இந்த தேர்தலில் ……

இந்த தேர்தலில் ……

பெரிய குடும்பம் எங்கள் குடும்பம்.
எங்கள் குடும்பத்தில் அனைவரும்
ஒரே கதியில் தான் இயங்குவோம்.
ஒரே திசையில் தான் பயணிப்போம்.

தேர்தல்  வருகிறதே –
எங்கள் குடும்பம்  யாரைத் தேர்ந்தெடுக்கும்  ?

திமுக வையா ?

தொடர்ந்து கடுமையான மின்வெட்டு  ..
அதற்கு  வெட்கம் இல்லாமல் இன்னும்
5 வருடத்திற்கு
முந்திய ஆட்சியையே காரணம் காட்டுவது …

எங்கும் எதிலும் லஞ்ச ஊழல் ..
ஆற்று மணல் அத்தனையும் கொள்ளை ..

1.76 லட்சம் கோடி கொள்ளை அடித்தவனை
ஹீரோ ஆக்கியது..

எந்த பக்கம் திரும்பினாலும் வாரிசுகள் ….
எந்த தொழிலிலும் அவர்களின் ஆதிக்கம் …

ரவுடித்தனம்,கடத்தல், கொலை, கொள்ளை …
கட்டைப் பஞ்சாயத்து ….

அத்தனை மந்திரிகளுக்கும் ஆள் ஆளுக்கு
எஞ்சினீரிங்  கல்லூரிகள் ….

கார்பரேஷன் கவுன்சிலரிலிருந்து –
மத்திய மந்திரி வரை அத்தனை பேரும்
அவரவர்  தகுதிக்கேற்ப கொள்ளை ..

எதற்கெடுத்தாலும் ஜாதியை இழுப்பது ..

பெரியார் பெயரையும் அண்ணா பெயரையும்
சொல்லிக்கொண்டே இன்னும் சகல மூட
நம்பிக்கைகளிலும் ஈடுபாடு …

சொந்த குடும்பத்தின் நலத்திற்காக
தமிழ் நாட்டையே மத்திய அரசிடம்
அடகு வைப்பது ..

சாராயக் கடைகள் மூலம் குடும்பங்களை
சீரழிப்பது …

சுடும் சிங்களவன் கையை முறிக்காமல்
செத்துக்கொண்டே இருக்கும் மீனவர்
குடும்பத்துக்கு 3 லட்சம் 5 லட்சம்
என்று ரேட் போடுவது ….

போதும் போதும் என்கிற வரை அடுக்கிக்கொண்டே
போகலாம்  குறைகளை…
இவை எல்லாவற்றையும் கூட விட்டு விடலாம் –

ஆனால்  எப்படி ?
எப்படி மறக்க முடியும் ?

லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள்  பதறி, பரிதவித்து,
கையிழந்து, காலிழந்து, துடி துடித்து
தாங்கொணா வலியுடன்  சாவதற்கு காரணமான
கொலைகார காங்கிரஸ் கும்பலுக்கு இவர்கள்
துணையாக  இருந்த குற்றத்தை –
மறக்க முடியுமா ?

எனவே என் குடும்பத்தின் ஆதரவு திமுக விற்கு
அல்ல.

அப்படியானால் காங்கிரசுக்கா ?

துணை போன திமுகவுக்கே ஆதரவு இல்லை
என்னும் போது கொலைகார காங்கிரஸ்
பாவிகளுக்கா
ஆதரவு கொடுக்க முடியும் ?

இந்த ஜென்மத்தில் எங்கள் குடும்பத்தில் யாரும்
காங்கிரசுக்கு ஆதரவு கொடுப்பதைப் பற்றி
நினைத்துக் கூட பார்க்க  மாட்டார்கள்.

அப்படியானால் – அதிமுக வுக்கா ?

இல்லை – நம்பிக்கை வரவில்லை !
இவர்களாலும் தமிழர்களுக்கோ,
தமிழ் நாட்டிற்கோ எந்த விமோசனமும்
ஏற்படும் என்கிற நம்பிக்கை
வரமாடேன் என்கிறது !

