ராகுல் காந்தியை இன்னமும் நம்பும் இளைஞர் காங்கிரஸ் நண்பர்களே – எல்லாம் முறைப்படி தான் நடந்துள்ளதாம் !

ராகுல் காந்தியை இன்னமும் நம்பும்
இளைஞர் காங்கிரஸ் நண்பர்களே –
எல்லாம் முறைப்படி தான் நடந்துள்ளதாம் !

தங்கபாலுவால்
ஏற்கெனவே நொந்து போயிருக்கும்
தமிழக இளைஞர் காங்கிரஸ் நண்பர்களை
நான் ஏதும் எழுதி மேலும்
நோகடிக்க விரும்பவில்லை.

குலாம் நபி ஆசாதின் இந்த பேட்டியை
மட்டும் அவர்களுக்கு
சமர்ப்பணம் செய்கிறேன் –

வியாழக்கிழமை, 31, மார்ச் 2011
(10:15 IST)

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு:

எல்லாம் முறைப்படி தான் நடந்துள்ளது –
குலாம்நபி ஆசாத் விளக்கம்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு,
தனது மனைவி,மற்றும் ஆதரவாளர்களுக்கு
தேர்தலில் போட்டியிட வாய்ப்பை கேட்டுப்
பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து

பெங்களூரில் செய்தியாளர்களிடம் விளக்கம்
அளித்துப் பேசிய தமிழக காங்கிரஸ்
மேலிடப் பொறுப்பாளரும், மத்திய சுகாதாரத் துறை

அமைச்சருமான குலாம்நபி ஆசாத்குலாம்நபி ஆசாத்,

தேர்தலில் சீட் ஒதுக்குவதற்கு கே.வீ.தங்கபாலு
ஒருவரை மட்டுமே பொறுப்பாக்க முடியாது.

சீட் ஒதுக்கீடு செய்வதற்கு காங்கிரஸில் முறையான
நடைமுறை உள்ளது. எனவே, தமிழ்நாடு காங்கிரஸ்
தலைவர் கே.வீ.தங்கபாலு மட்டும் வேட்பாளர்களைத்
தேர்வு செய்துவிடவில்லை.

கட்சியின் பல்வேறு நிலைகளில் உள்ள
அமைப்புகள் சேர்ந்து தான் தேர்தலில் சீட் ஒதுக்குவது
பற்றி முடிவெடுக்கின்றன என்று கூறினார்.

————————————

ஈவிகேஎஸ் இளங்கோவனை ஹீரோவாக
நினைத்த இளைஞர் காங்கிரஸ் நண்பர்களுக்கு
கொசுரு(று ?) செய்தியாக இது !

ஈரோடு திமுக பொதுக்கூட்டத்தில் கலைஞர் பேசியது –

“நாளை பத்திரிக்கைகளில் எல்லாம்
இடம்பெறப்போகும் செய்தி இதுதான்.

அதிசயம்! கருணாநிதியும் ஈ.வி.கே.எஸ்.
இளங்கோவனும் ஒரே மேடையில்!!” என்றுதான்
எழுதப்போகிறார்கள்.

இளங்கோவன் இன்று என் பக்கத்தில்
உட்கார்ந்திருக்கிறார்.

ஆனால் நான் பெரியார் குருகுலத்தில் பயின்றபோது
குழந்தைப்பருவத்தில் இருந்த இளங்கோவன்
என் மடியிலேயே தவழ்ந்திருக்கிறார்’’என்று
பேசியபோது,

ஈ.வி.கே.எஸ்.  இளங்கோவன் எழுந்து
முதல்வர் காலைத்தொட்டு வணங்கினார்.

———————————-
நல்ல வேளை இப்போதும் நான் மாறவில்லை
என்று சொல்லி முதல்வரின் மடியில் உட்காராமல்
போனாரே – உயிர் தப்பினார் முதல்வர் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அடுத்த வாரிசு, அப்பாவி மீனவர்கள், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, காமெடி, குடும்பம், கோவணம், சின்ன வயசு, தமிழீழம், தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.