ஏகப்பட்ட கூத்துகள் – எதைச் சொல்வது – எதை விடுவது ?

ஏகப்பட்ட கூத்துகள் –
எதைச் சொல்வது – எதை விடுவது ?

இன்று (16/02/2011) ஏகப்பட்ட நிகழ்வுகள்.

சிரிப்பதா – கோபப்படுவதா என்றே
தெரியவில்லை.

இன்றைய செய்திகளிலிருந்து –

(நக்கீரனுக்கு கனிமொழி மேல் என்ன கோபமோ –
மட்டமான ஒரு புகைப்படத்தைப் போட்டிருக்கிறது !)

1)இலங்கை கடற்படையினரால் 118 தமிழக மீனவர்கள்
சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து,
சென்னையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநிலங்களவை உறுப்பினர்
கனிமொழி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது
செய்யப்பட்டனர்.

இதையொட்டி கனிமொழி பேசியது பத்திரிகைகளில்
வந்திருக்கிறது.         ஆனால் –
திமுக தென்சென்னை மாவட்டச் செயலாளர் அன்பழகன்
பேசியது வரவில்லை.

தலைவர் மகளுடன் போராட்டத்தில் பங்கேற்க,
திடீர் சந்தர்ப்பம் கிடைத்த சந்தோஷத்தில்
அன்பழகன் (பேசத்தெரியாமல்- தெரியாத்தனமாக)
பேசியதாவது –
“நேற்று இரவு, நள்ளிரவிற்குப் பிறகு தான்
தலைவர் ஆர்ப்பாட்டம் செய்யும்படி
ஆணை பிறப்பித்தார்.குறைந்த அவகாசத்தில்
10,000 பேரைத் திரட்டிக் கொண்டு
வந்திருக்கிறோம்.  வாகனங்கள் இல்லாததால்
காவல் துறையினர் 5000 பேரை மட்டும்
கைது செய்து இருக்கிறார்கள்”
——-
காவல் துறையினர் அனைவருக்கும்
அரசு செலவில் மதிய  விருந்து
கொடுத்து  ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு,
மாலையில் விடை கூறி அனுப்பி விட்டனர்.

————————-
உலகில் வேறு எங்கேயுமே காண முடியாத
வெட்கக்கேடு இது.

கட்சித்தலைவரும் அவரே, முதலமைச்சரும் அவரே !
நள்ளிரவில் ஆணை இடுகிறார் – இலங்கை தூதரகம்
முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துங்கள் என்று.

காலையில் காவல் துறைக்கு உத்திரவு போடுகிறார்
பெயருக்கு கைது செய்து, விருந்து கொடுத்து,
மாலையில் விடை கொடுத்து
அனுப்பி விடுங்கள் என்று.

அரசாங்க செலவில் கட்சிக்கு விளம்பரம் !
யாரை ஏமாற்ற இந்த நாடகம் ?
மக்கள்  இதை எல்லாம் நம்பி ஏமாந்த நாட்கள்
எப்போதோ கடந்து போய் விட்டன.

தொலைக்காட்சியைப் பார்ப்பவர்கள் எல்லாம்
உணர்ச்சி வசப்படுவதற்கு பதிலாக சிரிக்கிறார்கள்.

முதல் அமைச்சர் தொலைபேசியைத் தூக்கி
பிரதமரிடம் ஒரு வார்த்தை பேச முடியாதா ?
எதற்கு இந்த தெருக்கூத்து எல்லாம்.

நாளை என்ன சொல்லப் போகிறான் அந்த
சிங்களத்தான் ? தெரியாதா ?
“மீனவர்கள் எல்லையைத் தாண்டி
வந்தார்கள் – சட்டப்படி கைது செய்தோம்.
வழக்கு பதிவு செய்து விட்டு இந்திய அரசு
கேட்டுக்கொண்டதால் விடுதலை செய்கிறோம்” –
என்று தானே ?

நிருபமா ராவ் போய் சொல்லிவிட்டு வந்ததும்
இதைச் செய்யச் சொல்லித் தானே ?
கலைஞரிடம் சொல்லி விட்டுத்தானே
செய்தார்கள் ? இனி தமிழ் நாடு
சட்டமன்ற தேர்தல் முடியும் வரை
இதே கூத்து தானே நடக்கப் போகிறது ?

————————————————-

2) பாஜக தமிழக முன்னாள் தலைவரும், தேசிய
செயற்குழு உறுப்பினருமான இல.கணேசனின்
66வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. சென்னை மேற்கு மாம்பலத்தில்
உள்ள இல.கணேசன் வீட்டிற்கு முதல்வர்
கருணாநிதி நேரில் சென்று சால்வை அணிவித்து
பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
— —————–

இந்த பண்டார, பரதேசிகள் கட்சியின்
தலைவரை வாழ்த்த வேண்டும்
என்று சென்ற  வருடம் தோன்றாதது
இப்போது மட்டும் தோன்றுகிறது என்றால் –

அதற்கு காரணம் காங்கிரஸ் கடைசி வரை
ஆசை காட்டி ஏமாற்றி விட்டு,
இறுதியில் விஜயகாந்துடன் கூட்டு சேர்ந்து விடுமோ
என்கிற பயமாக இருக்கலாமோ என்று
யாருக்காவது தோன்றினால் அது அநாவசியமான
கற்பனை.

