நம்புவோம் “இதுவும் கடந்து போகும்” !

நம்புவோம்  “இதுவும் கடந்து போகும்”  !


இந்த  வலைத்தளத்தில் வரும் கட்டுரைகளை
தொடர்ந்து படித்து வரும் நண்பர் ஒருவர்
எழுதியுள்ள மறுமொழி யிலிருந்து
முக்கியமான ஒரு  பகுதியையும் அதற்கான
என் பதிலையும்  கீழே கொடுத்துள்ளேன் –
(இதை நான் மிகவும் முக்கியமான விஷயமாகக்
கருதுவதால் – தனியே ஒரு இடுகையாகவே
தருகிறேன் )
—– ———————-

“நம் நாட்டின் பிரச்சினையே இதுதான்.
குடிமக்கள் அனைவரும் சரியான சந்தர்ப்பம் அமையாத அரசியல்வாதிகள்.

இப்போ பிரச்சினை என்ன என்பது எல்லாருக்கும்
தெரியும். அதற்கு தீர்வு தான் தெரியவில்லை.
அரசை மாற்றுவதை விடுங்கள்.
சென்னையில் உள்ள ஆட்டோ ரிக்ஷா பிரச்சினையை கூட
நம்மால் தீர்க்க இயலவில்லை.
அந்த பரிதாப நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம்.

ஜனநாயக முறையில் இந்த நோய்க்கு தீர்வு காண்பது
நிச்சயமாக இயலாது!தலைவலி போனால் திருகுவலி!
மு.க.போனால் ஜெயா…இதுவா தீர்வு?
Blood cancer can not be cured by
Vicks Vaporub.
Surgery or death is the only choice.”

———————————–

இது குறித்து என் கருத்து –

நண்பரின் வயது எவ்வளவு இருக்கும் என்று எனக்குத்
தெரியவில்லை.(தெரிந்திருந்தால் –
அவரது கொதிப்பின் நியாயத்தை
நான் அறிந்து கொள்ள  அது உதவும் )

அவநம்பிக்கை வேண்டாம்.
இன்றில்லா விட்டாலும்  நாளையாவது இந்த நிலை
நிச்சயம் மாறும்.

சுப்ரமணிய பாரதியும், வ.உ.சி.யும்,
வாஞ்சிநாதனும்,  பகத் சிங்கும்
எதிர்கொள்ளாத இன்னல்களா ?
அவர்கள் காலத்திலும் சமுதாயத்தின் பெரும்பகுதி
சுரணையற்றுத் தானே  கிடந்தது ?
அவர்களே நம்பிக்கையுடன் இருந்தார்களே !

காலம் மாறத்தானே செய்தது ?
(அவர்கள் காலத்திற்குப் பிறகாவது-!)
மக்கள் மாறத்தானே செய்தார்கள் ?
உறுதியாக நம்புங்கள்
“இதுவும் கடந்து போகும்”

நாம் செய்ய வேண்டியது  –
மக்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப
நம்மால் இயன்றதைச்
செய்வது தான் தான் –
சரியான கருத்துக்களை பரவச்செய்வது தான்.

நம் கடமை என்று கருதுவதை நாம் செய்வோம் –
மற்றவை தானாகவே நடக்கும்.

அரசியல்வாதிகளை எப்போது மாற்ற முடியும் ?
முதலில் மாற வேண்டிய மக்கள் மாற வேண்டும்.
மக்கள் அனைவரும் விழிப்புணர்வு பெற வேண்டும்.
காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவது
எவ்வளவு பெரிய அருவருப்பான விஷயம்
என்பதை அவர்கள் உணர வேண்டும்.
படித்தவர்கள், வசதி படைத்தவர்கள் –
சமுதாயத்தின் பால் அக்கரை கொள்ள வேண்டும் –
குறைந்த பட்சம் ஓட்டுச்சாவடி வரை சென்று
தவறாமல் ஓட்டாவது போட வேண்டும் !

உழைக்காமல் சம்பாதிக்கும் பணம்,
எச்சில் இலையில் சாப்பிடுவதற்கு சமம்
என்பதை மக்கள்  ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

தவறு செய்பவர்களைக் கண்டு காரி உமிழும்
துணிவு வேண்டும்.
பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி
மீடியாக்களும், அரசாங்கத்திற்கு பயப்படாமல்,
துணிந்து தங்கள் கடமையைச்
செய்ய முன் வர வேண்டும்.

ஒரு தனி மனிதன் எழுப்பிய தீ
டுனீஷியாவில் பெரும் புரட்சியை
ஏற்படுத்தவில்லையா ? 28வது நாளே
அதிபர் நாட்டை விட்டு
ஓட வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லையா ?

வாய்மை நிச்சயம்  வெல்லும் –
தாமதமாகவாவது !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, சரித்திரம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to நம்புவோம் “இதுவும் கடந்து போகும்” !

 1. பிங்குபாக்: Tweets that mention நம்புவோம் “இதுவும் கடந்து போகும்” ! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் -- Topsy.com

 2. இளங்குமரன் சொல்கிறார்:

  தங்களின் பதில்கள் மிகவும் தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில்தான் உள்ளன. ஆனால் என் பசிக்குச் சாப்பாடு எனக்குப் போடும் படையலில்தான் என்றால் அதனால் என்ன நன்மை…..

 3. Nagarajan சொல்கிறார்:

  Sir, I agree with you that we have to compulsarily vote. But if we do not have trust with anybody what is the use in voting. Please clarify if I am wrong. I have this doubt for a long time.

 4. Ganpat சொல்கிறார்:

  நன்றி காவிரிமைந்தன் !

  உங்கள் ஆசை ஈடேற இறைவன் அருள் புரிவானாக !

 5. Ganpat சொல்கிறார்:

  <>

  புதுமையான ,நச்சென்ற உபமானம் !பலே பலே இளங்குமரா!!
  மிகவும் ரசித்தேன்!

 6. Ganpat சொல்கிறார்:

  Dear Nagarajan,

  If you do not want to vote for any candidate ,you can record the same under section 49A.For details pl.check in Gnani’s site where he has given about the same

  Good Luck!

 7. srijanakasViswamithran சொல்கிறார்:

  Well said KM

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.