கலைஞர் டிவிக்கு 214 கோடி கொடுத்தது – ஒப்பந்தத்தை காணோமாம் !சந்தடி சாக்கில் சிபிஐயால் கோர்ட்டில் தரப்பட்ட தகவல் !!

கலைஞர் டிவிக்கு 214 கோடி கொடுத்தது –
ஒப்பந்தத்தை காணோமாம் !சந்தடி சாக்கில்
சிபிஐயால் கோர்ட்டில் தரப்பட்ட தகவல் !!

வர வர சில செய்திகளை மிகவும் கூர்ந்து
கவனித்தால் தான் புரிந்து கொள்ள முடிகிறது.

ராஜீவ் அகர்வால் என்பவருக்கு ஜாமீன்
கொடுப்பது பற்றி சிபிஐ கோர்ட்டில்
வாதாடும்போது, முக்கியத்துவம்
கொடுக்கப்படாமல், சந்தடி சாக்கில்
சிபிஐ யால் வெளியிடப்பட்ட செய்தி ஒன்று –

திங்கள்கிழமை  (04/04/2011) அன்று,
சிபிஐ, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி
விசாரித்து வரும் நீதிமன்றத்தில் ஒரு
விசித்திரமான தகவலைத் தந்துள்ளது.

டிசம்பர் 19, 2008 அன்று செய்துகொண்டதாகச்
சொல்லப்படும் ஒப்பந்தப்படி, டிபி ரியல்டி
நிறுவனத்திலிருந்து கலைஞர் டிவிக்கு –
டிசம்பர் 2008 க்கும்
ஆகஸ்டு 2009 க்கும்
இடைப்பட்ட காலத்தில் சுமார் 200 கோடி
ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கொடுக்கல் -வாங்கல் நிகழ்ந்தது
சிபிஐ இந்த வழக்கில் FIR –
(முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்த
நாளான அக்டோபர் 21, 2009 தேதிக்கு
முன்னர்.

(அதாவது சிபிஐ 2 ஜி ஸ்பெக்ட்ரம்
விவகாரத்தை தீவிரமாக விசாரிக்க
ஆரம்பித்ததற்கு முன்னர் )

வழக்கு (எப்.ஐ.ஆர்)
பதிவு செய்யப்பட்டு 3 மாதங்களுக்குப் பின்னர்,
அதாவது -ஜனவரி 27,2010 அன்று  தான்,
இந்த பணப்பறிமாற்றத்தை கடனாகக் கருதுவது என்று
மற்றொரு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளப்பட்டதாம் !

பின்னால்(ஜனவரி 27,2010ல்) போடப்பட்டுள்ள
ஒப்பந்தம் கிடைத்துள்ள நிலையில்,
முதலில் போடப்பட்டதாக சொல்லப்படும்
டிசம்பர் 19, 2008 தேதியிட்ட
ஒப்பந்தத்தை காணவில்லையாம் !
அதாவது, 200 கோடி ரூபாய் பரிமாற்றம்
செய்யப்படுவதற்கு முன்னால் போடப்பட்டதாகச்
சொல்லப்படும் ஒப்பந்தம் இன்னும் சிபிஐ
வசம் கிடைக்கவில்லையாம் !

(அப்படி ஒரு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தால்
தானே  கிடைப்பதற்கு என்கிறீர்களா ? –
அது வேறு மாதிரியான ஒப்பந்தமாக -அதாவது,
சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதகமாக
அமையக்கூடியதாக கூட
இருக்கலாம் அல்லவா ? )
பதவியில் இருக்கும் வரையில் –
இந்த ஜெகதலப்பிரதாபன்களைப் பிடிப்பதும்
உள்ளே தள்ளுவதும், அவ்வளவு சுலபமான
காரியமாகத் தெரியவில்லை !

அன்னா ஹஜாரே போராட்டம் எந்த அளவிற்கு
அவசியம் என்பதற்கு இதெல்லாம் உதாரணங்கள் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to கலைஞர் டிவிக்கு 214 கோடி கொடுத்தது – ஒப்பந்தத்தை காணோமாம் !சந்தடி சாக்கில் சிபிஐயால் கோர்ட்டில் தரப்பட்ட தகவல் !!

 1. RAJASEKHAR.P சொல்கிறார்:

  வெடித்தது….
  புரட்சி .!
  ஊழலுக்கு எதிராக..!!
  ஒன்று திரள்வோம் வாரீர்…!!!

  thanks
  rajasekhar.p

 2. Ganpat சொல்கிறார்:

  http://myneta.info/tamilnadu2011/
  தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள்(தொகுதிவாரியாக) இந்த தளத்தில் சீரிய முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.
  இதை முடிந்த அளவு பிரபலப்படுத்தவும்
  நன்றி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.