2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து கலைஞர் பேசியது பற்றியும் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி பற்றியும் எழுதியதற்கு எதிர்ப்பு …

2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து கலைஞர் பேசியது பற்றியும்
கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி
பற்றியும் எழுதியதற்கு எதிர்ப்பு …

கடந்த இரு தினங்களில் நான் இரண்டு கட்டுரைகள்
எழுதி இருந்தேன். விவரம் கீழே –

03/02/2010 – (நள்ளிரவு)
தலைப்பு -கலைஞரே இந்த நிலையிலும் இப்படிப் பேச
வெட்கமாக இல்லை உங்களுக்கு ?
04/02/2010 அன்று வருகை தந்தோர் எண்ணிக்கை -1646

மொத்த மறுமொழிகள் – 19

04/02/2010 -(நள்ளிரவு)
கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி
கொடுக்கப்பட்டது உண்மையா ? எதற்காக ?
05/02/2010 அன்று வருகை தந்தோர்
எண்ணிக்கை -2,362
(இரவு 11.45 மணி வரை )

மொத்த மறுமொழிகள் – 6

ஆக இந்த வலத்தளத்திற்கு கடந்த இரண்டு நாட்களில்
வருகை தந்த நாலாயிரத்து சொச்சம் பேர்களில்,
மறுமொழி அளித்துள்ள 25 பேர்களில்,

பலர் தங்கள் மனக்குமுறல்களையும்
மறுமொழியில் சேர்த்துக் கொட்டி
இருக்கிறார்கள். இது விஷயமாக
மக்கள் எந்த அளவிற்கு நொந்து
போயிருக்கிறார்கள் என்பது
அவர்கள் கொட்டும்
வார்த்தைகளிலிருந்தே தெரிகிறது.

ஆனால் — பிரகாஷ் – என்கிற ஒரே ஒரு நண்பர் மற்றும்
கடுமையான மாற்றுக்கருத்தைச் சொல்லி
நான் எழுதியதை குறை கூறி இருக்கிறார்.

என் இடுகைகளில் இருந்த ஆதாரங்களுடன் கூடிய
கருத்துக்களை படித்தும் அவர் மறுத்திருக்கிறார் என்றால் –
அதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் ?

இது என்னை மீண்டும் இதுபற்றி
சில கருத்துக்களை எழுதத் தூண்டுகிறது.

ஆங்கிலத்தில் அவர் கூறி இருக்கும் கருத்துக்களை
தமிழ்ப் படுத்தியும், அதற்கான என் மறுமொழியையும்
கீழே  தருகிறேன்.

——————– ———————
நண்பர் பிரகாஷின் மறுமொழி – (தமிழில்)

கலைஞர் டிவி க்கு டிபி ரியல்டார் நிறுவனம் பணம்
கொடுத்ததாக கூறுவது பொய். இது வழக்கம்போல்
வட இந்திய டிவி சானல்களாலும்
பிராம்மணர்களாலும் இட்டுக் கட்டப்பட்ட கதை.

கீழ்க்கணட வலைத்தளத்தைக் காணவும்.

http://thatstamil.oneindia.in/news/2011/02/04/2g-

scam-kanimozhi-kalaingnar-tv-under-scanner-

aid0090.html

கலைஞர் டிவிக்கு ஒரு பணமும் கொடுக்கப்படவில்லை.
முக்கால்வாசி வலை எழுத்தாளர்கள் ஏன் வட இந்திய
டிவி சானல்களும், பார்ப்பனர்களும் சொல்வதை நம்புகிறார்கள்.

வெள்ளைத் தோல் உடையவர்க்ள் பொய் சொல்ல மாட்டார்கள்
என்று அவர்கள் நம்புவது தான் காரணம்.

————————————————-

இது குறித்து என் கருத்து –

நண்பர் கொடுத்த வலைத்தளத்தைப் நான் பார்த்தேன்.
மற்றவர்களும் சொடுக்கிப் பார்க்க ஏதுவாக
மேலேயே கொடுத்திருக்கிறேன்.

கலைஞர் டிவி க்கு டிபி ரியல்ஸ்டார் நிறுவனம் நேரடியாக
பணம் கொடுத்ததாக என் கட்டுரையில் எழுதவில்லையே.
டிபி ரியல்ஸ்டாரின்  துணை நிறுவனமான சினியுக்
என்கிற நிறுவனம் கொடுத்ததாகத் தான் எழுதப்பட்டு
இருக்கிறது.

