வெளிப்பட்டது – 63 சீட்டுகளின் பின்னணி !

வெளிப்பட்டது – 63 சீட்டுகளின் பின்னணி !

சனிக்கிழமை (02/04/2011) அன்று சிபிஐ –
கோர்ட்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான முதல்
குற்றச்சாட்டை (சார்ஜ் ஷீட்) பதிவு செய்தது.

உலகக் கோப்பை கிரிக்கெட் மும்முரத்தில் இருந்த
மீடியாக்களும், மக்களும் இதைத் தீவிரமாக
கவனிக்காமல் விட்டனர். சம்பந்தப்பட்டவர்கள்
விரும்பியதும் இதைத் தான் !

கோர்ட்டில் – சார்ஜ் ஷீட்டில் சிபிஐ சொன்னதன்
ஒரு பகுதி கீழே –

The chargesheet states: “Dynamix
Realty, a partnership firm of
DB Realty, paid Rs 200 crore to
Kalaignar TV from December 2008
to August 2009, following a
circuitous route through
Kusegaon Fruits & Vegetables
Pvt Ltd (a DB Group company) and
Cineyug Films Pvt Ltd.

But this chain needs to be
consolidated and further evidence
needs to be collected to prove
the allegation.”

சாராம்சம் தமிழில் –

“டிபி ரியல்டியின் ஒரு
பங்குதாரரான டைனமிக்ஸ் ரியல்டி
சுற்றி வளைத்து – குசேகான் ப்ரூட்ஸ் மற்றும்
சினியுக் பிலிம்ஸ் நிறுவனங்கள் மூலமாக –
டிசம்பர் 2008 க்கும் ஆகஸ்டு 2009 க்கும்
இடைப்பட்ட  காலத்தில் –
கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய்
கொடுத்துள்ளது.

ஆனால் இந்த சங்கிலியை உறுதிப்படுத்தவும்,
குற்றச்சாட்டை நிரூபிக்கவும் தேவையான
ஆதாரங்கள்  இனி தான் சேகரிக்கப்பட வேண்டும்”.

மேற்கண்ட செய்தியிலிருந்து நமக்கு என்ன
புரிகிறது ?

1) சத்தியமாக காங்கிரஸ் கட்சிக்கும் – ஏன்
மத்திய அரசுக்கும் -சிபிஐ விசாரணக்கும் எந்தவித
தொடர்பும் இல்லை.

2) சிபிஐ முற்றிலும் சுதந்திரமாகச் செயல்படுகிறது.

3) தமிழ் நாட்டில் நடைபெற விருக்கும் தேர்தலில்
காங்கிரஸ் கட்சி திமுகவிடமிருந்து மிரட்டி
வாங்கியதாகச் சொல்லப்படும் 63 சீட்டுகளுக்கும்
இந்த வழக்குக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

4)கேட்டபடி சீட்டுகள் கிடைத்ததால் வேகம்
குறைக்கப்பட்டது என்பது அபத்தம்.

5)சனிக்கிழமை தொடுத்த குற்றப்பத்திரிகையில்
கலைஞர் டிவி சேர்க்கப்படாததற்கு காரணம்
இன்னும் தகுந்த ஆதாரங்கள் கிடைக்காததே.

6)தகுந்த ஆதாரங்கள் கிடைப்பதைப் பொறுத்து –
மேற்கொண்டு வழக்கு தொடரப்படும்.அதற்கும்
சட்டமன்ற தேர்தல்களுக்கும் எந்தவித சம்பந்தமும்
இல்லை. தேர்தலுக்குப் பின் கூட்டணி அரசு
அமைவதற்கும் இந்த வழக்குக்கும் எந்த வித
சம்பந்தமும் இல்லை.

தப்பு செஞ்சுட்டோம் – மாட்டி விடாதே !
சிபிஐ யே சரணமப்பா !!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, காமெடி, குடும்பம், தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மிரட்டல், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to வெளிப்பட்டது – 63 சீட்டுகளின் பின்னணி !

  1. ஆர்.சண்முகம் சொல்கிறார்:

    இந்தியா தேறுங்களா பாஸ்…

  2. மரத்துப் போன தமிழன் சொல்கிறார்:

    இதுக்குத் தானே மட்டைப் பந்து விளையாட்டை வெறியோடு காதலிக்கும் இந்திய/தமிழக மக்கள் திட்டமிட்டு வளர்க்கப் படுகிறார்கள். இப்போது ஸ்பெக்ட்ரம் என்பதால் அதில் உங்களைப் போன்றோர் கவனம் செலுத்திப் பார்க்கின்றீர்கள். இன்னும் இது போன்ற எத்தனையோ விளையாட்டுக்களில் எத்தனை எத்தனையோ ஊழல்கள்/பட்ஜெட்/நலத் திட்டங்கள்/முக்கியமான திட்ட வரைவுகள்/பொது மக்களது கவனத்தில் சிக்கலானதாகக் கருதப் படும் திட்ட வரைவு மசோதாக்கள் கொண்டு வரப் படும். நிறைய கிரிமினல் வழக்குகள் தள்ளுபடி செய்யப் படும். இதை எல்லாம் செய்வதற்கு இந்தியா மட்டுமல்ல, கிட்டத் தட்ட அனைத்து நாடுகளிலும் ஏதாவது ஒரு நிகழ்வில் வெறியூட்டப் படும். பொதுவில் விளையாட்டாக இருக்கும். இந்தியாவில் இது ரொம்ப ரொம்ப கூடுதல். ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாட்டின் பாதுகாப்புக்குக் குறைபாடு என்னும் போது கூட தன் நலமும், தன் மக்கள் நலமும் கருத்தில் கொள்ளப் படுகிறது என்றால் அவர் தேசத் துரோகி அல்லவா? அவரை எப்படி நடத்த வேண்டும் மக்களும், பிறரும், பிற அரசியல் கட்சிகளும்? ஆனால் அவர்களிடம் இருக்கைப் பிச்சை கேட்டு நிற்கும் இல்லை இல்லை இதைச் சொல்லி மிரட்டும் தேசியக் கட்சி இருக்கும் நாட்டில் வேறென்ன நடக்கும்? இங்கு யாருக்கும் தேசப் பாதுகாப்பைப் பற்றி ஒரு அக்கறையும் கிடையாது, குறிப்பாக அரசியல் வியாதிகளுக்கு. மக்களுக்கு அது குறித்த ஒரு சிந்தனையும் இல்லை. தேசப் பற்று குறித்து கிரிக்கெட்டில் இருக்கும் அளவு இந்த அரசியல் வாதிகள் ஒல்லல் என்று வரும் பொது தீவிரவாதிகளோடும், கொடூர செயல்களை செய்யத் தயங்காழ்த்த கும்பலோடும் கை கோர்த்து நிற்பது மக்களுக்குப் பெரிதாகப் படவில்லை என்றால் என்ன செய்வது? சொல்வது? மற்ற நாடுகளில் அது தேசப் பாதுகாப்பாக இருக்கலாம். தீவிரவாதமாக இருக்கலாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.