இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா !

இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ?
நினைத்தால் மாற்ற முடியாதா !

ஆனந்த விகடன் வார இதழ் –
சமுதாயத்தில் அக்கரையுள்ள, வித்தியாசமான
சில முக்கிய மனிதர்களைச் சந்தித்து தமிழக
தேர்தலைப் பற்றியும், பிரதான முதலமைச்சர்
வேட்பாளர்களான  கருணாநிதி, ஜெயலலிதா
ஆகியோரைப்பற்றியும், அவர்களின் கருத்துக்களைக்
கேட்டுள்ளது.

அவற்றிலிருந்து  தொகுக்கப்பட்ட
கருத்துக்களின்  சாரம் –

மனித உரிமகள் மீறல் குறித்து எவிடென்ஸ் கதிர் –

கருணாநிதி ஆட்சியில் நடந்த என்கவுண்டர்களும்,
உத்தப்புரம் பிரச்சினகளும் சரி,
ஜெயலலிதாவின் ஆட்சியில் நிகழ்ந்த வாச்சாத்தி
கொடுமைகள், சிதம்பரம் பத்மினி பாலியல்
பலாத்காரம் போன்ற நிகழ்ச்சிகளும் சரி –ஒன்றுக்கு
ஒன்று சளைத்தவை அல்ல.

பெண்ணியவாதி  ஓவியா –

மதிப்பெண் போடும் அளவுக்கு உங்கள் பட்டியலில்
உள்ள எந்த தலைவரும் நேர்மையானவர் இல்லை.

தமிழ்த் தேசீயவிடுதலை இயக்கம் தியாகு –

கருணாநிதி, ஜெயலலிதா இவர்களுக்கு மாற்றாக
ஓர் அரசியல் தலைமை உருவாக வேண்டும்.

தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன் –

அருந்ததியர்க்கு இட ஒதுக்கீடு, திருநங்கைகளுக்கு
நல வாரியம் போன்றவை கருணாநிதி ஆட்சியில்
முக்கியமானவை. ஆனால் உத்தப்புரம் போன்ற
பிரச்னைகளில் தலித் மக்களுக்கு உரிய தீர்வுகள்
கிடைக்கவில்லை.

இவர்களைத்தவிர, வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார்,
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி,
சமூக செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ்,எழுத்தாளர்
நாஞ்சில் நாடன், பியுசிஎல் சுரேஷ், எழுத்தாளர்
மனுஷ்யபுத்திரன் ஆகியோரிடமும் கருத்து
கேட்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் இருவரிடமும்
வெளிப்படையாகத் தெரியும் பலவீனங்கள் –

கருணாநிதி –

எந்த ஒரு பிரச்னையையும் ஆறப்போட்டு,
ஊறப்போடுவது –
குடும்ப அரசியல் ஆதிக்கம்,
அதிகார துஷ்பிரயோகம்,
லஞ்ச ஊழல்கள்,
ஸ்பெக்ட்ரம் விவகாரம்,
தொடரும் நதிநீர்ப் பிரச்சினைகள்,
இலங்கைப் பிரச்சினையில் தவறான
அணுகுமுறையால் தமிழ் மக்களின் வேதனைக்கு
காரணமானது

ஜெயலலிதா –

தொண்டர்களிடம் இருந்து அதிகமான
இடைவெளி,
அசட்டுத்துணிச்சலுடன் கூடிய அவசர
நடவடிக்கைகள் –
கடந்தகால ஆட்சிகளும், அரசியல் செயல்பாடுகளும்,
சிறுபான்மையினர் மனதில் அச்சமும்,
அவநம்பிக்கையும் –
வைகோ, தா. பாண்டியன் போன்ற
ஈழ ஆதரவாளர்கள் அணியில் இருந்தாலும்
பொது மக்களுக்கும், தமிழ் இன உணர்வாளர்களுக்கும்
இவர் மீது நம்பிகையின்மை –

மொத்தத்தில் -கரை படியாத கரங்களுக்கு
இரண்டு வேட்பாளர்களுமே 100 க்கு 10 மார்க்
கூட வாங்க மாட்டார்கள்.

—————————————–

என்னக் கேட்டால் –
இவை மேலே கூறியுள்ள  சமூக உணர்வாளர்களின்
கருத்து மட்டுமல்ல –

கட்சி சார்பற்ற எந்த தமிழரின் கருத்தும்
இதுவாகவே  இருக்கும்

எனவே   என் கேள்வி  இது தான் –

இந்த இரண்டு பேரில் ஒருவரைத்தான் நாம்
தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது என்ன விதி ?
இவர்கள் தம்மை நம் மீது திணிப்பதை
நாம் ஏன் அனுமதிக்க வேண்டும் ?

வேறு யாரையாவது மாறுதலாகக்
கொண்டு வர முயற்சித்தால் தான் என்ன ?

முதல் படியாக –
யாருக்கும் – எந்த ஒரு கட்சிக்கும் –
தனிப்பட்ட பெரும்பான்மை கிடைக்காமல்
செய்து விட்டால்  கூட தன்னாலே ஒரு
மாறுதல் வருமென்றே தோன்றுகிறது.

என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே ?
செய்யலாமா ?