அப்படியானால் ?

வேண்டாமே.
இவர்கள் யாரிடத்திலும் ஆட்சியை
ஒப்படைக்கும் நிலை வேண்டாமே.

கொஞ்ச நாள் நமது சட்டமன்றம்
தொங்கட்டுமே .. யாருக்கும்
அதிகாரம் இல்லாமல் !

போகட்டும் …
இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் ..
மீண்டும் ஒரு தேர்தல் வரட்டும் ..
நல்லவர்கள் வரும்போது பார்க்கலாம்.

எனவே – இப்போதைக்கு
யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை
ஏற்படவே –
எங்கள் குடும்பம் பாடுபடும்.
சரி தானே ?

ஏன் இங்கும் ஒரு பீகார் வரட்டுமே –
காலம் இங்கும்  ஒரு நிதிஷ்குமாரை
உருவாக்காதா என்ன ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அப்பாவி மீனவர்கள், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சாட்டையடி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to இந்த தேர்தலில் ……

 1. ஸ்ரீநிவாசன் சொல்கிறார்:

  அப்படியானால் உங்கள் அனைவரின் ஓட்டும் 49ஓ க்கு தான். சரிதானே. ஓட்டு போட செல்லாம்ல் இருக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  வருக நண்பர் சீனிவாசன்,

  ஓட்டு நிச்சயம் போட வேண்டும்.

  அதே சமயம் யாருக்கும் பெரும்பான்மை
  கிடைக்காமலும் இருக்க வேண்டும்.

  என்ன செய்யலாம் –
  நீங்கள் தான் சொல்லுங்களேன் பார்க்கலாம் !

  -வாழ்த்துக்களுடன்
  காவிரிமைந்தன்

  பி.கு. – நண்பர் கண்பத் எதாவது யோசனை
  வைத்திருப்பார். சொல்லுவார் -பார்ப்போம் !

 3. Ganpat சொல்கிறார்:

  அன்புள்ள கா.மை.
  எனக்கு நீங்கள் அன்பின்பால் கொடுத்துள்ள கெளரவத்திற்கு நன்றிகள் கோடி
  தமிழக மக்களை எதிர்நோக்கும் மிகக்கடினமான கேள்வி அது.
  தீச்சட்டியா,தீயா என்பது போன்ற விருப்பத்தேர்வு அது.
  எனவே தர்க்கரீதியாக இதற்க்கு தீர்வு இருக்கிறதா என பார்ப்போம்.

  அதற்கு முன் சில உண்மைகள்.

  1.தி மு க அ தி மு க இரண்டும் தீய சக்திகள்;அழிக்கப்படவேண்டியவை

  2.இவைகளை ஒரு சேர அழிக்க முடியாது
  ஒவ்வொன்றாகத்தான் அழிக்க இயலும்

  3 தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் (அதாவது 10 ஆண்டுகள்)
  ஒரு கட்சி ஆட்சி செய்தால் இன்னொன்று அழிந்து விடும்
  இந்த அடிப்படையில் இப்பொழுது தி.மு கவை தேர்ந்தெடுத்தல் சரியானது

  ஆனால் கடந்த 5 ஆண்டுகளில், தி மு க வரலாறு காணாத ஊழல புரிந்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாகொள்ளை அடித்துள்ளது.எனவே மீண்டும் அதற்கு வாய்ப்பு அளிப்பது தறகொலைக்கொப்பான செயல்.

  மேலும் தி மு க ;அ தி மு க ,விஷம் என்றால், சோனியா காங்கிரஸ் ஆலகால விஷம் .நாம் சரித்திர ஏடுகளை புரட்டிப்ப்பார்த்தால்,தமிழகத்தில் ஊழலும் கொள்ளையும் மிக அதிகமாக இருந்த கால கட்டங்கள் தி மு க, இந்திரா காங்கிரஸ் மற்றும் தி.மு.க ,சோனியா காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்த போதுதான்.(1971-77),(2006-11)

  எனவே மீண்டும் தி மு க ஆட்சிக்கு வந்தால் 2014 வரை கொள்ளையோ கொள்ளை தான்.

