இது என் தேசம் – இவர்களும் எம்மக்கள் – இதில் ஒருவர் எமக்குத் தலைவி !

இது என் தேசம் –
இவர்களும் எம்மக்கள் –
இதில் ஒருவர் எமக்குத்  தலைவி !

தடுக்கி விழுந்தால் கண்ணில் படுவது
அரசியல்வாதிகள் தான்.
99 விழுக்காடு – கடைந்தெடுத்த
சுயநலவாதிக் கூட்டம் !
விழித்திருக்கும்போதே
சுருட்டும் கூட்டம் !

110 கோடி மக்கள்.
இதில் ஒரு தலைவர் உருவாக முடியாதா ?
உருவாக்க  இயலாதா ?

தனக்குள் ஒரு தலைவனைத் தேட
வக்கில்லாதவர்கள் –
இவர்களை
மேய்க்க தலைவர் ஒருவர் மேற்கே இருந்து
தான் வரவேண்டுமாம் !

காந்திக்கு எந்த சம்பந்தமும்
இல்லாத ஒரு காந்தி !

பெற்றவளைப்
பரிதவிக்க விடுவார்கள் –
யாரையோ “அன்னை”யென கொண்டாடுவார்கள்.

சொந்த அன்னை –
பிறந்த தேதி தெரியாது – ஆனால் –
வந்த “அன்னை”யின் பிறந்த நாளை
விமரிசையாகக்  கொண்டாடுவார்கள்.

அந்த அன்னையோ –
ஊரில், உலகில் இது வரை யாரும்
பார்க்காத  அன்னை !

ஒன்றரை லட்சம் உயிர்களை
காவு கொண்ட பிறகு-

மூன்று லட்சம் பேர்,
வீடிழந்து, உறவிழந்து,
உறுப்பிழந்து சொந்த நாட்டிலேயே
அகதிகளாக  ஆன பிறகு –

கண்ணகி செய்தால் பத்தினித் தெய்வம் –
நான் செய்தால்  ஏசுவீரோ – என்பது போல்

மௌனப் புன்முறுவல் பூத்துக்
கொண்டிருக்கும் மோனாலிசா!

வாய் திறந்து ஏதும் பேசாமலே
அத்தனையையும்
நடத்திக் கொண்டிருக்கும்
ஓர் அற்புத அன்னை.

சுவாமியைக் கேட்டால் –
கொலையும் செய்வாள் பத்தினி என்பார் !

குருமூர்த்தியோ – 40,000 கோடி
ஸ்விஸ் அக்கௌன்டில் என்பார் !!

வெண்குல்லா  மக்களைக் கேட்டாலோ –
“உரைசால் பத்தினிக்கு
உயர்ந்தோர் ஏத்தல்” என்பர் !

இத்தனை பெரிய நாட்டினை
ஆண்டு கொண்டிருப்பவர்  அவரே-
அத்தனை பேரையும் ஆட்டி வைப்பவரும் அவரே –
ஆனால் – எந்த அரசு பதவியையும் வகிக்காதவர்.
யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய
அவசியம்  இல்லாதவர் !

அனைத்து சுகங்களையும்
அனுபவித்துக்கொண்டிருக்கும் இவர் –
ஒரு  அதிசய தியாகி !

பத்திரிகையாளர்களை
என்றாவது
சந்தித்தது உண்டா ?
கேள்வி கேட்க எவரையாவது
அனுமதித்ததுண்டா ?

அவர்களைச் சொல்லி என்ன பயன் ?
ஏமாறுபவர் இருக்கும் வரை
ஏமாற்றுபவர் இருக்கத்தானே செய்வர் ?

தான் யாரால் மேய்க்கப்படுகிறோம்
என்பதைக் கூட  உணரத் தெரியாத
ஒரு ஆட்டு மந்தை –
நம் மக்கள் கூட்டம் !

உலகில் வேறு எங்கும்
காண  முடியாத அதிசயக் கூட்டம் !

இந்த லட்சணத்தில் “அங்கே” ஒரு கூட்டம் –
“இங்கே” ஒரு கூட்டம் !

இது தான் என் தேசம் !
இவர்கள் எம்மக்கள் !!
அய்யோ – இவர்களில் நானும் ஒருவனா   ? !!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, உலக நாயகி, கட்டுரை, குடும்பம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to இது என் தேசம் – இவர்களும் எம்மக்கள் – இதில் ஒருவர் எமக்குத் தலைவி !

  1. mannuchella சொல்கிறார்:

    excellent. Shame on us

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.