இதே டிபி ரியல்ஸ்டார் நிறுவனத்தின் இன்னொரு
(தொலைதொடர்பு )துணை நிறுவனம் தான்
ராஜாவால் முறைகேடாக 2ஜி அலைக்கற்றை
அளிக்கப்பட்ட ஸ்வான்  நிறுவனம்.

சுலபமாக புரிந்து கொள்ள சொல்ல வேண்டுமானால் –
தாய் நிறுவனம் டிபி ரியல்ஸ்டார்,
சேய் நிறுவனங்கள் சினியுக்,ஸ்வான் ஆகியவை.

மேலும் நண்பர் கூறியுள்ள வலைத்தளத்தில்
காணப்படும் இன்னொரு பகுதியையும் பாருங்கள் –

———————————-
“ஆனால், பங்குகளின் விலையை
நிர்ணயிப்பதில் எழுந்த சிக்கல் காரணமாக
அந்தப் பங்குகளை சினியுக் வாங்கவில்லை.
அந்தப் பணத்தை எங்களிடம் திருப்பித்
தந்துவிட்டது என்று டி.பி. ரியாலிட்டி
நிறுவன தலைமை நிதி அதிகாரி
ஆசிப் பல்வா கூறியுள்ளார்.”
————————————-

சினியுக் நிறுவனத்திற்கும், டிபி ரியல்டார்
நிறுவனத்திற்கும் சம்பந்தமில்லை என்பது
நண்பர் கூற்று.
அப்படியானால் டிபி ரியாலிட்டி நிறுவன தலைமை
நிதி அதிகாரி  -பங்குகளை வாங்காததால்
சினியுக் அந்த பணத்தை  எங்களிடம்
திருப்பித் தந்து விட்டது
என்று கூறுவதற்கு  என்ன அர்த்தம் ?
முன்னதாக அந்தப் பணம் அவர்களால் தான்
கொடுக்கப்பட்டது என்பது தானே ?

அடுத்ததாக அவர் சொல்லும் காரணம் “தோலின் நிறம்”-
எதற்கெடுத்தாலும் ஜாதியை இழுப்பதே
இவர்களுக்கு பிழைப்பாகி விட்டது.

நண்பர் பிரகாஷ்- கலைஞரையோ, ஸ்டாலினையோ,
கலாநிதி மாறனையோ, தயாநிதி மாறனையோ
நேரில் கண்டதே இல்லையா ? அவர்கள் எல்லாரும் என்ன
திராவிட நிறமான “கருப்பா?”

சிவப்பான  தமிழர்களும் உண்டு –
கருப்பான பிராம்மணர்களும் உண்டு.

ஆமாம் இன்னும் எத்தனை காலங்களுக்கு இந்த
பிராம்மணர் சமாசாரத்தைச் சொல்லிக்கொண்டு
இருப்பீர்கள் ?

கலாநிதி மாறனின் மனைவி ஒரு
பிராம்மணப் பெண்மணி.
தயாநிதி மாறனின் மனைவியும்
ஒரு பிராம்மணப் பெண்மணி தான்.

இவர்களின் வாரிசுகளை நீங்கள் பிராம்மணருக்குப்
பிறந்தவர்கள் என்று கூறி ஒதுக்கி விடுவீர்களா ?
முடியுமா ?

உங்கள்  நோக்கில் –
அந்த குழந்தைகள் ஆரியர்களா – திராவிடர்களா ?
வெள்ளையாக இருந்தால் பிராம்மணர் –
கருப்பாக இருந்தால் தமிழரா ?

கலைஞர் நாத்திகர் (ஊருக்கு)
(மஞ்சள் துண்டு சமாச்சாரத்தை விடுங்கள் )
ஆனால் அவர் துணைவியார் ராசாத்தி அம்மாள்
ஊர் ஊராக ஒரு கோவில் விடாமல் போய் வருகிறார்.
சென்ற வாரம் கூட புகைப்படத்துடன் செய்திகள்
வந்தன.

ஸ்டாலின் துணைவி துர்க்கா அவர்கள்
வெளிப்படையாகவே ஒரு பேட்டியில் தன் வீட்டில்
பூஜை அறை வைத்திருப்பதாகக் கூறி இருக்கிறார்.

