சேப்பாக்கம் தொகுதியில், 20,000 பெண்களுக்கு ஒரு கோடி ரூபாய் பொருட்கள் பகிரங்க பட்டுவாடா !

சேப்பாக்கம் தொகுதியில், 20,000 பெண்களுக்கு
ஒரு கோடி ரூபாய் பொருட்கள் பகிரங்க பட்டுவாடா !

தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலுக்கான தேதியை –
நாளையோ, மறுநாளோ தேர்தல் கமிஷன்
அறிவிக்கப் போகிறது என்கிற நிலையில் –
இன்றைய தினம்  காலையில் (28/02/2011)
சேப்பாக்கம் தொகுதியில் 20,000 பெண்களுக்கு
(அனைவரும் வாக்காளர்கள் !)

ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள கீழ்க்கண்ட
பொருட்கள் கலைஞரால் கொடையாக
அளிக்கப்பட்டுள்ளன !

வாஷிங் மெஷின் -200
மிக்சி    – 400
தையல் இயந்திரம் -400
ரைஸ் குக்கர் -1200
எவர்சில்வர் அண்டா -1600
எவர்சில்வர் டிபன் கேரியர் -1600
வெட் கிரைண்டர் – 400
மூன்று சக்கர வண்டி -20
எவர்சில்வர் குடம் -1600
ஹாட் பாக்ஸ் -12,000 (பன்னிரெண்டாயிரம்)

இவற்றின் மொத்த மதிப்பு ஒரு கோடி ரூபாய்.
பெற்றுக்கொண்ட பெண்களின்
எண்ணிக்கை – அறிவிக்கப்பட்டிருப்பது  20,000
(ஆனால்  கூட்டினால் மொத்தம்
19,420 தான் வருகிறது )

இந்த செய்திக்கு ஆதாரம் திமுக
வெளியிட்டுள்ள விளம்பரம் –
(கீழே காண்க )


இதன் தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சியில்
கலைஞர் பேசியது மாலைச் செய்தியில்
வெளிவந்துள்ளது ( கீழே காண்க )

நீங்கள் எந்த நெருக்கடியிலும் இந்த இயக்கத்தை
காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.
அந்த நம்பிக்கையில் அன்றாடம் உங்களை
சந்தித்து வருகிறேன். நான் ஒரு முதல்வராக
மட்டுமல்ல தொண்டர்களில் ஒருவனாக
உங்களுக்காக உழைக்கிறேன்.
இந்த இயக்கத்தின் சார்பாக, உங்களுக்கு
பாத்திரம், பண்டம் வழங்கப்பட்டுள்ளது.
உங்கள் குடும்பத்தில் உள்ள தாய்-தந்தைக்கு
தருவதுபோல் வழங்கப்படுகிறது.”

சட்டமன்ற தேர்தல் நடைபெற இரண்டே மாதங்கள்
இருக்கும் நிலையில், அதற்கான அறிவிப்பு
எந்த நேரமும் வெளியிடப்படலாம் என்கிற நிலையில்,
இவ்வாறு வாக்காளர்களுக்கு பொருட்களை
அள்ளிக் கொடுப்பது சரியா ?

விஞ்ஞானபூர்வமான விதி மீறல்
என்பது இது தானோ ?

இந்த ஒரு கோடி ரூபாய் – யாருடையது ?
எங்கிருந்து வந்தது ?
இந்த பொருட்கள் இப்போது அவசரம் அவசரமாக
ஏன் பரிசாகக் கொடுக்கக்ப்படுகின்றன ?
ஒரு பகுதியில்/தொகுதியில் உள்ள
பெண் வாக்காளர்கள் மட்டும்
பயன் பெறும் வண்ணம்
இந்த  நிகழ்வு அமைந்தது எப்படி ?
இந்த பயனாளிகளை  தேர்ந்தெடுத்தது யார் ?
எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் ?

எழுச்சி நாள் நிகழ்ச்சி என்று
சொல்வார்களேயானால் –
கடந்த வருடங்களில் இதே நாளில், இதே போல்
கொடுக்கப்பட்டதா ?
இந்த வருடம் மட்டும் ஏன் ?
தேர்தல் வருகிறது என்பதாலா ?

தேர்தல் கமிஷன் இன்னும் தேதி
அறிவிக்காத நிலையில்,
கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பெறாத
நிலையில்,
இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க யாருக்கு
அதிகாரம் இருக்கிறது ?
சட்டப்படி யாராலும் ஒன்றும் செய்ய முடியாது
என்பது தானே இந்த நிகழ்வின் பொருள் ?

யாராலும் நடவடிக்கை எடுக்க
முடியாது போனால் தான்  என்ன ?
நாம்    1800  ஆண்டுகளுக்கு முன்பே

(கலைஞருக்குப் பிடித்த )

தமிழ்க் கவிஞன் இளங்கோவன்
சொல்லி விட்டுப் போனானே – அதை
நம்புவோம்  –

“அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாகும்”   -என்று !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இயற்கையின் சீற்றம், கட்டுரை, கருணாநிதி, சரித்திரம், தமிழீழம், தமிழ், புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, பொருளாதாரம், விஞ்ஞானி, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to சேப்பாக்கம் தொகுதியில், 20,000 பெண்களுக்கு ஒரு கோடி ரூபாய் பொருட்கள் பகிரங்க பட்டுவாடா !

 1. yatrigan சொல்கிறார்:

  சேப்பாக்கம் தொகுதி –
  கலைஞர் தொகுதி ஆயிற்றே !
  அய்யோ – அப்ப 6ஆம் முறையும்
  அவர் தானா ?
  அடக் கடவுளே ?

 2. Ganpat சொல்கிறார்:

  20000 பேருக்கு ஒரு கோடி
  அப்போ ஒருத்தருக்கு ரூ 500 தானா??
  ரொம்ப குறைச்சல்!!
  அவுங்களுக்கு இருக்கிற வசதிப்படி
  நியாயமா பார்த்தா ரூ.8 கோடி கொடுக்கலாம்
  ஒருத்தருக்கு!

 3. எப்படி கணக்கு போட்டு பார்த்தாலும் பத்து கோடிய தொடுகிறது.. ஒரு கோடி எப்படி ?

  தலைவருக்கு பயம் வந்திடுச்சு என்பதைத்தான் இது காட்டுகிறது. என்னத்த கொட்டி கொடுத்தாலும் ஆப்பு நிச்சயம் இருக்கு

 4. shyamsundar சொல்கிறார்:

  eanna

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.