  மேலும் ,

  பிறந்ததிலிருந்து பொய் சொல்லிக்கொண்டு,

  கபடமே உருவாக வாழ்ந்துகொண்டு,

  பொது பணத்தை எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் கொள்ளை அடித்து தன் குடும்பத்தினருக்கு கொடுத்துக்கொண்டு,

  நம் நாட்டின் கலாச்சாரத்தை சீரழித்துக்கொண்டு,

  போலி நாத்திகம் பேசிக்கொண்டு,

  ஜாதிதுவேஷத்தை மக்களிடையே வளர்த்துக்கொண்டு,

  87 வயதில் இருப்பவர் ஒருவருக்கு,

  இறைவன் கொடுக்ககூடிய குறைந்த பட்ச தண்டனை
  மரணம் என்றால்,

  மனிதர்களாகிய நாம் கொடுக்க கூடிய
  அதிக பட்ச தண்டனை….

  அவரை பகிஷ்கரித்தல்

  ஜெயாவிடம் நமக்கு சாதகமாக உள்ள ஒரு “நல்ல” குணம்..

  அவரின் அகம்பாவம்
  (எவருடனும் தொடர்ந்து நட்பு பாராட்ட முடியாத அவர் தனிக்குணம்).

  எனவே இவர் கூட்டு கொள்ளையில் ஈடுபடவே முடியாது;
  தனிக்கொள்ளையில் எவராலும், கூட்டு கொள்ளை அளவிற்கு திருட முடியாது!

  உதாரணத்திற்கு சொன்னால் மு.க ஒரு வீட்டில் கொள்ளை அடிக்க திட்டமிட்டால்,
  முதலில்
  அந்த வீட்டு காவல்காரன்,
  வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளி மாமா,
  உள்ளூர் போலீஸ்
  எல்லாரிடமும்
  நண்பராகி விட்டு,
  நடுப்பகலில் தான்,
  தன்தொழிலையே தொடங்குவார்.

  அதே சமயம் ஜெயா இதையே செய்தால்,
  அவர் எந்த முஸ்தீபும் இன்றி,
  நள்ளிரவில் அனைவரும் தூங்கிகொண்டிருக்கும் வேளையில், தன் கூட்டாளிகளுடன் அந்த வீட்டில் நுழைந்து,
  திருடுவதற்கு முன்,
  கூட்டாளிகளுடன் கூச்சலிட்டு,
  பெரும் சண்டைவேறு போடுவார்!
  எனவே சொத்து பத்திரமாக இருக்கும்

  Anyway, to cut a long story short,

  நம் ஜனநாயகம்,
  நாட்டின் வளர்ச்சி,
  ஒற்றுமை,
  தேசப்பற்று,
  நேர்மை,
  பண்பாடு
  என்கிற அமிர்தத்தை பத்திரமாக பாதுகாக்க
  தி.மு க எனும் குடத்தில் வைத்தோம்.
  ஆனால் அந்த குடத்தில் பெரிய ஓட்டை இருப்பதும்,அதன வழியே அமிர்தமானது ஒழுகி வீணாவதும் கண்டு பதறி துடிக்கிறோம்.இப்படியே விட்டு விட்டால் அத்தனை அமிர்தமும் கொட்டி வீணாகி விடும்.

  அங்கும், இங்கும் பார்க்கிறோம்

  பல குவளைகள்
  பலதேக்கரண்டிகள்
  அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன

  ஊகூம்

  இதெல்லாம் சரிபடாது

  நமக்கு தேவை ஒரு பெரிய குடம்

  ஆஹா அதோ அங்கு இருக்கிறது நாம் தேடும் அளவிற்கு இன்னொரு பெரிய குடம்

  பெயர் அ.தி.மு.க என்று பொறிக்கப்பட்டுள்ளது .

