அற்ப சந்தோஷம் ?

அற்ப சந்தோஷம்  ?

இன்று இரவு 07.20 மணிக்கு ஒரே நேரத்தில்
சன் செய்தியிலும், கலைஞர் செய்தியிலும்
பளிச்சிடத் தொடங்கியது “மத்திய ஆளும் காங்கிரஸ்
கூட்டணியிலிருந்து திமுக வெளியேறுகிறது” என்கிற
தலைப்புச் செய்தி.

மூன்று மணி நேரங்களுக்குள் வலைத்தளம்
முழுவதும்  ஏகப்பட்ட  வாழ்த்துக்கள், வரவேற்புகள் !
காங்கிரசும், திமுகவும்  பிரிந்ததில் தான் எத்தனை
பேருக்கு சந்தோஷம் !
(திருமாவின் சந்தோஷம் வேறு ரகம்!
அதை இத்துடன் சேர்க்காதீர்கள்)

சேர்ந்து போட்டி போட்டிருந்தால் ஒருவேளை
இவர்கள் வெற்றி பெற்று விடுவார்களோ என்கிற
சந்தேகத்திலும், பயத்திலும் இருந்தவர்களது
உள்ளங்களில் இருந்து பீரிட்டு எழுந்த
சந்தோஷத்தின் அவசர வெளிப்பாடுகள்
அந்த வாழ்த்துக்கள் !!

இந்த வாழ்த்து வெளியிடலில் பங்கு கொள்ள
எனக்கு மனம் வரவில்லை !

காரணம் – அநேகமாக இது ஒரு
அற்ப சந்தோஷமாக முடியலாம்
என்று மனதில் ஒரு பக்கம் தோன்றுவதே !

இரண்டு பக்கமும் கடைந்தெடுத்த
சுயநலக் கும்பல். இயன்ற வரை அதிக ஆதாயம்
பெற இரண்டு தரப்பும் முயற்சிக்கின்றன.
நேற்று வரை, காங்கிரசிடம் முறைத்தால் –
விஜய்காந்துடன் சேர்ந்து கொள்வார்களோ
என்கிற பயத்தில் கலைஞர் வாய்மூடி மவுனம்
சாதித்தார்.

நேற்றிரவு, விஜய்காந்த் – அதிமுக வுடன்
இணைவது உறுதியானதும் – இன்று காங்கிரசிற்கு
பூச்சாண்டி காட்டுகிறார் – மத்திய அரசு கவிழ்ந்து
விடுமென்று. காங்கிரசும் இயன்ற வரை
முட்டிமோதி – அதிக பட்சம் எவ்வளவு வாங்க
முடியும் என்பதை தெரிந்து கொண்டு விட்டது.
எனவே காட்சிகள் மாறலாம் –
முட்டி மோதியவர்கள் கட்டிப் பிடிக்கலாம்.

யார் கண்டது – ஒன்றிரண்டு நாட்களில்
கலைஞரிடமிருந்தே அடுத்த அறிவிப்பும்
வெளிவரலாம் –

“அன்னை சோனியாவிடமிருந்து எங்களைப்
பிரிக்க எண்ணியவர்கள் விரித்த வலையில்
விழுந்து விட மாட்டோம்.

காங்கிரஸ்-திமுக
வெற்றிக் கூட்டணி தொடரும்.

234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் !
மனப்பால் குடித்தவர்கள் மண்ணைக்
கவ்வுவார்கள்” – என்று !

எனவே –
கொண்டாடுவதை இரண்டு நாட்கள்
தள்ளிப் போடுவது நல்லது –

இல்லையா தோழர்களே ?

——————————————
இதை எழுதி முடிக்கும்போது புதிய செய்தி
ஒன்றைப் பார்த்தேன் –

திருமாவளவன் பாராட்டு –
“இந்த துணிச்சலான முடிவால்
அரசியல் அரங்கில்  கலைஞர்
இமயமாய் உயர்ந்து நிற்கிறார்”

ஒரு  வேளை  இதைவிடத் துணிச்சலான
இன்னொரு முடிவால் கலைஞர் நாளையே –

“பரங்கிமலையாய்” சுருங்க வேண்டி இருக்கலாம் –

கவலை வேண்டாம் திருமா –
அப்போதும் பாராட்டலாம் –
வார்த்தைகளா இல்லை ? –
“ராஜதந்திரத்தில் கலைஞரை மிஞ்சுவார் யார் ?”

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழீழம், தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to அற்ப சந்தோஷம் ?

 1. RAJASEKHAR.P சொல்கிறார்:

  என் மனதில்
  நினைத்ததை சிறிதும்
  மாறாமல் சொல்லிவிட்டீர்கள் !
  குள்ளநரிகள்-
  ஒன்றுசேர்ந்து
  கூட்டணி அமைத்தால்
  என்ன மிஞ்சும் ?
  திருமா -வுக்கு
  ஆசை என்னவென்று
  யாருக்குதான் தெரியாது?
  கூடவே வைத்திருக்கும்
  கலைஞருக்கும் தெரியும் ..?
  கலைஞர் ஆசை
  என்னவென்று திருமா-வுக்கும் தெரியும் ?

  அதுதான்-
  சொன்னேனே !
  மக்களை அடித்து சாப்பிடும்
  ஓநாய் கூட்டம் …………..
  ஒருநாள் –
  மக்கள் விழித்துக் கொண்டால்
  தன்கூட்டதையே
  அடித்து சாப்பிடும் நிலைவரும்…
  தமிழனே விழித்துக்கொள் !!!!!!

  இப்போது- உன் தருணம்
  வந்துகொண்டிருக்கிறது….
  அதுதான் ஏப்ரல் 13

  அன்புடன் …
  ராஜசேகர்.ப

 2. Arivunithi சொல்கிறார்:

  ஒரு மேலதிக மந்திரி பதவிக்கு (கனிமொழிக்கு) டில்லி வரை தள்ளு வண்டியில் தவழ்ந்து போன முதியவர் கேவலம் 3 சட்டசபை சீட்டுக்காக 6 மந்திரிகளை (அதிலும் 33 % குடும்பம்) இழக்கிறாரே… நம்பும் படியாக இல்லை.

 3. nerkuppai thumbi சொல்கிறார்:

  உங்கள் வாய்க்கு சர்க்கரை. இது அல்ப சந்தோஷமே.

 4. T.R.SRINIVASAN சொல்கிறார்:

  I had the opportunity to go thro all your writings in the internet and really appreciate your efforts to keep the people of Tamil Nadu informed of various frauds, cheatings, lies and loots perpetrated by the politicians of the present regime.

  Your doubt that there could be a compromise between Congress and DMK in alliance seat sharing tangle has become 100% true. Shamless politicians!

  I hope you will continue to do the unbiased criticism of politics in TamilNadu without fear or favour.

  May God bless you for ever.

  T.R.Srinivasan

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக நண்பர் சீனிவாசன்

   மிக்க நன்றி

   -வாழ்த்துக்களுடன்
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.