வரிசையாகப் பொய்(யர்)கள் ……

வரிசையாகப் பொய்(யர்)கள் ……

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் –

எந்தவித தவறும் நடக்கவில்லை.
எல்லா  முடிவுகளும்,
பிரதமருக்குத் தெரிந்து,
அவர்  அனுமதியுடனேயே
எடுக்கப்பட்டன.

– ஆ.ராஜா

எந்த தவறும் நடக்கவில்லை
என்று ராஜாவே கூறி விட்டார் !

– மன்மோகன் சிங்

ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் எந்தவித ஊழலோ,
அரசுக்கு இழப்போ ஏற்படவில்லை.
உண்மையில் அது “ஜீரோ லாஸ்”.
சிஏஜி தவறான கண்ணோட்டத்தில் ரிப்போர்ட்
கொடுத்து நாட்டை அநாவசிய கிலேசத்திற்கு
உள்ளாக்கி விட்டார்.

– கபில் சிபல்

ராஜா எந்தவித தவறும் செய்யவில்லை.
அவர் “தகத்தகாய கதிரவனாக” வலம்
வருவார்.

–  கலைஞர்

காங்கிரஸ் ஆட்சியில் சட்டம் தன் கடமையைச்
செய்யும் என்பதற்கு இதுவே உதாரணம்.
குறை கூறியவர்கள் எல்லாம் வாயடைத்துப் போய்
நிற்கிறார்கள்.

காங்கிரசுக்கும் -திமுக வுக்கும் உள்ள உறவிற்கும்,
இந்த
வழக்கிற்கும் என்ன சம்பந்தம் ?

அபிஷேக் மனு சிங்வி –
காங்கிரஸ்  செய்தி தொடர்பாளர்

————————————————

சிவிஜி யாக தாமஸ் நியமனம்
செய்யப்பட்டது தொடர்பான சச்சரவில் –

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட
ஊழல்வாதியை தேர்வு செய்யலாமா?’-  செய்தி நிருபர்கள் கேள்வி.
கோர்ட்டில் வழக்கு இருப்பதால், இதற்கு நான்
பதில் அளிக்க விரும்பவில்லை.

– ப.சிதம்பரம்

நான் அப்பழுக்கற்றவன்.
இரண்டு கட்சிகளுக்கிடையில் நடக்கும்
அரசியலில் அநாவசியமாக மாட்டிக்கொண்ட
அப்பாவி நான்.

ஊழல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள
(பாமாலின் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள ) –
முன்னாள் தொலை தொடர்பு
துறைச் செயலாளர் பி.ஜெ. தாமஸ்

சிவிஜி நியமன சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர்
சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்ட கூட்டத்தில்-
தாமஸ் மீதான வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டு
விட்டார் என்று கூறப்படவே இல்லை !

நிலுவையில் உள்ள அவரது வழக்கு தொடர்பாக
கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கவில்லை
என்று அரசு எப்போது சொன்னது ?

சுஷ்மா ஸ்வராஜ் அநாவசிய கற்பனையில் உள்ளார் !
இந்த பிரச்சினையைத் தீர்க்கும் இடத்தில்
கோர்ட் உள்ளது என்பதை உணர்ந்து சுஷ்மா
அநாவசியமாக இது பற்றி பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

–  ப.சிதம்பரம்

காங்கிரஸ் கட்சி ஊழலை ஒரு போதும்
சகித்துக் கொள்ளாது.
பதவியும், பணமும், அது தரும் மகிழ்ச்சியும்
மட்டுமே
வாழ்க்கை அல்ல.
ஒரு குறிப்பிட்ட நிலை வரை மட்டுமே அவை
மகிழ்ச்சியைத் தரும்.

–  சோனியா காந்தி

———————————————–

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த
மாட்டோம் என்று இந்தியாவிடம் இலங்கை
கூட்டறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளபடி
நடந்து கொள்ளும்.

வெளியுறவுத் துறைச்செயலாளர்
– நிருபமா ராவ்
———————————————-

தமிழக அரசும் விழிப்புடனும்,
கண்காணிப்புடனும்
தொடர்ந்து செயல்படுவதால் மாநிலத்தில்
சட்டம்-ஒழுங்கு நிலைமை நன்கு
பராமரிக்கப்பட்டு வருகிறது.

-செவ்வாய்க்கிழமை நடைபெற்ற
முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் கருணாநிதி

————————————————–

எல்லாருமே  பெரிய மனிதர்கள் –
மேன்மக்கள் -அவர்கள் சொன்னால்
சரியாகத்தான் இருக்கும்.
பொய்யா சொல்லப் போகிறார்கள் !

– இந்த நாட்டின் அப்பாவி குடிமக்கள்

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அப்பாவி மீனவர்கள், அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, கருணாநிதி, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to வரிசையாகப் பொய்(யர்)கள் ……

 1. Ganpat சொல்கிறார்:

  அருமை !
  தொடரட்டும் உங்கள் மெழுகுவர்த்தி சமையல்!

 2. Ganpat சொல்கிறார்:

  Pl.go thro the writeup by one Viswamitra in Idli Vadai on Raja’s arrest.
  Very rarely one comes across such brilliant write ups

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பார்த்தேன்.
   நன்றி கண்பத்.

   இப்படி பல விஸ்வாமித்ரர்கள் வர வேண்டும்
   இந்நாட்டு மக்கள் விமோசனம் பெற !

   வருவார்கள் !!

   அதிக மக்களைச் சென்றடைய வேண்டும்
   இத்தகைய செய்திக்க் கட்டுரைகள்..

   இன்றில்லா விட்டாலும் – நாளையாவது
   மீண்டும் பெறுவோம் –
   நம்மில் சிலர்/பலர் அறிவு கெட்டுப்போனதால்
   நாமாகவே இழந்த நமது சுதந்திரத்தை !

   வாழத்துக்களுடன்

   – காவிரிமைந்தன்

 3. padmahari சொல்கிறார்:

  //எல்லாருமே பெரிய மனிதர்கள் –
  மேன்மக்கள் -அவர்கள் சொன்னால்
  சரியாகத்தான் இருக்கும்.
  பொய்யா சொல்லப் போகிறார்கள் !

  – இந்த நாட்டின் அப்பாவி குடிமக்கள் //

  அடக் காலக்கொடுமையே! எகிப்து துனிசியாவில் வெடித்த புரட்சி இந்த பாழாய்ப்போன தமிழ்நாட்டில் எப்போ வெடிக்கிறதோ அன்னிக்குத்தான் தமிழனுக்கு விடிவுகாலம்! அதுவரைக்கும் பொய்யையும், புரட்டையும் நம்பியே ஓட்டு போட்டு, ஒட்டு போட்டு சாக வேண்டியதுதான் தமிழினம்!

 4. M.S.Vasan சொல்கிறார்:

  padithavan poi sonnaal, AIYONNU povaan.
  -The Great Poet Bharathy.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.