பாவம் கலைஞர் கடனாளியாம் ! ஒரு கோடியே ஒரு லட்சம் கடன் இருக்கிறதாம் !!

பாவம் கலைஞர் கடனாளியாம் ! ஒரு கோடியே
ஒரு லட்சம்  கடன் இருக்கிறதாம் !!

வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது
தங்கள் சொத்து விவரங்களையும் அறிவித்து
பிரமாண பத்திரம் (அப்பிடவிட்) தாக்கல்
செய்ய  வேண்டும் என்கிற விதி முறை வந்தது
மக்களுக்கு பலன் அளிக்கிறதோ இல்லையோ –
நல்ல சுவையான காமெடி செய்திகள் நிறைய
கிடைக்க உதவுகிறது !

நம் பத்திரிகைக்காரர்கள் தான் சரிவர பயன்படுத்திக்
கொள்வதில்லை (தேர்தல் தான் வந்து விட்டதே –
இன்னுமா பயம் ? ).

கலைஞர் தாக்கல் செய்த சொத்து விவரங்களில்
இருந்து எவ்வளவு காமெடியான செய்திகள்
எல்லாம் கிடைக்கின்றன பாருங்கள் –

கலைஞரின் சொத்து மதிப்பு -ரூபாய் 4.92 கோடி.
தயாளு அம்மாளின் சொத்து மதிப்பு  -ரூ.17.34 கோடி.
ராஜாத்தி அம்மாளின் சொத்து மதிப்பு -ரூ.18.68 கோடி.

காமெடி-1 –

கலைஞருக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய்
கடன் இருக்கிறதாம்.
இந்த கடன் எப்படி வந்ததாம் தெரியுமா ?

அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள்,
தன் மகள் கனிமொழியிடம் (ஆமாம் மகளிடமே தான்)
ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி
இருந்தாராம். அது இன்று வரை திரும்பக்
கொடுக்கப்படவில்லையாம்.
மனைவி வாங்கி திரும்பக் கொடுக்காததால் –
இந்த கடனுக்கு பாவம்
கலைஞர் தான் பொறுப்பாம். ஆக மொத்தம் –
கலைஞர் – தன் மகள் கனிமொழிக்கு
ஒரு கோடியே ஒரு லட்சம்
கடன் பாக்கியாம் !

காமெடி-2

கலைஞரின் கடந்த ஆண்டின் மொத்த வருமானம் –
37 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்.
தயாளு அம்மாளின் கடந்த ஆண்டின் வருமானம் –
64 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய்.

ஆனால் –
ராஜாத்தி அம்மாளின் கடந்த ஆண்டு  வருமானம் –
ஒரு கோடியே, 67 லட்சத்து, 94 ஆயிரம் ரூபாய்.

அதாவது மாதம் ரூபாய் 14 லட்சம்  ஆமாம் –
மாதம் 14 லட்சம் ரூபாய் சம்பதிக்கிறார் !

காமெடி-3

தயாளு அம்மாள் கலைஞர் தொலைக்காட்சியில்
60 % பங்கு வைத்திருக்கிறார்.
இந்த பங்கின் மதிப்பு  ரூபாய் 6 கோடி என்று
காட்டப்பட்டுள்ளது.
60 % மதிப்பு 6 கோடி என்றால்
கலைஞர் தொலைக்காட்சியின் மொத்த
மதிப்பு (100%) ரூபாய் 10 கோடி என்று ஆகிறது !

இந்த 10 கோடி மதிப்புள்ள கலைஞர் டிவியின்
32 % பங்குகளை (ஷேர்) வாங்கத்தான்
DB realty  பால்வா 214 கோடி
முன்தொகையாகக் கொடுத்தாராம்.

(சிபிஐ விசாரணை துவங்கிய பிறகு)
அது விலை கட்டுப்படியாகாது என்று இவர்கள்
சொல்லி  வாங்கிய தொகையை கடனாகக் கருதி
வட்டியுடன் (32 கோடி ரூபாய் !)
திரும்பக் கொடுத்து விட்டார்களாம் !

ஆனாலும் இந்த தேர்தல் கமிஷன் அநியாயத்துக்கு
வதைக்கிறது. அதான் கலைஞர் கடுப்பாகி
அறிக்கைகள் விடுகிறார்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சி, காமெடி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, பொருளாதாரம், ராஜாத்தி அம்மையார், வருமான வரி, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.