  அதை ஆவலுடன் எடுக்கிறோம்

  அடா டா டா

  அதிலும் ஒரு ஓட்டை உள்ளது.
  மனம் ஓடிகிறது.
  இருங்கள் இருங்கள்
  இந்த ஓட்டை, தி மு க, குட ஓட்டையை விட,
  மிக சிறிதாக இருக்கிறதே!!
  நல்லது !!!
  இப்போதைக்கு அமிர்தத்தை இந்த குடத்திற்கு மாற்றி,
  பெரிய இழப்பை தவிர்ப்போம்.
  பிறகு சிறிய ஓட்டை உள்ள இந்த குடத்திலிருந்து,
  ஒரு துளையற்ற நல்ல பாத்திரத்திற்கு நம் பொக்கிஷத்தை மாற்றுவோம்

  முடிவாக

  நம் பொன்னான ஒட்டை
  பெரிய ஓட்டைக்கு இடாமல்
  சிறிய ஓட்டைக்கு இடுவோம்.

  வாழ்க தமிழகம்

  ஜெய் ஹிந்த்

 4. VG சொல்கிறார்:

  Nalla karuthu Ganpat avargale…

 5. Prakash சொல்கிறார்:

  From http://avetrivel.blogspot.com/2011/04/blog-post_12.html

  by வெற்றிவேல் – Part 1

  மூன்று முக்கியமான குற்றச்சாடு திமுக அரசு மீது..

  இலவசம், ஊழல், குடும்ப ஆதிக்கம்..

  என் கூடப்பிறந்த தம்பியும் அவன் மனைவியும் சிவகங்கை பக்கத்தில் ஒரு கிராமத்தில் 24 மணி நேர மருத்துவமனை நட்த்துகிறார்கள். 2006 வரை அங்கு நாள் தோறும் நடத்தப்பட்ட பிரசவங்கள் குறைந்த்து 10 முதல் 15.. இன்று ஒன்று கூட இல்லை.. அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் பிரசவம் பார்க்கிறார்கள்.இங்கு கவனிக்க வேண்டியது என் தம்பியின் ஒரு நாள் வருமான இழப்பல்ல.. அந்தக் கிராமத்தின் ஆரம்ப சுகாதார நிலையம் இத்தனை பிரசவஙக்ளை பார்க்கும் வண்ணம் மேம்படுத்தப்பட்டுள்ளது..

  என் சொந்த ஊரில் பெயர் பெற்ற மெட்ரிகுலேஷ்ன் பள்ளி தன் தர வரிசையில் இருந்து இறங்கிவிட்டது..காரணம் முக்கியமான திறமையான ஆசிரியர்கள் எல்லோரும் எந்தவித கையூட்டும் கொடுக்காமல் அரசுப் பள்ளிகளில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்கள்.இதுவரை மெட்ரிக் பள்ளிகளில் தொகுப்பூதியம் பெற்றவர்கள் முறைப்படியான ஊதியம் பெறுகிறார்கள்.
  நுழைவுத் தேர்வு ரத்தானாதால் மட்டும் கிராமப்புற இளைஞர்கள் 54000 பேர் பொறியியல் கல்லூரியில் நுழைந்துள்ளார்கள்.

  பள்ளிகல்வித் துறையில் மகத்தான சாதனை இந்த 5 வருட்த்தில் நடைபெற்றுள்ளது.. நிகழ்காலத்தில் மட்டுமே குடியிருக்கும் நண்பர்களால் இந்தச் சாதனையை அங்கீகரிக்க முடியாது .ஏனென்றால் இதன் பலன் இன்று தெரியாது என்பது தான்

  இதுமாதிரி என்னால் ஆயிரம் உதாரணங்களை சொல்ல முடியும்..

  அடுத்து ஊழல்..

