நவம்பர் 19, 1991 -அன்று 10,000 கோடி என்றால் -இன்று ? (ஏன் இத்தனை மர்மங்கள் -3)

நவம்பர் 19, 1991 -அன்று
10,000 கோடி என்றால் -இன்று ?
(ஏன் இத்தனை மர்மங்கள் -3)

“Schweizer Illustrierte “- இது இந்த
ஸ்விட்சர்லாந்து பத்திரிகையின் பெயர். ஸ்விஸ்
நாட்டின் ஆறில் ஒரு பகுதி மக்கள்
படிக்கும் அளவிற்கு புகழ் வாய்ந்த, நம்பிக்கையான
பத்திரிகை. 2,15,000 பிரதிகள் விற்பனையாகும்
இந்த பத்திரிகையின் நவம்பர் 19,1991
தேதியிட்ட இதழின் அட்டைப்படமும், உள்ளே
புகைப்படங்கள் உள்ள ஒரு பக்கமும் கீழே உங்கள்
பார்வைக்கு தரப்பட்டுள்ளன.


இதில் இரண்டாவது பக்கத்தில் உள்ள
புகைப்படங்களில் கடைசி வரிசையில் மூன்றாவதாக
காணப்படுவது நம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின்
புகைப்படம். இதன் முக்கியத்துவம் என்னவென்றால்-
இதில் ஸ்விஸ் வங்கியில் ரகசிய கணக்கு
வைத்துள்ளவர்கள் சிலரின் புகைப்படங்கள்
இதில் வெளியிடப்பட்டுள்ளன.
சர்வாதிகாரி இடி அமீன், சதாம் உசேன் ஆகியோருடன்
இணைந்து காணப்படுவர்களில்  ராஜீவும் ஒருவர் !

அவரைப்பற்றி அதில் காணப்படும்
செய்தி – அவரது ரகசியக் கணக்கில்
சுமார் 2.5 பில்லியன் ஸ்விஸ் பிராங்ஸ் –
அதாவது சுமார் 2.2 பில்லியன்
அமெரிக்க டாலர் – அதாவது
சுமார் 10,000 கோடி அளவு இந்திய ரூபாய்
இருக்கிறது என்றும்,

ராஜீவ் காந்தியின்  மறைவிற்குப்பின்
(மே, 1991) இந்த கணக்கு அவரது (மைனர்)
மகன் ராகுல் காந்தியின் சார்பாக அவரது அன்னை
சோனியா காந்தியால்
நிர்வகிக்கப்படுகின்றது என்பதும்.

1991-ல் 10,000 கோடியாக இருந்த இந்த பணம்,
இன்றைய தினத்தில் அதன் முதலீட்டுக்கு
ஏற்றார் போல்,
குறைந்த பட்சம் 42,345 கோடியாகவும்,
அதிக பட்சமாக 58,365 கோடியாகவும்
வளர்ந்திருக்கும் என்பது பொருளாதார
நிபுணர்களின் மதிப்பு.

இத்தனை  கள்ளப் பணத்தை வெளிநாட்டு வங்கியில்,
ரகசியமாக நிர்வகித்து வரும் ஒருவர்
“ஊழலையும்,கள்ளப் பணத்தையும் வேரோடு அழிப்பேன்”
என்று அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில்
அறைகூவல் விட்டது எப்படி
என்று கேட்கிறார்கள் இந்த விஷயம் தெரிந்தோர் !

இந்த செய்தி எந்த அளவிற்கு நம்பகமானது
என்கிற சந்தேகம் எல்லாருக்கும் எழுவது நியாயம் –
எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது உண்மை.
எப்போது ?

முதல் முதலாக டாக்டர் சுப்ரமணியன் சுவாமி இந்த
தகவலை 2002 ஆம் ஆண்டு வெளியிட்டபோது.
ஆரம்பத்தில் நானும்  நம்பவில்லை.

ஆனால், இந்த தகவலையும், மேற்கொண்டு சில
தகவல்களையும் சேர்த்து, எழுத்தாளர் ஏ.ஜி.நூரானி
அவர்களும் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையில்
ஒருகட்டுரை எழுதினார்.

அதன் பின்னர் பொருளாதார நிபுணரும், அரசியல்
விமரிசகருமான எஸ்.குருமூர்த்தி ஏப்ரல் 29,2009
தேதியிட்ட நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்
செய்தித்தாளில் இதைப்பற்றி
எழுதினார்.

