“பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” ….

“பத்னஞ்ச்  கோடி புட்சுருக்காங்க” ….

இரவு 7 மணி செய்தியில் இரண்டு நிமிடம்
தமிழக தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் வந்தார்.

பிரவீண்குமார் – உத்திரப்பிரதேசமோ,
பீகாரோ – எங்கிருந்து வந்திருந்தாலும்,
அவர் பேசிய தமிழ் இனிமையாகத் தான் இருந்தது.
(தமிழுக்கு அமுதென்று பேர் !)

“இது வரிக்கும் பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க”

தமிழகம் முழுவதும், எல்லைச் சாவடிகளில்
செல்லும் வாகனங்களை நிறுத்தி சோதனை
செய்ததில் இது வரை சுமார் 15 கோடி ரூபாய்
வரை சிக்கி இருப்பதாகவும், அவை வருமான வரி
அதிகாரிகளிடையே ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும்,

உரிமையாளர்கள், தகுந்த காரணங்களையும்,
ஆதாரங்களையும், வருமான வரி இலாகாவிற்கு
காட்டி மீட்டுக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டு –
3 நாட்களுக்குள் 15 கோடி ரூபாய் ரொக்கப்
பணமாக சிக்கி இருப்பது சாதாரண செய்தி அல்ல.
whole sale அளவில் – மிகப்பெரிய அளவில்
பணம் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டு விட்டது என்றும் –

தொகுதிவாரியாக பட்டுவாடாவிற்கு எடுத்துச்
செல்லப்படுவதில்  ஒரு சிறிய பகுதி தான்
பிடிபடுகிறது என்பது தெரிகிறது.

இப்போது உஷாராகி இருப்பார்கள். இனி
பட்டுவாடாவிற்கு புதிய வழிமுறைகள்
கண்டுபிடிக்கப்படும். பால் டேங்க்,
எண்ணை டேங்க்  எல்லாம் கூட இதற்கெல்லாம்
பயன்படும்.

தேர்தலின் போது பயன்படுத்தப்படுவதற்காக
பதுக்கப்பட்டு  இருக்கும் முழு பணத்தையும்
வெளிக்கொண்டு வர மத்திய அரசின்
வருமான வரி இலாகா தான்
முழு முயற்சியையும்
மேற்கொள்ள  வேண்டும்.

அவர்களின் புலனாய்வுத்துறைக்கு தெரியும் –
பணம் எங்கெங்கு பதுங்கி இருக்கும் – எப்போது
வெளியே வரும் என்பது பற்றி எல்லாம்.

அதிரடி ரெய்டுகள் மூலம் பணத்தை வெளிக்கொண்டு
வருவது நியாயமான தேர்தலைப்பற்றிய
நம்பிக்கையை மக்களிடையே  உருவாக்கும்.

அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு முக்கியத்துவம்
கொடுக்காமல், தாங்கள்  public servant
என்பதை மனதில் இருத்திக் கொண்டு,
பாரபட்சம் இல்லாமல்,
இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம்
கொடுத்து செயல் பட வேண்டும்.

அவ்வப்போது பிடிபடும் பணத்தைப்
பற்றிய விவரங்களுடன்,
அதைக் கொண்டு வந்தவர் யார்,
எந்த ஊர்,
எங்கிருந்து எங்கே போய்க்கொண்டு இருந்தார்,
எந்த கட்சியைச் சேர்ந்தவர்,
என்ன பொறுப்பு வகிக்கிறார் போன்ற
விவரங்களையும் உடனுக்குடனே வெளியிட்டால்
மக்களுக்கு கட்சிகளையும், மனிதர்களையும்
புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to “பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” ….

  1. Ganpat சொல்கிறார்:

    எனக்கு ஒரு கதை கற்பனையில் உதிக்கிறது.

    அகில உலக எலிகள மகாநாடு ரோம் நகரில் நடந்தது
    உலகின் எல்லா நாடுகளையும் சேர்ந்த எலிகள அதில் பங்கேற்றன.

    முக்கிய அம்சமாக “பூனைகளிடமிருந்து தப்புவது எப்படி” என்பது பற்றி விவாதங்கள் நடந்தன அதற்கு சீன நாட்டின் எலி தலைமை வகித்தது.

    பாகிஸ்தான் எலி,” பூனைகள் மிக மெதுவாக அருகில் வந்து நம்மை பிடித்துவிடுகின்றன எனவே எல்லாப் பூனைக்கும் கழுத்தில் ஒரு மணி கட்டி விட்டால் இந்த பிரச்சினையை தீர்த்துவிடலாம்” என கூற எல்லா எலிகளும் இது நல்ல யோசனை என கைத்தட்டி இந்த யோசனையை வரவேற்றன

    இந்த தீர்மானம் நிறைவேற்றப் படும்போது,
    ஜப்பான் நாட்டு எலி,” எல்லாம் சரிதான்; ஆனால் பூனைகளுக்கு மணி கட்டுவது யார்?” என்று வினா எழுப்ப, ஒரு பயங்கர அமைதி அங்கு நிலவியது..

    அப்பொழுது ஒரு எலி எழுந்து, “எனக்கு இதற்கு ஒரு நல்ல தீர்வு தோன்றுகிறது.நாம் ஏன் பூனைகளிடத்தில் பேசி அவைகளை தானே மணி கட்டிகொள்ள சொல்லக்கூடாது?” என சொல்ல அனைத்து எலிகளும் வியப்பில் உறைந்து போயின.

    சுதாரித்துக்கொண்ட அவைத்தலைவர்சீன எலி, அந்த எலியைப்பார்த்து “நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்?” என கேட்க அதற்கு அந்த எலியும் பெருமையாக “இந்தியா” என சொன்னதாம்!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் கண்பத்.

      பூனைகள் = அரசியல்வாதிகள் – ஓகே

      எலிகள் = ………………… ?

      சொல்லி விடுங்களேன் ……

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.