லஞ்சத்தை ஒழிக்க நிதிஷ் கண்டு பிடித்த வழி ….

லஞ்சத்தை ஒழிக்க நிதிஷ் கண்டு பிடித்த வழி ….


மத்திய அரசின் ஊழியர்கள் (கடைநிலை ஊழியர்
நீங்கலாக) அனைவரையும் கட்டுப்படுத்தும்
ஒரு அரசு ஆணை – Central Civil Services
(Conduct) Rules, 1964 –
அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கான
நடத்தை விதி முறைகள் !

இதன்படி அரசுப்பணியில் சேரும் ஒவ்வொரு நபரும்,
பதவியில் சேரும் அன்றைய தினத்தில்,
தன் பெயரிலும், தன் குடும்பத்தினர் பெயரிலும் உள்ள
அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பற்றிய
விவரங்களை அதற்குண்டான படிவத்தில்,
தர வேண்டியது கட்டாயம்.

அதன் பின்னர் ஒவ்வொரு தடவையும்
ரூபாய் 15,000/-(இப்போது மாற்றப்பட்டு விட்டது)
மதிப்புக்கு மேற்பட்ட எந்த அசையும் மற்றும் அசையா
சொத்துக்களை வாங்கினாலும், அதன் விவரங்களை,
உடனடியாக  குறிப்பிட்ட படிவத்தில் தன் துறை
மேலதிகாரிகளுக்கு தெரிவித்தாக வேண்டும்.

இந்த விவரங்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட
துறையின் நிர்வாக அலுவலகத்தில் பராமரிக்கப்படும்,
அந்த ஊழியர் சம்பந்தமான கோப்பில்(personal
records ) தொடர்ந்து
பாதுகாப்பாக  வைக்கப்படும்.

எப்போதாவது, எந்த ஊழியர் மீதாவது,
வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ந்திருப்பதாக
சந்தேகமோ, புகாரோ வந்தால்,
உடனடியாக சரி பார்க்கவோ, மேல் நடவடிக்கை
எடுக்கவோ – இவை உதவும்.

கிட்டத்தட்ட இதே  வகையில் மாநில அரசு
ஊழியர்கள்   கடைபிடிக்க வேண்டிய
நடத்தை முறைகள் பற்றிய  ஆணைகளும்
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளன.

– ஆனால் இதில் பரிதாபம் என்னவென்றால் –
இந்த ஆணைகள் எல்லாம் பெரும்பாலும்
காகிதத்தில் இருப்பதோடு சரி.
நடைமுறையில் அமுல்படுத்தப்படுவதில்லை.

பல ஊழல் அதிகாரிகள் சர்வ சுதந்திரமாக இன்னும்
உலவிக்கொண்டிருப்பதற்கு இந்த அலட்சியமும் ஒரு
முக்கிய காரணம்.

இந்தியாவிலேயே முதல்முறையாக –
பீகார் மாநிலத்தில் முதல் அமைச்சர் நிதிஷ்குமார்
இந்த சட்டத்தை
சரியான முறையில் கையில் எடுத்திருக்கிறார்.

பிப்ரவரி மாத இறுதிக்குள், அரசு ஊழியர்கள்
அனைவரும் (IAS, IPS அதிகாரிகள் உட்பட)
கட்டாயமாக சொத்து விவரங்களை, குறிப்பிட்ட
படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும்,
தவறினால் மார்ச் 1ந்தேதி அவர்களுக்கு
கிடைக்க வேண்டிய மாத  சம்பளம் நிறுத்தி
வைக்கப்படும் என்றும்
ஒரு அதிரடி உத்திரவை போட்டார்.

(அதற்கு முன்னரே, அனைத்து
அமைச்சர்களிடமிருந்தும் சொத்து விவரங்கள்
பெறப்பட்டு இணைய தளத்தில் வெளியிடப்பட்டு
விட்டது )

பல ஊழியர் சங்கங்களும் இதை எதிர்த்தன.
பலரும், அரசாங்கம் இதை ஒரு பயமுறுத்தலுக்காக
சொல்கிறது.  இது நடைமுறைக்கு வராது.
அரசாங்கம் இது விஷயத்தில் அந்த அளவுக்கு
கடுமையாக இருக்க முடியாது என்றே நினைத்தனர்.

அனைவரின் எதிர்பார்ப்புக்கும் மாறாக –
பிப்ரவரி 28ந்தேதி வரை விவரங்களை
சமர்ப்பித்த ஊழியர்களுக்கு மட்டுமே,
மார்ச் 1ந்தேதி
சம்பளம் விடுவிக்கக்ப்பட்டது.

