தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் + அதிமுக கூட்டணி ஆட்சி – சுப்ரமணியன் சுவாமி சொல்வது சரியா ? நடக்குமா ?

தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் + அதிமுக
கூட்டணி ஆட்சி – சுப்ரமணியன் சுவாமி
சொல்வது சரியா ? நடக்குமா ?

டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் லேட்டஸ்ட்
பேட்டியில் இருந்து கொஞ்சம் –

“வைகோ இருந்தால் தேர்தலுக்குப் பிறகு
காங்கிரசுடன் கூட்டணி சேர முடியாதே ?
அதனால் தான் கழட்டி விட்டார். கண்டிப்பாக
தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு புதிய கூட்டணி
ஏற்படப் போகிறது…..

ஜெயலலிதாவோ, கருணாநிதியோ முதல்வர்
பதவியில் அமர மாட்டார்கள். முதல்வர்
பதவியில் அமரப்போவது காங்கிரஸ் !
ஜெயலலிதா ராஜ்ய சபா உறுப்பினராக டெல்லிக்கு
போவார். இங்கே சசிகலாவின் திரை மறைவு
அரசியல் தொடரும் ..”

டாக்டர் சுவாமிக்கு எக்கச்சக்கமான தொடர்புகள்
இருக்கின்றன. அதனால் அவருக்கு நிறைய
செய்திகள் கிடைக்கின்றன. இவை உண்மையே !

டாக்டர் சுவாமி பல சமயங்களில் நம்ப முடியாத
விஷயங்களை கூறுகிறார். ஆனால் அவற்றில்
சில உண்மையாகவே  நடக்கின்றன.

அதே மாதிரி சில சமயம் உண்மைச் செய்திகளுக்கு
இடையிலேயே  பிரமாதமான கற்பனைகளையும்
கலந்து விட்டு விடுகிறார்.

அதனால் தான் அவரது பேச்சு நம்பகத்தன்மை
இல்லாததாக ஆகி விடுகிறது.

நான் சொல்ல வருவது –

1) தேர்தலுக்குப் பின் காங்கிரசுடன் கூட்டணி
அரசு அமைப்பதற்காக – இப்போதே வைகோவை
கழட்டி விட வேண்டிய அவசியம் இல்லை.
வைகோ இருந்தால் அதிக இடங்களில் வெற்றி
பெற வாய்ப்பு உண்டு என்பதாலும் –

தேர்தலில் ஜெயித்த பிறகு ஜெயலலிதா யாருடன்
கூட்டு அமைத்தாலும் அதைத் தடுக்கக்
கூடிய நிலையில் வைகோ இருக்க மாட்டார்
என்பதும் தான் உண்மை.

எனவே தேர்தலுக்குப்பின்  காங்கிரசுடன் கூட்டணி
அரசு அமைக்க வேண்டும் என்பதற்காக இப்போதே
வைகோ வெளியேற்றப்பட்டார் என்பது சரியாக
இருக்க முடியாது.

அதைவிட வேறு பெரிய காரணங்கள்
இருக்க வேண்டும்-

அது ஸ்டெர்லைட்டா,
விஜய் மல்லய்யாவா,
ராஜ பக்சேயா
இல்லை வேறு  எதாவதா ….
என்பது போகப்போகத்தான் தெரியும் !

2) அதிமுக வுக்கு தனிப் பெரும்பான்மை வெற்றி
கிடைக்கவில்லை என்றால், அடுத்த சாய்ஸாக –
காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கவே
ஜெயலலிதா விரும்புவார் என்பது உண்மையே.

ஆனால் – இந்த தேர்தலில் காங்கிரசை
தமிழ் நாட்டில் பூண்டோடு ஒழித்துக் கட்டுவது
என்று உறுதி எடுத்துக்கொண்டு
வெறியோடு உழைக்கவிருக்கிறார்கள் பலர் –

மதிமுக தொண்டர்கள் –
சீமானின் நாம் தமிழர் கட்சி இளைஞர்கள்-
கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள்
திமுக விலேயே விஷயம் தெரிந்த தொண்டர்கள்-
(மறைமுகமாக சில  தலைவர்களும்  கூட)

வெளியில் தெரியாமல் விடுதலைச் சிறுத்தைகள்-
தமிழ் உணர்வாளர்கள்  அனைவரும் –
எந்த கட்சியையும் சாராத – படித்த,
நாட்டு நடப்பை உணர்ந்த நடுத்தர மக்கள்.

எனவே இத்தனை பேரையும் தாண்டி
எத்தனை காங்கிரஸ் எம் எல் ஏக்கள் வந்து
விட முடியும் ? அநேகமாக அது ஒற்றைப்படை
இலக்கமாகவே  அமையலாம் !