  ஊழல் என்பது இந்தியாவின், தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட்து என்பது வேதனைதான்..ஆனால் உங்களால் ஜெ.அரசு ஊழலற்ற அரசாக இருக்கும் என்று உத்தரவாதம் மனசாட்சியுடன் கொடுக்க முடியுமா? அளவுகளில் வித்தியாசப்படலாம்.. ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி அமையுமா ஜெ.அரசால்? டான்சி ஊழலில் போட்ட கையெழுத்து தன்னுடையது அல்ல என்று சொல்லக்கூடியவர். கொள்ளையைடிக்க என்றே இல்லாத ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொண்டவரிடம் எப்படி ஊழலற்ற நிர்வாகம் நடக்கும் என எதிர்பார்க்கலாம்? தொகுதிப் பங்கீடே வெளிப்படையாக நடைபெறவில்லை.. போயஸ் தோட்டத்தில் தனி நபராக முடிவெடுத்து, இத்தனை இடங்கள் உனக்கு என்று எழுதி தோட்டத்திற்கு வெளியில் போட்டு அதை எடுத்துக் கொண்டு பிரச்சாரத்திற்கு கிளம்பியவ்ர்கள் தான் நம் தோழர்கள். அதிகமாக தமிழ் தமிழ் என்று பேசியதால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போனவர்தான் வைகோ.

  தென்னிந்தியாவிலேயே பெரிய பணக்காரக் குடும்பம் கலைஞருடையது என்றும் ஒரு குற்றச்சாட்டு.. சன் தொலைக்காட்சி ஆரம்பித்தது , அது தென்னிந்தியாவில் முதல்தர தொலைக்காட்சி நிறுவனமாக உருவெடுத்த்து எல்லாம் கலைஞர் ஆட்சிக் கட்டிலில் இல்லாத 1992- 96 வரை. அதன் பின் அதன் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்பட்டால் அதற்கு என்ன செய்ய முடியும்? அதே சமயம் ஆரம்பித்த ஜே.ஜே தொலைக்காட்சி திறம்பட செயல்பட்டு இருந்தால் அதுவும் தான் இந்நேரம் பெரிய நிறுவனமாக உருவெடுத்து இருக்கும்.. பெரிய தொழில் முதலைகளாக டாடாவையும் பிர்லாவையும் பின்னால் உருவாகிய அம்பானியையும் பார்த்த கண்ணுக்கு திருவாரூர் குடும்பம் பெரிய அளவில் கண்ணை உறுத்துவதற்கு என்னசெய்ய முடியும்?

 6. Prakash சொல்கிறார்:

  From http://avetrivel.blogspot.com/2011/04/blog-post_12.html

  by வெற்றிவேல் – Part 2

  இதுவரை எத்தனையோ நாடாளுமன்ற உறுப்பினர்களை மதுரை டெல்லிக்கு அனுப்பியுள்ளது.. ஆனால் அழகிரியால்தான் மதுரையைச் சுற்றி சில தொழில் நிறுவனங்கள் வரத் தொடங்கியுள்ளன. பன்னாட்டு விமான நிலையமாக மதுரை மாற வேண்டுமென்றால் , தொடங்கியுள்ள பிளாஸ்டிக் ஆராய்ச்சி நிலையம், ஐ.டி பார்க் நன்கு செயல் பட வேண்டுமென்றால் நான் அழகிரியை ஆதரிக்கத் தான் செய்வேன்.மூடி இருந்த ஸ்பிக் மறுபடி இயங்க ஆரம்பித்துள்ளது அழகிரியால் தான்..

  இணைய எழுத்தாளர்களின், ஊடகங்களின் திமுகவின் எதிர்மறைப் பிரச்சாரம் தங்கள் சிந்தனையை தடுமாற வைத்துள்ளது.இல்லை என்றால் சேது சமுத்திர திட்டம் நின்றதற்கு திமுகவை குறை கூறலாமா. ராமர் பாலம் என்று குறைகூறி அவர்கள் கும்பல் தானே நீதிமன்றம் படியேறி தடைவாங்கியவர்கள்.

