உடனே தூக்குங்கள் – ராகுல்ஜி !

உடனே தூக்குங்கள் – ராகுல்ஜி !

இரண்டு நாட்களுக்கு முன்னர்
மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது
ராகுல் காந்தி கூறியுள்ள கருத்துக்கள் –

1)எல்லாரும் ஊழலைப்பற்றி பேசுகின்றார்களே தவிர,
யாரும், உடனடியான – உருப்படியான நடவடிக்கைகளை
எடுப்பதில்லை.

2)நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக
உருவெடுத்துள்ள ஊழலுக்கு எதிராக மிகக்கடுமையான
நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

3)லஞ்சம் வாங்குவது  ஏழை மக்களிடம்
திருடுவதற்கு ஒப்பானது.

4)ஊழலில் ஈடுபடுவோர்க்கு 20 ஆண்டுகளுக்குப் பின்
தண்டனை கிடைப்பதற்கு பதிலாக – விரைவாக,
6 மாதங்களுக்குள் தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும்.

5)வெளிநாட்டில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள
கறுப்புப் பணம் நம்நாட்டு மக்களின் பொதுச் சொத்து.
அதை உடனே மீட்டுக்கொண்டு வருவதற்கான
அனைத்து நடவடிக்கைகளையும் உடனே எடுக்க வேண்டும்.

அவரது அன்னையும், ஆளும் காங்கிரஸ் கட்சியின்
தலைவியுமான சோனியா காந்தி அவர்கள்
ஒரு மாதம் முன்பே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்
மாநாட்டில் கூறிய கருத்துக்கள் –

1) ஊழலை பொறுத்துக்கொள்ளவே முடியாது.

2)ஊழல் மற்றும் தவறான நடவடிக்கைகள் எதுவாக
இருந்தாலும் அதை காங்கிரஸ் கட்சி சிறிதளவும்
சகித்துக்கொள்ளாது.

3) எளிமையும், கட்டுப்பாடுமே நமது வழிகளாக
இருக்க வேண்டும்.

4)அரசியல்வாதிகள் மீதான அனைத்து ஊழல்
வழக்குகளும் குறிப்பிட்ட காலத்துக்குள்
விசாரித்து தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஒட்டு மொத்த
சொந்தக்காரர்களான தாயும், மகனும்
இப்படிச் சொன்ன பிறகும் –

பிரதமர் மன்மோகன் சிங் சொல்கிறார் –
“கறுப்புப் பணத்திற்கு உடனடி தீர்வு எதுவும்
கிடையாது” (there is   NO immediate
solution for this problem )

நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி சொல்கிறார் –
“வெளிநாடுகளிலிருந்து கறுப்புப் பணம் பற்றி
பெறப்படும் தகவல்கள், வரி விதிக்க மட்டுமே
பயன்படுத்தப்பட வேண்டும். பெயர்களைக் கூட
வெளியிட முடியாது. வெளியிட்டால் அது
வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட
உடன்படிக்கைகளை மீறியதாகி விடும்.
எனவே  வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி
வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டு
வருவது  இப்போதைய சூழ்நிலையில்
இயலாத காரியம் “.

மனதில் என்ன தான்  நினைத்துக்
கொண்டிருக்க்கிறார்கள்
இந்த பிரதமரும், நிதியமைச்சரும் ?

ராகுல் அவர்களே –
நீங்கள் இவ்வளவு சொல்லும்போதும்
அதன்படி செயல்படாமல் –

டாக்டர் சுப்ரமணியன்சுவாமி  சொன்னதையே
இன்னமும் நம்பிக்கொண்டு
உங்களுக்கு இன்னும் ஸ்விஸ் வங்கியில் கணக்கு
இருப்பதாக நினைத்துக்கொண்டு –
செயல்படாமல் இருக்கும் பிரதமரையும்,
நிதியமைச்சரையும் உடனே தூக்குங்கள் !

ஒரே சமயத்தில் இருவரையும்
தூக்க முடியாதென்றால்
ஒருத்தர் ஒருத்தராகவாவது தூக்குங்கள் !!

