ஏன் இத்தனை மர்மங்கள் இந்த பெண்மணியைச் சுற்றி ?

ஏன் இத்தனை மர்மங்கள் இந்த
பெண்மணியைச் சுற்றி ?

இவரது தந்தை  ஒரு மாஜி கைதி.
இரண்டு வருடங்கள் ரஷ்யாவில் சிறைவாசம் புரிந்தவர்.
பின்னர் கொத்தனராக வேலை செய்து
குடும்பம் நடத்தியவர்.

இவர் பள்ளிப்படிப்புக்கு மேல் போகவில்லை.
இருந்தாலும் லண்டன் கேம்பிரிட்ஜ்  பல்கலைக்கழகத்தில்
ஆங்கில மொழியில் 3 வருட பட்டயம் பெற்றதாக
முதலில் பாராளுமன்ற உறுப்பினராக ஆனபோது
அதன் செயலகத்திற்கு
தகவல் தந்திருந்தார்.
ஆனால் இவர் படித்தது ஒரு டுடோரியல்
காலேஜில் வீட்டு வேலைகள் செய்யும் அளவிற்கு
ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கும் ஒரு 6 வார
படிப்பைத்தான். பின்னர்
இது சுட்டிக்காட்டப்பட்டபோது,
டைப்பிங் மிஸ்டேக் காரணமாக
தவறுதலாக வெளியாகி விட்டதாகச் சொல்லி விட்டார்.

தாய், தந்தை மற்றும் 3 பெண்களைக் கொண்ட
மிகவும் ஏழ்மையான குடும்பம் அவருடையது.
அவரும், அவரது இரண்டு சகோதரிகளும் வறுமையில்
வாடியவர்கள். அவர்கள் வாழ்ந்து வந்த இடத்தில்
வேலை கிடைப்பது கடினமாக இருந்ததால்,
அந்த நாட்களின் வழக்கத்தின்படி,
பருவ வயது வந்த அவரை ஒட்டிய பெண்கள்,
வேலை தேடி லண்டன் செல்வது வழக்கம்.
18 வயதான போது,
இவரும் அதே போல்
லண்டன் சென்று ஒரு ரெஸ்டாரண்டில் “வெயிட்ரஸ்”
ஆக  பணி புரிந்து வந்தார்.

அப்போது தான் – தனது 19வது வயதில்
அப்போதைய இந்தியப் பிரதமரான இந்திரா காந்தியின்
மூத்த மகனும், பரம்பரை பணக்காரருமான
ராஜீவ் காந்தியை  லண்டன் ஒட்டல் ஒன்றில்
முதல் முறையாக  சந்தித்தார்.

இரண்டு வருடங்கள்
இருவரும் காதல் வசப்பட்ட பிறகு,  தனது 21 வது
வயதில்  ராஜீவை மணந்து கொண்டார்.

ஆரம்பத்தில் தாய் இந்திரா காந்தி இந்த திருமணத்திற்கு
ஒத்துக்கொள்ளாத்தால், இருவரும் இத்தாலியில்
ஒரு சர்ச்சில் ரகசியமாகத் திருமணம் செய்து
கொண்டதாக ஒரு தகவல்.
பின்னர் இந்திரா மனம் மாறி
தானே  இவர்கள் திருமணத்தை தன் இல்லத்திலேயே
முறைப்படி நடத்தி வைத்தார்.

2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு
அரசை அமைக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தபோது –
பிரதமர் ஆகக்கூடிய வாய்ப்பை
இவர் தியாகம் செய்து விட்டார் என்பது உண்மை அல்ல.

தனக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை
இருக்கிறது  என்றும் – தன்னை
பிரதமராக பொறுப்பேற்க அழைக்க
வேண்டும் என்றும் அப்போதைய ஜனாதிபதியான
டாக்டர் அப்துல் கலாமிடம் இவர் கேட்டுக்கொண்ட போது,
இவர் தனது கோரிக்கையை வற்புறுத்துவதாக இருந்தால்,

முதலில் இவரது குடியுரிமை சம்பந்தமாக
எழுப்பப்பட்டிருக்கும் சில சந்தேகங்களை
உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்து,
அதன் ஆலோசனையைப்
பெற்ற பிறகே தான் இதில் செயல்பட முடியும் என்று
ஜனாதிபதி இவரிடம்  தெரிவித்தார்.

அதன் பிறகே தான் -தானே பிரதமர் ஆகும்
யோசனையைக் கைவிட்டு விட்டு –
மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கினார்.

இவை அத்தனையும் உண்மை –
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சொல்வதை
அப்படியே  ஏற்றுக் கொள்பவர்களுக்கு !

ஆனால் – நான் சொல்ல வருவது இதை அல்ல …

நாளை தொடர்வோம் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சுவிஸ் வங்கி, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மனித உரிமை மீறல், மன்மோகன் சிங், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.