மற்றவர்கள் அனைவரும் என்று சொத்து
விவரங்களை  சமர்ப்பிக்கிறார்களோ,அன்று –
அதை அவர்களின் மேலதிகாரிகள்
உறுதி செய்த பிறகே – நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்
சம்பளம் விடுவிக்கப்பட வேண்டும் என்று
உத்திரவு போட்டு விட்டார்.

இதோடு விடவில்லை நிதிஷ்.
பெறப்படும் சொத்து விவரங்கள் அனைத்தும்
பீகார் அரசின் இணயதளத்தில் நிரந்தரமாக
வெளியிடப்பட வேண்டும் என்றும் உத்திரவிட்டு
உள்ளார்.

பொதுமக்கள்  யார் வேண்டுமானாலும் இந்த
விவரங்களை பார்க்கலாம். வலைத்தளத்தில்
உள்ளதை விட அதிகமாக சொத்து வைத்திருக்கும்
அரசாங்க ஊழியர்களைப் பற்றி பொது மக்கள்
யார் வேண்டுமானாலும் – தகுந்த விவரங்கள்,
ஆதாரங்களுடன் புகார் கொடுக்கலாம்.
தகுந்த விசாரணையும், நடவடிக்கையும் தொடரும்.

அரசு ஊழியர்களிடையே லஞ்சத்தை முற்றிலுமாக
ஒழிக்க முடியாவிட்டாலும், ஒரு பய உணர்வை
ஏற்படுத்தவும், லஞ்சம் வாங்கும் பழக்கம்
குறையவும், நிதிஷ்குமார் எடுத்திருக்கும்
இந்த முயற்சிகள் நிச்சயம் உதவும்.

நிதிஷ்குமார் பாராட்டுதலுக்கு உரியவர்.
நாட்டிற்கே ஒரு முன் மாதிரியான அரசியல்வாதியாகத்
திகழ்கிறார் அவர்.

உண்மையாகவே – லஞ்சத்தையும், ஊழலையும்
ஒழிக்க வேண்டும் என்று விரும்பினால் –
மற்ற  மாநிலங்களும், மத்திய அரசும் கூட
இந்த வழியை  உடனடியாக நடைமுறைக்கு
கொண்டு வருவது அவசியம்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, சாட்டையடி, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மனதைக் கவர்ந்தது, முதலமைச்சர், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to லஞ்சத்தை ஒழிக்க நிதிஷ் கண்டு பிடித்த வழி ….

 1. winmani சொல்கிறார்:

  அவசியமான தேவையான பதிவு ,
  நிதிஷ்குமார் நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியவர் தான்.
  – மிக்க நன்றி நண்பரே.

 2. Arivunithi சொல்கிறார்:

  இது போல் செய்வதற்கு முதலில் முதல்வரும் அவர் குடும்பமும் அப்பழுக்கில்லாமல் இருக்க வேண்டும். நம்மிடையே முதல்வராக கூடிய வாய்ப்புள்ள அரசியல்வாதிகள் எல்லாம் கறை படிந்தவர்கள். இருக்கும் ஒரு சில கறை படியாத அரசியல் வாதிகளுக்கோ முதல்வராக வாய்ப்பே இல்லை. ஆகவே இது நமக்கு எட்டா பழம்.

 3. RAJASEKHAR.P சொல்கிறார்:

  அங்கும் நிதி
  இங்கும் நிதி
  அவர் நீதிக்கு
  இவர் நிதிக்கு
  அவர் நீதிக்கு உழைக்கிறார் !
  இவர் நிதிக்கு உழைக்கிறார் ?

 4. Ganpat சொல்கிறார்:

  மிகவும் பயனுள்ள பதிவு.நன்றி.

  http://www.gov.bih.nic.in/
  இந்த தளத்தில் “Asset Declaration”என்ற பகுதிக்கு சென்று விவரங்களை காணலாம்.

  உங்களால் முடிந்த அளவு e-mail மூலம் பகிர்ந்துகொள்ளவும்.

  இந்தியாவின் நம்பிக்கை ..மோடி,நிதீஷ்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக நண்பர் கண்பத்,

   நீங்கள் மேற்கொண்டு கொடுத்த
   தகவலுக்கு மிக்க நன்றி.

   உங்களைப் போன்ற நண்பர்களின்
   ஒத்துழைப்பு எனக்கு
   மிகப்பெரிய டானிக் !

   -வாழ்த்துக்களுடன்
   காவிரிமைந்தன்

 5. RAJASEKHAR.P சொல்கிறார்:

  அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்;
  மறத்திற்கும் அஃதே துணை.-thiukural

 6. RRB சொல்கிறார்:

  Wow, This is a commendable effort. I wish this system is implemented in TamilNadu as well. But will our corrupt politicians and officials allow this?

  Thanks for sharing. This is a feel-good news.

 7. அருண்பிரபு சொல்கிறார்:

  Superb. Nitish is one hell of a strong leader!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.