  மதுரையைச் சுற்றியுள்ள கிரானைட் மலைகளை வெட்டி எடுப்பவர் அதிமுக தலமைக்குத் தான் மிகவும் நெருக்கமானவர்

  நியாயமான தமிழ் உணர்வைக்கூட ஏதோ தேசத்துரோகமாகப் பார்க்கும் சோ, ஜெ. கும்பலுக்கு ஆதரவாக தமிழ் உணர்வாளர்கள் வாக்கு கேட்டு வருவது ஆச்சர்யமாக இருக்கிறது தேர்தலுக்கு முன்னரே வைகோவை வெளியேற்றி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஜெ.வை எப்படி இவர்கள் ஆதரிக்கிறார்கள். போன ஜெ.ஆட்சியில் வைகோ.நெடுமாறன்,சுப.வீ போன்றவ்ர்களுக்கு நேர்ந்த்து தான் இவர்களுக்கும் என்பது கூடவா இவர்கள் அரசியல் அறிவுக்கு எட்டவில்லை.. பிரபாகரனை பிடித்து வந்து ஒப்படைக்க வேண்டும்,போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று சொன்னவர் ஜெ. ஆரம்பத்தில் திமுக காங்கிரஸை கழட்டிவிட்த் தயாரான சமயம் , திமுகவிற்குப் பதிலாக காங்கிரஸ் கோட்டையில் நுழையத் தயாரானவர் தான் ஜெ. மற்றவர்,மிகுந்த ராஜதந்திரமாக நினைத்துக் கொண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தன்னோடு கூட்டு சேர்வார்கள் என்ற நம்பிக்கையில் காங்கிரஸை பற்றி ஒரு கேள்வி கேட்காதவர் தான் கருப்பு எம்ஜிஆர் குடிகாரக் குப்பன் அண்ணன் விஜயகாந்த். இவர்களுக்கு தமிழ் ஆதரவாளர்கள் ஆதரவு.. நான் எப்படி ஆதரிக்க முடியும்?

  சுருக்கமாக ஒன்று

  ஊழல்+ அதிகார போதை தரும அடாவடித்தனம் + நியாயமான கோரிக்கைக்கு கூட செவி சாய்க்காத சண்டைக்கோழி ஒரு பக்கம்

  ஊழல் +அதிகாரம்+ வளர்ச்சித் திட்டங்கள் + மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் இது ஒரு புறம்
  இந்த இரண்டில் தாங்கள் எதைத் தெரிந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்பதை யோசியுங்கள்..

  நின்று போன பெரம்பூர் மேம்பாலமே 5 வருடங்களாக கட்டி முடிக்கப்படாமல் திமுக ஆட்சி மறுபடி வந்து தான் அதனை முடித்தார்கள்.

  இதுவரை நடைபெற்றுள்ள வளர்ச்சித் திட்டங்கள் மக்கள் நலத்திட்டங்கள் தொடர திமுக விற்கு வாக்களியுங்கள்

 7. thiru சொல்கிறார்:

  Dear Vetrivel!

  The Perambur Overbridge you mentioned was started in the earlier DMK regime, the so called “Stalin Planned overbridges”. Why it was not completed during that time. The real reason is they did not give much importance to North Chennai, during that regime. They completed all the South Chennai and Central Chennai bridges. How can you claim that as an achievement? It looks like, whatever duty not completed by ADMK and completed by DMK can be an achievement? For that only, people select you and you claim all your normal works as achievement…We have seen enough!!

 8. Kalyan சொல்கிறார்:

  SOOOOOOPERRRRRRRR.

 9. kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களே,

  விவாதம சுவையாகத்தான் இருக்கிறது.
  அடுத்த இடுகைக்கு வாருங்களேன் –
  இது பற்றி மேலும் பேசுவோம்.

  -வாழ்த்துக்களுடன்
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.