விஜய்காந்த் “மொத்தும்” காட்சியும்… கலைஞரை கதற வைக்கும் “சிரிப்பு”வில்லனும் …

விஜய்காந்த் “மொத்தும்” காட்சியும்…
கலைஞரை கதற வைக்கும் “சிரிப்பு”வில்லனும் …

இந்த 2011, ஏப்ரல் 13ல்  நடக்கவிருக்கும்
தமிழ் நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல்
நிறைய விஷயங்களில் வித்தியாசப்படுகிறது.

யாரும்  முயற்சி செய்யாமலே –
தமிழ் நாட்டு மக்களுக்கு சில உண்மைகளை
தானாகவே தெரியப்படுத்தி இருக்கிறது.

அதில் ஒன்று-
விஜயகாந்த் வேட்பாளரை “மொத்தும்”காட்சி.

தான் பங்கேற்கும் காட்சி பொது மக்கள்
முன்னிலையில் நிகழ்கிறது என்பதையும்,
அது பலரால் வீடியோ படமாகப் பிடிக்கப்படுகிறது
என்பதையும் அறிந்தும் –
சற்றும் நாகரிகம் இல்லாமல் விஜய்காந்த்
வேனுக்குள் இருக்கும் வேட்பாளரை
“மொத்தும்”காட்சி –
கலைஞருக்கும், ஜெயலலிதாவிற்கும் மாற்றாக,
தமிழ் மக்கள் தேடிக்கொண்டிருக்கும்
“மாற்றுத் தலைவர்” நிச்சயமாக இவர் அல்ல
என்பதை உறுதிப்படுத்துகிறது.

இரண்டாவது –

வல்லவனுக்கு வல்லவன்,
கில்லாடிக்கு கில்லாடி,
விடாக்கண்டன் கொடாக்கண்டன் – என்றேல்லாம்
சொல்வார்களே  – அது போல்,
கலைஞருக்கும் – திருமங்கலம் பார்முலாவை
நம்பி இருந்த அவர் கும்பலுக்கும் “தண்ணி”
காட்டக்கூடிய “சிரிப்பு வில்லனாக”
உருவாகி இருக்கிறார் தமிழக தேர்தல்
கமிஷனர் பிரவீண்குமார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த,
இது வரை யாருக்கும் அறிமுகமில்லாத  இவர்-
அதே பீகாரைச் சேர்ந்த லாலு பிரசாத் யாதவ் போல்
சிரித்துக் கொண்டே செயலாற்றுகிறார்.

அவர் பர்சனாலிடியைப் பார்த்தால் நம்பவே
முடியவில்லை. ஆனால் கலைஞரை தூக்கத்தில்
கூட இவர் தொந்திரவு பண்ணுகிறார் !

ஜீப், கார், பஸ், ரெயில், பால் வண்டி,
முட்டை லாரி, பெட்ரொல் டேங்க்,
ஆடு, மாடு, கோழி வாகனங்கள்
என்று எதுவானாலும் சோதனை பண்ணாமல்
விடுவதில்லை !

கலைஞர் அவரை கோர்ட் மூலமாக
மடக்கப் பார்த்தபோது – அதிரவைக்கும்
பதிலை கோர்ட்டில் கூறி இருக்கிறார்.

இது வரை தேர்தல் கமிஷனால் கைப்பற்றப்பட்ட
பணத்தின் மொத்த மதிப்பு 23 கோடியாம்.
இதில் வேடிக்கை என்னவென்றால்,
தகுந்த ஆதாரத்தைக் காட்டி விட்டு பணத்தை
திரும்பப்பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தும்,
இதுவரை யாரும் உரிமை கோரி வரவில்லையாம் !
ஆக – இவரால் அரசாங்கத்திற்கு புதிய வரும்படி
23 கோடி ரூபாய் !

கடைசியாக அவர் கட்டு கட்டாக பணத்தைக்
கைப்பற்றியது போலீஸ் ஜீப்பிலாம் !

இதில் சம்பந்தப்பட்டவர்கள் பெயரை எல்லாம்
சீல் வைத்த கவரில் கோர்ட்டில் கொடுத்திருக்கிறது
தமிழக தேர்தல் கமிஷன்.
இந்த நபர்கள்  மீது விரைவில் கிரிமினல்
நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது வரை
கோர்ட் அதை ரகசியமாகவே வைத்துக்கொள்ள
வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் –
இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் –
மனசாட்சியுள்ள, தைரியமான
அரசாங்க அதிகாரிகள் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அந்நியன், அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, காமெடி, சரித்திர நிகழ்வுகள், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மிரட்டல், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

11 Responses to விஜய்காந்த் “மொத்தும்” காட்சியும்… கலைஞரை கதற வைக்கும் “சிரிப்பு”வில்லனும் …

 1. siva சொல்கிறார்:

  shabaash mr paveen kumaar

 2. வேந்தன் சொல்கிறார்:

  மரியாதையும் வணக்கங்களும் பிரவீன்குமாருக்கு…… மற்ற மட்டமான வைகள் நமது தமிழக தலைவர்களுக்கு…

 3. RAJASEKHAR.P சொல்கிறார்:

  “மொத்தும்” கட்சி எத்தனைதடவை எடிட் செய்யபட்டிருப்பது உங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லையா?