அவர் பேரன்களின் நிறுவனங்கள் அனைத்துக்கும்
ஆங்கிலப் பெயர்கள் – cloud nine, red giant,
sun tv, sun music, ktv

ஏன் – கருணாநிதி என்கிற அவரது பெயர் என்ன
தமிழ்ப் பெயரா ? மாற்றிக் கொள்ள வேண்டியது தானே ?

ஏன் இந்த முரண்பாடுகள் ?
உபதேசம் எல்லாம் ஊருக்கு தானா ?

—————————————————

நண்பரின் கேள்விக்கான விளக்கத்தை அளித்து
விட்டதாக நினைக்கிறேன்.

இப்போது, கொஞ்சம் மேல் அதிகமாக –

1)  214 கோடி என்னும்போது, இவ்வளவு பெரியதொகை
கொடுக்கல் வாங்கல் நடக்கும்போது,சின்னதாகவாவது,
ஒரு ஒப்பந்தம்
என்று எதுவும் போட மாட்டார்களா ?
பதிவு பண்ண மாட்டார்களா ?

2)”பங்குகளின் விலையை நிர்ணயிப்பதில் சிக்கல்
ஏற்பட்டதால் ”  பணத்தை திருப்பி கொடுத்து
விட்டதாக இப்போது கூறுகிறார்கள்.
என்ன விலை என்று பேசாமலேயா 214 கோடியைத்
தூக்கிக் கொடுப்பார்கள் ?

3) பங்குகளை வாங்காததால் அந்தப் பணம்
கடனாகக் கருதப்பட்டது. பின்னால் எங்களிடம் திருப்பி
கொடுக்கப்பட்டது என்று டிபி ரியல்டார் தலைமை
நிதி அதிகாரி கூறுகிறார். அப்படியானால்
அது அவர்கள்  கொடுத்த பணம் தானே ?

4) சிபிஐ அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் –
ராஜா ஸ்வான் நிறுவனத்திற்கு முறைகேடாக
சலுகைகள் அளித்ததால் பதிலுக்கு அந்த நிறுவனத்தால்
ராஜா கை காட்டிய இடத்தில் பணம்  கொடுக்கப்பட்டது.
இது நடந்தது 2009-2010-ல்.

5) 2010 பின் பகுதியில் தான் 2ஜி ஸ்பெக்ட்ரம்
விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. எனவே
விசாரணை என்று தீவிரமாக வந்தால் –
மாட்டிக்கொள்வோம் என்பதால்,இந்த பணத்தை
கடன் வாங்கியதாகவும் பின்னர் திருப்பிக் கொடுத்து
விட்டதாகவும் சொல்கிறார்களோ என்கிற
கோணத்தில் தானே சிபிஐ விசாரணை நடக்கிறது.

6) பண பரிவர்த்தனைகள் எல்லாம் காசோலை மூலம்
தானே நடந்திருக்கும் ? தேதிகளைப் பார்த்தால்
தெரிந்து விடுமே !

6) ஆமாம் – ஒரு நிறுவனம் 214 கோடி ரூபாய்
என்கிற அளவிற்கு அவ்வளவு பெரிய தொகையை
கடன் வாங்கினால், அதை board of directors
க்கு தெரியாமலே செய்து விட  முடியுமா ?
கனிமொழிக்கு இது பற்றி ஒன்றுமே தெரியாது –
எல்லாம் நான் செய்த முடிவு தான் என்று
கலைஞர் டிவி சியிஓ சரத்குமார் யாரும்
கேட்கும் முன்னரே முந்திக் கொண்டு சொல்வது ஏன் ?
யாரை காப்பாற்ற ?

7)  சரி கனிமொழிக்கு ஒன்றும் தெரியாது.
கலைஞரின் பார்வைக்கு கொண்டு போகாமல்
அவரது மனைவி தயாளு அம்மாளை
214 ரூபாய் கடனுக்கு பொறுப்பாளியாக்கும்
முடிவை சரத்குமாரால் எடுத்திருக்க  முடியுமா ?