எழுத்தாளர் ராஜேந்தர் பூரி ஆகஸ்டு 15, 2006
தேதியிட்ட தன் கட்டுரையில் இது பற்றியும்
மேற்கொண்டும் எழுதினார்.

பிரபல மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி கடந்த
டிசம்பர் 27, 2010 தேதியிட்ட, “இந்தியா டுடே”
இதழில் இது குறித்து எழுதினார்.

கடைசியாக மீண்டும் எஸ்.குருமூர்த்தி கடந்த
02/01/2011 தேதியிட்ட நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்
நாளிதழில் இது குறித்து மிக விவரமான
கட்டுரை ஒன்றை
எழுதி இருக்கிறார்.

இப்போது என்ன தோன்றுகிறது ?

இந்த குற்றச்சாட்டுக்கள்  பொய் என்றால் –
இவற்றை சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படையாக
மறுத்திருக்க வேண்டுமே !
அவதூறு வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டுமே !!

ஆனால் ஆச்சரியமூட்டும் வகையில்,
இதுவரை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து
இந்த செய்திகளுக்கு மறுப்பு எதுவும்
தெரிவிக்கப்படவே இல்லை !

இப்படி ஒரு செய்தி வந்ததாகவே
அவர்கள் காட்டிக்கொள்ளவில்லை.

அப்படி என்றால் இந்த அமைதிக்கு
என்ன காரணமாக இருக்க முடியும் ?
ஒன்று இவை மறுக்க முடியாத,
அல்லது மறுத்தால் வேறு எதாவது
கேள்வி வரக்கூடிய அளவிற்கான
செய்திகளாக இருக்க வேண்டும்.

இரண்டு – இதைப்பற்றி
எதாவது பேசப்போனால் – இந்த செய்திக்கு
மேற்கொண்டு அதிக விளம்பரம்
கிடைத்து விடும்.
எனவே திருடருக்கு தேள் கொட்டியது
போல் – சத்தமின்றி,
அமைதியாக இருக்கிறார்களோ ?

அடடா –  நான் சொல்ல வந்ததை
இன்னும் சொல்லவே இல்லையே !

சரி – நாளை சந்திப்போமே !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அடுத்த வாரிசு, அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, ராஜீவ் காந்தி, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to நவம்பர் 19, 1991 -அன்று 10,000 கோடி என்றால் -இன்று ? (ஏன் இத்தனை மர்மங்கள் -3)

 1. Ganpat சொல்கிறார்:

  1999 முதல் 2004 வரை ஆண்ட BJP அரசு நினைத்திருந்தால் இதை அப்போதே வெளிப்படுத்தியிருக்க முடியுமே!ஏன் செய்யவில்லை?இதற்கு குருமூர்த்தியின் பதில் என்ன?
  ஒருவேளை மாநிலத்தில் அதிமு க வும் மதில் பிஜேபி அரசும் வந்தால் 2G ஊழலை வெளிப்படுத்துவார்கள் என நினைக்கிறீர்களா?
  நான் சொல்கிறேன் நிச்சயம் மாட்டார்கள்!
  காரணம் உங்களுக்கே தெரியும்!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   பிஜெபி க்கு அல்லது அதிமுக வுக்கு
   வக்காலத்து வாங்க நான் இந்த
   கட்டுரைகளை எழுதவில்லை.

   எனக்கு எந்த குறிப்பிட்ட கட்சியின் மீதும் பற்று
   கிடையாது.

   யார் செய்தாலும் – தவறு – தவறு தான் !

   என் நோக்கத்தை மீண்டும் ஒரு முறை
   நினைவுபடுத்தி விடுகிறேன்.

   “இந்த வலைத்தளத்தில் எழுதுவதன் நோக்கம் –
   நல்லதைப் பாராட்ட வேண்டும்.
   கண்ணில் படும் தவறுகளைக் கண்டிக்க வேண்டும்.
   (இன்றில்லா விட்டாலும் நாளையாவது
   மாறுமல்லவா ? )
   அச்சமின்றி எழுத வேண்டும் ( இயன்ற வரை ! )
   ஆபாசமின்றி எழுத வேண்டும்.”

   என் அனுபவத்தில்,
   என் கண்ணில் படும் நல்லது, கெட்டதுகளை
   எனக்குத் தோன்றும் விதத்தில்
   சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

   என் பார்வையில் தவறு காண்பவர்கள்
   அதையும் தாராளமாகச் சுட்டிக்காட்டலாம் .
   அவையும் இங்கே நிச்சயம் இடம் பெறும்.

   வருகைக்கு ந்ன்றி.
   வாழ்த்துக்களுடன் –
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.