கலைஞரின் ராஜதந்திரம் வென்றது !

கலைஞரின்  ராஜதந்திரம்  வென்றது !

(எல்லாரும் இருக்கிறார்களா ?–   சரி பார்த்துக் கொள்ளவும்  !


கலைஞரின்  ராஜதந்திர நடவடிக்கைகளைக்
கண்டு இந்தியாவே – ஏன் அகில உலகமும் –
பிரமிக்கிறது !

பாராட்டு மழை குவிகிறது –
எதைச் சொல்வது – எதை விடுவது ?

“குடும்பத்தைக் காத்த கோமான் –
காலில் விழாமலே காரியத்தை முடித்த
சுயமரியாதைச் செம்மல்”

– மானமிகு  வீரமணி பாராட்டு.

“கலைஞர் இமயமலையை விட
உயர்ந்து விட்டார்”
– என்று ஏற்கெனவே பாராட்டி விட்டேன்.
எனவே இப்போது, அதை விட உயரமான மலை
எதுவோ அதுவாக உயர்ந்து விட்டார் “

-சீறும் சிறுத்தை தொல். திருமா பாராட்டு

(who is going to blink first ?
“Times Now” english TV channel
headlines !)
அனைத்து இந்தியாவும் கலைஞரின்
கண்ணசைவுக்காக காத்திருந்த அதிசயம் !

இரண்டு நாட்களாக ஆவலுடன் காத்திருந்த
பிரதமர் மன்மோகன் சிங் வாயில்
மண்ணைப் போட்டு விட்டு தப்பி ஓடிய
சாமர்த்தியம் !

3 தொகுதிகளை  விட்டுக் கொடுத்து
கனிமொழியையும், ராசாத்தி அம்மாளையையும்
காத்த சாமர்த்தியம் !

“காங்கிரசிலிருந்து விலகியது
பெரிய விடுதலை”
என்று கூறிய அழகிரியையே சோனியா காந்தி
காலில் விழ வைத்த  சாமர்த்தியம்.

கனிமொழியால் –
“இங்கிதம் தெரியாதவர் – முரடர்” என்று
பாராட்டப்பட்ட அழகிரியையும்,

“சிறு சந்து கிடைத்தாலும் நுழைந்து
ஒட்டிக்கொள்வார்” என்று புகழப்பட்ட
தயாநிதி மாறனையும்,

கொண்டே கனிமொழிக்காக அத்தனையையும்
செய்ய வைத்த  சாமர்த்தியம் !

“கலைஞரிடம் தோளில் போட
துண்டு கேட்கப் போனால்,
இடுப்பில் கட்டி  இருக்கிற வேட்டியையும்
பிடுங்கிக் கொள்வார் ” – என்று கூறிய
டாக்டர் ராமதாஸிடமிருந்தே
ஒரு தொகுதியை பிடுங்கி  காங்கிரசுக்கு
தாரை வார்த்த சாமர்த்தியம் !

தொகுதி பங்கீட்டை குலாம் நபி ஆசாதே
டெல்லியில் அறிவித்த பிறகும் –
திமுக  121 தொகுதிகளில் போட்டியிடும்
என்று  முத்தாய்ப்பாகக் கூறி முடித்த சாமர்த்தியம் !!

(தப்பித் தவறி) தேர்தலில்  வென்றால்
கூட்டணி அரசு தான் என்பதை குலாம் நபி ஆசாத்
தான் டெல்லியில் சொன்னாரே தவிர
தன் வாயால் தமிழ் நாட்டில் சொல்லாமலே
மறைத்த  சாமர்த்தியம் !

எதைச் சொல்ல – எதை விட ?
——————————-

பின்குறிப்பு – தனியாக நின்றாலே திமுகவின்
சாதனைகள் அதை மீண்டும் ஆட்சியில்
அமர்த்தும்  என்று நேற்று சொல்லி விட்டு,

நாங்கள் (இதற்கு மேலும்) சுயமரியாதையை
இழக்கத் தயாரில்லை என்று
நேற்று சொல்லி விட்டு,

எங்களை வேண்டாம் என்கிறவர்களுடன்
எங்களுக்கு ஏன் கூட்டு
என்று நேற்று சொல்லி விட்டு

நீங்கள் எங்களுக்கு வேண்டும் என்று
அவர்கள் வாய் திறந்து சொல்லாத நிலையிலேயே –

இன்று  மேலும் 3 தொகுதிகளையும் சேர்த்து
காங்கிரசுக்கு 63 தொகுதிகளை  தாரை வார்த்ததன்
ரகசியத்தை தெரிந்து கொள்ளாமல் தூக்கம் வராது
என்கிற நிலையில் இருப்பவர்கள் கலைஞரின்
அடுத்த பகுதி “நெஞ்சுக்கு நீதி” வரும் வரை
காத்திருக்கவும் ! (வேறு வழி இல்லை !)