ஆமாம் – எல்லாம் இவ்வளவு தூரம்
வந்து விட்ட பிறகு – தப்பு அபிப்பிராயங்களை
போக்க -சம்பந்தப்பட்டவர்கள் விரிவாக ஒரு
விளக்க அறிக்கை
கொடுக்க வேண்டியது தானே ?
ஏன் செய்ய மாட்டேன் என்கிறார்கள்?
எதையும் கமிட் பண்ணிக்கொள்ளக் கூடாது என்றா ?
————————————————–

என்ன தான் விளக்கமாக, நாம் எடுத்துச்
சொன்னாலும்
அதெப்படி பிரகாஷ் போன்ற நண்பர்கள்
இன்னும் இவற்றை எல்லாம்
புரிந்து கொள்ளாமலே இருக்கிறார்கள்?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், திமுக, ராஜாத்தி அம்மையார், ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to 2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து கலைஞர் பேசியது பற்றியும் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி பற்றியும் எழுதியதற்கு எதிர்ப்பு …

 1. Ganpat சொல்கிறார்:

  அன்பு கா.மை.
  இனிமேல் நான் அருமை என்று சொல்லப்போவதில்லை.
  நீங்கள் வானில் பறக்க ஆரம்பித்து விட்டீர்கள்.வாழ்த்துக்கள்.
  ஆனால் முத்தாய்ப்பாக நீங்கள் எழுப்பியுள்ள வினாவிற்கு தான் பதில் தெரியாமல் முழிக்கிறேன்(என்ன தான் விளக்கமாக, நாம் எடுத்துச்
  சொன்னாலும்
  அதெப்படி பிரகாஷ் போன்ற நண்பர்கள்
  இன்னும் இவற்றை எல்லாம்
  புரிந்து கொள்ளாமலே இருக்கிறார்கள்?)
  இதன் பெயர்தான் இறைவன் லீலையா?
  வலைதளத்தில் லக்கிலுக் என்ற புகழ் பெற்ற பதிவர் உள்ளார்.
  இவர் நிஜப்பெயர் யுவகிருஷ்ணா.இவர் ஒரு பரம்பரை தி.மு .க அனுதாபி.கருணாநிதி பக்தர்.இவர் சமீபத்தில் பதிவிட்டுள்ள
  ‘பொதுகூட்டம்’ என்ற கட்டுரையை படியுங்கள்.வியந்து போவீர்கள்.http://www.luckylookonline.com/
  நான் அறிந்தவரை எந்த தி மு க அனுதாபியும் (தலைவர்கள் உட்பட)விவாதங்களில் நுழைவதில்லை.நுழைந்தாலும்
  “சந்தைக்குப் போகணும்
  ஆத்தா வையும்
  காசை குடு ”
  case தான்!
  நன்றி

 2. asokaraj சொல்கிறார்:

  These people are curses for thamizhians. When I talk about the scams and frauds of DMK, even my educated friends also ask me whether I support AIADMK. I hate both DMK and AIADMK. I advice all my friends to go for 49 O till good canditates enter elections. When these man can believe an unknown site why can’t he believe a blog normally written after some investigations. Where does the white and black case appear here. If DMK and AIADMK are black, then we are also black. If the scam is proved will he agree that always blacks cheat blacks? Then what will be his stand. It is a sorry status.
  Nanri

 3. R.Srinivasan சொல்கிறார்:

  Dear Sir,
  I am not coming to the cast subject as i feel cast is the root-cause of all destructive activities. I would like to appriciate the author who wrote all this matters in order to share with the people, how the first family in tamilnadu loot this state/country’s wealth and indulge in all sort of cast instigation and calling themselves as reformists. May I humbly submit thro’ this website that this spectrum himalayan scandal was first broadcasted not by the opposition in tamilnadu or by any particular cast the dmk and its leadership is accusing and using all sort of venom in their speech to instigate the people. It is sun tv from Mr.Karunanidhi’s family which has first broken this news in tamilnadu for the people of this state vide their powerful media. At that point of time the relationship between Mr.Maran’s family and Mr.Karunanidhi’s family was in troubled water and because of that the sun tv released the news. Afterwards for some reasons they have shown to the world that they have no difference of opinion in the family and they are united. Mr.Karunanidhi has to now reveal why sun tv had broken that news at that point of time. Was it because as you have pointed out in your article that Mr.Kalanidhi & Dayanidhi”s wives are so called upper cast and they wanted to suppress the so called raja who is a dalit.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சீனிவாசன்,

   தங்களது வெளிப்படையான கருத்துக்களை
   வரவேற்கிறென்.

