கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம் – 10 விநாடிக்கு ரூ.9700/- சன் டிவி க்கு – ரூ.23,474-

கலைஞர் டிவி க்கு  தமிழக அரசு பணம்
கொடுக்கப்படும் விகிதம் –
10 விநாடிக்கு ரூ.9700/-
சன் டிவி க்கு – ரூ.23,474-

தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல விளம்பரங்கள்
கலைஞர் தொலைக்காட்சியில்
வருவதைக் காண்கிறோம்.
சில விளம்பரங்கள்
3-4 நிமிடங்கள் அளவிற்கு கூடப் போகின்றன.
இவை எல்லாம்  சமூக நலன் கருதி
வெளியிடப்படும் இலவச அரசு விளம்பரங்கள்
என்றே பலரும் எண்ணி வந்தனர்.

அண்மைக் காலங்களில் அடிக்கடி வெளியிடப்படும்
குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக
மாற்றும் திட்டத்தின் விளம்பரங்களில்  கலைஞரும்,
ஸ்டாலினும்  பல நிமிடங்களுக்கு தொடர்ந்து
காட்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு புகழ்மாலைகள்
சூட்டப்படுகின்றன.

அரசு செலவில் இப்படி முதல்வரும்,
துணைமுதல்வரும் தற்புகழ்ச்சி செய்து கொள்வதே
அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய விளம்பரங்களை
திமுக தன் கட்சி செலவில் தயாரித்து வெளியிட்டால்
யாரும் கேட்கப்போவதில்லை.

அரசு செலவில் இத்தகைய
விளம்பரங்கள்  தயாரிக்கப்படுவதே அருவருப்பாக
இருக்கிற நேரத்தில்,  இவை
தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தமிழக அரசால்
காசு வேறு கொடுத்து ஒளிபரப்பப்படுகின்றன
என்கிற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

இது குறித்து செய்தி ஒன்று —

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள்
விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம்,
தகவல் அறியும் உரிமை சட்டத்தில்
டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ.
தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி-
பதில்களின் விவரம் இன்று வெளியாகி இருக்கிறது.

கேள்வி:— 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான
விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர்
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன.
இது இலவச விளம்பரமா?
அல்லது கட்டண விளம்பரமா?
கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு
எவ்வளவு கட்டணம்
செலுத்த வேண்டும்?

பதில்:— 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம்
இலவச விளம்பரம் அல்ல.
கட்டண விளம்பரம்தான்.
ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு
சன் டிவியில் ரூ.23,474-ம்,
கலைஞர் டிவியில் ரூ.9,700-ம் செலுத்த வேண்டும் !!!

சன் தொலைக்காட்சியின்  உரிமையாளர்கள் –
முதல்வரின்  பேரன், அவர் மனைவி மற்றும்
அவரது குடும்பத்து  உறுப்பினர்கள்.

கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் –
முதல்வரின் மகளும், சில அமைச்சர்கள்
குடும்பத்தினரும் அடங்குவர்.

அரசாங்க விளம்பரங்கள்  எந்த அடிப்படையில்
இந்த தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கக்ப்படுகின்றன ?

சன் தொலைக்காட்சி அதிகம் பேரால்
பார்க்கப்படுவதால்
விளம்பரத்திற்கு
தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லலாம். சரி –
கலைஞர் தொலைக்காட்சியை எவ்வளவு பேர்
பார்க்கிறார்கள் ?  அதற்கு எப்படி அரசு விளம்பரத்தைக்
கொடுத்தார்கள் ?

இதில் விநோதம் என்னவென்றால் –
அரசு தொலைக்காட்சியான பொதிகையில்
இத்தகைய அரசு விளம்பரங்கள் வெளியாவதே இல்லை !
(அங்கு காசு கொடுத்தால் அது தன் குடும்பத்திற்கு
எப்படி போகும் ?)

அரசாங்க பணத்தில் முதல்வர் குடும்பத்து
தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் கொடுப்பது
அதிகார துஷ்பிரயோகம் இல்லையா ?

எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம்
என்கிற போக்கில் செயல்படுவது  சரியா ?

மிகுந்த சிரமத்திற்கிடையே இத்தகைய தகவல்களை
வெளிக்கொண்டு வந்த திரு வி.சந்தானம்
அவர்களைப் பாராட்டுவதும்,

இவற்றை அதிக அளவில் பொது மக்கள் கவனத்திற்கு
கொண்டு போவதும் நம் கடமை என்றே நான்
நினைக்கிறேன்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊரான் வீட்டு நெய்யே, கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சி, சன் டிவி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம் – 10 விநாடிக்கு ரூ.9700/- சன் டிவி க்கு – ரூ.23,474-

  1. மஞ்சூர் ராசா சொல்கிறார்:

    இன்னும் எப்படியெல்லாம் கொள்ளையடிப்பார்களோ?

  2. arun சொல்கிறார்:

    Ungal vote yarukku…?

    Sathiyama naan vote poda maten…

    Pathil pls….

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நாம் இருக்கும் இந்த சமுதாயத்தைத்
      திருத்த முயற்சிக்க வேண்டியது நம் கடமை –
      உரிமையும் கூட !

      நம்மைச்சுற்றி குப்பை கூளங்கள்
      இருந்தால், பெருக்கி, சுத்தம்
      செய்வதில் நமக்கும் பொறுப்பு
      இருக்கிறது தானே ?

      அவசியம் ஓட்டு போட வேண்டும்.

      இன்றில்லா விட்டாலும்
      நாளையாவது மாறுமல்லவா ?

  3. narendran சொல்கிறார்:

    DEI IPPADI ELLAM KAASU SETHU ENNADA PANNAPORENGA

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.