93 வயதிலும் நானே முதலமைச்சர் –
கலைஞர் அறிவிப்பு !
இன்றைய தினம் நக்கீரனில் வெளிவந்திருக்கிற
இரண்டு தனித்தனி செய்திகள் –
————-
1) சென்னையில் கலைஞரின் ஆசை !
சேகர்பாபு கூட்டிய கூட்டத்தில் பேசும்போது
கலைஞர் தன் ஆசையை வெளியிட்டுப் பேசியது –
“இன்னும் 6 வருடத்தில், தமிழ்நாட்டிலே
இருக்கின்ற எல்லா குடிசைகளும் கான்கிரீட்
வீடுகளாக ஆகிவிடும்.
இன்னும் 6 வருடத்திலா ? நீ இருப்பாயா –
என்றால் நானும் இருப்பேன் –
என் ஆட்சியும் இருக்கும் !”
———————————-
கலைஞர் இன்னும் 100 ஆண்டுகள் வாழ வேண்டும்
என்பதே நம் ஆசையும்.
ஆனால் – இப்போதே வயது 87.
இன்னும் 6 ஆண்டுகள் என்றால் -93 வயது.
93 வயது முதியவரை வேலை வாங்குவது
கொடுமை அல்லவா ? இரக்கமில்லாத
செயல் அல்லவா ?
கற்பனை செய்து பார்க்கவே
பயங்கரமாக இருக்கிறதே.
தமிழ் மக்கள் என்ன அவ்வளவு
கொடிய கல் நெஞ்சுக்காரர்களா ?
கலைஞர் இன்னும்
100 ஆண்டுகள் வாழட்டும்.
ஆனால் முதல்வராக அல்ல –
வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டு,
பேரன்கள் தயாரிக்கும்
திரைப்படங்களையும்,
மானாட மயிலாட நிகழ்ச்சிகளையும்
ஹோம் தியேட்டரில்
ஆனந்தமாக மாற்றி மாற்றி
பார்த்துக்கொண்டு !
அதுவே நம் ஆசை -வேண்டுதல் எல்லாம் !
—————————————————————————————–
2) இது இப்படி இருக்க மதுரையில்
மு.க.அழகிரியோ வேறு மாதிரி
ஆசைப்படுகிறார் –
மதுரையில் மு.க.அழகிரி பேச்சு –
“இங்கே பேசிய பலரும் டாக்டர் கலைஞர்
6-வது முறையாக முதலமைச்சராக வருவார்
என குறிப்பிட்டனர்.
நான் கூறுகிறேன் 6-வது முறை மட்டுமல்ல,
7-வது முறையும் கலைஞர் தான்
முதலமைச்சராக வருவார்”.
———————————
அப்படி என்றால் 97 வயதிலும் கலஞர் தான்
முதலமைச்சரா ? விட மாட்டீர்களா ?
ஆக மொத்தம் –
எப்படியும் ஸ்டாலின் வந்து விடக்கூடாது –
அவ்வளவு தானே ?
உங்கள் இரண்டாவது ஆசை நிறைவேற
வாழ்த்துக்கள் அழகிரி அவர்களே !
மொத்தத்தில்
கலைஞருக்கு ஆசைன்னு
ஒன்னுமே கிடையாது…….
எல்லாமே மக்களுக்காக…
நாட்டுமக்களுக்காக இல்லை
அவரு பிள்ளைங்க ஆசைபடுறாங்க அவ்ளோவ்தான்……….
தங்களது பதிவை எமது தமிழ்க்குறிஞ்சி இணைய இதழில்வலைப்பூக்கள் பகுதியில் இணைத்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்,
தமிழ்குறிஞ்சி