எனவே காங்கிரஸ் + அதிமுக கூட்டணி அரசு
என்பது அதிமுகவில் சிலரது ஆசையாக
இருந்தாலும் – நிஜத்தில் நடக்க இயலாத ஒன்று !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அதிமுக, அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, கருணாநிதி, ஜெயலலிதா, தமிழீழம், தமிழ், திமுக, தேர்தல், பொது, பொதுவானவை, வைகோ, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் + அதிமுக கூட்டணி ஆட்சி – சுப்ரமணியன் சுவாமி சொல்வது சரியா ? நடக்குமா ?

 1. Ganpat சொல்கிறார்:

  >இந்த தேர்தலில் பணம் விளயாடப்போகிறது.
  >சராசரி ஓட்டுப்பதிவு 85% இருக்கும்.
  >பாமர மக்களுக்கு தி.மு.க மீது எந்த வருத்தமும் இருப்பதாக தெரியவில்லை.
  >அதே போல ஜெயாவின் ஆணவப்போக்கில் மாற்றம் எதுவும் இல்லாததால் மக்களுக்கு அவர் மீது புதிதாக அபிமானம் வந்ததாகவும் தோன்றவில்லை.
  >விஜயகாந்த் 2006-11 இல் விருத்தாசலம் தொகுதிக்கு எதுவும் விசேஷமாக செய்ததாக தெரியவில்லை எனவே அவரும் ஒரு
  non-entity
  >தென் மாவட்டங்களில் அழகிரியின் அடாவடித்தனம் வழக்கத்தை விட அதிகம் காணப்படும்.
  >ம.தி.மு க தொண்டர்கள் அ.தி.மு.க தோல்விக்கு உழைப்பார்கள்.
  >இலங்கை தமிழர் பிரச்சினை ஒரு மாயை .அது தேர்தலில் எடுபடாது.
  ஆகவே
  >தி.மு.க கூட்டணி ஜாம் ஜாம் என்று மீண்டும் ஆட்சியில்அமரும் வாய்ப்பு மிக மிக அதிகம்.
  இவ்வாறு நிகழும் பட்சத்தில்,மு.க வாழும் வரை ஜெயா தலை அரசியலில் தலை தூக்க முடியாது.
  இதுதான் நிதர்சனம் (நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்)

 2. Aaryan66 சொல்கிறார்:

  119 தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிடுகிறது, காங்கிரஸ் வேட்பாளர்களை திமுக வினர் தோற்க்கடிக்க முற்பட்டால், தன் தலையிலேயே மண்

 3. yatrigan சொல்கிறார்:

  இந்த தேர்தலில் திமுக கூட்டணி தோற்க
  வேண்டும். அநேகமாக அது நடக்கும்.

  ஜெயலலிதாவிற்கு தனிப் பெரும்பான்மை
  கிடைக்கக் கூடாது.
  அதை தமிழ் மக்கள் உறுதி செய்ய வேண்டும்.

  விஜயகாந்தை சேர்த்துக்கொண்டால் தான்
  ஆட்சி அமைக்க முடியும் என்கிற நிலை
  வர வேண்டும்.
  அது இரண்டு பேருக்குமே ஒத்து வராது.

  மத்தியில் இருக்கும் சோனியா காங்கிரஸ்
  அரசு விரைவில் கவிழும் !

  ஆக மொத்தம் கூடிய விரைவில் மீண்டும்
  ஒரு தேர்தல் – மாநிலத்திற்கும்,
  பாராளுமன்றத்திற்கும் சேர்த்து வர வேண்டும்.

  மத்தியில் பிஜெபி கூட்டணி அரசு
  அமைய வேண்டும்.
  அந்த கூட்டணியில் தமிழகத்தில்
  வைகோ தலைமையில் ஒரு கூட்டணி
  இணைய வேண்டும்.

  ராஜபக்சே கொட்டம் அடக்கப்பட வேண்டும்.
  அவன் international court of justice
  முன் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.
  அதற்கு பிஜெபி அரசு முனையும் !

  இதெல்லாம் நடக்கும் என்று நம்பி –
  கொஞ்ச நாட்கள் –
  அதிலாவது மகிழ்வு கொள்வோமே !

 4. Ganpat சொல்கிறார்:

  yatrigan மகிழ…
  போட்டி நிலவரம்:

  vs dmk cong pmk vck
  admk 84 38 21 8 151
  ddmk 38 15 6 2 61
  cpi 7 3 10
  cpim 4 3 2 1 10
  133 59 29 11 232

  மக்கள் தி.மு.க,அ தி மு கவை அறவே ஒதுக்கி மற்ற கட்சிகளை தேர்ந்தெடுப்பர்.அவை:
  bjp 84
  ddmk 61
  cong 38
  pmk 21
  cpi 10
  cpim 10
  vck 8
  T 232

  BJP & DDMK would ally and form the Govt.

 5. ARUNA.T சொல்கிறார்:

  A.D.M.K party all success full Team.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.