தன் வினை …..

தன் வினை …..

“தன் வினை தன்னைச் சுடும் –
வீட்டப்பம் ஓட்டைச் சுடும் ”

– பட்டினத்தார்

ஒரு கோடியே தொண்ணூறு லட்சம் –
தமிழ் நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்போர்
எண்ணிக்கை.

இத்தனை கார்டுதாரர்களும் மாதா மாதம்
ரேஷன் கடையில் (அரிசி அல்லாதவர்கள் கூட ),
துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு ,

பாமாலின் எண்ணை வாங்குகிறார்கள்.

ஒவ்வொரு ஒரு கிலோ பாக்கெட்டிலும் –
கலைஞர் கருப்புக் கண்ணாடியுடன்,
சிரித்துக்கொண்டு போஸ் கொடுக்கிறார்.

அதிகாரத்தில் இருந்ததால் –
கலைஞர் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும்,
வீட்டுக்காரர் விரும்பினாலும்,
விரும்பாவிட்டாலும்,
வலுக்கட்டாயமாக நுழைந்து கொண்டிருந்தார்.

இப்போது கீழே நீங்கள் பார்ப்பது –

இரண்டு நாட்கள் முன்பு ஒரு ரேஷன் கடையில்
எடுக்கப்பட்ட  புகைப்படம்.
கடையில் பணி புரிபவர், வேண்டாத வேலையை
கொடுத்த  கலைஞரை சபித்துக்கொண்டே
ஒவ்வொரு பாக்கெட்டிலும்
இருக்கும் கலைஞர் புகைப்படத்தை
ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கிறார்.

காரணம் – தேர்தல் கமிஷன் உத்திரவு.
புகைப்படம்  போடச்சொன்னவரே இப்போது
மறைக்கச் சொல்ல வேண்டிய கட்டாயம் !

தன் வினை ……..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், தடை உத்திரவு, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மட்டமான விளம்பரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to தன் வினை …..

 1. Ganpat சொல்கிறார்:

  தன் வினையாவது ;மற்றவன் வினையாவது! Bullshit!!
  வீணாவது நம்ம வரிப்பணம் ஐயா!!
  ஒரு 10 கோடி sticker வாங்கியதாக கணக்கு எழுதி இதிலும் மு க ஒருகோடி ரூபா வாவது பண்ணியிருப்பார்.
  நாம , தன் வினை,தெய்வம் நின்று கொல்லும் ன்னு ஏதாவது
  சொல்லி நம்மை தேத்திக்க வேண்டியதுதான்

 2. Rishi சொல்கிறார்:

  அதேதான்!! தன்வினையாவது.. பொதுவினையாவது!!
  ஸ்டிக்கருக்கான காசும் மக்கள் பணத்திலேருந்துதானே செலவாகுது!
  தமிழக அரசின் சின்னம் போட்டாலாவது அதில் ஒரு நியாயமிருக்கிறது! ஏதோ இவன் அப்பன் சொத்திலிருந்து பாமாயிலைக் கொடுப்பதுபோலல்லவா போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

 3. Arivunithi சொல்கிறார்:

  “தன் வினை தன்னைச் சுடும் , ஓட்டப்பம் வீட்டை சுடும் .” என்பதே பட்டினத்தார் அப்பத்தில் விஷம் வைத்த சகோதரியின் வீடு எரிய பாடிய பாடல்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.