அப்போது தான் இந்த மக்களுக்கு புரியும்
நீங்கள் யாரென்று !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, சுவிஸ் வங்கி, சோனியா காந்தி, தமிழ், நாளைய செய்தி, புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், வரி ஏய்ப்பு, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

11 Responses to உடனே தூக்குங்கள் – ராகுல்ஜி !

 1. Arivunithi சொல்கிறார்:

  சிங்கமுத்து போனதுக்கப்புறம் வடிவேலு காமெடி களை இழந்து விட்டது போல் தெரிகிறது. கூட ராகுல்-ஜியை சேர்த்தால் ஒரு வேளை மீண்டும் ஒரு ரவுண்டு வர வைப்பு உண்டு.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் அறிவுநிதி,
   தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி

   ஹீரோ ஆக நினைத்து,
   தற்போது காமெடியனாகத் தோற்றமளிக்கும் இவர்
   விரைவில் வில்லன் ஆகக்கூடிய வாய்ப்பும்
   இருக்கிறது – அல்லவா ?

   – வாழ்த்துக்களுடன்

   காவிரிமைந்தன்

 2. prakash சொல்கிறார்:

  Dear Friend,

  All of the your blogs are really super. i like this blog very much. especially rajiv & soniya blogs. i think you are good writer . i wish to success for ur writing life.

  Yours Truly
  R.Prakash

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் பிரகாஷ்,

   உங்கள் பாராட்டுதலுக்கும்,
   வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   இந்த வலைத்தளத்தில் எடுத்து வைக்கப்படும்
   செய்திகள் / கருத்துக்கள் எப்போது
   அதிக மக்களைச் சேர்ந்தடைகிறதோ,
   ஏற்றுக்கொள்ளப் படுகிறதோ –
   அப்போதெல்லாம் என் உழைப்பிற்கு
   நல்ல பலன் இருப்பபதாக
   நான் உணர்கிறேன்.

   தொடர்ந்து வருகை தாருங்கள்.
   வாழ்த்துக்களுடன்

   – காவிரிமைந்தன்

 3. padmahari சொல்கிறார்:

  நாட்டிலுள்ள ஊழல் பெருச்சாளிகளையும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களையும், தோலுறித்துக்காட்டும் உங்களின் இச்சேவை பாராட்டுக்குறியது! வாழ்த்துக்கள். பல செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிக்கைகளில் படித்துத் தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகளின் சாராம்சத்தை சுருக்கமாகவும், சுவாரசியமாகவும் இணைய மக்களிடம் எடுத்துச்செல்வதில் வெற்றி கண்டுள்ளூர்கள் என்றே தோன்றுகிறது. உங்களின் நீண்ட நாள் வாசகன் நான் என்பதில் மகிழ்ச்சி! நன்றிகள் பல….

  உங்கள் சேவை தொடரட்டும்…..
  பத்மஹரி,
  http://padmahari.wordpress.com

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் பத்மஹரி,

   உங்கள் பாராட்டுதல்களுக்கும்,
   வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீங்களும் ஒரு அருமையான
   வலைப்பதிவு போட்டிருக்கிறீர்களே !
   மிகவும் பயனுள்ள, சுவையான
   வலைத்தளம்.

   வாழ்த்துக்களுடன்

   – காவிரிமைந்தன்

 4. naandhaan சொல்கிறார்:

  பிரதமர் மன்மோகன் சிங் சொல்கிறார் –
  “கறுப்புப் பணத்திற்கு உடனடி தீர்வு எதுவும்
  கிடையாது” (there is immediate
  solution for this problem )

  Should be (there is no immediate solution for this problem”

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மிக்க நன்றி நண்பரே,
   தட்டச்சுப் பிழையை இப்போது
   சரி செய்து விட்டேன்.

   வாழ்த்துக்களுடன்,
   -காவிரிமைந்தன்

 5. natramizhan சொல்கிறார்:

  அருமையான கட்டுரை நண்பர்.காவிரிமைந்தன். வழமை போல அரசியல் சவுக்கடிகள் எள்ளலுடன் கொடுக்கப்பட்டுள்ளன.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி நற்றமிழன்.
   உங்கள் வலைத்தளத்தை பார்த்தேன்.

   வித்தியாசமான ஒரு நடை – அணுகுமுறை !
   தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

   -காவிரிமைந்தன்

 6. M.S.Vasan சொல்கிறார்:

  Great, concerned and sarcastic writing. Very Nice.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.