தேர்தலுக்கு பிறகும் தேர்தல் ஆணையம் மீது கலைஞர்
மீண்டும் மீண்டும் புகார் கூறுவதன் மர்மம் என்ன ?
இன்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,
’’தேர்தல் நடந்த நாள் ஏப்ரல் 13. வாக்குகளை எண்ணப்படவுள்ள
நாள் மே 13. வாக்குகள் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை
முடிய ஒரு நாள் ஆகும்.
அதுவரை அரசின் சார்பில் எந்தவிதமான முக்கிய முடிவுகளும்
எடுக்கப்படமாட்டாது, எடுக்கப்பட கூடாது. திடீரென ஏதாவது ஒரு
முக்கிய முடிவு, கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டிய நெருக்கடி
ஏற்பட்டுவிட்டால் அப்போது என்ன செய்வது?
தேர்தல் ஆணையத்துக்கே வெளிச்சம்!”
(இது தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமல்ல –
கலைஞரைத் தவிர மீதி எல்லாருக்குமே வெளிச்சம் தான்.
அவசர அவசியம் எதாவது
ஏற்பட்டால் – தேர்தல் ஆணையத்திற்கு
உரிய காரணங்களோடு தகவல் கொடுத்து,
அதன் அனுமதியைப் பெற்று
தாராளமாக எந்த காரியத்தையும் செய்யலாம்.
கலைஞரின் கவலை, எரிச்சல் எல்லாம் – தேர்தல் ஆணையத்திற்கு
வெளிப்படையாகச்சொல்ல முடியாத விஷயங்களுக்கு
என்ன செய்வது என்பது தான் !)
———————————————————————
“அது மாத்திரமல்ல, அரசு சார்பில் நாட்டில் நடைபெற்றாக
வேண்டிய முக்கியமான பணிகள் எல்லாம் நிறைவேற்றப்பட
வேண்டிய நேரம் இது.”
(முக்கியமான பணிகள் என்று சொல்லப்படுவன எவை
என்று வெளியே சொன்னால் வெட்கக்கேடு ! –
மாட்டிக்கொள்ளக்கூடும் என்று தோன்றும் கோப்புகள்
எல்லாம் உரிய முறையில் மீண்டும் ஒரு முறை பரிசீலனை
செய்யப்பட்டு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் அல்லது
அழிக்கப்பட வேண்டும் ! ஆட்சியில் இருப்பது காபந்து சர்க்கார்
என்று தேர்தல் ஆணையம் கூறி விட்டதால் – இப்போது
அதைச்செய்ய அதிகாரிகள் ஒத்துழைக்க மாட்டார்கள்
அது தான் பிரச்சினையே !)
——————————————————————————————-
“பணிகள் எல்லாம் முறையாக நடைபெற்றால் தான்
ஜூன் மாதத்தில் தொடங்கவிருக்கும் தென்மேற்குப் பருவக்காற்று
காலத்தின்போது வேளாண்மைப் பணிகளை ஒழுங்காகச் செய்திட
முடியும். அதிகாரிகள் பராமரிப்புப் பணிகளை ஆய்வு கூட
செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுரை
கூறியுள்ளதாம்.
அதனால் அடிப்படைப் பணிகளைக் கூட நிறைவேற்ற முடியாத
நிலைமை உள்ளது.”
(கால்வாய்களின் பராமரிப்பு வேலைகள் ஏற்கெனவே முடிந்து
விட்டன. அணைகளில் நீர்மட்டம் எவ்வளவு இருக்கிறது என்று
பார்த்து
அணை திறக்கப்படும் நாளைத் தீர்மானிக்க வேண்டும். அதை
செய்வது
பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் தான்.
ஜூன் 12க்குப் பிறகு தான் அணை திறக்கப்படும் என்கிற நிலையில்
மே 15க்கு பதவி ஏற்கும் அரசு ஜூன் 12 வரை செயல்பட தாராளமாக
நேரம் இருக்கிறதே ! – என்ன அந்த அறிவிப்பை விடுக்கும் வாய்ப்பு
தனக்கு கிடைக்குமோ கிடைக்காதோ என்று ஒரு பதற்றம் அவ்வளவு
தான்!)
——————————————————————————————–
“மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசும் அதன் அமைச்சர்களும்
ஐந்தாண்டு
காலத்துக்கு அதாவது மீண்டும் அவர்கள் மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டு
அறிவிக்கப்படும் வரை அவர்களது பொறுப்புகளை நிறைவேற்ற
தகுதி
படைத்தவர்கள். ஆனால் அவர்களின் பணிகளை நிறைவேற்ற
முடியாமல்
தடுப்பது எந்த வகையில் நியாயமோ? சட்டம் படித்தவர்களும்
தேர்தல்
ஆணையமும்தான் இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டும்’’
என்று கூறியுள்ளார்.
(தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே பதவியில் இருப்பது
காபந்து சர்க்கார் தான். கொள்கை முடிவுகள் எதையும் புதிய அரசு
தான் மேற்கொள்ள முடியும் என்பது – என்று நம் நாடு குடியரசாக
அறிவிக்கப்பட்டதோ அன்றிலிருந்து இத்தனை
வருடங்களாக நடைமுறையில் இருக்கும் வழக்கம் தான் –
ஏதோ தேர்தல் ஆணையம் கலைஞருக்காகவே இப்போது தான்
இவற்றை எல்லாம் முதல் முறையாக நடைமுறைப்படுத்துவது போல்
இதற்கு ஏன் இவ்வளவு நொந்து கொள்ள வேண்டும் ?)
—————————————————————————————————–
– ஆக மொத்தம் கலைஞரின் பேச்சுக்களை எல்லாம் பார்த்தால்
மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்கிற நம்பிக்கை அவருக்கே
இல்லை போலிருக்கிறதே !!
5 வருடம் ப(ண்)ணி(யது)= சுமார்2,00,000 கோடி ரூபா
so ஒரு வருட பணி அளவு=சுமார்40,000 கோடி ரூபா
ஒரு மாத பணி அளவு= சுமார்3300 கோடி ரூபா
வராதா, பின்ன கோபம்??
paniyadhu oru sila kodi ya….
adhu bagirangamaga karanam radiyaaa….