ஒரே நாளில் அகில இந்திய புகழ் பெற்ற கார்த்தி சிதம்பரம் – popular ஆ இல்லை notorious ஆ ?

ஒரே நாளில் அகில இந்திய புகழ் பெற்ற
கார்த்தி சிதம்பரம் –
popular ஆ இல்லை notorious ஆ ?

ஆங்கிலத்தில் புகழுக்கு என்று இரண்டு தனித்தனி
வார்த்தைகள் உண்டு.

நல்ல விதத்தில் புகழ் பெற்றால் – popular
கெட்ட விதத்தில் புகழ் பெற்றால் – notorious !

தமிழில் இதே போல் புகழை எப்படி வித்தியாசப்படுத்தி
சொல்லலாம் ? – யோசியுங்கள் !

இன்று(16/03/2011) இந்து நாளிதழில்
வெளியிடப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் செய்திகளால்
ஒரே நாளில் பெரும் புகழ் பெற்று விட்டார் கார்த்தி !

வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி –
2009ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில்
தன் தந்தை போட்டியிட்ட சிவகங்கை தொகுதியில்
அவர் வெற்றி பெற கார்த்தி சிதம்பரம் மக்களுக்கு
பணம் கொடுத்து வளைத்த விதம் வெளிப்படுத்தப்
பட்டிருக்கிறது.

பணம் கொடுத்ததை ஓரளவு நியாயப்படுத்தவும்
முயன்றிருக்கிறார் தனயன். அரசியலில் வெற்றி
பெற பணம் மட்டும் போதாது என்றும்

ஆனால் –

மதில் மேல் பூனையாக இரண்டுங்கெட்டான்
நிலையில் இருக்கும் மக்களை வளைக்க
பணம் உதவுகிறது.
பணம் கொடுப்பது ஒரு விதத்தில்
உதவியாகத் தான் இருக்கிறது என்றும் தத்துவம்
பேசி இருக்கிறார்.
கிராம மக்களுக்கு கோயிலோ,
திருமண மண்டபங்களோ கட்ட பணம் கொடுப்பதில்
தவறேதும் இல்லையே என்றும் கூறி இருக்கிறார்.

கிராமங்களில் -பள்ளிக்கூடம், மருத்துவமனை,
கோயில், திருமண மண்டபம் போன்ற
பொதுக் காரியங்களுக்கு வசதி
படைத்தவர்கள் பணம் கொடுப்பதில் எந்த தவறும்
இல்லை தான். உண்மையில் அவை வரவேற்கப்பட
வேண்டியவை தான்.

ஆனால் எப்போது ?

தேர்தல் நேரத்தில் மட்டும் இந்த
அக்கரையை காட்டாமல் – சாதாரண காலங்களில்
செய்திருந்தால் பாராட்டலாம்.
தேர்தல் சமயத்தில் ஓட்டுக்களை எதிர்பார்த்து
இவை செய்யப்பட்டிருந்தால் அதை லஞ்சம்
என்று கூறாமல் வேறு எப்படி கூறுவது ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அடுத்த வாரிசு, அமெரிக்கா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சின்ன வயசு, தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஒரே நாளில் அகில இந்திய புகழ் பெற்ற கார்த்தி சிதம்பரம் – popular ஆ இல்லை notorious ஆ ?

 1. வினோத் சொல்கிறார்:

  இப்படியெல்லாம் லஞ்சம்னு சொல்லி கொடுப்பதை தடுப்பது பாவம்….
  ஏதோ தேர்தல் புண்ணியதிலாவது 1.75 லட்சம் கோடியில் கொஞ்சம் மக்களுக்கு கிடைக்குதேனு சந்தோஷ படுங்க..

  ஒண்ணு செய்யுங்க..யார்கிக்க வேண்ண பணம் பொருள் எல்லாம் வங்கிகோங்க.. ஏன்ன அது உங்க பணம், உங்களுக்கு நல திட்டம் மூலம வர வேண்டியது எதோ இப்படியாவது வருது…

  ஆன வக்களிக்கும்போது பணத்துக்கக இல்லமல் யோசித்து நாட்டுகு எது நல்லதோ அந்தபடி செய்யுங்கன்னு சொல்லுங்க…

 2. padmahari சொல்கிறார்:

  //தேர்தல் நேரத்தில் மட்டும் இந்த
  அக்கரையை காட்டாமல் – சாதாரண காலங்களில்
  செய்திருந்தால் பாராட்டலாம்.
  தேர்தல் சமயத்தில் ஓட்டுக்களை எதிர்பார்த்து
  இவை செய்யப்பட்டிருந்தால் அதை லஞ்சம்
  என்று கூறாமல் வேறு எப்படி கூறுவது ?//

  அதானே….?

  (அய்யா என் தளத்துல உங்க மறுமொழி எனக்கு பெரியதோரு ஊக்கமாக இருக்கிறது. அதற்காக தங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். மிக்க நன்றி)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.