சீச்சீ – நாயும் பிழைக்கும் …. (ஏன் இத்தனை மர்மங்கள் – 5 )

சீச்சீ – நாயும் பிழைக்கும்  ….
(ஏன் இத்தனை மர்மங்கள் – 5 )

எந்த வித அரசு பின்னணியிலோ,
கட்சிப் பொறுப்பிலோ  இல்லாத நிலையில்,
புலனாய்வு நிறுவனங்களின்
துணை  எதுவும்  இன்றி,
சிறிது அதிக முயற்சி (just some
extra efforts ) எடுத்துக்கொண்டு
ஆர்வத்தோடு முனைந்ததில்,
என்னால் இவ்வளவு ஆதாரங்களையும்,
விவரங்களையும் திரட்ட முடிந்தது என்றால் –

அனைத்து அரசாங்க ஏஜென்சிகளும்
கையில் இருக்கும் நிலையில்,
முக்கிய பொறுப்புகளில் இருக்கும் மத்திய
அமைச்சர்களோ, காங்கிரஸ் கட்சியில்
பொறுப்பான பதவிகளில் இருக்கும்
தலைவர்களோ –

வருடக்கணக்கில் கூடவே நெருங்கிப்
பழகும்  பிரமுகர்களோ –

இந்த கட்டுரையில் அலசப்பட்டு இருக்கும்
தகவல்களை எல்லாம்
அறியாமலா இருப்பார்கள் ?

முக்கியமாக – நிதி அமைச்சரோ, உள்துறை
அமைச்சரோ, பாதுகாப்பு அமைச்சரோ
அறியாதவையா இந்த விவரங்கள் ?

இருந்தும்,
இத்தனையும் -இதற்கு மேலும்
தெரிந்திருந்தும்,
அவர்கள் இந்த தலைமைக்கு
விரும்பி ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள் என்றால் –

அதற்கு காரணம் என்னவாக இருக்க முடியும் ?

பணமும்,செல்வாக்கும்,  பதவி சுகமும்
தங்களுக்கு தொடர்ந்தால் போதும்.

இந்த நாடோ, மக்களோ எக்கேடு கெட்டாலும்
அவர்களுக்கு கவலை இல்லை.

சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆன பிறகும்,
40 சதவீதம் மக்கள் இன்னமும்
வறுமைக்கோட்டிற்கு கீழே
வாழ்வதைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.

இன்றும் 3 வேளை வயிராற சோறு
உண்ண முடியாமல்,
கந்தல் ஆடைகளுக்கு மாற்று இல்லாமல்,
குழந்தைகளை ரோட்டோர மரத்தில் தூளியில்
தொங்க விட்டு விட்டு ரோடு போடும் வேலையில்
ஈடுபட்டிருக்கும் பெண்கள் –

பள்ளி செல்லும் வயதில் டீக்கடையிலும்,
மளிகைக்கடையிலும் வேலை செய்து கொண்டிருக்கும்
சிறுவர்கள் –

நோய்வாய்ப்பட்டு, சீண்டுவாரற்று,
ரெயில்வே ஸ்டேஷன்களில், பாலங்களில்
படுத்துக் கிடக்கும் ஆதரவற்ற  முதியவர்கள்-

கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள் வாயில்களில்
கண் தெரியாமல், கை கால் விளங்காமல்
முடங்கிப்போய் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்
இந்த தேசத்தின் அனாதை மக்கள்-

தெருக்களில் சுற்றித்திரியும் மனநிலை
குன்றிய நோயாளிகள் –

இவர்கள் யாரின் நிலையும் -அவர்கள் மனதை
உறுத்தவில்லை.மனசாட்சியைத் தொடவில்லை.

தங்கள் பிழைப்பு தொடர்ந்தால் போதும் அவர்களுக்கு !

லட்சக்கணக்கான மக்கள் தங்கள் குருதியைச் கொட்டி
வெள்ளைக்காரர்களிடமிருந்து இந்த நாட்டின்
விடுதலையைப் பெற்றது
இந்த கொள்ளைக்காரர்கள் அனுபவிக்கத்தானா ?

நினைத்தாலே பற்றி எரிகிறது வயிறு.
கண்டாலே காரித் துப்பத் தோன்றுகிறது !

சீச்சீ – நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு.

——————————————–

இவர்களைக் காக்கும் பொறுப்பு

நமக்கு இல்லையா ?



About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இரக்கம், கட்டுரை, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், ராஜீவ் காந்தி, வரி ஏய்ப்பு, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to சீச்சீ – நாயும் பிழைக்கும் …. (ஏன் இத்தனை மர்மங்கள் – 5 )

  1. srijanakasViswamithran சொல்கிறார்:

    Dear KM
    During the course of my telephone talk my friend referred your site and sent the link to me (08.11.2011 at 10.25 am) I started to go through your blogs during the short interval during my office hours and rushed back home around 8.00 pm to continue; Now it is 1.00 am on 9.11.2011 and your blogs on various topics/persons/happenings are fantastic; i differ with some of them like Rajiv Gandhi – Prabakaran; would like to reply seperately; but the purpose of this mail is to thank you for writing on the various subjects to create awareness. My best wishes to you; please continue the good work;

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    Dear Friend Viswamithran,

    I am simply bowled by
    your mail.

    I am thankful to you for
    your encouraging words.

    I should especially thank
    your friend who has
    introduced my blog to you.
    please convey him my
    best wishes.

    -with all good wishes,
    Kavirimainthan

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.