு எந்த  நாட்டிலும்  யாரும் மேற்கொள்ளவில்லை.

ஆனால்  உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக
பெருமை பேசப்படும் நம் நாட்டில்  அதிகாரத்தில் ஒட்டிக்
கொண்டிருக்கும்  தலைவர்களில் எத்தனை பேர்
நாட்டின் மீதும், நம் மக்களின் மீதும் அக்கரை கொண்டிருக்கின்றனர் ?

உண்மையிலேயே எத்தனை
தலைவர்கள் இந்த  நாடு முன்னேற அக்கரையோடு
உழைக்கின்றனர் ? எத்தனை தலைவர்களுக்கு
இந்த மண்ணின் மீது பக்தியும்  பாசமும் இருக்கிறது ?

எந்தெந்த வழிகளில்  எல்லாம் சம்பாதிக்கலாம் –
எப்படி எல்லாம் சுருட்டலாம் என்று தானே இன்றைய
அரசியல்வாதிகள்  சதா சர்வகாலமும் யோசித்துக்
கொண்டிருக்கின்றனர் ?

ஆனால் – இவர்கள் இப்படி  வளருவதற்கு  இன்னொரு
முக்கிய காரணமும்  இருக்கிறது.
மக்கள் எவ்வழியோ – மன்னன் அவ்வழி  என்றும்
சொல்லலாம்.   மன்னன் எவ்வழியோ – மக்கள் அவ்வழி
என்றும் சொல்லலாம்.

மக்கள்  எதற்கு தகுதியானவர்களோ   அது தானே
அவர்களுக்கு   கிடைக்கும் ?   நமக்கு இத்தகைய தலைவர்கள்
வாய்த்ததற்கு நாமும் ஒரு வகையில் காரணம் தானே ?

நல்லவர்களை  தேர்ந்தெடுத்து அனுப்பத்தான்  நமது தேர்தல்
முறைகளில்  வழி, வாய்ப்பு இல்லை – சரி.

அதற்காக –  நம்மால்  தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டவர்கள்
செய்யும்  தவறுகளையும்,  அயோக்கியத்தனங்களையும்
எல்லாம்  நாம்  பார்த்துக்கொண்டு சும்மா இருக்க
வேண்டியதில்லையே.  தவறு செய்யும்போதெல்லாம்
தட்டிக்கேட்க வேண்டாமா ?  நம் எதிர்ப்பைக் காட்ட
வேண்டாமா ?   மக்கள்  பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் –
இவற்றை எல்லாம் அனுமதிக்க மாட்டார்கள்  என்கிற
பயம்  அவர்களுக்கு இருக்க வேண்டாமா ?

அதைச்செய்ய  நமக்கு வக்கு  இல்லை  என்றால்
நாம் ஜனநாயகத்திற்கு  அருகதை அற்றவர்கள் என்றே
பொருள் – இல்லையா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழீழம், தமிழ், தேர்தல், நிர்வாணம், பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to நாம் ஜனநாயகத்திற்கு அருகதை உள்ளவர்களா ?

 1. Ganpat சொல்கிறார்:

  //ஹிட்லர் கூட தன் நாட்டு மக்களுக்கு
  எந்த வித துரோகமும் செய்யவில்லை. ஜெர்மன் நாட்டின்
  மீது அதீத பக்தியும் பெருமையும் கொண்டிருந்தான்.//
  மிக அருமையான நவீன சிந்தனை,நண்பர் கா.மை
  வாழ்த்துக்கள்.

  உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்.

  இந்தியர்கள் ஆளப்பட பிறந்தவர்கள்
  ஆள அல்ல!!

  இந்தியா என்பது ஐரோப்பிய யூனியன் போல தனித்த பலநாடுகளின் கூட்டிணைப்பு.இதை ஒரே நாடு என்று சொல்வதால் தான் அத்தனை பிரச்னைகளும் வருகிறது.

  இங்கு நடப்பது மெழுகுவர்த்தியை வைத்து சமையல்
  முடிய நிரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நேரம் ஆகும்

 2. ஸ்ரீஹரி சொல்கிறார்:

  தேர்தலுக்குள்ளேயே நம் நாட்டின் பிரச்சினைகளை பார்க்க நினைப்பதில்தான் நம்முடைய சிக்கல்கள் உள்ளன எனக் கருதகிறேன். நம் சமூக பொருளாதார அமைப்பில் தான் நம் தேர்தல் முறைக்கான சிக்கல்களையும் காணமுடியும்.

  நம்முடைய ஆண்டு தேவையென்ன? நம் நாட்டின் வருமானம் என்ன? எத்தகைய துறைகளிலிருந்து எவ்வளவு வருமானம் வருகிறது? எந்தெந்த வழிகளில் செலவு செய்யப்படுகிறது?

  நம்முடைய நாட்டை ஆள்வதில் நம்முடைய பங்க எவ்வளவு? அந்நியர்களின் பங்கு எவ்வளவு? என்பதான ஆராய்ச்சிகளே நம் கேள்விகளுக்கான விடைகளைத் தரும் என்று நம்புகிறேன்

 3. Ganpat சொல்கிறார்:

  கேட்க,ரசிக்க ,ஒரு நல்ல புனைவு!

 4. RAJASEKHAR.P சொல்கிறார்:

  மனுசன
  மனுஷன்
  சாப்பிடுறாண்டா தம்பிபயலே …
  இது –
  மாறுவெதெப்போ …
  தேறுவதேப்போ……..
  நம்ம கவலை???!!!

 5. அருள் சொல்கிறார்:

  வரலாறு காணாத வாக்குப்பதிவு எனும் கட்டுக்கதை.

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_23.html

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.