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், உலக நாயகன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலாநிதி மாறன், கலைஞர் வழிகாட்டுதல், குடும்பம், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், திருமா, தேர்தல், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

13 Responses to கலைஞரின் ராஜதந்திரம் வென்றது !

 1. Metro Boy சொல்கிறார்:

  உங்கள் வலையின் நிரந்தர வாசிகனாக ஆகிவிட்டேன். இது சமீப கால பதிவுகளில் simply the best.

 2. Ganpat சொல்கிறார்:

  metro Boy சொன்னதை வழிமொழிகிறேன்.
  மிகவும் புத்திசாலித்தனத்துடன்,
  அக்கறையுடனும்,அதேசமயம்
  நாகரீகமாக ,எழுதியுள்ளீர்கள்.நன்றி
  இதற்கும் மேல் ஒருவர் தி.மு.க விற்கு ஓட்டளித்தால்
  …………???

 3. nagaraj சொல்கிறார்:

  எனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்

  காங்கிரசிலிருந்து விலகியது
  பெரிய விடுதலை”
  என்று கூறிய அழகிரியையே சோனியா காந்தி
  காலில் விழ வைத்த சாமர்த்தியம்.

  தல சூப்பர் சுப்பர்,மேட்டர் அதவிட சூப்பர்

 4. Nithil சொல்கிறார்:

  excellent writeup

 5. villavan சொல்கிறார்:

  அசத்திட்டீங்க. ஒரு முழு கட்டுரையை கேப்சூலாக்கித் தந்த மாதிரி இருக்கு இந்த இடுகை.

 6. chollukireen சொல்கிறார்:

  புரியாதவர்களுக்கும், தெள்ளத்தெளிவாக புரியவைக்கும் நல்லகட்டுரை. கதை இன்னும் எப்படியெல்லாம் போகுமோ,

 7. RAJASEKHAR.P சொல்கிறார்:

  அன்புள்ள கா.மை அவர்களுக்கு……
  தாங்கள்-
  கொடுத்துள்ள இடுக்கையை விடவும்
  நிஜ நிழல் மிகவும் அருமை!?…
  புருசரின் அறிக்கைக்கு
  கைதட்டும் புருசிகள் ?
  கூடவே தட்டும் ஜால்ராக்கள்….
  தலைவரின்,
  தந்தையின்,
  தாத்தாவின் …
  அரசியல் சாணக்கியத்தை
  கூர்ந்து கவனிக்கும்
  மகன்,
  மகள்,
  பேரன்கள்….மிகவும் பிரமாதம்?

 8. RAJASEKHAR.P சொல்கிறார்:

  பின் குறிப்பு-:
  இவர்கள் இப்படி
  பார்ப்பதை பார்த்தால்..
  இதென்ன பிரமாதம்?
  இதைவிடவும் –
  நாங்கள் அசத்துவோம்…!?
  என்பார்கள் போல…
  ஏப்ரல் 13 சந்திப்போம்…………??????!

 9. raja natarajan சொல்கிறார்:

  சொல்வதை சொல்லி வைப்போம்.பகுத்தறிவோடு பதிவுலக கண்மணிகளாவது சிந்திப்பதே பதிவுகளின் வெற்றியாகும்.

 10. Arivunithi சொல்கிறார்:

  அந்த மைக் புடிக்கிரவர பாக்கும் போது எனக்கென்னவோ தாத்தா ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்…” பாட்டு படுறது போலவும் மத்தவங்க தாளத்துக்கு கை தட்டுவது போலவும் இருக்கு.

 11. Ashok சொல்கிறார்:

  அருமையான பதிவு நண்பரே….

 12. Ganpat சொல்கிறார்:

  ஓ!
  சொல்ல மறந்து விட்டேனே!!
  அந்த புகைப்படமும்,அதற்கு நீங்கள் போட்டுள்ள comments உம் அருமை.
  சரி, இப்போ சொல்லுங்க பார்க்கலாம்.
  அந்த புகைப்படத்தில் இருப்பவர்களில் ஒரு குற்றமும் செய்யாத (அல்லது ஒரே ஒரு குற்றம் மட்டும் செய்த) மூன்று பேர் யார்,யார்?
  விடை:
  1.திருமதி.தயாளு அம்மாள்
  2.,திரு.சண்முகநாதன்
  3.மைக் பிடித்துக்கொண்டிருப்பவர்(sorry பெயர் தெரியவில்லை)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.