கலைஞர் உயர்ந்த பண்புகளை கடைபிடிப்பவர்.
இல.கணேசன் எதிர்க்கட்சி தலைவர் தானே  தவிர
எதிரிகள் தலைவர் அல்லவே.
எனவே நாகரிகம் கருதி இல.கணேசனை நேரில்
சென்று வாழ்த்தி இருக்கிறார் என்று
கொள்வதே நமக்கு நல்லது.
———————————————

3)கலைஞர் தொலைக்காட்சி இயக்குனர்களில்
ஒருவரான சரத்குமார்  ஒரு அறிக்கையில்
கூறுகிறார்-

“மத்திய புலனாய்வுத் துறைக்கோ,
வருமான வரித்துறைக்கோ எந்த விதமான சந்தேகமும் இருக்குமானால்
அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலைஞர்
தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணங்களையும்,
கணக்குகளையும் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதிலே எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபணையும்
இல்லை.”
————————

அப்படியானால், “உங்களுக்கு எதாவது
ஆட்சேபணை உண்டா”என்று
அவர்கள் கேட்டார்களோ ?
அவர்கள்  ரெய்டு போன இடங்களில் எல்லாம்
இப்படி கேட்டுக்கொண்டு தான் போனார்களோ ?
ஒரு வேளை – நீங்கள்  ஆட்சேபணை தெரிவித்தால்
வராமலும் இருப்பார்களோ?

———————————————–

4) சி.பி.ஐ. இயக்குநர் ஏ பி சிங் பொது கணக்கு குழு
முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அப்போது அவர், “2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு
தொடர்பாக அரசிற்கு இழப்பில்லை என்கிற தகவல்
பொய்யானது” என கூறினார்.

————————
அப்படியானால் “இழப்பு ஏதுமில்லை. ஜீரோ லாஸ்”
என்று கூறிய கபில் சிபலையும் சிபிஐ கொஞ்சம்
“கவனித்து”, விசாரித்தால் தேவலையே –
செய்வார்களா ?

—————————————————

பிரதமரின் தொலைக்காட்சி பேட்டியைப் பற்றி கூட
சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது.
கொஞ்சம் சூடு குறைந்த பிறகு சொல்லலாமே !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கனிமொழி, கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சி, தமிழீழம், தமிழ், நிர்வாணம், பொது, பொதுவானவை, முதலமைச்சர், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to ஏகப்பட்ட கூத்துகள் – எதைச் சொல்வது – எதை விடுவது ?

 1. RAJASEKHAR.P சொல்கிறார்:

  ஐயோ ஐயோ ஒரே காமெடிதான் போங்க ……………….?!!!!!!!!

 2. Aravarasan சொல்கிறார்:

  நாட்டில் ஏகப்பட்ட கேணத்தனங்கள் நடக்கிறது. அதில் உலக மகாகேணத்தனம் கனிமொழி கைது. எல்லாம் ஓட்டப்பன்களை ஏமாற்றும் கேப்மாறிதனம் தான் திமுக.வின் இந்த நாடகம்.

 3. durai சொல்கிறார்:

  after kanimozhi arrest 24 fishermans arrestd. that is the affect of protest

 4. RAJASEKHAR.P சொல்கிறார்:

  ayyo ayyo

 5. Pingback: கனிமொழி எம்.பி. நடத்திய மீனவப் பாசப் போராட்டம் | KOTUKKI

 6. ramanans சொல்கிறார்:

  //கலைஞர் உயர்ந்த பண்புகளை கடைபிடிப்பவர்.
  இல.கணேசன் எதிர்க்கட்சி தலைவர் தானே தவிர
  எதிரிகள் தலைவர் அல்லவே.
  எனவே நாகரிகம் கருதி இல.கணேசனை நேரில்
  சென்று வாழ்த்தி இருக்கிறார்//

  ஹா.. ஹா.. ஹா.. நல்ல காமஎடி. அப்படியானால் ஜயலலிதாவின் பிறந்த நாள் அன்று நேரில் சென்று வாழ்த்தாதது ஏன்? அவரும் ஒரு எதிர்க்கட்சித்த் தலைவர் தானே, எதிரிகள் தலைவர் அல்லவே… கேட்குறவன் கேனையனாக இருந்தால் ஏதாவது சொல்லி (செய்து) நம்மை ஏமாற்றுவார்கள் என்பது மீண்டும் நிரூபனம் ஆகிறது.

 7. ramanans சொல்கிறார்:

  //பிரதமரின் தொலைக்காட்சி பேட்டியைப் பற்றி கூட
  சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது.
  கொஞ்சம் சூடு குறைந்த பிறகு சொல்லலாமே//

  அது ஊரறிந்த காமெடி ஆயிற்றே… காத்த்கிருக்கிறேன் நண்பரே

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.