பிரனாப் முகர்ஜியா – கரகாட்டக்காரன் செந்திலா ?

பிரனாப் முகர்ஜியா கரகாட்டக்காரன்
செந்திலா ?


பிரனாப் முகர்ஜி கரகாட்டக்காரன் சினிமா
பார்த்திருப்பாரோ ?
வாழைப்பழ ஜோக் இவரிடம் தோற்று விடும்
போலிருக்கிறதே.

மக்கள் என்ன கேட்டாலும் இவர் –
எல்லாரையும் மடையராக்குவது போல்,
“இது தான்  அது” என்று,
தான் சொல்வதையே
சொல்லிக் கொண்டிருக்கிறாரே !

அதி பயங்கர புத்திசாலி பிரனாப் முகர்ஜி.
வக்கீலுக்குப் படித்திருந்தாலும்,
முழு நேர அரசியலில் நுழைந்து,
45ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில்
30 வருடங்களாக எதாவது ஒரு அமைச்சர்
பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பவர்.

சோனியா காந்திக்கு மிக மிக நெருக்கமானவரான
இவர் வேண்டாதவர்களை சாமர்த்தியமாக
பழி தீர்ப்பதிலும்,வேண்டியவர்களை அதை விட
அதி சாமர்த்தியமாக காப்பதிலும் வல்லவர் !

மக்களை இளிச்சவாயர்களாக்கும் அவரது
இரண்டு சமீபத்திய முயற்சிகள் கீழே –

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும்
பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வாருங்கள்
என்று எதிர்க் கட்சிகள் வற்புறுத்திய போது  –
அவர் சொன்ன பதில் –
அதற்கு தற்போதைய சட்டத்தில் இடம்
இல்லை – சம்பந்தப்பட்ட நாடுகளுடன்
ஒப்பந்தம் போட்டுக்கொண்டு இருக்கிறோம்.
விரைவில் ஒப்பந்தங்கள் முடிந்தவுடன்
விவரங்களைப் பெறுவோம்.

இப்போது -எப்படி விஷயத்தையே
திசை திருப்புகிறார்  பாருங்கள் –

வெள்ளிக்கிழமையன்று -பாராளுமன்றத்தில்,
பட்ஜெட் பற்றிய விவாதத்தில் பேசும்போது,
நிதி அமைச்சர் பிரனாப் முகர்ஜி
கூறியவற்றின் சாரம் –

——————–

1)கறுப்பு பண மீட்பை பொறுத்த வரை
பல வேறு கருத்துக்கள் உள்ளன. பாஜக அளித்த
கருத்தின்படி 5000 கோடி டாலரில் இருந்து
14,000 கோடி டாலர் வரை கறுப்பு பணம்
இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த இரு தொகைகளுக்கிடையே உள்ள
வித்தியாசமே  மிக அதிகம்.

2)குளோபல் பைனான்ஸ் இன்டெக்ரிடி
அமைப்பின் தகவலின்படி 1948 முத்ல் 2010 வரை
உள்ள மொத்த கறுப்பு பணம் 46,200 கோடி டாலர்
என்று கூறப்படுகிறது.

3) முதலில் கறுப்பு பணம் எவ்வளவு என்பது
தெளிவாக வேண்டும்.

4)அதற்காக அரசு தரப்பில் (மீண்டும்) ஒரு
குழுவை அமைத்து
உரிய முறையில் விவரங்களை சேகரிக்க
திட்டமிட்டுள்ளேன் !

5)இந்த குழுவின் அறிக்கை எனக்கு கிடைத்தவுடன்
அந்த விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன் !

————————

கறுப்பு பணத்தைக் கொண்டு வாருங்கள் என்றால்-
அதைப்பற்றிய பேச்சையே சுத்தமாக தவிர்த்துவிட்டு

மூன்றாவதாக மீண்டும் ஒரு முறை குழு அமைத்து
தன் பங்கிற்கு
மீண்டும் ஒரு முறை கறுப்புப் பணம்
எவ்வளவு என்று கண்டு பிடித்து
சொல்லப் போகிறேன் என்கிறார்.