(இவர்களால் நாம் பெற்ற  அனுபவம் போதும் –
இதற்கு  மேலும் இழக்கப்போவது ஏதுமில்லை –
மாறுதலுக்கு ஒரு முயற்சி செய்தால் என்ன
புதிதாக  என்ன கஷ்டம் வந்து விடப்போகிறது ?)

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, குடும்பம், சுதந்திரம், ஜெயலலிதா, தமிழீழம், தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மகா கேவலம், ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா !

 1. metro boy சொல்கிறார்:

  நல்ல யோசனை.
  உண்மையில் மூன்றாவது அணி உருவெடுக்காத போது பல ஆண்டுகளாக, குறைந்தது பதினைந்து ஆண்டுகளாக, தமிழ் வாக்காளர்கள் ஒரு வித தயக்கத்துடன் தான் இந்த கழக அல்லது அந்த கழகக் கூட்டணிக்கோ வாக்கு அளித்து வருகிறார்கள்; மாற்று வராதா என உள்ளூர ஒரு ஏக்கம் தொக்கி நின்றுள்ளது.

  ஆனால் ஆளும் கட்சிக்கு எதிர் வாக்கு மிக பலமாக இருந்து மெஜாரிட்டி ஒரு கட்சிக்கே கிடைத்து வந்துள்ளது – போன முறை தவிர: அப்போதும் காங்கிரசுடன் சேர்த்து தி மு கவிற்கு மெஜாரிட்டி ஆகிவிட்டது; காங்கிரசும் அரசின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் எதிர்ப்பு சொல்லாமல், கொஞ்சம் பொது நன்மையைக் கருத்தில் கொண்டு ஊழலைத் தடுப்பது போன்ற எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை; அது நம் கஷ்டகாலம். கலைஞரை அவர் போக்கில் விட்டு விட்டார்கள். அவர்கள் எதிர் கட்சியாகவும் செயல் படவில்லை; ஆளும் கட்சியாகவும் செயல்படவில்லை.
  பாராளுமன்றத் தேர்தலில் சிறிய கட்சிகள் வெல்லவில்லை – ஒன்றில் தொல்திருமா , ஒன்றில் ம தி மு க தவிர; (இடது சாரிக் கட்சிகளை தேசிய கட்சிகள் என்ற விதத்தில் சிறிய கட்சிகள் எனக் கூற முடியாது); எதாவது மாற்றம் வர வேண்டும் என்றால் சிறிய கட்சிகள் ஒழிய வேண்டும்; பா ம க, ம தி மு க, புதிய தமிழகம், சிறுத்தைகள், சரத் குமார் மேசைப் பந்து டீம், கார்த்திக் சோலோ, ம ம க, லீகின் பிற உதிரிகள், இவை இல்லாமல் ஆக வேண்டும். (ஒரு முறையாவது அனைத்து இடங்களிலும் போட்டி இட்டு தமிழகத்தின் பெரிய கட்சியாக எத்தனித்த தே மு தி க வுக்கு இன்னும் ஒரு சான்ஸ் தரலாம்)
  இரு கழகங்கள், இடதுசாரி, பா ஜ க, காங்கிரசு என்று ஆறு கட்சிகள் இருந்தால் கொஞ்சம் மாற்றங்கள் துவங்க ஏதுவாகும்.
  ஒவ்வொரு வேட்பாளரும் தம் தொகுதியில், போட்டியிடும் பெரிய கட்சி வேட்பாளர்களில் நல்ல வேட்பாளருக்கு தம் வாக்கை அளித்தால் இந்த முனைப்பு பலன் அளிக்கலாம்.

 2. metro boy சொல்கிறார்:

  …ஒவ்வொரு vaakkaalarum …

 3. Ganpat சொல்கிறார்:

  இது பற்றி நான் சில நாட்களுக்கு முன் கீழ்கண்ட பின்னூட்டத்தை
  உண்மைத்தமிழன் தளத்தில் இட்டிருந்தேன்:

  யாருக்கு ஓட்டளிப்பது?

  இலக்கு:தி.மு.க மற்றும் அ.தி மு க பிடியிலிருந்து நம் மாநிலத்தை விடுவிப்பது:

  வழிமுறை:

  உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை பொறுத்து,
  உங்கள் முதல் தேர்வு:விஜயகாந்த் கட்சி
  இரண்டாம் தேர்வு:CPI
  மூன்றாம் தேர்வு:CPI(M)
  நான்காம் தேர்வு:வை.கோ கட்சி
  ஐந்தாம் தேர்வு:ராமதாஸ் கட்சி
  ஆறாம் தேர்வு:காங்கிரஸ்
  ஒரு வேளை இரண்டு சனியங்களும் நேருக்கு நேர் போட்டி இட்டால் ,சின்ன சனியனுக்கு ஓட்டுப்போடுங்கள்

 4. RAJASEKHAR.P சொல்கிறார்:

  பூனைக்கு
  மணிகட்டுவது யார்?
  இவர்கள் –
  பிடியிலிருந்து
  தமிழகம்
  மீள்வது எப்போது?
  விடுதலை தாகத்தோடு…..

  அன்புடன்….

  RAJASEKHAR.P

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.