டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மீது கலைஞர் போடும் அவதூறு வழக்கு ……

டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மீது கலைஞர்
போடும் அவதூறு  வழக்கு ……

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தன்னை
தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்டதற்காக
24 மணி நேரத்திற்குள்  மன்னிப்புக் கேட்க
வேண்டும் என்றும்
செய்தியை வாபஸ் பெற வேண்டும் என்றும் –
தவறினால் சுப்ரமணியன் சுவாமி
அவதூறு வழக்கைச் சந்திக்க நேரிடும் என்றும்-

கலைஞர்  சார்பாக அவரது வக்கீல் மூலம்
இன்று ஒரு நோட்டீஸ்  அனுப்பப்பட்டுள்ளதாக
செய்திகள்  வெளியாகி உள்ளன.

மிகச்சரியான நடவடிக்கை.
நாம் முழு மனதுடன் வரவேற்கிறோம்.
பின்னர் என்ன –
கன்னா பின்னா வென்று குற்றம் சாட்டி விட்டு
சுப்ரமணியன் சுவாமி
தப்பி ஓட விட்டு விடலாமா ?

நமது கவலை எல்லாம் சுவாமி மன்னிப்புக்
கேட்டு விடுவாரோ என்பது அல்ல.

கலைஞர்  நோட்டீஸ் கொடுத்ததுடன்
பெரிய மனது பண்ணி தானாகவே
சுப்ரமணியன் சுவாமியை
மன்னித்து விட்டு விடுவாரோ என்கிற பயம் தான்.

ஏனென்றால் கலைஞர் குடும்பத்தில்
அனைவருக்கும் பெரிய மனது.

ஏற்கெனவே  ராஜாத்தி அம்மாள் அவர்கள்
ஒரு முறையும்,
கனிமொழி அவர்கள் ஒரு முறையும் இதே போல்
வக்கீல் நோட்டீஸ் கொடுத்து விட்டு –
வழக்குத் தொடராமல் அத்துடனே விட்டு விட்டார்கள்.

உண்மை விவரங்கள் வெளிவரும் என்று ஆவலுடன்
காத்திருந்த தமிழ் மக்கள்  ஏமாந்து போக நேர்ந்தது.

சுப்ரமணியன் சுவாமி  எப்படியும் மன்னிப்புக்
கேட்க மாட்டார்.  எனவே  கலைஞர் இதை
இத்துடன் விட்டு விடக்கூடாது. தொடர்ந்து
கோர்ட்மூலம்  அவசியம் நடவடிக்கை எடுத்தேயாக
வேண்டும்.

அப்போது தான் சுப்ரமணியன் சுவாமி எப்படி எல்லாம்
பொய் சொல்லி இருக்கிறார் என்பது
பொது மக்களுக்கு தெரிய வரும் !

பி.கு.
இந்த வலையில் முன்னதாக வந்த
சில இடுகைகளை படிக்காத –
அல்லது படித்து விட்டு மறந்து போன
நண்பர்களுக்காக
அவற்றிலிருந்து தொடர்புடைய சில பகுதிகளை மட்டும்
கீழே வெளியிடுகிறேன்.முழு இடுகையையும்
படிக்க விரும்புவோர் தயவு செய்து குறிப்பிட்ட
இடுகையை சொடுக்கிப் படிக்கவும்.

————————————————–

இதே விமரிசனம் வலைத்தளத்தில் ஏப்ரல் 30, 2010
தேதியில் –

“மக்கள் இந்த வழக்கு நீதி மன்றத்திற்கு வரும் நாளை
ஆவலுடனே எதிர்பார்க்கிறார்கள் ! சம்பந்தப்பட்டவர்கள்
ஏமாற்றாமல் இருப்பார்களாக !”

என்கிற தலைப்பில் வெளிவந்த ஒரு இடுகையிலிருந்து
சில பகுதிகள் –

—————————————————————-

“முதல்வரின் மகள் என்ற முறையில்,
தனக்கு  நெருங்கியவர்களுடன்  சேர்ந்து சட்டவிரோதமாக
ரூ.2000 கோடி சம்பாதித்துள்ளதாக, முற்றிலும் பொய்யான,
மிக மோசமான  குற்றச்சாட்டை எமது கட்சிக்காரர் மீது
கூறியிருக்கிறீர்கள்.

தமிழ்,  கலை,  மற்றும் கலாசாரத்தை
மிக உயர்ந்த நிலைக்கு
எடுத்துச் செல்லும் பொது சேவைக்கு தனது நேரத்தை
செலவிட்டு வரக் கூடிய நேரத்தில்  உமது இந்தக் கருத்துகள்
வெளியாகியுள்ளன.