சரியான தொகை எவ்வளவு என்பதை இவர் போடும்
குழு மட்டும் எப்படிக் கண்டு பிடிக்கும் ?
அது தெரிந்தால் – அந்த பணத்தையே கொண்டு
வந்து விட முடியாதா ?

இவர்கள் இருக்கும் வரை கறுப்புப் பணம் வராது
என்பது மக்களுக்குப் புரிகிறது.
ஒன்று மாற்றி ஒன்று கமிட்டி போடுவதிலும்,
சட்டம் இயற்றுவதிலுமே  காலம் தள்ளிக் கொண்டு
இருக்கப் போகிறார்கள்.
———————————–

அடுத்ததாக ஒரு முக்கியமான செய்தியை,
போகிற போக்கில்,
அதி சாமர்த்தியமாகச் சொல்லி இருக்கிறார்.

சும்மா சும்மா வெளிநாட்டு கறுப்புப் பணம் என்றே
சொல்லிக்கொண்டு இருக்கிறீர்களே –

கடந்த 24 மாதங்களில் உள்நாட்டிலேயே,
என் கட்டுப்பாட்டில் உள்ள  வருமான வரி
இலாகாவின் ரெய்டுகளின் மூலம்
25,000 கோடி ரூபாய்
கணக்கில் வராத பணத்தை வெளிக்கொண்டு
வந்திருக்கிறோம் தெரியுமா ?

அதில் 7000 கோடி ரூபாயை கூடுதல் வரியாக
வசூலித்திருக்கிறோம் தெரியுமா என்று
கூறி இருக்கிறார்.

பாராளுமன்றத்தில் கூறி இருப்பதால் இது
உண்மையான தகவலாகத் தான் இருக்க வேண்டும்.

பிரனாபுக்கு சில  கேள்விகள் –

இவ்வளவு நாட்களாக இந்த தகவல்
மத்திய அரசாங்கத்தால்
வெளியிடப்படவில்லையே – என்ன காரணம் ?

இவ்வளவு பெரிய  தொகையான 25,000 கோடி
ரூபாயை பதுக்கி வைத்திருந்த பெரிய மனிதர்கள்
யார் யார்  என்கிற விவரத்தை
நீங்கள் பதுக்குவது  ஏன்  ?

சுவிஸ் வங்கியில் உள்ள பெயர்களை
வெளியில்  சொல்லத்தான்
சட்டம் இல்லை என்றீர்கள்!  சரி.

உங்கள் இலாகா ரெய்டில் பிடித்த நபர்களின்
பெயர்களை வெளியிடுவதை  எந்த சட்டம்
தடுக்கிறது ?

யார் யாரிடம், எவ்வளவு எவ்வளவு ரூபாய்
கணக்கில் வராத பணம்
கண்டு பிடிக்கப்பட்டது ?

அவர்களிடம் அதற்கான விளக்கம்
கேட்கப்பட்டதா ?

25,000 கோடியில் 7000 கோடி என்றால்
சாதாரண வரியான 30% கூடத் தேறவில்லையே.

அப்புறம் அவர்களுக்கு அபராதம் ஏதும்
விதிக்கப்படவில்லையா? ஏன் ?


இந்த பெயர்களை வெளியிடாதே என்று
உங்களைத் தடுப்பது  எது ? யார்?
அதையும் “மேடம்” சொல்ல வேண்டுமா ?
இது ஜனநாயக நாடு.
உங்களைப் பதவியில் அமர்த்திய மக்கள்
கேட்கிறார்கள் – விளக்கம் கூறுங்கள்
பிரனாப் முகர்ஜி  அவர்களே !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, காத்தோடு போயாச்சு, சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to பிரனாப் முகர்ஜியா – கரகாட்டக்காரன் செந்திலா ?

 1. Pranavam Ravikumar a.k.a. Kochuravi சொல்கிறார்:

  அருமை! Got to know that even Pranab’s son entered into politics in UP, I guess.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக நண்பர் ரவி,

   இன்றைய இடுகையை பாருங்களேன் !

   -வாழ்த்துக்களுடன்
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.