ராகுல் காந்தி பற்றி அமெரிக்கர்களுக்குத்
தெரிந்ததும் – மயிலை இளைஞர்
காங்கிரசுக்கு தெரியாததும் …
ராகுல் காந்தி பொறுப்பு ஏற்றுக்கொண்டதைத்
தொடர்ந்து –
இனி காங்கிரஸ் கட்சி மகத்தான மாறுதல்களை
சந்திக்கும் –
புதிய இளைஞர்களும், மகளிரும்
பொறுப்புக்கு வருவார்கள் –
கட்சி புது வேகத்தில் பயணிக்கப் போகிறது என்று
நம்பிய இளைஞர் காங்கிரஸ் அணியினரும்,
மகளிர் காங்கிரஸ் அணியினரும் –
திருமதி & திரு தங்கபாலுவின்
வித்தியாசமான நாடகங்கள் மைலாப்பூரில்
அரங்கேறியதைக் கண்டார்கள்.
திட்டம் போட்டே திருமதியை –
கையெழுத்து போடாத வேட்பு மனுவை
தாக்கல் செய்யச் செய்த தங்கபாலு
இன்னும் தலைவர் பதவியில் எப்படித்
தொடர்கிறார் என்று இவர்கள் திகைக்கின்றார்கள்.
பாவம் சிறிய வயதினர் !
அவர்களுக்கு கட்சியின் நிஜ அணுகுமுறைகள்
தெரியாது.திகைக்கிறார்கள்.
ராகுல் காந்திக்கு தெரியாதா தங்கபாலுவைப்
பற்றியும், அவரது பின்னணியைப் பற்றியும் ?
அவரது தேவை இங்கே ஒரு எடுபிடி -கைத்தடி.
பிடியாகவும், தடியாகவும் தங்கபாலு இருக்கும்
வரை அவரை மாற்ற வேண்டிய அவசியம்
தலைமைக்கு இல்லை !
தங்கபாலுவே இவ்வளவு அதிர்ச்சி அளித்தால் –
அவர்களது நம்பிக்கை நட்சத்திரமான
ராகுல் காந்தியைப் பற்றிய
நிதரிசனமான மதிப்பீடுகள் தெரிந்தால்- பாவம்
இன்னும் எவ்வளவு அதிர்ச்சிகள் உண்டாகுமோ ?
எங்கோ இருக்கும் அமெரிக்கர்கள்
ராகுல் காந்தியைப் பற்றி என்னவெல்லாம் தெரிந்து
வைத்துக்கொண்டிருக்கிறார்கள் – பாருங்கள் !
கீழே இருக்கும் வாசகங்கள் –அண்மையில்,
விக்கிலீக்கில் ராகுல் காந்தி பற்றி
வெளியாகி இருக்கும் தகவல்கள் !
(இதில் என்னுடைய கருத்தோ,
விமரிசனமோ, எதுவும் இல்லை.
அங்கும் இங்கும் இருந்தவற்றைத்
தொகுத்துக் கொடுத்து இருக்கிறேன் –
அவ்வளவு தான்.)
———————————-
அண்மையில் வெளியான விக்கிலீக்
செய்திகளில் ஒன்று டெல்லியில் உள்ள
அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரி
ஜியாப்ரே ப்யாட் என்பவர் ஏப்ரல் 23, 2007
அன்று தன் தாயகத்திற்கு ராகுல் காந்தியைப்
பற்றி அனுப்பிய ஒரு செய்தி.
இதில், அமெரிக்க தூதரக அதிகாரி – தான்
சோனியா காந்தியின் குடும்பத்திற்கு மிகவும்
நெருக்கமான நசிகேத கபூர் என்பவரிடம்
ராகுல் காந்தியைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததையும்
அதன் மூலம் வெளிப்பட்ட
விஷயங்களையும் விவரிக்கிறார்.
“ராகுல் காந்தி சில சமயங்களில் அசட்டுத்தனமாகப்
பேசுவது உண்மை தான். ஆனால் இதற்கு காரணம்
பல நேரங்களில் ராகுல் காந்தி அவரது
பேச்சு தயாரிப்பாளர் (speech writer) அவருக்கு
எழுதிக் கொடுத்ததை ஏற்க மறுத்து சுயமாகவே
பேசுவது தான் !
