கலைஞர் சொன்னது பொய் – ரத்தன் டாடா உறுதி செய்தார் !

கலைஞர் சொன்னது பொய் –
ரத்தன் டாடா உறுதி செய்தார் !

பிப்ரவரி 21,2011 அன்று இந்த தளத்தில்
ஒரு இடுகை வெளிவந்தது நினைவிருக்கலாம்.
ஸ்பெக்ட்ரம் ராஜா பற்றி ரத்தன் டாடா
தன் கைப்பட கலைஞருக்கு எழுதிய கடிதம்
பற்றியது. டாடா இந்த கடிதத்தை நீரா ராடியா
மூலம் கலைஞரிடம் நேரிடையாகச் சேர்ப்பித்ததாக
அப்போது  தகவல் வெளிவந்திருந்தது.

பத்திரிகை நிருபர்கள் கலைஞரிடம் இது பற்றி
கேட்டபோது அந்த மாதிரி கடிதம் எதுவும் தனக்கு
வரவில்லை என்று உறுதியாக மறுத்தார்.

(மேற்கொண்டு விவரங்கள் தேவையானால்
இடுகையை பார்க்கவும் )-

https://vimarisanam.wordpress.com/2011/02/21/2%
E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%
9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%
AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%
AF%81-%E0%AE%B0/

நேற்று பாராளுமன்ற பொது கணக்குக் குழு
முன்னர் ஆஜராகி விளக்கம் அளித்த ரத்தன் டாடா
கலைஞருக்கு  ராஜா பற்றி தான் கடிதம் எழுதியது
உண்மை தான் என்றும் ஆனால்  தனக்கு அது
விஷயத்தில் உள்நோக்கம் எதுவும் இருந்ததில்லை
என்றும் கூறி இருக்கிறார்.

இதற்கு முன்னதாக, நேற்றைய தினமே காலையில்
ஆஜரான நீரா ராடியாவும், தான் டாடா கொடுத்த
கடிதத்தை நேரிடையாக கலைஞர் வசம் கொடுத்ததாக
உறுதி செய்திருக்கிறார்.(ஆனால் கடிதம்
ஒட்டப்பட்டிருந்ததால், அதில் என்ன எழுதி இருந்தது
என்பது பற்றி தனக்கு தெரியாது என்றும்
கூறி இருக்கிறார் !)

தனக்கு டாடாவிடமிருந்து கடிதம் எதுவும் வரவில்லை
என்று கலைஞர் மறுத்தது அப்பட்டமான பொய்
என்பது இப்போது உறுதியாகி இருக்கிறது !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to கலைஞர் சொன்னது பொய் – ரத்தன் டாடா உறுதி செய்தார் !

 1. chollukireen சொல்கிறார்:

  கதைகதையாம், காரணமாம், கொடநாடும்,லண்டனுமாம்,

  காரணங்கள் என்னவென்று யாருக்கும் தெரியாதாம்.

 2. RAJASEKHAR.P சொல்கிறார்:

  அண்டபுழு
  ஆகசபுழு ….
  எம்மாம் பெரியமனுசன் ?
  இவர் மீது
  நம்பிக்கை 2 %
  அவநம்பிக்கை 2000 %
  இவரிடம்
  நம்பி கெட்டவர்கள்……
  தமிழ் மக்கள் !

  ஏமாந்த ஏழு கோடியில்
  நானும் ஒருவன்….
  RAJASEKHAR.P

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.