இங்கே ஏன் கலைஞர் இல்லை ?

இங்கே  ஏன் கலைஞர் இல்லை ?

எங்கும்  கலைஞர்
எதிலும் கலைஞர்
கலைஞர் புகைப்படம் இல்லாத
அரசு தொடர்புடைய எதுவுமே இல்லை
அரசு பஸ்களில் – கேலண்டர்களில் –
பாடபுத்தகங்களில் –
ரேஷன் கடைப் பொட்டலங்களில் –

ஏன் இலவச சர்க்கரைப் பொங்கல் பைகளில் கூட –
கருப்புக் கண்ணாடியுடன் கலைஞர்
சிரித்துக் கொண்டே உங்களைப்
பார்த்துக் கொண்டிருப்பார் !

ஒரே ஒரு  அரசு சார்ந்த இடத்தில்
மட்டும் கலைஞரைக் காணவில்லை !
அடுக்குமா இந்த  ஓரவஞ்சனை !!

என்ன பாவம் செய்தன
டாஸ்மாக் கடைகளும் –
சாராய பாட்டில்களும்  !

______________________________________

ஒரு  விசித்திரமான செய்தி –

தமிழக வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை –
4 கோடியே  30 லட்சம் !

மொத்த ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை –
1 கோடியே 94 லட்சம் !!

மொத்தம் போடப்பட்டுள்ள பொங்கல்
இலவசப் பைகளின் எண்ணிக்கை – 2 கோடி.

இரண்டு கோடி பைகளிலும்  ஒரு பக்கத்தில்
கலைஞர் புகைப்படம்.
மறு  பக்கத்தில் உதயசூரியன் சின்னம் !
3 மாதங்களில் வரவிருக்கின்ற தேர்தலுக்கு
அரசு  செலவில்  கட்சி விளம்பரம் !!

மேலே சொல்லி இருப்பது எல்லாம் கூடுதல்
தகவல்கள் !

நான் தர விரும்பும்  தகவல் இது மட்டுமே –

இவ்வளவு விளம்பரங்களுடன்  தரப்படும்
இலவச பொங்கல் பையில் உள்ள
அரிசி, வெல்லம்,பாசிபருப்பு, ஏலக்காய்,
திராட்சை,முந்திரிபருப்பு
ஆகிய 6 பொருட்களின் மொத்த  விலை மதிப்பு
(அரசு அளித்துள்ள விவரங்களின் படியே )

54 ரூபாய்    52 பைசா  மட்டுமே !!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊரான் வீட்டு நெய்யே, கட்டுரை, கருணாநிதி, தமிழீழம், தமிழ், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to இங்கே ஏன் கலைஞர் இல்லை ?

  1. ராமசந்திரன் சொல்கிறார்:

    ஏமாற்றும் வேலை உதவி விமர்சனம்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.