எமது கட்சிக்காரருக்கு தமிழகத்தில் மட்டுமின்றி
உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம்
நற்பெயர் இருக்கிறது.
அந்த  நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாக
உங்கள் கருத்துகள்  அமைந்திருப்பதாக எமது
கட்சிக்காரர் கருதுகிறார்.”
———————————————-—
ஜெயலலிதா அவர்கள் குணம் அனைவரும் அறிந்ததே.
அவர் நிச்சயம்  இதற்கு   பதிலே  அளிக்க   மாட்டார்.

கன்னா பின்னா என்று   குற்றசாட்டுக்களை
அள்ளி  வீசிவிட்டு
தப்பிபோகின்றவர்களை சும்மா  விட்டுவிடக்கூடாது !
எனவே  கனிமொழி  அவர்கள் வெறும்
வக்கீல்  நோட்டீசுடன்
நின்று விடாமல்  இந்த  வழக்கை  நீதிமன்றம் வரை
தொடர்ந்து எடுத்து சென்று  நீதி கேட்க வேண்டும்  –

————————————————–

விமரிசனம் வலைத்தளத்தில் டிசம்பர் 16,2010
தேதியில்

“அவதூறு செய்தி குறித்து கனிமொழியின் தாயார்
ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை !”

என்கிற தலைப்பில் வெளிவந்த ஒரு இடுகையிலிருந்து
சில பகுதிகள் –

————————–
நேற்று  நள்ளிரவில்  (சிபிஐ ரெய்டு முடிந்த பிறகு )
டெல்லி செய்தி  நிறுவனம் வெளியிட்ட ஒரு செய்தியில்,
சென்னை  அண்ணா சாலையில்,

டாடா நிறுவனம் –
53,000 சதுர அடி கொண்ட சுமார் 250 கோடி ரூபாய்
மதிப்புள்ள ஒரு சொத்தை வெறும் 25 கோடிக்கு
ராஜாத்தி அம்மாளின் அரசியல் செயலாளர் (political
secretary ) சரவணன் என்பவருக்கு விற்பனை
செய்ததைப் பற்றி வியப்பு தெரிவித்திருந்தது… ….

அந்த இடத்தை நான் வாங்கியதைப்
போல சில
மீடியாக்கள் வேண்டுமென்றே தவறான செய்தியை
உள்நோக்கத்தோடு வெளியிட்டு வருகிறது.

தொடர்ந்து இத்தகைய செயல்களில்
ஈடுபடுவார்களேயானால், அவர்கள் மீது
வழக்கறிஞர்கள் மூலமாக
சட்டப்பூர்வமான
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்… ….

ராஜாத்தி அம்மாளின் குறை நியாயமானதே –
அவர் வெறும் எச்சரிக்கையுடன் நின்று விடாமல்,
உடனடியாக மேற்படி செய்தி நிறுவனத்தின் மீது
அவதூறு வழக்கு தொடுக்க வேண்டும்.
அப்போது தான் அந்த நிறுவனத்தின்
உள்நோக்கம் வெளிவரும் !

————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மீது கலைஞர் போடும் அவதூறு வழக்கு ……

 1. விஸ்வாமித்ரா சொல்கிறார்:

  பல உண்மைகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லி வருகிறீர்கள் பாராட்டுக்கள்.

  இதுவும் ஒரு ஸ்டண்ட். சுவாமி 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க்கப் போவதில்லை. அதுக்குப் பிறகு ஒரு வேளை சொன்ன மாதிரி கருணாநிதி ஒரு அவமதிப்பு கேசைப் போட்டாலும் போடலாம். அது ஒரு சென்னை லோக்கல் கோர்ட்டில் போடப் படும் சில பல முதல் கட்ட வாய்தாக்களுக்குப் பிறகு அந்தக் கேஸ் அப்படியே அமுக்கப் பட்டு விடும். ஆனால் கருணாநிதியை யாரும் ”ஏன் சுவாமி மீது கேஸ் போடவில்லை” அதற்கு இந்த கேஸ் உபயோகமாக இருக்கும்.

  சுவாமி சொன்னது போய் நான் மான நஷ்ட கேஸ் போட்டிருக்கிறேன் என்று எப்பொழுது கேட்டாலும் சொல்லலாம் மேலும் வழக்கு கோர்ட்டில் இருக்கும் பொழுது இது பற்றி பேசக் கூடாது என்று சிக்கலான கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் இந்த டப்பா கேஸ் உதவும். இந்த மான நஷ்டக் கேஸ் என்றுமே கோர்ட்டில் உண்மையாக நடக்கப் போவதில்லை. இதைத் தெரிந்தேதான் தனக்கு ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கையில் கருணாநிதி இந்தக் கேசைப் போடுவதாக மிரட்டுகிறார் போடவில்லை. இது வெறும் மிரட்டல் மட்டுமே. சுவாமியை கோர்ட்டில் சந்திக்கும் துணிவு கருணாநிதிக்குக் கிடையாது. ஏற்கனவே ஃப்ரூட் லாங்வேஜ் சுவாமியிடம் போய் மடிப்பிச்சை கேட்ட தகவல்களும் வெளி வந்துள்ளன.