ராகுல் காந்தி மிகவும் முரட்டுத்தனமாகவும்,
மூர்க்கமாகவும் (arrogant & rude)
நடந்து கொள்வதோடு, யாருடைய யோசனையையும்
வழிகாட்டுதல்களையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்.
இந்த நிலையில் ராகுல் காந்திக்கு எதிர்காலத்தில்
பிரதமராக வருவதற்கான தகுதியோ – வாய்ப்போ
இருப்பதாகத் தெரியவில்லை.
ஏனெனில் இந்திய அரசில், காங்கிரஸ் கட்சிக்கு
தனி மெஜாரிட்டி இல்லாமல் கூட்டணி ஆட்சி
நடைபெறும் சூழ்நிலையில், ராகுல் காந்தியை
பிரதமராக்க காங்கிரஸ் கட்சி முயற்சித்தால்,
அதனை கூட்டணிக்கட்சிகள் ஏற்க மறுக்கலாம்.
உத்திரப் பிரதேசத்தில் தேர்தல் நேரத்தில்,
தெருவோரக் கூட்டங்களில், ராகுலுக்கு ஓரளவு
நல்ல கூட்டம் கூடினாலும் கூட ஒரு தலைவருக்கு
உண்டான காந்தசக்தியோ, கவர்ந்திழுக்கும்
தன்மையோ அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை”.
அக்டோபர் 11, 2006 -ல் இதே தூதரக அதிகாரி
எழுதுகிறார் –
“நான் காங்கிரஸ் உள்வட்டத்தில் பேசிய வரை
தெரிய வந்தது என்னவென்றால் –
மிகப்பெரிய அளவிற்கு பொதுமக்களிடம்
வரவேற்பைப் பெறா விட்டாலும் கூட,
சிறப்பான அரசியல் அறிவு இல்லாவிட்டாலும் கூட,
திருமதி சோனியா காந்தி, ராகுலை பிரதமர்
ஆக்குவதில் உறுதியாக இருக்கிறார்.
இது உடனே நடக்கக் கூடியதாக இல்லாமல்
இருக்கலாம். அவரை அந்தப் பொறுப்பிற்கு
தயார் செய்வதற்கு இன்னும் கொஞ்சம் காலம்
தேவைப்படலாம்.
ஆனாலும், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் –
இந்த இளைஞரின் தகுதியையும்,
இன்னும் பரிசோதிக்கப்படாத
திறமையையுமே பொறுத்திருக்கிறது”.
அதுசரி நாற்பது வயதாகியும் ராகுலுக்கு திருமணம்
ஆகவில்லையாமே இயற்கை உபாதையை எப்படி
சமாளிக்கிறார். அரசியல்போல் அதற்கும் வழிகாட்ட
ஆளமர்த்தியுள்ளாரோ?
வாழ்க இந்தியா… இதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல இயலவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக இருக்கும் பிஜேபி சரியில்லை. மோதியையும் வர விட மாட்டார்கள். கம்யூனிஸ்ட்கள் எல்லாம் ….. வேண்டாம் என்னால் எதையும் எழுத இயலவில்லை. ஏதாவது ஒரு மாற்றம் வந்தால் தான் இந்தியா உருப்படும். அந்த மாற்றம் சீனா வழியாக வரப்போகிறதோ என்னவோ?
பார்க்க ;http://deviyar-illam.blogspot.com/2010/12/blog-post_05.html
http://vu-point.blogspot.com/2011/02/dr-subramanian-swamy-exposes-sonia-and.html
ராகுல் காதலியின் பெயர் வெரொனிகா
http://mizoramexpress.com/index.php/2010/10/rahul-gandhi-marriage-photos-rahul-gandhi-marriage-rahul-gandhi-girlfriend-rahul-gandhi-marriage-video/
http://satyabhashnam.blogspot.com/2009/01/rahul-gandhi-juvenitta-veronique-kerela.html
ராகுல் சோனிய குடும்பத்தின் மேல் பல குற்றச்சட்டுகள் உள்ளன,
1) ரஷ்ய உளவு நிருவனத்திடம் இருந்து பணம் பெறுவது
2) கள்ள கடத்தல்
3) ராஜிவ் கொலை. என பல..
கல்லூரியில் படித்த பொய் சொன்னது
சு.சுவாமியின் குற்றசாட்டு எதற்கும் சரியான பதில் இல்லை.