 4. RAJASEKHAR.P சொல்கிறார்:

  தயவு செய்து சாக்கடை அரசியல்வாதியின் கபட நாடக விமர்சனம் போன்று உங்கள் விமர்சனம் அமையவேண்டாம்…தீர விசாரித்து எழுதவும்!

  thanks
  Rajasekhar.p

 5. அரவரசன் சொல்கிறார்:

  “கடைசியாக அவர் கட்டு கட்டாக பணத்தைக்
  கைப்பற்றியது போலீஸ் ஜீப்பிலாம்”அது வேறு யாருமில்லை. மு.க.அழகிரி யோடு வந்த போலிஸ்ஜீப்பில் ரூ.24 கோடியாம்.
  தமிழ்நாடு விளங்கின மாதிரிதான்.

 6. senthil சொல்கிறார்:

  Dear Sir,

  Don’t Critisise for his mistake. Everybody has these kind of problems,like short tempted…
  we too shouted on our relations if they did any mistake on us….this is not a problem and be proud that he react what he is….

  tks…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ராஜசேகர்,
   நண்பர் செந்தில்.

   நீங்கள் விஜய்காந்த் மீது வைத்திருக்கும்
   நம்பிக்கை எனக்குப் புரிகிறது.

   அந்த நம்பிக்கை நிஜமாகக் கூடுமானால்
   எனக்கும் சந்தோஷம் தான்.

   சரி – எதிர்காலத்தில் அவர் எப்படி
   உருவாகிறார் என்று பொறுத்து தான்
   பார்ப்போமே !

   -வாழ்த்துக்களுடன்
   காவிரிமைந்தன்

 7. ராஜடோமர் சொல்கிறார்:

  விஜயகாந்தே ஆமா அடிச்சேன் என்று ஒத்துக் கொண்ட பிறகும் எடிட் செய்யப்பட்டுள்ளது என்று உளறுபவர்களை என்ன செய்வது

 8. RAJASEKHAR.P சொல்கிறார்:

  உளறுபவர்களை என்ன செய்வது-ராஜடோமர்
  நன்றி நண்பரே !

  உங்கள்;-
  அறிவின்மையை உணர்கிறேன்;
  நீங்களே….?!
  இப்படின்னா
  பாமரமக்களை என்னன்னு சொல்றது?
  “தமிழகத்தை
  ஆண்டவனே வந்தாக்கூட கப்பட்டமுடியாது?!”

  thakns
  Rajasekhar.p

 9. இனியவன் சொல்கிறார்:

  இன்னும் ஒரு தெலுங்குக் காரன் (தெலுங்கு நாயக்க விசயகாந்த்) வந்து தான் தமிழனைக் காப்பாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உங்களைப் போன்ற தெலுங்குக் காரனுங்க மட்டும் நம்பிக் கொண்டே இருங்கள். அது போதும். தமிழனை இனியும் ஏமாற்ற வேண்டாம் இது போன்று, பொதுவில் நின்று கருத்து கூறுவதைப் போல. உங்கள் (தமிழர் தவிர்த்த பிற திராவிடம் பேசும் மலையாள, கன்னட, தெலுங்கு போர்வைத் தமிழர்கள்) பொதுத் தன்மை பற்றி தமிழனுக்கு இன்னும் தெளிவு இல்லையென்று நினைத்துக் கொண்டே பகல் கனவு காணாதீர்கள். வாழ்க்கை முழுக்க ஒரு இனம் ஏமாற்றப் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்னும் அறிவிலிகளே. இனி அழிவு உங்களுக்குத் தான். தமிழன் கூடிய சீக்கிரம் தன் மயக்கத்திலிருந்து விழித்தெழுவான். எழுச்சி கொள்வான். ராஜராஜன், ராஜேந்திரச் சோழர்களின் காலம் திரும்ப வரும். வர வைப்போம். அப்பொழுது உங்கள் கொட்டம் அடக்கப் படும்.

 10. JAYAPAL சொல்கிறார்:

  weast

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.