  இதைப் போலவே ஐ நா வில் சோனியா பேசக் கூடாது என்று நியூயார்க் டைம்ஸ்ஸீல் ஒரு விளம்பரத்தை கட்டாரியா என்பவர் கொடுத்தார். அதை எதிர்த்து அமெரிக்காவில் உள்ள சோனியாவின் கைத்தடிகள் பல கோர்ட்டுகளில் 100 மில்லியன் டாலர்களுக்கு நஷ்ட ஈடு கேட்ட்டு வழக்கு போட்டார்கள். கட்டாரியாவுக்கு ஆதரவாக சுவாமி களம் இறங்கினார். நியூஸ் தெரிந்தவுடன் சோனியா தன் அடியாட்களைக் கூப்பிட்டு உடனடியாக கேஸ்களை வாபஸ் வாங்கச் சொல்லி விட்டார். அனைத்து கோர்ட்டுகளிலும் வழக்குகள் போட்ட வேகத்திலேயே வாபஸ் வாங்கி விட்டார்கள். அது போலவே இது கருணாநிதியின் வெத்து மிரட்டல் மட்டுமே. அப்படி ஒரு வேளை சுவாமி மீது மான நஷ்டக் கேஸ் நிஜமாகவே கோர்ட்டுக்கு வருமானால் அன்றைக்கு இருக்கு ஆப்பு ஆனால் அது நடை பெறாது. கருணாநிதி நியமித்து அவன் காலில் விழும் ஜட்ஜுகளிடம் இந்த கேஸ் கொடுக்கப் பட்டு சுவாமியின் வாதங்கள் நிராகரிக்கப் பட்டு சுவாமி மீது தண்டனை கொடுக்கவும் கூட ஒரு வேளை திட்டமிடலாம் ஆனால் அது மிகவும் டேஞ்சரான ஒரு கேமாகி விடும், நாயர் பிடித்த புலிவால் கதையாகி விடும். கருணாநிதிக்கு இதெல்லாம் தெரியும். கருணாநிதி விவரமான ஒரு கிரிமினல் இதையெல்லாம் அதன் லாஜிக்கல் முடிவுக்குக் கொண்டு போகாமல் சும்மா தன் விசிலடிச்சான் குஞ்சுகளுக்காக காட்டப் படும் வெற்று உதார் மட்டுமே. உடனடியாக இங்கு வந்து ஊளையிடும் பிரகாஷ் போன்ற ஜால்ராக்கள் பார்த்தாயா எங்கள் தலைவரின் வீரத்தை என்று குதிப்பார்கள் அதற்கு மேலாக இந்த வழக்கினால் எதுவும் பெரிதாக நடக்கப் போவதில்லை

  விஸ்வாமித்ரா

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக நண்பர் விஸ்வாமித்ரா,

   உங்கள் எழுத்துக்கு நான் முதல் ரசிகன்.
   பிரமாதமாக எழுதுகிறீர்கள்.
   வாழ்த்துக்கள் .

   இது ஒரு போர்.
   ஊழலுக்கு எதிரான போர்.

   நம் சமுதாயம் இன்று இருக்கும் நிலையில்
   நிறைய விஸ்வாமித்திரர்கள்
   தேவைப்படுகிறார்கள்.

   தங்கள் சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள்.

   – காவிரிமைந்தன்

 2. விஸ்வாமித்ரா சொல்கிறார்:

  சுவாமி கருணாநிதியை கோர்ட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறார். இப்பொழுது சூரப் புலி கருணாநிதி என்ன செய்யப் போகிறாராம்?

  http://www.dailypioneer.com/315930/Back-off-Karuna-tells-Swamy.html

 3. RAJASEKHAR.P சொல்கிறார்:

  ayyo ayyo

 4. விஸ்வாமித்ரா சொல்கிறார்:

  உங்கள் நம்பிக்கைக்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி காவிரிமைந்தன். நம்மால் விதைக்க அமுடிவதை நாம் விதைத்தே ஆக வேண்டும் இல்லாவிட்டால் நம் வருங்கால சந்ததி நம்மை மன்னிக்காது. முடிந்த வரையில் விழிப்புணர்வைப் பரப்புவோம். நான் எமர்ஜென்சியை எதிர்த்து இதே மூச்சுடன் என்னால் முடிந்த அளவு பிரச்சாரம் செய்திருக்கிறேன். இன்னும் எத்தனை அராஜகங்களை நாம் எதிர்க்க வேண்டி வருமோ? நம் கடமையை நாம் செய்வோம். கூடுமானவரை மக்களிடம் உண்மைகளைக் கொணடு செல்ல வேண்டியது ஒவ்வொரு பொறுப்பான குடிமகனின் கடமை. அதைத்தான் நாம் செய்து வருகிறோம்

  நன்றி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.