   ஜாதியின் அடிப்படையில் மனிதர்களை
   அடையாளம் பார்ப்பதும், அந்த ஜாதியின் மேல்
   தனக்கு இருக்கும் வெறுப்பு, விருப்புக்களை
   எல்லாம் எந்த வித
   காரணமின்றியே அவர் மீது கொட்டுவதும் நமது
   சமுதாயத்தின் வழக்கமாகி விட்டது.

   இது விஷயமாக http://www.gkpage.wordpress.com
   என்கிற வலத்தளத்தில் வந்துள்ள எனக்கு மிகவும்
   பிடித்த ஒரு கட்டுரையின் ஒரு பகுதியை கீழே தருகிறேன்.
   கிட்டத்தட்ட என் எண்ணங்களும் இதை ஒத்ததே –

   ———————————————-

   ஜாதிகள் உண்டா ? தேவையா ?? யாருக்காக ???

   சாதிகள் இல்லையடி பாப்பா ! – குலத்
   தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் ;
   நீதி, உயர்ந்த மதி, கல்வி,
   அன்பு நிறைய உடையவர்கள் – மேலோர்.
   மகா கவி பாரதி

   எங்கிருந்து வந்தன இந்த ஜாதிகள் ?
   யார் உண்டு பண்ணியவை ? தேவையா இவை நமக்கு ?

   ஆன்மிக வளர்ச்சிக்கும் ஜாதிகளுக்கும் எந்தவித
   சம்பந்தமும் இல்லை !
   ஆதியில் ஜாதிகள் அமைந்தது அவரவர் செய்யும்
   தொழிலின் அடிப்படையில்.
   இவற்றிடையே உயரவு தாழ்வு எதுவும் இல்லை —
   எந்தவித சந்தேகத்திற்கும்
   இடம் இல்லாமல் இதை தெளிவாகக் கூறுகிறது கீதை !

   பின்னர் வந்தவர்கள் அதை உயர்ந்தது என்றும்
   தாழ்ந்தது என்றும் பிரித்துக் கூறியது தங்கள் சுயநலத்தால்.

   தங்கள் கூற்றினை உறுதிப்படுத்த வேதங்களையும்,
   இதிகாசங்களையும்
   திரித்து துணைக்கு சேர்த்துக்கொண்டார்கள்.

   தலையிலிருந்து தோன்றியவன், மார்பிலிருந்து
   உதித்தவன், துடையிலிருந்து தோன்றியவன்,
   காலிலிருந்து தோன்றியவன் என்று கூறியதெல்லாம் –
   கதை !கற்பனை !! அப்பட்டமான சுயநலம் !!

   தாயின் கருப்பையிலிருந்து தோன்றியவர்கள் தான்
   மனிதராக பிறந்த அனைவரும்.

   மனிதரில் ஜாதி/மத அடிப்படையில் உயர்வு
   தாழ்வு கூறுவது –
   அறியாமையால் கூறினால் – அது மடமை!
   அறிந்தும் கூறினால் – அது கடைந்தெடுத்த சுயநலம்.

   நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் –
   ஆகிய ஐந்து சக்திகளால்
   ( பஞ்ச பூதங்கள் ) ஆனது இந்த பிரபஞ்சம்.

   இதே 5 சக்திகளால் ஆனது தான் நம் உடம்பும்.
   இதைத்தான் அண்டத்தில் உள்ளது தான்
   பிண்டத்திலும் உள்ளது என்று சொன்னார்கள் !

   இயற்கை/கடவுள் நமக்கு கொடுத்த கொடை தான்
   இந்த 5 சக்திகளும்.
   சாதி – மதம் பார்த்து இந்த சக்திகள் யாரிடமும்
   அதிகமாகவோ, குறைத்தோ வியாபிப்பதில்லை !
   கிட்ட வருவதோ – தூரம் போவதோ இல்லை !

   தென்றல் காற்றோ, குளிர் நிலவோ, சுட்டெரிக்கும்
   சூரியனோ –
   அனைவருக்கும் பொது தானே ?

   தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் -ஐம்பதுகளுக்கு
   முன்னால் நிலவி வந்த ஜாதிப் பாகுபாடுகள்/
   வேறுபாடுகள் – தந்தை பெரியாரின் – கடுமையான
   உழைப்பின் காரணமாக
   காணாமல் போயிருந்தன ! ஆமாம் போயிருந்தன
   ( என்று இறந்த காலத்தில் தான்
   சொல்ல வேண்டிஇருக்கிறது )

   60 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழரின் பெயருக்கு
   பின்னால் ஒட்டிக்கொண்டிருந்த –
   அய்யர், அய்யங்கார், முதலியார், பிள்ளை,
   செட்டியார், நாடார், கோனார் போன்ற ஜாதிப்
   பெயர்கள் காணாமல் போயின.

   ஜாதிப்பெயரை போட்டுக்கொள்ள மக்கள் வெட்கப்பட்ட
   காலமும் உருவானது !
   பிறாமணர்கள் தங்களை உயர்ஜாதியினர் என்று
   கூறிக்கொள்வது
   பெரும்பாலும் நின்று போனது. ஆனால் –
   இந்த சமூகம் சீர்படுவதில் விருப்பம் இல்லாத சில
   அரசியல் கட்சிகளால் –
   மீண்டும் ஜாதிகள் உயிர் பெற்று விட்டன.

   ஜாதிக்கு ஒரு சங்கம். அந்த சங்கங்களை
   போட்டி போட்டுக்கொண்டு
   வளர்க்கும் அரசியல்வாதிகள் – என்று மீண்டும்
   குட்டிச்சுவராகிக்
   கொண்டிருக்கிறது நமது தமிழ்ச் சமூகம்.

   தந்தை பெரியாரின் முயற்சிகள் – அதனால் கிடைத்த
   பயன்கள் – அத்தனையும்
   பாழாகிக் கொண்டிருக்கின்றன இந்த பாழாய்ப்போன
   அரசியல்வாதிகளால்.
   ஓட்டுக்கேட்க, தேர்தலில் ஜெயிக்க –
   மீண்டும் ஜாதியை – ஜாதி வெறியை
   கிளப்பி விட்டார்கள்.

   இருந்தாலும் மக்கள் நிச்சயம் மீண்டும்
   விழித்துக்கொள்ளத்தான் போகிறார்கள்.
   ஜாதிகள் எப்படி மறையும் ?
   மறைந்திருக்கும் ஒரு உண்மையை மக்கள்
   தெரிந்துகொண்டால் போதும் !

   ஆம் – இன்றைய தினத்தில் ஜாதிகள் இருந்தாலும்
   அவை உயர்ந்தவர் – தாழ்ந்தவர்
   என்பதை குறிப்பதற்காக அல்ல.

   தங்கள் தங்கள் குடும்பங்களின் கலாச்சாரங்கள்,
   பழக்க வழக்கங்கள் இன்னின்ன மாதிரியானவை
   என்பதை குறிப்பதற்காகவே
   என்பதை மக்கள் புரிந்துகொண்டால் ஜாதிப்பூசல்கள்
   நிச்சயம் காணாமல் போய்விடும்.

   வாழ்த்துக்களுடன்
   -காவிரிமைந்தன்

 4. நல்லதந்தி சொல்கிறார்:

  //கலாநிதி மாறனின் மனைவி ஒரு
  பிராம்மணப் பெண்மணி.
  தயாநிதி மாறனின் மனைவியும்
  ஒரு பிராம்மணப் பெண்மணி தான்.

  இவர்களின் வாரிசுகளை நீங்கள் பிராம்மணருக்குப்
  பிறந்தவர்கள் என்று கூறி ஒதுக்கி விடுவீர்களா ?
  முடியுமா ?//

  இந்த இடத்தில் ஒரு தகவல் கலாநிதி மற்றும் தயாநிதியின் தந்தையான முரசொலி மாறனின் மனைவியும் ஒரு பிராமணப் பெண்மணியே!. அதாவது முரசொலி மாறனின் குடும்பமே மொத்தமாக ஒரு பிராமணக் குடும்பமாக மாறி ரொம்ப நாளாச்சி போலிருக்கு! 🙂

 5. ramalingam சொல்கிறார்:

  கருணாநிதியின் மிகப் பெரிய ராஜதந்திரம், காங்கிரஸையும் 2ஜியில் உள்ளே இழுத்துக் கொண்டதுதான்.

 6. RAVICHANDRAN G சொல்கிறார்:

  இவர்கள் எல்லாம் மனவளர்ச்சிக் குன்றியவர்கள்,தலைவருக்காக தலையையும் தர,தயாராக உள்ள மூளை இல்லாத முட்டாள்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.